நீண்ட நாட்கள் சப்பாத்தி கெடாமல் இருக்க
எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்டாக சப்பாத்தி இருக்க கோதுமை மாவுடன் சிறிது கொண்டைக்கடலை மாவும் சேர்த்து பிசைய வேண்டும். கொண்டைக்கடலை மாவு சப்பாத்திக்கு சாஃப்டான தன்மை மற்றும் சுவையையும் கூட்டி கொடுக்கும்.
ஹோட்டலில் சப்பாத்தி சாஃப்டா இருக்க மாதிரியே வீட்டிலையும் சப்பாத்தி சாஃப்டா செய்யலாம். அப்படி சாஃப்டா சப்பாத்தி செய்யறதுக்கு இந்த வழிமுறைகளை மட்டும் பின்பற்றுங்கள் போதுமானது.
தேவையான பொருட்கள்:
அரை கிலோ கோதுமை மாவுடன் 50 கிராம் கொண்டைக்கடலை மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு சூடு தண்ணீர் ஊற்றி மாவு பிசைய வேண்டும்.இதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவு பிசைந்து எடுக்கவும்.
பின்னர் எப்போதும்போல மாவு பிசைந்து எடுத்து சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி எத்தனை நாட்கள் ஆனாலும் சாஃப்டாக இருக்கும். குழந்தைகள் சாப்பிடவும் மிருதுவாக இருக்கும்.
No comments:
Post a Comment