Friday, September 30, 2022

வெயிலுகந்த விநாயகர்

 *வெயிலுகந்த விநாயகர்:*

பெயர் வரக்காரணம் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள ‘உப்பூர் விநாயகர்’ மிகவும் சிறப்புமிக்கவர். இவரை சீதாபிராட்டியை மீட்கச்சென்ற ஸ்ரீராமன், தடைகள் இன்றி வெற்றி பெற வேண்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. புராண காலத்தில் தட்சன் செய்த யாகத்தில் கலந்துகொண்ட சூரியனுக்கு, சிவனால் கிடைத்த தண்டனைக்கு பரிகாரமாக விநாயகரை நோக்கித் தவமிருந்ததாகவும், அதனால் மகிழ்ந்த விநாயகர், இந்திரனின் பாவத்தைப்போக்க அவன் விரும்பியபடி ஒளிக் கிரகணங்கள் தன் மீது பட்டு வழிபாடு செய்ய அருள் புரிந்ததாக புராணசெய்தி கூறுகிறது. இதன்படி சூரியனின் ஒளியில் வெயிலை உகந்து (விரும்பி) ஏற்று வீற்றிருக்கும் விநாயகருக்கு ‘வெயிலுக்குகந்த விநாயகர்’ என்ற பெயர் நிலைத்தது. அதுவே மருவி ‘வெயிலுகந்த விநாயகர்’ என்று ஆனது. இவ்வாலய சன்னிதியின் நாற்புறமும் பாதுகாக்கும் மதில்கள் இன்றி வெயில் படும்படி அமைந்திருக்கிறார், இந்த விநாயகர். இக்கோவிலின் தென்புறம் உள்ள திருக்குளம், பாவங்கள் போக்கும் ராமேஸ்வரத்தின் தீர்த்தங்களில் ஒன்றாகும். நவக்கிரகங்களில் முதன்மையானவரான சூரியபகவான் வணங்கும் விநாயகரை, நாமும் வழிபட்டு இந்தக் குளத்தில் நீராடும்போது நம் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். நம் காரியங்கள் யாவும் எந்த தடையும் இன்றி வெற்றி அடையும். பெரும்பாலும் பிரம்மச்சாரியாக வழிபடப்படும் விநாயருக்கு திருமணம் நடைபெறும் தலமாகவும் சிறப்பை பெறுகிறது உப்பூர்.

Thursday, September 29, 2022

திருப்புடைமருதூர்

திருப்புடைமருதூர்:


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக் கோவில். இத்தல இறைவனின் புராணப் பெயர், ‘புடார்க்கினியீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம், கோமதி அம்பாள். மூலவரின் திருமேனி மீது காயம்பட்ட வடு உள்ளது. இதனால் சுயம்புவாக தோன்றிய இந்த மூலவரின் மீது சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்கிறார்கள். அபிஷேகம் எதுவும் கிடையாது. “நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார். அந்த சாய்வு நிலையிலேயே மூலவரை நாம் தரிசிக்கலாம். தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, செவிசாய்த்து கேட்பவர் என்பதாகவும் இதனை பொருள் கொள்ளலாம்.

எட்டு பேறுகள் அருளும் எட்டு பைரவர்கள் 

சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி. பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். ``சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள்.  வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பாபநாசம்

 பாபநாசம் திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இங்கு உலகம்மை உடனாய பாபநாசநாதர் கோவில் இருக்கிறது. இறைவன் ‘பாபநாசநாதர்’ என்றும், அம்பாள் ‘உலகம்மை, விமலை’ என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். தேவர்களின் தலைவனான இந்திரனின் பாவங்களை எல்லாம் போக்கி அருளிய இறைவன் என்பதால், இவருக்கு இந்தப் பெயர் வந்தது. தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப் ஙபடுகின்றன. நவ கயிலாயங்களில் முதல் தலமாக விளங்கும் இந்த பாபநாசம், சூரிய பகவானுக்குரியதாகத் திகழ்கிறது. கடையம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கடையம். இங்கு நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இறைவனின் திருநாமம் ‘வில்வவனநாதர்.’ “காணி நிலம் வேண்டும் பராசக்தி..’ என்று பாரதியார் வேண்டிய சக்தியாக, இந்த ஆலயத்தில் அருளும் நித்யகல்யாணி அம்மன் திகழ்கிறார். சிவபெருமான், பிரம்மதேவனுக்கு வில்வ பழத்தை வழங்கினார். அதை மூன்றாக உடைத்த பிரம்மன், ஒரு பாகத்தை கயிலாய மலையிலும், மற்றொரு பாகத்தை மேரு மலையிலும், இன்னொரு பாகத்தை துவாத சாந்த வனத்திலும் நட்டார். மூன்றாவது பகுதியை பிரம்மன் நட்ட, துவாத சாந்த வனத்தில்தான், வில்வவனநாதர் கோவில் இருக்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும். அதை உடைத்துப் பார்த்தால், அதன் உள்ளே சிவலிங்க பாணம் போன்று விதை இருப்பதை காணலாம் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கோவில் கதவில், ராமரின் தந்தையான தசரதனால், சிரவணனன் கொல்லப்பட்ட காட்சிகள் சிற்பகமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ராமாயணத்தோடு தொடர்புடைய நிறைய சிற்பங்களும் காணப்படுகின்றன. திருநெல் வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலும் கடையம் உள்ளது.

சென்னையில்_இருக்கும் ஜீவசமாதிகள்

 #பல_அன்பர்களின் #வேண்டுகோளுக்கிணங்க .....

#சென்னையில்_இருக்கும் #ஜீவசமாதிகள் பற்றிய அபூர்வ குறிப்புகளை இன்று விரிவாக பார்போம்....

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் இருப்பிடமும்,

திருவொற்றியூர்:

********************

(1)பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி. ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

(2)பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்.

(3)ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

(4)அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

(5)பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், தங்கம் மாளிகை அருகில்.

(6)ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

(7)மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில்.

(8)முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை.

(9)ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில், ஞான சுந்தர பிரம்மம் சமாதி. சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:

***********

(1)குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

(2)ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர்பாடி:

***************

(1)சிவப்பிரகாச சாமி= இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

(2)கரபாத்திர சிவப்பிரகாச சாமி= 1வது தெரு சாமியார்தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில். பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:

************

(1)அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில் - பஞ்சமுக வடிவமும் உள்ளது.

(2)மதனகோபாலசாமி= மேல்பட்டி பொன்னப்ப முதலிதெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில்.

(3)சந்திர யோகி சுவாமி= மங்களபுரம் ஐந்து லைட் அருகில்.

(4)வேர்க்கடலை சுவாமி= அய்யாவு தெரு, திரு.வி.க.நகர்.

(5)மதுரை சாமி= செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

(6)மயிலை நடராஜ சுவாமி= கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:

**********

ஆறுமுகச்சாமி= 173/77 டிமலஸ் சாலை, பெரம்பூர்பேரக்ஸ் ரோடு- ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்- உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:

******************

(1)வீரசுப்பையா சுவாமி

புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்- 52,பெரம்பூர் பேரக்ஸ்ரோடு மடத்தில் சமாதி கோவில்.

(2)ஈசூர் சச்சிதானந்த சாமி= கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு (வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:

***********

(1)மோதி பாபா= 422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

(2)அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதிசுவாமி= பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்- ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:

*******************

(1)கங்காத சுவாமி= ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

(2)நாதமுனி சாமி= ஹாரிங்டன் ரோடு, பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

(3)பன்றிமலை சாமி= 5, வில்லேஜ் ரோட்டில் "ஓம்நமச்சிவாய’" என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

(4)ஆதிசேஷானந்தா= நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

(5)வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:

*******************

ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி= அசோக் நகர்- சாமியார்மடம் டாக்டர் சுப்பராயன் நகர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்- ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:

************

அண்ணாசாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கசாமிகள்= வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள். இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:

***************

(1)திருவள்ளுவர்- வாசுகி அம்மையார்= லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

(2)அப்பர் சாமிகள்= 171, ராயப்பேட்டை ஹைரோடு- சமஸ்க்ருத கல்லூரி

எதிரில், மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

(3)குழந்தைவேல் சுவாமி= சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டுபில்டிங்கில் இருக்கிறது.

(4)முத்தையா சாமிகள்= குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:

*************

(1)தாடிக்கார சுவாமி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையேசந்து. உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிகோவில். சிவலிங்க பிரதிஷ்டை.

(2)குழந்தைவேல பரதேசி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53, சவுரித் தெரு, எஸ்.ஆர்.மெட்ரிக்மேல் நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிகோவில்.

கிண்டி:

*********

(1)சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்= எம்.கே.என்.ரோடு 36ஆம் எண்- சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்- சிவலிங்க பிரதிஷ்டை. இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி, ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி, ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.

(2)சத்யானந்தா கோழீபீ சித்தர்= பஸ் ஸ்டாப் அருகில்உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:

*******************

(1)பாம்பன் சுவாமிகள்- கலா சேத்ரா அருகில் திருமடவளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம். ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

(2)வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறியகோவில்.

(3)சர்க்கரை அம்மாள்= 75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:

***************

சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி= காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்கபிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:

*********************

சச்சிதானந்த சற்குரு சாமிகள்= அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:

**************

நாகமணி அடிகளார்= கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் –நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:

*****************

மோனாம்பிகை- ஞானாம்பிகை- சாதுராம் இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம் (மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி.

சிட்லப்பாக்கம்:

******************

சாயி விபூதி பாவா= 83, முதல் மெயின்ரோடு, ஹெச்.சி.நகர்- சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்- அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

ஊரப்பாகம்:

***************

எதிராஜ ராஜயோகி- ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:

***********

துர்கை சித்தர்- ஜெயதுர்கா பீடம் கோவில்.

பெருங்களத்தூர்:

*********************

ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

புழல்:

********

(1)கண்ணப்ப சாமி- புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங் கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்; ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

(2)காரனோடை மல்லையா சாமிகள்:

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ்வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது. இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

(3)அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்- காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது. பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அலமாதி மார்க்கண்டேய மகரிஷி அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதிஅமைந்திருக்கிறது.

(4)கோவணச்சாமி- அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

(5)பூதூர் ஷா இன்ஷா பாபா-  செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடுரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது. இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி

*************

புலேந்திரர் (சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)-  ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது. இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்:

**************

ஐயா சூரியநாத கருவூரார்: பதினெண் சித்தர் மடம் 13,குமாரசுவாமிதெரு, வரதராசபுரம், அம்பத்தூர். பிரதி அக்டோபர் 10 ஆம்தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்:

*****************************

(1)அன்னை நீலம்மையார்- 37/1 வடக்கு மாடவீதி, மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது. பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

(2)மாசிலாமணி சுவாமிகள்- சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி:

**************

(1)கர்லாக்கட்டை சித்தர்-  வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

(2)பைரவசித்தர்- பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

(3)கருடகோடி சித்தர்-  பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்:

********************

(1)அருள்வெளி சித்தர்

பூதேரி பண்டை கிராமம்-  வி.ஜி.பி. ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது. உயரமான சமாதிமேடை. சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

(2)வெள்ளறை கிராமம்- ராஜராஜ பாபா சித்தர், கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு :

*************

சர்வசர்ப்ப சித்தர்: மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்):

*****************************

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்-

ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன. இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம் :

*************

ஆளவந்தார் சாமி- கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம் :

**********************

(1)குழந்தை வேலாயுத சித்தர்

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

(2) அப்பூர்- பதஞ்சலி சுவாமி

திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர் :

*****************

சிதம்பரச்சாமி திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப் பட்டுள்ளது. பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

செம்பாக்கம் :

****************

இரட்டை சித்தர்கள்

செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில்செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

கூடுவாஞ்சேரி :

*******************

மலையாள சாமி- கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது. அருகில்இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம் :

********************

முத்துசாமி சித்தர்- அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ளகுன்று இருக்கிறது. இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது. இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

Monday, September 26, 2022

கடுகு குழம்பு

Rajalakshmi chandrasekhar an in fb

 கடுகு குழம்பு எத்தனை பேருக்கு தெரியும் என் அம்மாவிற்கு என் தங்கை பிறந்த போது பத்தியத்திற்காக பொன்மலை பாட்டி செய்தார்கள் பொன்மலை பாட்டிக்கு இந்த பதிவு சமர்ப்பணம் 

செய்முறை கடுகு 1 குழி கரண்டி அதே அளவு மிளகு மிளகாய் வற்றல் 6 இரண்டு மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைத்து புளி எலுமிச்சை அளவு கரைத்து வைக்கம் நல்லெண்ன்யல கடுகு கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து புளி கரைத்து விட்டு அரைத்த விழுதையும் கரைத்து விட்டு2ப்பு மஞ்ச பொடி போட்டு கொதிக்க விடவும் கெட்டியானதும் இறக்கவும் பிள்ளை பெற்றவர்களுக்கு போடுவார்கள் இதை நான் கற்று கொண்டு 50 வருடம் ஆகியும் என் வீட்டில் உள்ளவர்களின் Favourite குழம்பு

Sunday, September 25, 2022

செட்டிநாடு வாழை மசாலா

 செட்டிநாடு வாழை மசாலா        

தேவையான பொருள்கள்         வாழைக்காய் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), வெங்காயம் - ஒன்று, தக்காளி - ஒன்று, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது, கடுகு, சீரகம், எண்ணெய் - தாளிக்க, அரைக்க:, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, சிறிய வெங்காயம் - 5, பூண்டு - 5 பல், தேங்காய் - சிறிது, மிளகு, சீரகம், சோம்பு - தலா ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5          

செய்முறை            வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர் தெளித்து அரைக்கவும். பின்பு அதே வாணலியில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், சேர்த்து வதக்கவும்பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.அதில் வதக்கி ஆற வைத்த வாழைக்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.அரைத்த மசாலா சேர்த்து நீர் தெளித்து வேக விடவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான செட்டிநாட்டு வாழை மசாலா தயார்.வாழைக்காயை எண்ணெயில் பொரித்து கூட சேர்க்கலாம். சற்று நீர்க்க செய்தால் க்ரேவியாக சாப்பிடலாம்.

சமையல் டிப்ஸ்

 *சமையல் டிப்ஸ் !!* 

👉 மைதாவை நீர் விட்டுப் பிசையாமல் அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து உப்பும், நெய்யும் சேர்த்து பிசைந்து முறுக்கு செய்தால் சுவையாக இருக்கும். 

👉 குலோப்ஜாமூன், ஜிலேபி முதலியவைகளுக்கு ரொம்ப கம்பிப்பதம் தேவையில்லை. பிசுக்குப் பதம் இருந்தால் போதும். கைகளில் பிசுக்காக ஒட்ட வேண்டும். கம்பிப்பதம் ஆரம்பிக்கும் முன் எடுத்துவிட வேண்டும்.

👉 கொண்டைக்கடலையை நிறைய ஊறவைத்து, பிறகு அதை வேகவைத்து பிரீஸரில் வைத்தால் சுண்டல், பூரிக்கு சென்னா, சாலட் போன்றவை தயாரிக்க எளிதாக இருக்கும்.

👉 வெந்தயத்தை வறுத்து சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

👉 இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்.

👉 மோர் குழம்பை வடிகட்டி அதனுடன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சோடா மாவு சேர்த்து இரவு வைத்துவிட்டு காலையில் ஊத்தப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.

👉 சாம்பார் அல்லது ரசம் மீந்துவிட்டால், அதனை வடிகட்டி, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்தால் சுவையான சப்பாத்தி தயார்.



Saturday, September 24, 2022

நவராத்திரி அலப்ரைஸ்

 நவராத்திரி அலப்ரைஸ்!

   🌷🪔🌷

முன்பெல்லாம் நவராத்திரி கொலுவுக்கு வருபவர்கள் அம்மன் மீது பாட்டு பாடுவார்கள். வீட்டு எஜமானி, ஆளுக்கு கொஞ்சம் சுண்டலை பேப்பரிலோ, இலையிலோ மடித்து தருவார். அதோடு முடிந்தது.

இந்த Gift / Return gift சமாச்சாரம் எப்போ, எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை.

Plastic டப்பாக்களும், எவர்சில்வர் டப்பாக்களும் கொடிகட்டி பறக்கின்றன. வீட்டில் வைக்க இடமில்லை. 

ரொம்ப சிரமப்படுத்தும் ஐட்டம் , சின்ன சின்ன ஸ்வாமி விக்கிரகங்கள்தான். ஏற்கெனவே பூஜை ரூம் / அலமாரியில் ஏகப்பட்ட குட்டி விக்கிரகங்கள் நெருக்கியடித்து அமர்ந்திருக்கின்றன. மேலும் மேலும் சேர்ந்தால் என் செய்வது?  தெய்வ விக்கிரகங்களை வெளியில் போடவும் முடியாது.

இன்னொரு சங்கடம் ரவிக்கை பிட்டுகள். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் சுடிதார் அணிவதாலும்,  கலர் /texture suit ஆகாமல் இருப்பதாலும் ரவிக்கை பிட்டுகள் Re-cycling பாதையில் சென்று ... சுத்தி சுத்தி வந்தீக ...! 🫣

அடுத்தது ஸ்லோக புஸ்தகங்கள். எங்கள் வீட்டில் லலிதா ஸஹஸ்ரநாமம் புஸ்தகம் ஏகப்பட்டது சேர்ந்திருக்கிறது!

"அவா வீட்டில் பெரிய எவர்சில்வர் தட்டு கொடுத்தா. நன்னா கிண்ணுனு இருந்தது. நாம்ப ஒரு மூடி போட்ட எவர்சில்வர் டப்பாவாவது கொடுக்கலேன்னா என்ன நினைப்பா? "

'உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே'ன்னு ஒரு பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது.

இது ஒரு ஈகோ / போட்டி விஷயமாக ஆகி விட்டதோ.....? அம்மணிகள் கோச்சுக்க கூடாது. நிதானமாக யோசித்து பார்க்கலாம்.

யார் வீட்டில் தைரியமாக, இந்த வருஷம் No gift என்று முடிவெடுத்து, சுண்டலோ, கேஸரியோ, புட்டோ ... பொட்டலம் கட்டிக் கொடுத்து,  அதோடு நிறுத்திக் கொள்கிறார்களோ ... ... அவர்களுக்கே என்னுடைய ஓட்டு!  😃

எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.


           🙏🪔🙏

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

 திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ?

ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கும் அம்மையார் வைணவ ஆச்சார்யார் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 கருத்துக்கள்தான் இந்த ரகசியம்.

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் திருக்கோளூர். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரின் ஜென்மஸ்தலம். திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.

அத்தகைய இந்த ஊருக்கு ராமானுஜர் வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்.  அதைக் கண்ணுற்ற ராமானுஜர், ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே’ என்று கேட்கிறார்.

அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, ‘அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்’ என்று பாண்டித்யமாக பதில் அளிக்கிறார்.

அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தைச் சாறாகப் பிழிந்து தருகிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார்.  பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.

இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ நமக்கு வைணவத்தை மட்டும் பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!

2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!

3. தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே!

4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!

5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே!

6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே!

7. தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!

8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே!

9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே!

10. முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!

11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!

12. எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!

13. ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!

14. அவன் சிறியனென்றேனோ ஆழ்வாரைப் போலே!

15. ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!

16. யான் சத்யம் என்றேனோ ஆழ்வாரைப் போலே!

17. அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!

18. அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!

19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!

20. அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!

21. தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே!

22. தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!

23. ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!

24. ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே!

25. அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!

26. அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!

27. ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!

28. அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!

29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே!

30. கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!

31. குடை முதலானதானேனோ ஆனந்தாழ்வான் போலே!

32. கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!

33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!

34. இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார் களைப் போலே!

35. இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!

36. இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியார் போலே!

37. அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!

38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!

39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!

40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!

41. மண்பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே!

42. மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!

43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!

44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!

45. வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!

46. வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!

47. அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!

48. அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடை யாரைப் போலே!

49. இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!

50. இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!

51. இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!

52. இங்கில்லை என்றேனோ திதிபாண்டனைப் போலே!

53. காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!

54. கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!

55. இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே!

56. இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!

57. இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!

58. நில்லென்று(னப்) பெற்றேனோ இடையற்றூர் நம்பியைப் போலே!

59. நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!

60. அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!

61. அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!

62. அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!

63. அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!

64. அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!

65. ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!

66. அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!

67. அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே!

68. கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!

69. கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!

70. சுற்றிக் கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!

71. சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!

72. உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!

73. உடம்பை வெறுத்தேனோ திருநறையூரார் போலே!

74. என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!

75. யான் சிறியன் என்றேனோ திருமலை நம்பியைப் போலே!

76. நீரில் குதித்தேனோ கணப்புரத்தாளைப் போலே!

77. நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!

78. வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!

79. வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே!

80. தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

81. துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

இவ்வாறு ஒருசில வார்த்தைகளில், வைணவ ஆசார்யார்களின் அருந் தொண்டைப் பட்டியலிட்டாள் திருக்கோளூர் பெண்பிள்ளை. அவள் உரையைக் கேட்ட  எம்பெருமானார் உளம் நெகிழ்ந்தார். தனக்குள்ளேயே ஓடிய அந்தக் காட்சிகளால் நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கினார். நாமும்தானே

கோடியம்மன் திருக்கோவில்

 *கோடியம்மன்*

தஞ்சை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வருவது கோடியம்மன் திருக்கோவில்.  

*காவல் தெய்வமாக விளங்கும் கோடியம்மன் திருக்கோவில்*

தர்மம் தலை சாய்ந்து அதர்மம் தலை தூக்கும் போது, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதாரம் எடுப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி.. தஞ்சன், தாரகன் என்ற இரு கொடிய அரக்கர்களை அழிப்பதற்காக அம்மன், கோடி அவதாரம் எடுத்தார். 

இதனால் அந்த அம்மனுக்கு ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

தஞ்சை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோடியம்மன் திருக்கோவில்,  தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கருத்தட்டான்குடியை அடுத்த வெண்ணாற்றாங்கரையில் அமைந்துள்ளது.

*தலவரலாறு*

தஞ்சன், தாரகன் என்ற 2 அரக்கர்கள் கடும் தவம் இருந்து, சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் இருந்து எவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றனர். 

வரம் பெற்ற மமதையில் அரக்கர்கள் இருவரும், தவ முனிவர்கள், தேவர்களுக்கு துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

அரக்கர்கள் கொடுமையை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சிவன், ஆனந்தவல்லி அம்மனை சாந்த வடிவாக படைத்தார். 

அந்த அம்மனுக்கும், அரக்கர் களுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அம்பாளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அரக்கர்கள் தங்கள் உருவத்தை மாற்றி புதிய அவதாரம் எடுத்தனர். 

இவ்வாறு அவர்கள் கோடி முறை அவதாரம் எடுத்தனர். அம்பாளும், கோடி அவதாரம் எடுத்து காளிமேடு என்ற இடத்தில் அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.

மரணம் அடையும் தருவாயில் அரக்கர்கள் இருவரும் அம்பாளிடம், ‘தாயே! உங்களால் சாகப்போகும் நாங்கள் மிகவும் புண்ணியம் பெற்றோம். 

எங்கள் நினைவாக இவ்வூர் எங்கள் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர். 

அம்மனும் அவர்கள் கேட்ட வரத்தை வழங்கினார். இதனால் அழகாபுரி என்ற இவ்வூர் அரக்கன் தஞ்சன் பெயரால் தஞ்சை புரி என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி தஞ்சாவூர் என்றானது.

கடந்த 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனுடைய தாத்தா விஜயாலய சோழன், தஞ்சைக்கு வருகை தந்த போது இவ்வூரின் அழகை கண்டு இங்கேயே இருந்து ஆட்சி செய்ய முடிவு செய்தார். 

அதன்படி ஊரின் எல்லைகளை எட்டு திக்காக பிரித்து எட்டு திக்கிலும் எட்டு காளிகளை பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த போது வடக்கு எல்லையை முதலாவதாக கொண்டு ஸ்ரீகோடியம்மனுக்கு கோவில் கட்டினார்.

கோடியம்மன் சிவனை தஞ்சமாக கொண்டுள்ளதால், கோடியம்மன் ஆலயத்தில் நந்தியுடன் கூடிய பலிபீடம் இருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.

வேப்பம்பூ பச்சடி

 வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?"

கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை

தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

தமிழ் வருஷப் பிறப்பு புண்னிய தினத்தில் பெரியவாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

புதுக்கோட்டையிலிருந்து சென்றிருந்த நாங்கள் வேப்பம்பூ-புளி-வெல்லம் சமர்ப்பித்தோம்.

"வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?" என்று பெரியவாள் கேட்டார்கள்.

நாங்கள், அசட்டுப் பிசட்டென்று என்னென்வோ சொன்னோம்.

பெரியவாள் சொன்னார்கள்.

"இந்த மூன்று சாமான் மட்டும் போதாது. தேன், நெய் சேர்க்கணும்.பக்குவமாகச் செய்தால், பச்சடி சுவையாக இருக்கும்.

இப்படிச்செய்யப்பட்டபச்சடியை,மற்றவர்களுக்குக் கொடுக்கணும்,.அவர்கள் வசியமாகி விடுவார்கள்!

"முதல்லே, அம்பாளுக்கு நைவேத்யம். அம்பாள் வசியமாகி

விடுவாள்! அடுத்து, அகத்துக்காரருக்கு, பின்னர் மனைவி

என்ன சொன்னாலும், "சரி.....சரி..." என்று தலையாட்டுவார்!

அப்புறம், வீட்டில் வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கணும். முணுமுணுக்காமல் வேலை செய்வார்கள்!"

பிறகு, உக்கிராணத்தில் சொல்லி,வேப்பம்பூ பச்சடி செய்துகொண்டு வரச் செய்து, எங்களுக்கெல்லாம் கொடுத்தார்கள்.

"இது எதற்குத் தெரியுமா?"

ஒருத்தி சொன்னாள்; நாங்களெல்லோரும் பெரியவா ஆக்ஞைப்படி நடக்கணும்-என்பதற்காக...."

"அது சரி...இது,திரிபுரசுந்தரி பிரஸாதம். நீங்க எல்லாரும்

அம்பாளின் பக்தைகளா எப்போதும் இருக்கணும்...."

எங்கள் கையில் இருந்தது,ஒரு ஸ்பூன் வேப்பம்பூ

பச்சடியாகப் படவில்லை;அமுதக் கடலாகவே தோன்றியது.

Jaya Jaya shankara hare hare shankara

கள்ளஹள்ளி பூவராகஸ்வாமி

 Kallahalli Sri Bhoovarahaswamy         

                        Temple.


பெங்களூர் மைசூர் ஹைவேயில் மைசூருக்கு அருகில், பாண்டவபுரா எனும் ஊரிலிருந்து 32கி.மீ தூரத்தில் உள்ளே சென்றால், கள்ளஹள்ளி எனும் கிராமத்தில் , காவிரி நதியின் கிளை நதியான ஹேமாவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள புண்ய க்ஷேத்ரமான ஶ்ரீ பூவராகஸ்வாமி திருக்கோவிலை அடையலாம்.

செழிப்பான பச்சைப்பசேர் என மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த சோலைகளின் நடுவே கோவில் கொண்டிருக்கிறார் பகவான். பதினைந்தடிக்குமேல் உயரமான வீற்றிருந்த திருக்கோலத்தில் இருக்கும் ஶ்ரீ பூவராகப் பெருமாளைக் காணக் கண்கோடி வேண்டும்.

நான்கு கரங்கள். மேல் கரங்களில் சங்கு, சக்ரம். சிலையின் பின்புறம் முதுகில் சுதர்சனர். கீழ் இரண்டு கைகளில்இடது கையால் மூன்றரை அடி உயரமான ஶ்ரீ பூதேவித் தாயாரை அணைத்தபடி இருக்கிறார். வலது கை அபயஹஸ்தமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறது.

ப்ரம்மாண்ட உருவத்தில் இருக்கும் பகவானை அண்ணாந்துதான் பார்க்கணும். பார்க்கப் பார்க்க அழகோ அழகு. 

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான கோவில். இந்த இடத்தில் யாகம் செய்த கௌதம முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட மோனோ லித் எனப்படும் ஒற்றைக்கல்லால் ஆன சாளிக்ராம சிலை. பக் கத்தில் ஓடும் ஹேமாவதி ஆறு, வெள்ளம் வரும்போதெல்லாம் சுவாமியின் காலைத் தழுவி வணங்கிச் செல்வது வழக்கம். நாளடைவில் இச்சிலை பூமிக்கடியில் மறைந்துவிட்டதாம்.

ஹொய்சல மன்னன் பல்லாள தேவா, வேட்டை முடிந்து மரநிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போது, அவருடைய நாய் ஒரு முயலைத் துரத்தியதாம். பயந்து ஓடிய முயல் ஓரிடத்தில் சடேரென திரும்பி நாயைத் துரத்தியதாம்.

இதைக்கண்ட பல்லாள தேவா, இந்த இடத்தில் ஏதோ விசேஷம் இருக்கணும் என ஐயப்பட்டு, தோண்டிப் பார்த்தபோது இந்த ப்ரம்மாண்ட விக்ரஹம் கிடைத்ததாம். பிறகு அந்த மன்னரால் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டது இந்தக் கோவில்.

சூப்பர் பவர்ஃபுல் கடவுள் இவர் என்பது அனைவரும் கண்கூடாக அறிந்த உண்மை. நிலம் சம்பந்தப்பட்ட வியாகூலம் உடையவர்கள்,  சொந்த வீடு கட்டும் ஆசை உள்ளவர்கள் இவரை வணங்கினால், அவர்கள் ஆசையை உடனே நிறைவேற்றி வைப்பார்.

இந்தக் கோவிலில் 25 வித மலர்கள், வாசனை சாமான்கள் இன்னும் அனைத்து வித பொருட்களால் செய்யப்படும் அபிஷேகம் மிக விசேஷம். எட்டாத உயரத்தில் இருக்கும் அவருக்கு உச்சிமுதல் அபிஷேகம் செய்ய, பட்டர்கள் உயரமான ஸ்டூல்களில் ஏறி, எம்பி எம்பி அபிஷேக அலங்காரங்கள் செய்வதை இன்றெல்லாம் பார்த்து பரவசமடையலாம்.

பூ தேவியை இறுக அணைத்தபடி இருக்கும் இவரை வணங்கினால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிணக்குகள் சரியாகி மிக அன்யோன்யமான வாழ்வு கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.

மண், செங்கல் போன்ற கட்டிடம் கட்ட தேவையான பொருட்களை பூஜை செய்து, அதை கட்டும் கட்டிடத்துக்கு உபயோகப் படுத்தினால் எந்தத் தடங்கலும் இன்றி அந்தக் காரியம் முடிவடையும். மண் மற்றும்  செங்கல் பூஜை இங்கு மிகச்சிறப்பு.

முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் இருந்தது. இப்போது தினமும் அன்னதானம் இருப்பதாக சொல்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் ஹேமாவதி நதி, பார்க்கப் பார்க்க எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கும். ஜாலியாக  கூடை தெப்பம், தோணி என்றும் சொல்வர், ஏறி சற்றுநேரம் பயணம் செய்யும் வசதி யும் உண்டு. நாங்கள் சென்ற சமயம் அதில் ஏறி நடு ஆறு வந்தவுடன், அந்தபடகோட்டி, தோணியை ஒரு சுற்று சுற்றி, அதில் அமர்ந்திருந்த எங்களை, தோணியுடன் தட்டாமாலை சுற்ற வைத்தது மறக்கமுடியாத இன்ப அனுபவம்.

ஶ்ரீ பூதேவி சமேத ஶ்ரீ பூவராக ஸ்வாமியை வணங்கி, வாழ்வில் நலனத்தும் பெறுவோமாக.

நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின்பம்.

சண்டிகேஸ்வரர்

 *யார் இந்த* *#சண்டிகேஸ்வரர்*


 சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?

சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.

உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா? அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்…

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.

பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.

ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.

அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.

அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.

அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.

எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.

இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.

சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம்

சிவ ஆலங்களில் சண்டீகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல்

மேலும் சண்டீகேஸ்வரர் சிவபக்தர் மட்டும் இல்லை சிவனின் சொத்துகளை பாதுகப்பவர்

எனவே சிவஆலயங்களை விட்டு செல்லும் முன் சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம் வராமல் கைகளை துடைத்து ,சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டீகேஸ்வரர் தியானம் கலையாமல் செய்யவேண்டும் 

இதுவே மறையாகும் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா!!

அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை...

கீதா

திதி தீர்த்தங்கள்

 *ஸ்ரீ ராம ஜெயம்*🙏

*திதி தீர்த்தங்கள்*🙏🌹

நன்றி குங்குமம் ஆன்மிகம்

* ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றில், அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில், மகாளய அமாவாசை அன்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.

* திருச்சியில் ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும்.

* பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தின் அருகே கூடுதுறையில், மகாளய அமாவாசையன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து மங்கலங்கள் பெறுகின்றனர்.

* திருவையாற்றுப் படித்துறையில் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்தால் தீவினைகள் அகன்று நன்மைகள் கிட்டும்.

* கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் நீராடி, படித்துறையில் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து அதன் கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான தர்மங்கள் செய்தால் நினைத்தது நிறைவேறும்.

* கங்கை நதி பிரவாகமெடுத்து ஓடிடும் காசியில், மகாளய அமாவாசையன்று தர்ப்பணாதி பூஜைகள் செய்வதை சாஸ்திரங்கள் பெருமையுடன் பேசுகின்றன.

* காசியின் அருகே உள்ள விஷ்ணுகயாவில் உள்ள ஆலமரத்தடியில் விஷ்ணு பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த விஷ்ணுபாதத்தில் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்கள் வந்து சேரும்.

* சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலய திருக்குளத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றுமே முன்னோர்களுக்கு தர்ப்பணாதி காரியங்கள் விசேஷமாக நடைபெறுகிறது. அதிலும் மஹாளய அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவ்வாறு நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதைக் காணலாம்.

* கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள திலதைப்பதி எனும் திலதர்ப்பணபுரியில் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட முன்னோர்கள் ஆசி கிட்டும். ராமபிரான் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது.

* சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில் மஹாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபட, அவர்கள் ஆசியால் வம்சம் தழைக்கும்.

* சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின் பகுதியில் மஹாளய அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தம் முன்னோர் கடன்களை செய்து புண்ணியம் பெறுகின்றனர்.

* கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் மஹாளய அமாவாசையன்று அங்கு அருளும் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின், அத்தல குளக்கரையில் முன்னோர் கடன் தீர்த்து அருள் பெறுபவர்கள் ஏராளம்.

* வேதாரண்யத்தில் ஆதிசேது எனும் கோடியக்கரை தீர்த்தக்கரையில் மூழ்கி மஹாளய அமாவாசை அன்று திதி கொடுத்து பக்தர்கள் வாழ்வில் வளம் பெறுகிறார்கள்.

* வாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில் மஹாளய அமாவாசை அன்று புனித நீராடி நீத்தார் கடனை நிறைவேற்றினால் மகத்தான புண்ணியம் கிட்டும்.

* காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில், ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றினார். அத்தலத்தில் மஹாளயபட்ச தினத்தன்று நீத்தார் கடனை நிறைவேற்றினால் முன்னோர்களின் ஆசியுடன், திருமாலின் திருவருளும் கிட்டும்.

* அளகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலில் முருகன் சங்கு சக்கரத்துடன் அருள்கிறார். அங்கு நவகிரகங்க சந்நதியில் சூரியனும் சந்திரனும் எதிரெதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மஹாளயபட்சத்தன்று அங்கு நீத்தார் கடனை நிறைவேற்றும் பக்தர்கள் அனேகம்.

* திருச்சிக்கு அருகே உள்ள பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளயபட்ச தர்ப்பணம் செய்தால் திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி கிட்டும்.

* திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அங்கு மஹாளயபட்ச தர்ப்பணம் செய்து முன்னோர்கள் அருள் பெறுவோர் ஆயிரக்கணக்கில் உண்டு.

* திருப்பூவனம் பூவனநாதர் ஆலயத்தில் சூரியனால் உண்டாக்கப்பட்ட மணிகன்னிகை தீர்த்தக் கரையில் மஹாளயபட்ச தினத்தன்று தர்ப்பணாதி காரியங்களை புரிபவர்கள் முன்னோர்களின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள்.

* விருத்த காசி எனப்படும் விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே ஓடும் மணிமுத்தாறு நதி தீரத்திலும் நீத்தார் கடனை மக்கள் நிறைவேற்றுகிறார்கள்.🙏🌹

திருமணம் சீக்கிரம் கைகூட

 திருமணம் சீக்கிரம் கைகூட வாழை மர பரிகாரம் செய்வது எப்படி?

களத்திர தோஷம்.

வெள்ளிக்கிழமை நாள் அன்று ஒரு வாழை மரத்தினை கொண்டு வந்து அதற்கு நீரால் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு அந்த மரத்திற்கு பூவிட்டு நேவேத்தியம்  வைத்து தாம்பூலம் வைத்து சூடம் காட்டி தூபம் காட்டி களத்தின் தோஷம் நீங்க விநாயகர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் மற்றும் நவகிரகங்களை மனதில் தியானித்து யார் களத்தின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவரோ அவர் அந்த வாழைமரத்துக்கு மஞ்சளால் ஆன மாங்கல்யம் ( தாலி) தன் மனைவி என் பாவித்து கட்ட வேண்டும்

இதை செய்யும் போது சம்பந்தப்பட்ட நபரின் தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் அட்சதை தூவி வாழ்த்த வேண்டும்.

பிறகு 2 1/2 நிமிடங்கள் கழித்து அந்த வாழை மரத்தை தாலி கட்டிய அந்த நபர் கத்தியால் ஒரே வெட்டாக வெட்ட வேண்டும்.பிறகு 2 1/2 நிமிடங்கள் கழித்து ‌மீண்டும் அந்த அறுபட்ட வாழைமரத்துக்கு தூபம் அவற்றை ஓடும் நீரிலோ ஆற்றிலோ அல்லது குளத்திலோ வீசி விட வேண்டும். பிறகு அந்த நபர் தான் அணிந்திருந்த ஆடைகளை அதே இடத்தில் வீசிவிட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நேராக அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று நெய்‌தீபமிட்டு தன் பெயரில் களத்திர பிரார்த்தி வேண்டி அர்ச்சனை செய்ய வேண்டும்.நவகிரங்களுக்கு நெய் தீபமிட வேண்டும்.பிறகு ஆலய அருகாமையில் உள்ள ஏழை எளிய நபர்களுக்கு தங்காளால் இயன்ற ஏதேனும் அன்னதானம் வழங்கினால் போதும்.

அதிவிரைவில் களத்தின் தோஷம் குறைந்து திருமணம் சீக்கிரம் கைகூடும்.

பல்வேறு பட்ட சாபங்களை போக்க வல்லது இந்த வாழைமரம்.ஆகவே தான் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் வாழைமரமே கட்டப்படுகிறது.

இது நிதர்சனமான உண்மை.இதுவே களத்திர பரிகாரம்.

இது  ராஜ முனி சுந்தரானந்தர் கூறிய‌ கர்ம சாந்தி பரிகாரமாகும். இது கை கண்ட பலன் தரும்.இதுவரை எவரும் வெளியிடாத பரமரகசியமாகும்.

களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் கள் இந்த எளிய பரிகாரம் நீங்களே செய்யலாம் அல்லது ஜோதிடர் மூலமாக செய்யலாம்.

குடைமிளகாய் தொக்கு

 குடைமிளகாய் தொக்கு        

தேவையான பொருள்கள்         சிகப்பு குடைமிளகாய் - 2, புளி - புளிப்பிற்கு ஏற்ப, உப்பு - தேவைக்கு ஏற்ப, கடுகு, வெந்தயம் - தலா 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - தேவைக்கு ஏற்ப          

செய்முறை            முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளியை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைக்கவும். ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் இரு தேக்கரண்டி வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும். மிக்ஸியில் குடைமிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும்வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளிக்கவும்பின்பு அரைத்த குடைமிளகாய் விழுது, புளி கரைச்சல் ஊற்றி கொதிக்க வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்பின்பு அனைத்து வகையான பொடிகள், உப்பு சேர்க்கவும்.இந்த கலவையை மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.எண்ணெய் பிரியும் போது அடுப்பை அணைக்கவும்.நன்கு ஆற வைத்து காய்ந்த பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

Friday, September 23, 2022

காசி நகரத்தார் விடுதி

 *காசிக்குச் செல்பவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?*

*இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்: காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!*

*அதன் முகவரி மற்றும் தொலை பேசி எண் என்ன?*

*கீழே கொடுத்துள்ளேன்.*

*அனைவரும் தங்கலாமா?*

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?

அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்து விடுவார்கள்.  புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது

முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:

Sri Kasi Nattukkottai Nagara Satram

Godowlia,

Varanasi - 221 001 (U.P) 

Telephone Nos: 0542 - 2451804,

Fax No: 0542 - 2452404

(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram

Location Godowlia, Tanga Stanad

Behind Sushil Cinema

Varanasi

கட்டணம் உண்டா?

உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது. 

உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.

ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்

அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.

மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.

எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள். 

இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம்

டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்

குளியல் அறைகளில் Water Heater உண்டு 

குடிப்பதற்கு Purified Water உண்டு

மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு

சரி உணவு?

விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.

1

காலைச் சிற்றுண்டி: நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.

இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு

கட்டணம் ரூ.35:00 மட்டுமே

2. 

மதிய உணவு: நேரம் 12:30 மணி 2:30 மணி வரை

சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40:00 கட்டணம்

ரூ.4,000:00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.

3. மாலை 4 மணி டீ உண்டு

4. இரவு 7:30 முதல் 9 மணிவரை

இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்

கட்டணம் ரூ.35:00 மட்டுமே

உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு. 

🙏🙏ஓம் நமசிவாய சிவாய நம ஓம் நமஸ்காரம் 🙏🙏

Courtesy Sri Ranganathan

Monday, September 19, 2022

வானமுட்டி பெருமாள் கோவில்

 கோடிஹத்தி வானமுட்டி பெருமாள் கோவில்

கோடிஹத்தி என்ற சிற்றூர் மருவி தற்காலத்தில் கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது. கோடிஹத்தி என்றால் கொடிய பாபங்களையும் நிவர்த்தி செய்பவர் என்று அர்த்தம். பிப்பல மஹரிஷி இங்கு நெடுங்காலம் தவம் செய்ததாக வரலாறு கூறுகிறது. அவருக்கிருந்த தோல் நோயைப் போக்கி அவருக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஒரு அத்தி மரத்தில் திவ்ய தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். பிற்காலத்தில் சரபோஜி மன்னர் தன் யுத்த தோஷத்தை நிவர்த்தி செய்ய பகவானிடம் வேண்டினார். பகவான் திவ்ய தரிசனம் கொடுத்ததாகவும் அவருடைய தோஷத்தைப் போக்கினதாகவும்

கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. மிகவும் சந்தோஷமடைந்த மன்னர் தற்போதுள்ள கோவிலைக் கட்டினதாகவும் குறிப்புகள் உணர்த்துகின்றன.

சுமார் முப்பது வருஷங்களாகக் கோவில் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.

ஸ்ரீநிவாசப்பெருமாள் ஒரே அத்தி மரத்தால் செய்யப்பட்டவர். 14 அடி உயரத்தில் சதுர் புஜங்களுடன், அபய கரத்துடன் காட்சியளிக்கிறார். தாயார் தயாலக்ஷ்மி. ஆஞ்சநேயர் ஐந்து அடி உயரத்தில் சேவை சாதிக்கிறார். இவரை சப்த ஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கிறார்கள். ஆலய வளாகத்தில் விஸ்வக்சேனர், கருடாழ்வார் மற்றும் ராமானுஜர் உப சன்னதிகளில் அருள்பாளிக்கின்றனர். ஆஞ்சனேயரிடம் தட்டினால் சப்த ஸ்வரங்களும் வெளிப்படுகிறது.

திருவையாறு – மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறைக்கு முன்பாக  ஏழு கிலோமீட்டரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் பயணித்தால் மூவலூர் மார்க்கசஹாயேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஒரு குறுக்கு சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணிக்கவேண்டும்.

சமீபத்தில் தான் இக்கோவிலுக்கு புனருத்ராரணம் செய்யப்பட்டுக் கும்பாபிஷேஹம் விமரிசையாக நடந்தேறியது. ஸ்வாமி அத்தி மரத்தால் செய்யப்பட்டுள்ளதால் அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே. நாம் நம்மை அறியாமல் செய்யும் பாபங்களை நிவர்த்தி செய்யும் ஸ்ரீநிவாசர். மிக அருமையான சிரேஷ்டமான காவிரிக்கரை ஆலயம்.

---அடியேன் ஸி.எஸ்.நாகராஜன்

ஐஸ்வர்யம்

 ஐஸ்வர்யம்  

--------------------

மத்யமர் முகநூலில் ரகோத்தம ராவ்

அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடி சொன்னார் அர்ச்சகர் " லக்ஷ்மி தேவி.. நன்னா தாயாரை   தரிசனம் பண்ணுங்கோ.. ஒரு மண்டலம் தர்சனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு!  ''

 ராமசந்திரன்  பயபக்தியுடன் வணங்கினார்.

'' இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் '' என்று தாயார்  சன்னிதியை  பூட்டிவிட்டு  நடந்தார்.

அது ஒரு புராதனமான கோவில். 

 ராமசந்திரன்  தன் முன்னோர்கள் அங்கு வழிபட்டதாக அறிந்திருந்தார். 

கூகிளீல்  விலாசம் தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தாருடன்  மகனின் காரை  தானே ஓட்டி  வந்திருந்தார். 

மெயின் ரோடிலிருந்து கரடு முரடான சாலையில்  மூன்று கிலோமீட்டர் பயணத்தின் பின்னர்தான் கோவிலை அடைய முடிந்தது.  

பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன்  கவுதம்  புலம்பிக்கொண்டே வந்தான். 

' இப்படி ஒரு மட்டமான ரோடு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே  மாட்டேன்.'' என்று தாத்தாவை செல்லமாக கடிந்து கொண்டான். 

தாத்தாவுக்கு பேரன் மீது கொள்ளை பிரியம். அவனுக்கும் இவர் மீது அன்புதான். ஆனால் எப்போதும் அவருடைய கருத்துக்கெதிராக பேசி வம்புக்கு இழுப்பான்.  அவன் இந்தக் காலத்து  பையன். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லை என்று விதண்டா வாதம் செய்வான். 

நாளாவட்டத்தில் அவனுக்குக்  கடவுள் நம்பிக்கை தானாகவே  வரும் என்று ராமசந்திரன் நம்பினார். 

ஏற்கெனவே அர்ச்சகரிடம்  தொலை பேசியில் பேசியிருந்ததால் அவர்  நைவெத்தியத்துக்காக பொங்கல், வடை, சர்க்கரை பொங்கல் எல்லாம் செய்து வைத்திருந்தார். 

பெருமாள் சன்னதிக்கு போகும் வழியில் தாத்தாவிடம் கேட்டான் கவுதம் " தாத்தா மண்டலம்னா எத்தனை நாள்?''

'' நாப்பத்தெட்டு நாள்... ஏன் கேக்கறே...நீ வந்து சேவிக்கப்போறியா?''

'' அதில்லை தாத்தா..இவர் இத்தனை வருஷமா தர்சனம் ப்ண்ணிட்டு தானே ;இருக்காரு.  ஆனா இவரு இன்னும் அழுக்கு வேஷ்டி துண்டு கட்டிட்டு ஏழையா இருக்காரே...''

' உஷ்...அவர் காதில் விழுந்தால் வருத்தபடுவாரு. கம்முனு வா'' என்றார் ராமசந்திரன் கடுமையாக. 

பெருமாள் சன்னிதியிலும் தீபாராதனை நைவேத்தியம் எல்லாம் முடிந்தது.

மந்திரம் ஓதி  தேங்காய் பழங்கள் பிரசாதம் எல்லாவற்றையும் ஒப்படைத்தார் அர்ச்சகர்.

'' அப்ப நாங்க கிளம்பறோம்..ரொம்ப சந்தோஷம்''  என்ற ராமசந்திரன் 'எவ்வளவு செலவாச்சு' என்று கேட்டு அவர் சொன்ன தொகையுடன் ஐன்னூரு ரூபாய் சேர்த்து தந்தார்.

'' எனக்கு நூறு ரூபாய் போதும்.  பாக்கி நானூறு ரூபாய்க்கு உங்க பேரில் நாலு வெள்ளிக்கிழமை அர்ச்சனை பண்ணிடறேன்'' என்றார்.

காரில் எல்லோரும் ஏறியதும் ஸ்டார்ட் செய்தார் ராமசந்திரன். ஆனால் இஞ்சின் உறுமி உறுமி அடங்கியது. வண்டி கிளம்பவில்லை.  எல்லோரும் தள்ளி ஸ்டார்ட் செய்தாலும் பயனில்லை. மக்கர் செய்தது...அவர் முகத்தில் கவலை படர்ந்தது . இந்த அத்துவானத்தில் எந்த மெகானிக்கை அழைப்பது ? 

கோவிலைப் பூட்டிய அர்ச்சகர் அருகில் வந்தார்.

'' கார் பிரச்னையா...கவலை வேண்டாம். இந்த நெம்பருக்கு  டயல் பண்ணிக் கொடுங்கோ..நான் பேசறேன். ''

 அவர் போனில் பேசினார் '' இங்கே  காரில் ஒரு சின்ன பிராப்ளம். வர்றியா?''

மோபெட்டில் ஒருவன் வந்தான். கார் பான்னெட்டை திறந்து பத்தே நிமிடத்தில் சரி செய்துவிட்டான். காரில் ஒரு ரவுண்டு அடித்து நிறுத்தினான். ராமசந்திரனுக்கு ஏக மகிழ்ச்சி.

  இருனூறு ரூபாயை நீட்டினார். அர்ச்சகர் சொன்னார்

'' பணமெல்லாம் வேணாம். பர்சில் வையுங்க...இவன் என் பையன். பிரான்ஸ்லே நிச்சான் கார் கம்பெனியில்  சீப் எஞ்சினியர்.லீவுலே வந்திருக்கான்..லீவு முடிந்ததும்  ஒரகடம் பாக்டரியில் இன் சார்ஜாக பொறுப்பெடுக்கப் போறான்... ''

'' ஓ.. தட்ஸ் கிரேட் .'' என்றார் ராமசந்திரன் இன்ப அதிர்ச்சியுடன்

'' உங்களுக்கு ஒரே பையனா?''

'' ஒரு டாட்டர் இருக்கா. லண்டனில் டாக்டர்''

ராமசந்திரன் கவுதமை அர்த்தபுஷ்டியுட பார்த்தார் ' தாயாரை தினம் தரிசிக்கும் இவர் ஏழையா இருக்கார்னு சொன்னியே..இப்ப பார்த்தியா தேவியின் சக்தியை?'' என்று பார்வையால் வினவினார். 

அர்ச்சகர் கவுதம் அருகில் வந்தார்  ''  அம்பி,  நீ ஸ்கூலில் எந்த டிரஸ் வேண்டுமானாலும் போட்டுகிட்டு போலாமா?''

'' இல்லை..யூனிபார்ம் இருக்கு..அதைத்தான் போட்டுக்கணும்''

'' அதே மாதிரிதான் இந்த கோவிலைப் பொறுத்தவரைக்கும் எனக்கும் இந்த வேஷ்டியும் துண்டும் தான் யூனிபாரம். நான் பேண்ட் சர்ட் போட்டுகிட்டு பூஜை செஞ்சா நல்லா இருக்குமா...அதுதான். மத்தபடி கடவுளை நம்பினால் நிச்சயம் விரும்பினது கிடைக்கும். '' என்றபடி .

காரில் ஏறிய அனைவரும் அர்ச்சகருக்கும் அவர் மகனுக்கும் கையசைத்து   விடை பெற்றார்கள்.

'' இதே மாதிரி வாராவாரம் ஒரு கோவிலுக்கு போலாமா தாத்தா'' என்று ஆவலுடன் கேட்ட கவுதமை ஆதரவுடன் தட்டிக்கொடுத்தார் ராமச்ச்ந்திரன். '' நிச்சயம் போவோம்'' 

 காரை ரிப்பேர்;ஆக்கி கவுதமை  ஆன்மீகத்துக்கு மாற்றிய இறைவனின் திருவிளையாடலை  எண்ணி வியந்தபடி  வண்டியை ஓட்டலானார்.

Saturday, September 17, 2022

தக்காளி உருளை கடைசல்

 தக்காளி உருளை கடைசல்        

தேவையான பொருள்கள்         தக்காளி - 3, உருளைக்கிழங்கு - 3, சீரகம் - ஒரு தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - 2 இணுக்கு, மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 தேக்கரண்டி, மல்லித் தழை          

செய்முறை            தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.தக்காளி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும்.அதனுடன் பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, தக்காளி, உருளைக் கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.ஓரளவு வதங்கியவுடன் உப்பு சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு மூடி வேக வைக்கவும்.நன்றாக வெந்ததும் மத்தினால் நன்கு கடைந்து விட்டு மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான தக்காளி உருளை கடைசல் தயார்.சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

Friday, September 16, 2022

உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய வேலைகள்

 ஒரு முக்கிய அறிவிப்பு *நாம் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கிய வேலைகள்*

ஆயுள் காப்பீடு, வங்கி கணக்கு, போஸ்ட் ஆபீஸ் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடு வைத்திருப்பவர்களுக்கு சிறு ஆலோசனை

1 வாரிசு (nomination) நியமனம் செய்யப் பட்டுள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்

2 வாரிசின்  பெயர் ஆதார் கார்டு, பான் கார்டு , வங்கிக் கணக்கு மூன்றிலுமே சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

3 முகவரியில் மாற்றம் இருந்தால் உடனடியாக மாற்றவும் முகவரி அத்தாட்சி என்பது நீங்கள் இருக்கும் வீட்டிற்கு இருந்த வீட்டிற்கு அல்ல

4  நீங்கள் புதிய வீட்டிற்கு குடியேறினீர்கள் என்றால் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று POSTAL ID படிவத்தினை பூர்த்தி செய்து பணம் செலுத்தி புதிய வீட்டிற்கான முகவரி அத்தாட்சியை பெறலாம் அதை வைத்துக்கொண்டு எல்லா ஆவணங்களையும் மாற்றிக்கொள்ளலாம்

5  திருமணமான பெண்கள் அவர்கள் பெயருடன் கணவரின் பெயரை சேர்த்துக் கொள்கிறார்கள் அப்படி சேர்த்தால் உடனடியாக பான் கார்டு ஆதார் கார்டு வங்கி கணக்கு எல்லாவற்றிலும் அந்த மாற்றம் இடம்பெற வேண்டும்

6 பெயர் மாற்றம் இருந்தால் government gazette இல் மாற்றி வைத்துக்கொள்வது நல்லது அதற்கு 425 ரூபாய் மட்டுமே செலவு

7 வங்கியில் கணக்கு தொடங்கும் போதும் கணவன் மனைவி இருவருமே இயங்கும் படியான E or S (either or survivor) வைத்துக் கொள்வது நல்லது

8) ஓய்வுதியம் பெறுவோர் கணவன் மனைவி(E or S) கணக்கு வைத்துக் கொள்ளலாம் ஆனால் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாரிசு மட்டுமே நியமிக்க முடியும் 

9 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது கண்டிப்பாக(mode of holding anyone or survivor) இருக்க வேண்டும்

10  பங்குசந்தையில் முதலீடு செய்திருந்தால் அதை  உடனடியாக  D-MAT கணக்கு ஆரம்பிக்கவும்

11) முக்கியமாக LIC பாலிசி வைத்திருப்பவர்கள் முகவரி மாற்றம் வங்கி கணக்கு எண் மாற்றம் உடனடியாக மாற்றவும் ஏனென்றால் எல்ஐசி மட்டுமே முதிர்வு தேதியன்று உங்கள் வங்கி கணக்கில் உங்களுக்கு சேர வேண்டிய தொகையை வரவு வைக்கும் அல்லது கடைசியாக பதிவு செய்த முகவரியில் பதிவுத் தபாலில் உங்கள் முதிர்வு விவரத்தை தெரிவிக்கும்

12) தற்போது வசிக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் குடி போயிருந்தால் கூட கேஸ் ,ரேஷன், எல்ஐசி பாலிசி, வங்கி கணக்கு, ஆதார் கார்டு ,பான் கார்டு, கேபிள் டிவி கனெக்ஷன் மாற்றுவது போல மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

13) முக்கியமாக திருமணமாகாதவர்கள் அவர் கூடப் பிறந்தவர்களுடன் வங்கி கணக்கு (E or S) வைத்துக் கொள்ளலாம் 

14) நீங்கள் உங்கள் குடும்பத்தை நேசிப்பவராக இருந்தால் ஒருவேளை உங்கள் வருமானம் நின்று போனால் (விபத்து, வேலை இழப்பு, மரணம்) உங்கள் குடும்பத்தை பராமரிக்க பணத்தை கொடுக்கவும் அது எவ்வளவு (மாத செலவு X12X20)

15) குழந்தைகள் பெயரில் முதலீடு, இன்சூரன்ஸ், தவிர்க்கவும்

மேற்கூறிய 15 எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் *நாம் உயிருடன் இருக்கும்போது*

*பின்குறிப்பு இந்தப் பதிவை படித்தவுடன் பான் கார்டு ஆதார் கார்டு எங்கு இருக்கிறது கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்*

Thursday, September 15, 2022

த(க)ண்ணீர்

 த(க)ண்ணீர்

========

மத்யமார் முகநூல் பதிவு

~~உண்மை சம்பவம்~~

"நாராயணா கோபாலா கோவிந்தா".

நான் நாலாவது படிச்சப்போ நீங்க யாராவது என்னோட தெருவுல இருந்து இருந்தீங்கன்னா புரட்டாசி முதல் சனிக்கிழமை உங்க வீட்டு வாசல்ல என்னோட அந்த குரல் கேட்டு இருக்கும்.

புரட்டாசி மாசம் தலு போடுற அன்னைக்கி, வருஷம் தவறாம என் கைலதான் சொம்பு குடுத்து அனுப்புவாங்க என்னோட அம்மா, கண்டீஷன்ஸ் அப்ளையோட.

கண்டீஷன்ஸ்:

1. தெருவுல இருக்க ஏதாவது மூணு வீட்டுக்கு போகணும்.

2. அந்த வீட்டுக்குள்ளயும் போகக்கூடாது, காலிங்பெல்லையும் அடிக்கக்கூடாது.

3. வெளிலயே நின்னு, "நாராயணா கோபாலா கோவிந்தா" ன்னு சத்தமா கத்தி, உள்ள இருக்கவங்கள கூப்பிடனும்.

4. கைல இருக்க சொம்புல அவுங்ககிட்ட இருந்து ஒரு கைப்பிடி அரிசி வாங்கிட்டு வரணும் சாமிக்கு தலு வைக்க.

எப்பவும் நான் தான் சிக்குவேன் இந்த டாஸ்க்குக்கு. என்னோட தம்பி, அம்மா கைல சொம்பு எடுத்த உடனே சைக்கிள்ல எங்கயாவது எஸ்கேப் ஆயிடுவான்.

புரட்டாசி முதல் சனி எங்க ஊர்ல, மூணாவது சனி என்னோட பாட்டி ஊர், சென்னைல. ரெண்டு இடத்துலயும் நானேதான் சொம்பு தூக்கணும்.

முதல் வாரம் முடிஞ்சிடுச்சி. மூணாவது வாரம் நாலு நாள் லீவ்ல பாட்டி வீட்டுக்கு ஜாலியா கிளம்பிட்டோம். ஒரே வருத்தம் என்னன்னா அந்த நாலு நாள், கூட படிக்கிற சங்கீதாவையும், லலிதாவையும் மிஸ் பண்ணனும் அவ்வளவுதான்.

போயாச்சு சென்னைக்கு.

சொம்பும் கைக்கு வந்துடுச்சி.

அதே கண்டீஷன்ஸ் தான். ஒரு சின்ன மாறுதலோட.

சென்னைல நாங்க இருந்தது போலீஸ் கோட்ரஸ்ல.

அங்க வீட்டுக்கு வெளில நின்னு காட்டுக்கத்து கத்துனாலும் உள்ள இருக்கவங்களுக்கு கேக்காது. So, காலிங்பெல் அடிச்சிக்கலாம். உள்ள இருக்கவங்க வெளில வந்ததும் "நாராயணா கோபாலா கோவிந்தா" சொல்லிதான் அரிசி வாங்கணும்.

மூணு வீடு, வருஷா வருஷம் போற அதே வீடுங்கள கவர் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

தலு போட்டு சாமிய குளிரவச்சாச்சி.

எனக்கு சாப்பிட்ட உடனே தூக்கம் வரும். இதுல வேலை வேற செஞ்சி இருக்கேன்.

வருமா இல்லையா...

டைட்டா தூங்கி நைட் எட்டு மணிக்குதான் முழிச்சேன்.

இதுக்காகவே காத்துகிட்டு இருக்காங்க பாட்டி, கைல ஒரு பிளாஸ்டிக் குடத்தோட.

ஒரு வேலை மட்டும் பண்ணுடான்னு சொல்லிகிட்டே குடத்தோட என்கிட்டே வர்றாங்க.

அய்யய்யோ, போன வருஷம் வரைக்கும் சொம்பு மட்டும்தான. இந்த வருஷத்துல இருந்து குடத்துல வேற அரிசி கலெக்ட் பண்ணணுமான்னு எனக்கு தூக்கிவாரி போடுது. 

But அது இல்லை.

டேய், கோட்ரஸ் பம்ப்புல ஒரு குடம் தண்ணி புடிச்சுகிட்டு வா.

முதல் அதிர்ச்சிக்கு இது எவ்வளவோ பரவாயில்லைன்னு குடத்தோட கிளம்பிட்டேன்.

போலீஸ் கோட்ரஸ்க்கு பொதுவான ஒரு இடத்துல அடி பம்பு இருக்கும்.

அதுல கோட்ரஸ்க்கு வெளில, குடிசைங்கள்ல இருக்க அயன் பண்றவங்க, ரிக்க்ஷா ஓட்றவங்களும் தண்ணி அடிச்சிக்குவாங்க.

இங்கயும் கண்டீஷன்ஸ் இருக்கு.

கோட்ரஸ்ல இருக்க எங்களுக்குதான் அங்க priority. நாங்க எத்தனை பேரு இருந்தாலும் நாங்க எல்லாரும் அடிச்சி முடிச்ச அப்புறம்தான் அவுங்க அடிக்கணும்.

நான் குடத்தோட போறேன், அங்க ஏற்கனவே ஒரு ஐம்பது வயசுல இருக்க ஒருத்தர் தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்காரு.

அவரைப்பார்த்ததும் தெரிஞ்சிடுச்சி கோட்ரஸ்க்கு வெளில இருக்கவருன்னு.

பாதி குடம் அடிச்சிட்டாரு.

சரி அவரு மீதி குடமும் அடிச்சிக்கட்டும்ன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

(usual rule என்னன்னா, அவுங்க பாதி குடம் அடிச்சி இருந்தாலும், அவுங்க குடத்தை எடுத்துடனும். நாங்க அடிச்ச அப்புறம்தான் மீதியை அடிக்கணும்) 

திடீர்ன்னு எனக்கு பின்னால இருந்து ஒரு லேடி சத்தமா திட்டிகிட்டே வராங்க. யாருன்னு திரும்பி பார்த்தா, எங்க வீட்டுக்கு பக்கத்து பிளாக்ல இருக்க இன்ஸ்பெக்டரோட wife.

அவுங்களுக்கு, என்னை நிக்க வச்சிட்டு அவரு தண்ணி புடிச்சுகிட்டு இருக்கிறதை பார்த்ததும் செம்ம கோவம் வந்துடுச்சி.

இவங்க சத்தம் போட்டதும் கூட அவரு எதுவுமே சொல்லாம தண்ணி புடிச்சுகிட்டு இருந்தாரு.

அடுத்தது இன்னும் சத்தமா கோவத்தோட சொன்னாங்க, "எடுடா குடத்தை!!" ன்னு அவ்வளவு பெரியவரை.

எனக்கு பக்குன்னு ஆயிடுச்சி. 

ஆனா அவரு கோவமே படாம, "இன்னும் கொஞ்சம்தாம்மா", புடிச்சுகிட்டு போய்டறேன்னு பவ்யமா சொல்றாரு.

இவங்க மறுபடி அவரை ஒருமைல திட்டிகிட்டே பம்ப்பு பக்கத்துல போறாங்க.

அவரு மறுபடி மறுபடி கெஞ்சிறாரு.

நேரா போனாங்க, அவரோட பாதி நெறஞ்ச குடத்தை தண்ணியோட தூரமா தூக்கி போட்டுட்டு, இவங்களோட குடத்தை வச்சி தண்ணி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அவ்வளவு நேரம் பொறுமையா இருந்தவரு, ஒரே ஒரு வாக்கியம் மட்டும் கோவமா சொன்னாரு.

"புடிச்சிக்கம்மா, நீ புடிக்கிற தண்ணிய நீ நல்லதுக்கே எடுத்துக்கிட்டு போகலம்மா" ன்னு சொல்லிட்டு ஒடஞ்ச குடத்தை எடுத்துக்கிட்டு போய்ட்டாரு.

தண்ணிய புடிச்சுகிட்டு அவுங்களும் கிளம்பிட்டாங்க. நானும் வீட்டுக்கு வந்துட்டேன்.

மறுநாள் காலைல நான் தூங்கி முழிச்சி கேட்ட முதல் விஷயம், 

அந்த பக்கத்து பிளாக் இன்ஸ்பெக்டர் நேத்து நைட் ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டாருன்னு!!

அந்த பெரியவர் சொன்னது போலவே, பிடித்துக்கொண்டு போன தண்ணீர் நல்ல காரியத்திற்கு பயன்படப்போவதில்லை!!

பின்குறிப்பு:

நம் அனைவருக்கும் தெரிந்ததுதான், மீண்டும் ஊர்ஜிதம் ஆனவை இரண்டு.

1. உயிர்களுக்குள் பேதம் பார்ப்பது பாவம்.

2. ஓருயிரை காயப்படுத்தினால் கட்டாயம் நமக்கு திரும்பவந்து சேரும்.

ஆக்கம்,

அசோக் மு.

நந்திபுர விண்ணகரம்

 நந்திபுர விண்ணகரம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மத்யமார் முகநூலில் இருந்து பாவனா

"பொன்னியின் செல்வன்" ,  மூன்றாம் பாகம் அத்தியாயம் 41 ல் குறிப்பிடப் படும் ஒரு ஊருக்கு இன்று செல்வோமா.

வானதிக்கு கஜேந்திர மோட்சம் அளிப்பதாக மிரட்டி யானை தன் துதிக்கையால்  அவளைத் தூக்கச் செய்கிறார் அன்பில் அநிருத்த பிரமாராயர். " அந்தப் பெண் என்னை பயங்கர ராட்சதன் என்று எண்ணியிருப்பாள் " என்று பின்னர் குந்தவையிடம் குறிப்பிடுகிறார். உண்மை தானே.. அவரை " பிரம்ம ராட்சதர்" என்று தானே நினைக்கிறாள் வானதி.

அடுத்து குதிரையினின்றும் கீழே விழுந்த அடிபட்ட ( விழ வைத்ததும் அவர் தானே) இளவரசன் மதுராந்தகனைத் தூக்கிக் காப்பாற்றி அவர் கொண்டு செல்லும் இடம் நாதன் கோயில் என்னும் சுந்தர சோழ விண்ணகரம்.

 பல்லவ மன்னன்  நந்தி வர்மனால் கட்டப் பட்ட  அந்தக் கோயிலை , அது பற்றி வந்த பெயரை மாற்றி , அப்போது சக்கரவர்த்தியாக இருந்த சுந்தர சோழர் பெயரில் வழங்கினார்கள் போலும். அந்நாட்களில் திருமாலவன் திருக்கோயில்கள் " விஷ்ணு க்ருஹம் " என்று வடமொழியிலும் எனவே " விண்ணகரம்" என்று தமிழிலும் வழங்கப் பெற்றன.

அந்த ஊர் பெருமாள் கோயிலுக்கு அருகே முதன் மந்திரி அநிருத்தரின் மாளிகை ஒன்று இருந்ததாம். சொல்கிறார் அமரர் கல்கி.  சோழர்களின் இரண்டாம் தலைநகரம் பழையாறை நகரின் ஒரு பகுதியில் திருமாலவன் திருக்கோயிலுக்கு அருகில் தன் மாளிகை இருக்க விழைந்தது அந்தப் பரம வைணவருக்கு இயல்பு தானே.

108 வைணவ திவ்ய தேசங்களில் , சோழ தேசத்தில் அமைந்த நாற்பதில் ஒன்று இந்த நாதன் கோயில்.

மூலவர் ஜகன்னாதர் என்பதால் இது தட்சிண ஜகன்னாதம். பூரியும் , சென்னை அருகிலுள்ள திருமழிசையும் , ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணியும் ஜகன்னாதர் உறையும் பிற தலங்கள்.

கும்பகோணத்தினின்றும் கொருக்கை வழியே நாதன் கோயிலை அடையலாம். மயிலாடுதுறை , குத்தாலம் வழியே வருவோர் , பை பாஸில் இடது புறம் ( தெற்கே) திரும்பி , மன்னார்குடி சாலையில் உள்ள சாக்கோட்டையை அடைந்து , திப்பிராஜபுரத்தில் மீண்டும் வலப்புறம் ( மேற்கே) திரும்பி வளைந்து நெளிந்து செல்லும் சாலை வழியே செல்லலாம். தாராசுரத்திலிருந்து , பட்டீஸ்வரம் ,

முழையூர் ( சமணர்களின் குகைகள் இருந்ததால் அந்தப் பெயர் பெற்றது)  வழியே பம்பைப்படையூர் ( பழையாறை நகரின் வீரர்கள் வாழும் நான்கு படை வீடுகளுள் ஒன்று ) அடைந்து அங்கு வலப்புறம் திரும்பி கீழைப் பழையாறை வழியே நாதன் கோயில் சேரலாம். இந்த ஊர்களின் பெயர்களைக் கேட்கும் போதே வந்தியத்தேவனும் , குந்தவையும் , வானதியும் , ஆழ்வார்க்கடியானும் நினைவுக்கு வந்து விடுகிறார்களே.

சூரிய வம்சமாம் சோழ குலத் தோன்றல் சிபிச் சக்கரவர்த்திக்கும் , நந்தி தேவருக்கும் காட்சி தந்து அருளியவராம் இந்தப் பெருமாள்.

திருமகள் இங்கு தவம் செய்து மாலவனின் இதயத்தினின்றும் நீங்கா இடம் பெற்றாளாம். பெருமாள் மேற்கு நோக்கியும் , தாயார் கிழக்கு நோக்கித் தனி சந்நிதியிலும் ஓருவரையொருவர் நோக்கிய வண்ணம் கல்யாண கோலத்தில் காட்சி தருகின்றனர்.

ஐப்பசி மாத சுக்ல பட்ச வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவிக்குக் காட்சி தந்தாராம் ஸ்ரீநிவாசன். அந்த மாத வெள்ளிக் கிழமைகளில் தாயாருக்கு செய்விக்கும் திருமஞ்சனம் அன்பர்கள் நினைத்ததை நிறைவேற்றுமாம்.

செண்பக வனத்தில் தவமிருந்ததால் தேவி செண்பக வல்லி எனப் படுகிறாள். நாதன் கோயிலிலிருந்து மன்னார்குடி வரை உள்ள முழுப் பகுதியுமே செண்பக மரங்கள் நிறைந்த செண்பகாரண்யம் என்றே வழங்கப் பட்டதாம். மன்னார்குடியிலும் தாயார் செண்பக வல்லி தானே.

கவி காளமேகத்தின் பிறந்த ஊர் , மன்னர் விஜய ரங்க சொக்கப்ப நாயக்கரின் அன்னையின் பிணி தீர்த்த தலம் , அவர் பல திருப்பணிகள் செயத் கோயில் என்ற பெருமைகள் உடையது இந்தத் திருத்தலம்.

30.01.2020 அன்று இந்தத் திருத்தலத்தில் தரிசனம் செய்யும் நல்லூழ் கிட்டியது. அப்போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

பாவனா

(பா. அனந்த நாராயணன்)

15.09.2022

திருப்பதி தங்குமிடம்

 திருப்பதி தங்குமிடம்.

திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம்.

Tirumala Sri Kasimath,

Ring road, Near S.V.Meseum,

Tirumala - 517507 (A.P)

Ph : 0877-2277316

திருமலையில் தங்குவதற்கு  ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், 

இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன.

மூல் மட் மின்: +918772277499 0877-2277499.

புஷ்பா மண்டபம் : 0877-2277301.

ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.

உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.

ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316.

ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட்  Ph-0877-2277302.

ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை 

Ph: 0877-2277282.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் 

Ph : 0877-2277370.

ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419.

ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-2277397.

உடுப்பி மட் Ph-0877-2277305.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீமத் ஆத்வான் ஆசிரமம் : 0877-2277826.

ஸ்ரீ பரகலா ஸ்மிமி மட் பி: 0877-2270597,2277383.

ஸ்ரீ திருப்பதிஸ்ரீமன்னாரயன 

ராமானுஜா ஜீயர் மட் பி: 0877-2277301.

ஸ்ரீ சிருங்கரி சாரதா மடம்

Ph: 0877-2277269, 2279435.

ஸ்ரீ அஹோபீதா மட் ப. 0877-2279440.

ஸ்ரீ திருமல காஷி மத் தொலைபேசி: 222 77316

உடுபி மட் பி: 0877 222 77305

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீதந்தி ராமனுஜீயர் மட் Ph : 0877 222 77301)

ஸ்ரீ காஞ்சி காமகோடி 

பீட்டம் மட் / சர்வா மங்கலா கல்யாண மண்டபம் , 

Ph : 0877 222 77370

ஸ்ரீ வல்லபச்சரிய மடம் 

தொலைபேசி: 222 77317

மந்திராலயா ராகவேந்திர சுவாமி மட் / பிருன்தாவனம் Ph : 0877 222 77302

ஆர்யா வைசியா சமாஜம் எஸ்.வி.ஆர்.ஏ.வி.டி.எஸ்.எஸ்.டி

Ph  : 0877 222 77436

ஸ்ரீரங்கம் ஸ்ரீமதி 

ஆதித்யான் ஆஷ்ரம் 

Ph : 0877 222 77826

ஸ்ரீ வைகநாத ஆசிரமம்

Ph : 0877 222 77282

ஸ்ரீ அஹோபில மட்  

Ph : 0877-2279440

ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் / சாரதா கல்யாண மண்டபம் Ph : 0877 222 77269

ஸ்ரீ வைசராஜர் மடம் மோதிலால் பன்சிலால் தர்மசாலா Ph : 0877 222 77445

ஹோட்டல் நரிலமா சௌல்ரி Ph : 0877 222 77784

ஸ்ரீ சீனிவாச சொல்ரி 

Ph : 0877 222 77883

ஸ்ரீ ஹதிராம்ஜி மட் மின் 

Ph : 0877 222 77240

கர்நாடகா விருந்தினர் 

மாளிகை 

Ph : 0877 222 77238

தக்ஷிணா இந்தியா ஆர்யா வியா கபு முனிரட்ணம் 

அறநெறிகள் 

Ph : 0877 222 77245

ஸ்ரீ சிருங்கேரி சங்கர நீலம் 

Ph : 0877 222 79435

ஸ்ரீ ஸ்வாமி ஹதிராஜ் முட்டம் Ph : 0877-2220015

வயதில் மூத்த குடிமக்களும் ஜருகண்டி சொல்லித் தள்ளிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.

65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்பது எப்படி?

நிபந்தனைகள் :

******************

1) ஆதார் அட்டை அவசியம்.

2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்

3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.

4) காலை 10 மணி முதல் 

மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.

5) தினம் 700 பேருக்கும் அனுமதி உண்டு.

6.) உதவி செய்வதெற்கென 

உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அவசியம்.

7) காலை உணவு பால் இலவசம்.

8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.

9) ஒருமுறை சென்றவர் 3 மாத காலத்திற்கு பின்னரே மீண்டும் அனுமதிக்கப் படுவர்.

10) இவை அனைத்தும் இலவச சேவையாகும். பயனுள்ள தகவலை பகிரலாமே. இந்த தகவல்கள்அனைத்தும் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ! 

🙏 ௐ நமோ நாராயணா....!

🤲

வைகுண்டப் பெருமாள் கோயில்

 கி.பி. 14-15-ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசர்களால் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* ஸ்தல சிறப்பு...

வைகுண்டத்தில் இருந்து நேரடியாக பெருமாள் இங்கே வந்ததால், வைகுண்ட வாசர் என்று அழைக்கப்படுகிறார். வைகுண்டவாசர் என்று பெயர் பெற்றதால், இத்தலத்தையே வைகுண்டமாக கருதி, சொர்க்க வாசல் அமைக்கப்படவில்லை. பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் இல்லாத அதிசய கோயிலாக இக்கோயில் இருப்பது சிறப்பாகும். 

ஏகாதசியன்று சுவாமி, கருட வாகனத்தில் வலம் வருகிறார். சுவாமி எதிரே கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவரது இறகுகள் விரிந்த நிலையில் இல்லாமல் மூடிய நிலையில் இருப்பதும் சிறப்பாக கருதப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவார பாலர்களாக இருப்பர். ஆனால், இங்கே அவிரட்சகன், அக்னி ஆகியோர் துவார பாலகர்களாக இருக்கிறார்கள். திருக்கச்சிநம்பி, நம்மாழ்வார், ராமானுஜர் மற்றும் விஷ்வக்சேனர் ஆகியோரது சிலைகளும் இங்கே இருக்கிறது.

* ஸ்தல பெருமை...

பெருமாள் கோயில்கள் அனைத்திலும் பெருமாள் சக்கரத்தை நேராக நமக்கு தெரிகிற படி கையில் பிடித்திருப்பார். ஆனால், இங்கே சக்கரத்தை பிரயோகம் செய்வதற்கான நிலையில் வைத்திருந்து காட்சி தருவது இத்தலத்தின் பெருமையாகும். இதுபோன்ற நிலை வேறு எங்கும் கிடையாதது குறிப்பிடத்தக்கது. 

* ஸ்தல வரலாறு...

சிவபெருமானின் இருப்பிடமான கைலாயாத்தில், அன்னை பார்வதி தேவி ஒரு முறை, இறைவனின் கண்களை விளையாட்டாக தனது இரு கைகளை கொண்டு மூடியபோது பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. அதனால், உயிர்கள் அனைத்தும் தத்தளித்தன.

தேவலோக கணக்குப்படி சில வினாடிகள் என்பது பூலோக கணக்குப்படி நாள் கணக்கில் வரும் என்பதால் அனைத்து உயிர்களும் இருளில் தவித்தன. அதனால், கடும் கோபமடைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணை திறந்து உலகிற்கு வெளிச்சத்தை கொடுத்தார். மேலும், பார்வதி தேவிக்கு தண்டனையாக பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்தார்.

* திருமணம்...

அதன்படி பூவிலகிற்கு வந்த அன்னை பார்வதி தேவி, தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, இன்றைய மாங்காட்டில் சிவபெருமானை நினைத்து, இறைவனையே மணம் புரிவதற்காக விரதம் இருந்தார். மேலும், யாரும் தவம் செய்ய முடியாதபடி அக்னி வளர்த்து ஊசி முனையில், ஒற்றைக்காலில் நின்று கடுமையாக தவம் புரிந்தாள். 

இந்நிலையில், அசுரகுருவான சுக்கிராச்சாரியாரும் தான் இழந்த ஒரு கண்ணை திரும்ப பெறுவதற்காக வேண்டி, இதே மாங்காட்டில் சிவபெருமானை நினைத்து தவம் புரிந்து வந்தார்.

அப்போது சிவபெருமான், சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து அவருக்கு இழந்த கண் பார்வையை மீண்டும் வழங்கினார். அதன் பிறகு, அன்னை பார்வதிக்கு காட்சியளித்து, காஞ்சிபுரத்தில் அவரை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்ததால், அன்னை இங்கிருந்து உடனடியாக காஞ்சிபுரம் சென்றார். 

இறைவனை திருமணம் செய்திட வேண்டும் என்ற ஆவலில், அன்னை தான் தவம் செய்த அக்னியை அணைக்காமல் சென்றபடியால், இந்த இடம் யாரும் வசிக்க முடியாதபடி அனலால் தகித்தது. 

அதனால், அந்த வெப்பத்தை சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிற ஆதி சங்கரர் இங்கே வருகை புரிந்து அந்த வெப்பத்தை அணைத்ததாக வரலாறு கூறுகிறது.

* தங்கைக்காக...

இந்நிலையில், சிவபெருமானை தவம் புரிந்து திருமணம் செய்வதற்காக வந்த தங்கையைத் தேடி, சீதனத்துடன் பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக புறப்பட்டு வந்தார். பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்தபோது, மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்த சம்பவத்தைக் கூறினார். 

மேலும், இத்தலத்திலேயே வைகுண்டவாசர் என்ற பெயரில் தங்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில், பெருமாளும் வைகுண்டப் பெருமாளாக இங்கேயே எழுந்தருளி காட்சியளித்தார்.

அதனால், பெருமாளுக்கு அருகிலேயே மார்க்கண்டேயர் தவம் செய்தபடி இருக்கிறார். 

தங்கைக்கு திருமணச்சீர் கொடுப்பதற்காக, பெருமாள் கொண்டு வந்த மோதிரம் அவரது வலது உள்ளகையில் இருப்பதை பார்க்கலாம்.

தங்கைக்கு சீர் கொண்டு வந்த பெருமாள் என்பதால், இவரை சீதன பெருமாள் என்றும் அழைக்கிறார்கள்.

* கற்றளி கோயில்...

கருவறையில் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகளில் பின் வலதில் பிரயோகச் சக்கரமும், பின் இடதில் சங்கும் ஏந்தியுள்ளார். வலது முன்கை கணையாழியை வைத்துள்ளது. கோயில் வாயிலில் மூன்று கால் உடைய முனிவர் ஒருவர் அமர்ந்துள்ளார். முக மண்டபத்தில் ஆழ்வார் சிற்பங்கள் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. 

இக்கோயிலில் பெருமாளுக்குரிய அஷ்டதிக்கு காவலர்கள் சிற்பம் இருந்திருக்கலாம் என்ற நிலையில், தற்போது ஒரே ஒரு சிற்பம் மட்டுமே உள்ளது. அது வருணனாய் இருக்க கூடும் என்று தெரிய வருகிறது.

பல்லவர், சோழர் கால இடைக்காலத்தில் அமைக்கப்பட்ட கற்றளி கோயிலாக இருக்ககூடும் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.

மூலவர் - வைகுண்டவாசர்
அம்மன்/தாயார் - ஸ்ரீதேவி, பூதேவி
ஸ்தல விருட்சம் - மாமரம் 
ஊர் - மாங்காடு
மாவட்டம் - காஞ்சிபுரம்

* திருவிழா...

வைகுண்ட ஏகாதசி, தை மாதம் நடைபெறுகிற தெப்பத்திருவிழா போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

* கோயில் விவரங்கள்...

• நடை திறக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

• செல்லும்வழி :

சென்னை கோயம்பேட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில், பூந்தமல்லி செல்லும் பாதையில், குமணன் சாவடியில் இருந்து பிரிந்து மாங்காடு போகும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது. தாம்பரம், பூந்தமல்லி போன்ற இடங்களில் இருந்து நேரடியாக பேருந்து வசதி உள்ளது. மேலும், சென்னையின் அனைத்து பகுதியில் இருந்தும் மாங்காட்டிற்கு போக்குவரத்து வசதி இருப்பதால் எளிதில் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிக்கலாம்.

* தங்கும் வசதி...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் உங்கள் பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல், குடும்பத்துடன் தங்கி வைகுண்டப் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் அருகில் உள்ள, மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், பூந்தமல்லி வைத்தியநாதர் கோயில் மற்றும் வரதராஜர் கோயில்களுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்யலாம்.

* முகவரி :
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு வைகுண்டப்பெருமாள் கோயில், 
மாங்காடு-602 101,
காஞ்சிபுரம் மாவட்டம்...

🙏🙏🙏