Saturday, December 7, 2024

கறிவேப்பிலை சாதம்

 கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம்
தேவைக்கேற்ப எண்ணெய்
தேவைக்கேற்ப முந்திரி
தாளிக்க கடுகு உளுந்து
ஒரு கொத்து கருவேப்பிலை 

கருவேப்பிலை பொடி

இரண்டு கைப்பிடி கருவேப்பிலை
2 தேக்கரண்டி மிளகு
1 தேக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

கருவேப்பிலையை தனியா வெறும் சட்டியில் வறுத்துக்கணும்... மிளகு, உப்பையும் வறுத்து, ஆற வச்சு பொடி செஞ்சு வச்சுக்கோங்க... 

இந்த பொடி ஆறு மாசம் கூட வெளியவே அருமையா இருக்கும்..

ஒரு அகலமான கடாய் அடுப்புல வச்சு, எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கரு வேப்பிலை போட்டு தாளிக்கணும்.. அப்பறம் முந்திரி போட்டு பொன்னிறமா வறுத்துக்கணும்

இரண்டு தேக்கரண்டி கரு வேப்பிலை பொடி போட்டு ஒரு நிமிடம் வதங்கினபிறகு உதிரியா வடிச்ச இரண்டு கப் சாதத்த அதுல போட்டு கிளறுனா, கருவேப்பிலை சாதம் தயார்... 

எளிமையான, சுவையான, சத்தான கருவேப்பிலை சாதம் தயார்...

ஆனந்தமாக சாப்பிடுங்க...

ஆரோக்கியமா இருங்க...

No comments:

Post a Comment