பாகற்காய் பொடிமாஸ்
இதற்கு 250 கிராம் அளவுள்ள பாகற் காயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதை நன்கு அலம்பி சுத்தம் செய்து உள் இருக்கும் விதை பகுதிகளை நீக்கி விட்டு புட்டுத் துருவலில் வைத்து நன்கு துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி துருவி எடுத்த பாகக்காய் துருவல்களை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும்.
குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
பாகற்காய் வெந்து வரும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் ஒன்று, நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அடுத்ததாக நாம் அறைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதுகளை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சை வாசனை செல்லும் வரை இவற்றை வதக்கி கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு தேக்கரண்டி சாம்பார் மிளகாய் தூள் இவற்றை கடாயில் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்க வேண்டும்.
இந்த நேரத்தில் நாம் வேக வைத்திருக்கும் பாகற்காய் துருவலை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது பாதி எலுமிச்சை பழச்சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வரை பாகற்காயை கிளறி இறக்கினால் சுவையான பாகற்காய் பொடிமாஸ் தயார்.
இதை சூடான சாதத்துடன் கிளறி சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.
பாகற்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த பொடி மாஸ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் உடல் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.✌️
No comments:
Post a Comment