கறி வேப்பிலை பொடி
தேவையான பொருட்கள்
2 கப் கருவேப்பிலை
3 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
ஒரு டீஸ்பூன்சீரகம்
ஆறு எண்ணிக்கை மிளகு
ஒரு டீஸ்பூன்மல்லி விதை
அரை டீஸ்பூன் பெருங்காயம்
தேவையான அளவு உப்பு
கறிவேப்பிலையை நன்கு அலம்பி நிழலில் உலர்த்தவும்.
ஈரப்பதம் இல்லாத கருவேப்பிலையை கடாயில் சேர்த்து மிதமான தீயில் முறுகலாக வறுத்து எடுக்கவும்.
உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு,வர மிளகாய் மிளகு, சீரகம்,பெருங்காயம் என அனைத்தையும் தனித்தனியே பொன்னிறமாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுக்கவும்.
வறுத்து வைத்த பொருட்கள் நன்கு ஆறிய பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்கவும்
தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்
இப்பொழுது கருவேப்பிலை பொடி தயார்
இது சாதத்துடனும் இட்லி உடனும் சேர்த்து எண்ணெய் அல்லது நெய் விட்டு சாப்பிடலாம்.👍
No comments:
Post a Comment