Monday, September 12, 2022

மன்னார்குடி அதிசயக்கோயில்

 மன்னார்குடி அதிசயக்கோயில்!

சோழநாட்டில் அமைந்துள்ள மன்னார்குடியில்,ராஜ கோபாலசுவாமி கோயில் பல அதிசயங்களை கொண்டது.

*சோழ நாடு சைவ சமயத்திற்கு பெயர் பெற்றது ஆனால் வைணவ தலமான ராஜகோபாலசுவாமி தலம் மிக பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.

*ராஜகோபாலர் மாடு மேய்க்கும்(இடையன்) சிறுவனாக ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து கட்சியளிக்கிறார்.

*இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. 

* எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை.

*ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. 

*இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். 

*தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயர் என்ற முனிவர்களுக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார்.

*பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. 

*கிருஷ்ணருக்காக அமைந்த கோயில் என்பதால் 18க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது (குருக்ஷேத்ர யுத்தம் நடந்த நாட்கள் மற்றும் கீதையின் அத்தியாயம் 18). இவ்விழாவை, "பார் புகழும் பங்குனி பிரம்மோற்ஸவம்' என்று குறிப்பிடுகிறார்கள்.

*திருவாரூர் தேரழகு என்பதுபோல, "மன்னார்குடி மதிலழகு' என்பது சொல் வழக்காக உள்ளது.

*இந்த கோயில் உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "மன்னார்குடி' என்ற பெயர் ஏற்பட்டது. மன்னார்குடி அதிசயக்கோயில்!

*இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். 

*

No comments:

Post a Comment