Tuesday, December 3, 2024

முடக்கத்தான்🥬கீரை ரசம்

 முடக்கத்தான்🥬கீரை ரசம்

கீரை🥬சமையல்

முடக்கத்தான் கீரை
(பொடியாக நறுக்கியது) - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
புளி - கொட்டைப்பாக்கு அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

பொடித்துக்கொள்ள

மிளகு - ஒரு டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

🥬தாளிக்க.:

கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பூண்டு (நசுக்கியது) - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

🥬ஒரு கப் சூடான தண்ணீரில் முடக்கத்தான் கீரையைப் போட்டு அரை மணிநேரம் மூடிவையுங்கள். 

🥬பொடித்துக்கொள்ளக் கொடுத்திருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளுங்கள். 

🥬அடி கனமான பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். 

🥬ஒரு கொதி வந்ததும், பொடித்துவைத்த பொடியையும் முடக்கத்தான் கீரை ஊறிய சாற்றையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும்வரை வேகவிடுங்கள். 

🥬தாளிக்கக் கொடுத்த பொருட்களைக் கொண்டு ரசத்தைத் தாளித்து இறக்கி, முடக்கத்தான் கீரையைத் தூவிப் பரிமாறலாம். 

🥬மழை, குளிர் காலங்களில் மூட்டு வலி வரும்போது, இந்த ரசத்தைச் சாப்பிட்டால் வலி குறையும்.

🥬🥬🥬🥬🥬🥬🥬🥬🥬

No comments:

Post a Comment