Tuesday, December 31, 2024

பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பார்* 👇🏻 தேவை : பாகற்காய் - ஒரு கப்

 *பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பார்* 👇🏻

 தேவை :    பாகற்காய் - ஒரு கப்  புளிக்கரைசல் - கால் கப்  மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்  குழைவாக வேக வைத்த துவரம் பருப்பு - கால் கப்  கொத்த மல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. 

 வறுத்து அரைக்க

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  
காய்ந்த மிளகாய் - 3  
தனியா (மல்லி) - 3 டேபிள்ஸ்பூன்  கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். தாளிக்க:  கடுகு, எண்ணெய், பெருங் காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  கறி வேப்பிலை - சிறிதளவு.

செய்முறை* : வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும்.  

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், 4 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல், கால் கப் தண்ணீர் சேர்த்து அரை வேக்காடாக வேகவிட்டுத் தனியாக வைக்கவும். 

மீதமுள்ள புளிக் கரைசலைக் கொதிக்கவிடவும். 

அதனுடன் வேகவைத்த  பாகற்காய் சேர்த்து நன்றாக வேக விடவும். 

பிறகு, துவரம் பருப்பு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதி விடவும். 

வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். 

மேலே கொத்த மல்லித்தழையைத் தூவி பரிமாறவும். 

 *வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த  பாகற் காய் அரைத்து விட்ட சாம்பாரை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும்.* 

 மருத்துவ குறிப்பு

 பாகற்காய் புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து மிக்கது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க உதவுகிறது; வயிற்றிலுள்ள பூச்சிகளையும் ஒழிக்கிறது.*

No comments:

Post a Comment