Thursday, September 15, 2022

செட்டிநாடு வாழை மசாலா

 செட்டிநாடு வாழை மசாலா        

தேவையான பொருள்கள்         வாழைக்காய் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, கடுகு, சீரகம், எண்ணெய் - தாளிக்க, அரைக்க:, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, சிறிய வெங்காயம் - 5, பூண்டு - 5 பல், தேங்காய் - சிறிது, மிளகு, சீரகம், சோம்பு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5          

செய்முறை            வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர் தெளித்து அரைக்கவும். பின்பு அதே வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.அதில் வதக்கி ஆற வைத்த வாழைக்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.அரைத்த மசாலா சேர்த்து நீர் தெளித்து வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான செட்டிநாட்டு வாழை மசாலா தயார்.வாழைக்காயை எண்ணெயில் பொரித்து கூட சேர்க்கலாம். சற்று நீர்க்க செய்தால் க்ரேவியாக சாப்பிடலாம்.

No comments:

Post a Comment