Tuesday, December 17, 2024

குழம்புப் பொடி

குழம்புப் பொடி

மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும்.

தேவையான பொருட்கள் 

தனியா- ஒன்றரை கிலோ
வற்றல் மிளகாய்- அரை கிலோ துவரம்பருப்பு- கால் கிலோ 
கடலைப் பருப்பு- 100 கிராம் 
மிளகு-50 கிராம் 
சீரகம்- 50 கிராம் 
வெந்தயம்- 1 மேசைக்கரண்டி 
அரிசி- 1 மேசைக்கரண்டி 
சோம்பு- 1 மேசைக்கரண்டி

செய்முறை 

அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும் 

-------------------------------------------------------------------------

ரசம் பொடி

தேவையான பொருட்கள் 

தனியா - 1 கப் 
துவரம் பருப்பு - ½ கப்
காய்ந்த மிளகாய் - 10 
மிளகு - 15 
சீரகம் - 1/4 கப் 
கருவேப்பில்லை - 10 இலை 
பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி 
வெந்தயம் - ½ தே.கரண்டி 

செய்முறை 

முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். -------------------------------------------------------------------

ரசப் பொடி

தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ------------------------------------------------------------------------

கறிப் பொடி

தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் 

------------------------------------------------------

திடீர் சம்பார் பொடி

தேவையான பொருட்கள்   

1) காய்ந்த மிளகாய் - 25 
2) தனியா - 1 கப் 
3) வெந்தயம் - ஒரு மேசைகரண்டி
 4) பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
 செய்முறை 

ஒரு வெறும் வாணாலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அறைக்கவும். இதை போட்டு சாம்பார் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். 

---------------------------------------------------------


No comments:

Post a Comment