Tuesday, December 31, 2024

சாம்பார் சாதம்

 சாம்பார் சாதம் செய்வது எப்படி ...

குக்கரில் வைக்க

அரிசி - 2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள் பொடி
பெருங்காயம்

பொடி செய்து கொள்ள

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மல்லிவிதை - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பழம் - 4
மிளகு - 10
கசகசா - 1 தேக்கரண்டி

காய்கறிகள்

வெங்காயம் - பெரிதாக 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
கத்திரிக்காய் - சிறிதாக 2
காரட் - பெரிதாக 1
உருளைக்கிழங்கு - பெரிதாக 2
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை
கொத்து மல்லி

தாளிக்க

கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - சிறிதளவு (வேண்டுமானால்)

எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா? இப்போ என்ன செய்யணும் அப்படின்னு பார்க்கலாம். ரொம்ப மெனக்கட வேண்டாம். ஒரு பத்து, பனிரெண்டு ஸ்டெப்களில் சுவையான சாம்பார் சாதம் தயார் செய்யலாம் வாங்க.

முதலில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் எல்லாத்தையும் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்துவிடுங்க. சாதாரணமாக சாதத்திற்கு வைப்பதை விட ஒன்று அல்லது இரண்டு விசில்கள் அதிகம் வரலாம்.

பொடி செய்வதற்கு அப்படின்னு சொல்லி இருக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒரு வாணலியில் அப்படியே எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். சூடு ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு பொடி செய்து கொள்ளவும்.

காய்கறிகள் அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை தண்ணீரில் ஊற வைத்து நன்றாக பிழிந்து சாறெடுத்துக் கொள்ளவும்.

குழம்பு செய்வதற்கான வாணலியை எடுத்துக் கொண்டு சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும்.

அதில் முதலில் வெங்காயத்தையும் மிளகாயையும் போட்டு வதக்கவும்

வெங்காயம் நன்றாக வதங்கிய பின் மீதமுள்ள காய்களைப் போட்டு வதக்கவும்.

காய்கறிகள் வதங்கிய பின் அதில் கரைத்து வைத்த புளித் தண்ணீரை விட்டு , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.

பச்சை வாசனை போன பின்னாடி, நாம் பொடி செய்து வைத்துள்ள பொடியைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.

சிறிது கொதித்த பின் குக்கரில் இருக்கும் சாதம் பருப்பை எடுத்து இதில் சேர்த்து நன்றாகக் கிளரவும்.

நன்றாகச் சேர்ந்தவுடன் அதன் மேல் கறிவேப்பிலையையும் கொத்தமல்லியையும் போட்டு கிளறிவிடவும்.

சாப்பிடும் முன் சிறிது நெய்யை விட்டு கிளறினால் வாசனையாக இருக்கும்.

இதில் காய்கறிகள் தேவையான அளவு கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். பூண்டு, பீன்ஸ், பட்டாணி, கவிப்பூ (காலி பிளவர்) என பிடித்த காய்கறி எல்லாம் போடலாம். பொடி செய்து கொள்ளும் பொழுது அதிலும் சிறிது பெருங்காயம் போடலாம். புளித் தண்ணீருடம் கொஞ்சம் மஞ்சள் பொடியும் போடலாம்.

#sujisujiaarthi

பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பார்* 👇🏻 தேவை : பாகற்காய் - ஒரு கப்

 *பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பார்* 👇🏻

 தேவை :    பாகற்காய் - ஒரு கப்  புளிக்கரைசல் - கால் கப்  மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்  குழைவாக வேக வைத்த துவரம் பருப்பு - கால் கப்  கொத்த மல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. 

 வறுத்து அரைக்க

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்  
காய்ந்த மிளகாய் - 3  
தனியா (மல்லி) - 3 டேபிள்ஸ்பூன்  கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். தாளிக்க:  கடுகு, எண்ணெய், பெருங் காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  கறி வேப்பிலை - சிறிதளவு.

செய்முறை* : வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும்.  

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், 4 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல், கால் கப் தண்ணீர் சேர்த்து அரை வேக்காடாக வேகவிட்டுத் தனியாக வைக்கவும். 

மீதமுள்ள புளிக் கரைசலைக் கொதிக்கவிடவும். 

அதனுடன் வேகவைத்த  பாகற்காய் சேர்த்து நன்றாக வேக விடவும். 

பிறகு, துவரம் பருப்பு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதி விடவும். 

வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். 

மேலே கொத்த மல்லித்தழையைத் தூவி பரிமாறவும். 

 *வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த  பாகற் காய் அரைத்து விட்ட சாம்பாரை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும்.* 

 மருத்துவ குறிப்பு

 பாகற்காய் புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து மிக்கது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க உதவுகிறது; வயிற்றிலுள்ள பூச்சிகளையும் ஒழிக்கிறது.*

Monday, December 30, 2024

கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி சாதம்

 *கன்னடா style ஸ்பெஷல் தக்காளி சாதம்*  ....👆👇🏻

கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி சாதம் செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ளலாம்....

அதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் காரத்திற்கு ஏற்ப எட்டு முதல் 

10 காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து எண்ணெயில் நன்கு பொரிய வதக்க வேண்டும்.....

அடுத்ததாக நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை நான்காக கீரி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.....


தக்காளி நன்கு மசிந்ததும் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து ஒரு முறை கிளறி கொடுத்து அடுப்பை அணைத்து விடலாம்....


கடாயில் வதக்கிய இந்த பொருட்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்....


அடுத்து ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு அன்னாசி பூ, இரண்டு துண்டு பட்டை, ஒரு ஏலக்காய் , பத்து முந்திரிப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.....


அடுத்ததாக நீளவாக்கில் லேசாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், 

2 பச்சை மிளகாய் நீள வாக்கில் கீறி சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்....

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நீளவாக்கில் லேசாக நறுக்கிய 

4 தக்காளி பழம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.....

தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.....

அடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி  விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும்....

இஞ்சி  பச்சை வாசனை சென்றவுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை குக்கரில் சேர்த்து வதக்க வேண்டும்.....

ஒரு நிமிடம் வரை மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும் .

அடுத்ததாக ஒரு கப் அரிசிக்கு 2 கப் வீதம் தண்ணீர் சேர்த்து முதலில் தண்ணீரை கொதிக்க விட வேண்டும்....

தண்ணீர் நன்கு கொதி வந்ததும் நாம் அரை மணி நேரம் ஊற வைத்திருக்கும் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம்.....

இதனுடன் ஊற வைத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி ஒரு கைப்பிடி அளவு, ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை பொடி பொடியாக நறுக்கியது, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடிவிட வேண்டும்....

மூன்று விசில்கள் வைத்து இறக்கினால் சுவையான கர்நாடகா ஸ்டைல் தக்காளி சாதம் தயார். பிரியாணி போன்ற மணக்க மணக்க அருமையான வாசத்தில் எளிமையான தக்காளி சாதம்.

இது. இதன் டேஸ்ட் different ஆ இருக்கும் .👆👆

வகை வகையான பொங்கல்

 *வகை வகையான பொங்கல் மற்றும் வடை ரெசிபீஸ்..*

*மாலினி மாமி கிச்சன்*

*சர்க்கரைப் பொங்கல்:

தேவையானவை: 

அரிசி – 250 கிராம், வெல்லம் – 500 கிராம், நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரி – 20, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, உலர்ந்த திராட்சை – 20, பால் – 200 மில்லி, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.

செய்முறை: 

அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு… பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும். குங்குமப்பூ  மற்றும்  மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்தப் பொங்கல் மிகவும் சிறந்தது. விருப்பப்பட்டால், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.

*சோள வடை

தேவையானவை: 

இனிப்பு சோளம் (ஸ்வீட் கார்ன்) – 4 கதிர், பொட்டுக்கடலை – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

இனிப்பு சோளத்தை கத்தியின் உதவியால் சுரண்டி எடுத்து… பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சோளத்தில் புரதச் சத்து அதிகம். சோளம் அதிக மாக கிடைக்கும் சீஸனில் வடை, அடை, சூப், கஞ்சி என விதம்விதமாக தயாரித்து சாப்பிடலாம்.

*வெண் பொங்கல்

தேவையானவை: 

அரிசி – 250 கிராம், நெய் – 100 மில்லி, பாசிப்பருப்பு – 100 கிராம், மிளகு – 20, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, வறுத்த முந்திரிப் பருப்பு – 10, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிதளவு நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையையும் நெய்யில் வறுக்கவும். வேக வைத்த அரிசி – பருப்பு கலவையுடன் வறுத்த முந்திரி, வறுத்த மிளகு – இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாகக் கலக்கினால்… வெண் பொங்கல் தயார்.

குறிப்பு: மார்கழி மாதத்தில் கோயில்களில் இந்த வெண் பொங்கல் அதிகாலை நைவேத்யம். வடை – தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

*கீரை வடை:

தேவையானவை: 

உளுத்தம்பருப்பு – 250 கிராம், பொடியாக நறுக் கிய கீரை – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, எண்ணெய் – 500 மில்லி,  உப்பு – தேவையான அளவு.

செய்முறை : 

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி… இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பொடி யாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு வகை கீரையில் செய்யலாம். இதற்கு சாம்பார் சிறந்த காம்பினேஷன்.

*புளி பொங்கல்:

தேவையானவை: 

அரிசி – 250 கிராம்,  புளி – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு… கடுகு, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். புளித் தண்ணீருடன் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து இதில் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், உடைத்து வைத்து இருக்கும் அரிசி ரவையை தூவிக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பிடித்த பொங்கல். புளிப்பும், காரமுமாக…நல்லெண்ணெய் மணத்துடன் அசத்தலான சுவையில் இருக்கும்.


*துவரைக்காய்  அவல் வடை:

தேவையானவை: 

பச்சைத் துவரைக்காய் – 200 கிராம், (தோல் உரித்து எடுக்கவும்), கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு   – தலா ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, அவல் – ஒரு கப் (ஊற வைக்கவும்),  எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

துவரைக்காயுடன் பச்சை மிளகாய், அவல், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். மாவுடன் துருவிய கேரட், வாழைத் தண்டு, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து…  எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: துவரைக்காய் சீஸனில் இந்த வடை மிகவும் ஸ்பெஷல் அயிட்டம். துவரைக்காயில் பொரியல், குருமா, கூட்டு என பலவிதமான ‘டிஷ்’கள் தயாரிக்கலாம் .

*மசால் வடை:

தேவையானவை: 

கடலைப்பருப்பு – 200 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, வெங்காயம் – 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்,  எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை பருப்புடன்  சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக் கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: சாம்பார் – சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். புதினாவை நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.

*சோளம்  பார்லி  அவல் பொங்கல்:

தேவையானவை: 

பார்லி – 100 கிராம், அவல் – 250 கிராம், உடைத்த சோளம் – ஒரு கப், மிளகு – சீரகம் (பொடித்தது) – 2 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு – 20, நெய் – 100 மில்லி,  பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

பார்லி, அவல், சோளம் மூன்றையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை ஒன்று சேர்த்து, மூன்று மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, மூன்று   விசில் வந்ததும் இறக்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்து… வேக வைத்த சோளம், பார்லி, அவல் கலவையுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை விட்டு… உப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: சுகர் கம்ப்ளெயின்ட் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்தப் பொங்கல்.

*ரவை பொங்கல்:

தேவையானவை: 

வறுத்த ரவை – கால் கிலோ, மிளகு – 10, சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), வறுத்த முந்திரிப் பருப்பு – 10, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 100 மிலி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

மிளகு – சீரகத்தை பொடித்துக் கொள்ள வும். கடாயில் நெய் விட்டு… பொடித்த மிளகு – சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதில், ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும்போது ரவையை போட்டு கிளறி, இறக்கி முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.

குறிப்பு: இது, எளிதாக செய்யக் கூடிய பொங்கல். புதினா சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

*தயிர் வடை:

தேவையானவை: 

உளுத்தம்பருப்பு – 250 கிராம், பச்சை மிளகாய் – 3, மிளகு – 10, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, கேரட் துருவல் – ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 250 மில்லி, தயிர், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மாவை நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டியான தயிரைக் கொட்டி வைக்கவும். லேசாக சூடாக்கிய தண்ணீரில் வடைகளை போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு பெரிய பிளேட்டில் பரவலாக வைக்கவும். மேலே கொத்தமல்லி,  கேரட் துருவல் போட்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: தயிர் மிகவும் புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இஞ்சி, புதினா, கொத்தமல்லியை அரைத்து தயிரில் கலந்தும் தயிர் வடை தயாரிக்கலாம்.

*வெரைட்டி வெஜிடபிள் வடை:

தேவையானவை: 

உளுத்தம்பருப்பு – 200 கிராம், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சைப் பட்டாணி  – தலா ஒரு கப், புதினா – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவு  டன் கேரட் துருவல், கோஸ் துருவல், குடமிளகாய், புதினா, பட்டாணி சேர்த்துப் பிசைய வும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை  வடை களாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்வும்.

குறிப்பு: அவரவர் விருப்பப் படி பிடித்த காய்களை பொடி யாக நறுக்கி சேர்த்து வடை தயாரிக்கலாம். இந்த வடைக்கு சில்லி சாஸ், தக்காளி சாஸ் சிறந்த காம்பினேஷன்.

*பால் பொங்கல்

தேவையானவை: 

அரிசி – 250 கிராம், பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – 500 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு – 20, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, நெய் – 100 மில்லி.

செய்முறை: 

அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து  ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு   இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் கல்கண்டு சேர்க்கலாம். பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு வறுத்து சேர்க்கலாம்.

*ஜவ்வரிசி வடை:

தேவையானவை: 

ஜவ்வரிசி – 250 கிராம், பார்லி, அவல் – தலா அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு,  பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

பார்லி, ஜவ் வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, அவல் சேர்த்துப் பிசையவும். இதனுடன் உப்பு, இஞ்சி, வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு    வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம். இதற்கு சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன்.

*வெஜிடபிள் பொங்கல்:

தேவையானவை:

 பாசிப்பருப்பு (வறுத்தது) – 100 கிராம், அரிசி – 250 கிராம், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பட்டாணி – தலா ஒரு கப், இஞ்சி (துருவிக் கொள்ளவும்) – ஒரு சிறிய துண்டு, மிளகு – 20, சீரகம் – ஒரு டீஸ்பூன், நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரிப் பருப்பு – 10, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

அரிசி, பாசிப்பருப்பை கலந்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு – சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுக்கவும். நறுக்கிய, துரு விய காய்கறிகள் எல்லாவற் றையும் கடாயில்   போட்டு… நெய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சாதத்துடன் வதக்கிய காய் கறிகள், வறுத்த மிளகு –  சீரகம், முந்திரி, நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப் பிடாத குழந்தைகளை இப்படி காய்கள் சேர்த்த பொங்கல் செய்து சாப்பிட வைக்கலாம். உலர்ந்த திராட்சை, ஸ்வீட் கார்ன் சேர்த்தும் செய்யலாம்.

*ஃப்ரூட்ஸ் பொங்கல்:

தேவையானவை: 

அரிசி – கால் கிலோ, உலர்ந்த திராட்சை – 20, மாதுளை முத்துக்கள் – ஒரு கப், வாழைப்பழம் – 2, ஆப்பிள் – ஒன்று, சப்போட்டா – 2, பப்பாளிப்பழத் துண்டுகள் – ஒரு கப், நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரி – 10, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: 

அரிசியை நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைவாக வேகவிடவும். ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாழைப்பழத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கவும். சப்போட்டாவை தோல் உரித்து விதை நீக்கி நறுக்கவும். பப்பாளியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போட்டு, எல்லா பழங்களையும் சேர்த்து, நெய் விட்டு, உப்பு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். மேலே உலர்ந்த திராட்சையை தூவவும்… ஃப்ரூட்ஸ் பொங்கல் ரெடி!

குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற பொங்கல் இது. பிஸ்தா, பாதாம், பேரீச்சை  சேர்த்தும் தயாரிக்கலாம்.

பிரண்டை துவையல்

 Partagé de mes Notes:

பிரண்டை துவையல் | Pirandai Thuvayal Recipe In Tamil 

பிரண்டை துவையல் செய்து சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்லது. எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பெரும்பாலும் பிரண்டை சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்படின்னு நிறைய பேரு அதை ஒதுக்கி வச்சுடுவாங்க. ஆனால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். இந்த பிரண்டை துவையல் எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம். ஒரு தடவை இதே மாதிரி செய்முறையில் செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுட சுட சாதத்துல இந்த பிரண்டை துவையல் போட்டு கொஞ்சமா நெய் இல்லனா நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டா அவ்வளவு ஆரோக்கியமா இருக்கும். டேஸ்டும் பக்காவா இருக்கும். இதை இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். ரசம் சாதம் தயிர் சாதம் லெமன் சாதம், புளி சாதம் இதுக்கும் கூட சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். 

Prep Time10 minutes mins Active Time10 minutes mins Total Time20 minutes mins Course: Side Dish Cuisine: Indian, TAMIL Keyword: Pirandai Thuvayal Yield: 4 People Calories: 184kcal 

Equipment 1 பவுள் 1 கடாய் 1 மிக்ஸி தேவையான பொருட்கள் ▢ 

1 கப் பிரண்டை ▢ 
2 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு ▢ 
5 வர மிளகாய் ▢ 
3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள் ▢ 
1 துண்டு இஞ்சி ▢ 
உப்பு தேவையான அளவு ▢ 
புளி நெல்லிக்காய் அளவு 

செய்முறை ▢ 

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். ▢ பிரண்டையை நன்றாக கழுவி சுத்தம் செய்து எண்ணெயில் சேர்த்து வதக்கவும். ▢ அதனுடன் புளி இஞ்சி தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் தயார். 

Nutrition Serving: 400g | Calories: 184kcal | Carbohydrates: 3.6g | Protein: 16.44g | Fat: 3.7g | Sodium: 139mg | Potassium: 171mg | Fiber: 7.4g | Vitamin A: 69IU | Vitamin C: 327mg | Calcium: 24mg | Iron: 10mg

#சமையல் Cousine traditionnelle indienne TN

குழம்பு மிளகாய்த்தூள்

எங்க வீட்ல குழம்பு மிளகாய்த்தூள் இப்படிதாங்க அரைப்போம் 😍🥰🫰

மிளகாய்த்தூள் - பாட்டி சொன்ன ரகசியம்

மிளகாய் தூள் அரைக்கும்போது இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும் குழம்பு ருசியா இருக்கும். எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை -150 கிராம்
கொத்தமல்லி -ஒரு கிலோ
காய்ந்த மிளகாய் -ஒரு கிலோ
மஞ்சள் -100 கிராம்
வெந்தயம் -50 கிராம்
கடலைப்பருப்பு -100 கிராம்
மிளகு -100 கிராம்
சீரகம் -100 கிராம்
கடுகு உளுத்தம் பருப்பு -100 கிராம்
துவரம்பருப்பு -100 கிராம்
சுக்கு சிறிதளவு

செய்முறை

மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்து எடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஆற வைக்கவும்.

இதனை நன்கு மைய தூள் பதத்திற்கு மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்து வந்து வீட்டில் ஆறவைத்து காற்று புகாத ஒரு பாத்திரத்தில் அடைத்து வைக்கலாம்.

மேலும் இந்த மிளகாய் தூள் பொடி போட்டு வைக்கப்படும் டப்பாவில் பிரியாணி இலை போட்டு வைத்தால் பூச்சி விழும் தொல்லை இருக்காது.

#சமையல் Cousine traditionnelle indienne TN

ஆந்திரா ஸ்டைல் பருப்பு

 ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி செய்வது எப்படி .....

ஒரு அகலமான கடாயில் ஒரு கப் துவரம்பருப்பு சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் இந்த பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பருப்பை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஒரு கப் துவரம் பருப்பிற்கு கால் கப் கடலை பருப்பு என்பது கணக்கு. அதன்படி கால் கப் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக கால் கப் பாசிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதே கடாயில் ஒரு தேக்கரண்டி சீரகம், காரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஆறு காய்ந்த வத்தல் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதையும் அந்த தட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். இறுதியாக ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த பொருட்கள் நன்கு சூடு ஆறியதும் ஒரு தேக்கரண்டி பெருங்காயம், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது சுவையான ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி ரெ

Friday, December 27, 2024

பாகற்காய் பொடிமாஸ்

பாகற்காய் பொடிமாஸ்

இதற்கு 250 கிராம் அளவுள்ள பாகற் காயை எடுத்துக் கொள்ள வேண்டும். 

அதை நன்கு அலம்பி சுத்தம் செய்து உள் இருக்கும் விதை பகுதிகளை நீக்கி விட்டு புட்டுத் துருவலில் வைத்து நன்கு துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். 

இப்படி துருவி எடுத்த பாகக்காய் துருவல்களை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும்.

குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். 

பாகற்காய் வெந்து வரும் நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் ஒன்று, நன்கு பழுத்த தக்காளி பழம் இரண்டு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்ததாக கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி கடுகு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். 

அடுத்ததாக நாம் அறைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதுகளை இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

பச்சை வாசனை செல்லும் வரை இவற்றை வதக்கி கொள்ள வேண்டும். 

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி சாம்பார் மிளகாய் தூள் இவற்றை கடாயில் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்க வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் வேக வைத்திருக்கும் பாகற்காய் துருவலை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். 

இப்பொழுது பாதி எலுமிச்சை பழச்சாறு, அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வரை பாகற்காயை கிளறி இறக்கினால் சுவையான பாகற்காய் பொடிமாஸ் தயார். 

இதை சூடான சாதத்துடன் கிளறி சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும். 

பாகற்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த பொடி மாஸ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் உடல் வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.✌️

Thursday, December 26, 2024

பாம்பே சட்னி

 பாம்பே சட்னி

தேவையான பொருட்கள் :::::

1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
3 -4 பச்சை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
2 தக்காளி
கறிவேப்பிலை
கொத்துமல்லி 
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை::;;

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் என அனைத்தயும்  பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணை வைத்து , கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். அரிந்து வைத்தத்தை போட்டு வதக்கவும். 

கடலை மாவில் தண்ணீர் விட்டு கரைத்து வாணலி இல் ஊற்றவும்.

நன்கு கொதித்து கெட்டியானதும் (சட்டினி போல் ஆனதும் ) இறக்கவும்.

கறிவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்.....

தோசை இட்லிக்கு நல்லா இருக்கும்....

👆👆👆

வாழைப்பூ அடை

வாழைப்பூ அடை 

இதை எப்படி செய்வது ...👇🏻

இந்த அடை செய்வதற்கு முதலில் ஒரு கைப்பிடி அளவு வாழைப்பூவை எடுத்து நரம்புகள் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். 

ஒரு கப் குதிரை வாலி அரிசி, 
2 தேக்கரண்டி துவரம் பருப்பு, 
இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி பாசிப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி இட்லி அரிசி சேர்த்து நன்கு களைந்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பருப்புடன் காரத்திற்கு ஏற்ப நான்கு முதல் ஐந்து சாய்ந்த வத்தல் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 

5 மணி நேரம் கழித்து இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பரபரவென அடைத்து எடுத்துக் கொள்ளவும். 

அதேபோல் வாழைப்பூவையும் சேர்த்து பரபரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

அரைத்த பொருட்களை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

அதனுடன் துருவிய ஒரு கப் கேரட், ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் வெங்காயம், கைப்பிடி அளவு முருங்கைக்கீரை சேர்த்து நன்கு கலந்து கொடுத்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி மஞ்சள், தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். 

இப்பொழுது மாவு தயார். தோசை கல்லை அடுப்பில் ஏற்றி சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து பெரிய வட்டமாக இல்லாமல் நடுத்தரமாக ஊற்றிக் கொள்ளவும். 

இந்த தோசைக்கு நல்லெண்ணெய் சேர்த்து சமைக்கும் பொழுது தோசை வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சுவையான சிறு தானிய வாழைப்பூ தோசை தயார். 

இந்த தோசையுடன் தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னி வைத்து சாப்பிடும் பொழுது சுவை சிறப்பாக இருக்கும்.👆👆👆

ரவை வெண்பொங்கல்

 ரவை வெண்பொங்கல் செய்வது எப்படி .

தேவையான பொருட்கள்

ரவை – ஒரு கப்
பாசிப் பருப்பு- அரை கப்
முந்திரிப்பருப்பு – 10
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு மற்றும் தண்ணீர் – தேவையான அளவு
இஞ்சி – சிறிய துண்டு
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை

ஒரு குக்கரில் பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை கப் பாசிப்பருப்புக்கு ஒரு கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதே நேரம் மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து ரவையை நன்கு வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு நன்கு வெந்ததும் ரவையை சேர்த்து கட்டிகள் விழாத அளவு கிளறி கொள்ளவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் மிளகு, சீரகம் , முந்திரிப் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இறுதியாக வாசனைக்காக கருவேப்பிலை சேர்த்து தாளித்து இந்த தாளிப்பை பொங்கலுடன் சேர்த்து கிளற வேண்டும். இப்பொழுது சுவையான ரவை பொங்கல் தயார்...

குண்டூர் ஸ்பெஷல் கார இட்லி

 மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் குண்டூர் ஸ்பெஷல் கார இட்லி ரெசிபி இதோ!

இட்லிக்கு எப்பவும் ஒரே மாதிரியான சட்னி, சாம்பார் என வைத்து சாப்பிடுவது சலிக்கும் நேரங்களில் புதுவிதமாக காரப்பொடி வைத்து இட்லியை டேஸ்டாக மாற்றி சாப்பிடும் பொழுது சற்று சிறப்பாக இருக்கும். அந்த வகையில் ஐந்து முதல் பத்து நிமிடங்களில் தயாராகும் குண்டூர் ஸ்பெஷல் கார இட்லி ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

இட்லி மாவு – 1 கப்
காய்ந்த வத்தல் – 15 முதல் 20
கடலைப்பருப்பு – 50 கிராம்
மல்லி – 25 கிராம்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
புலி – பாதி எலுமிச்சை பழ அளவு
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 1

செய்முறை

புதிதாக அரைத்த இட்லி மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து மினி இட்லிகளாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்த வத்தலை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அதை எடுத்து கடலைப்பருப்பு, மல்லி,கருவேப்பிலை, சீரகம், , புலி இவற்றை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களின் சூடு ஆறியதும் மிக்சியில் சேர்த்து பரபரவென அரைத்துக் கொள்ளவும். மையாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதை கடாயின் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தாளிப்பிற்காக கடுகு சேர்த்துக் கொள்ளவும். கடுகு பொறிந்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயங்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி மற்றும் இட்லிகளை சேர்த்து நன்கு எண்ணெயில் படும்படி கிளறி கொடுக்க வேண்டும்.

இப்பொழுது நமக்கு சுவையான குண்டூர் ஸ்டைல் காரை இட்லி தயார். தேவைப்பட்டால் வாசனைக்காக சிறிது மல்லி இலை தூவி தேவைப்பட்டால் வாசனைக்காக சிறிது மல்லி இலை தூவி பரிமாறவும்.

Wednesday, December 25, 2024

புதினா இடியாப்பம்

 புதினா இடியாப்பம்

தேவையான  பொருட்கள்

இட்லி அரிசி - 250 கிராம்,
புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, 
கடுகு, பொட்டுக்கடலை - தலா ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
நெய், உப்பு - தேவையான அளவு.


 *செய்முறை* ::::

இடியாப்ப மாவை தயாரித்துக் கொள்ளவும்....

வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பொட்டுக் கடலை தாளித்து.....

பொடியாக நறுக்கிய புதினா இலை சேர்த்து வதக்கவும். 

இடியாப்பத்துடன் சிறிது நெய் சேர்த்து, வதக்கியதையும் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்....👆👆

Tuesday, December 24, 2024

தனியா ரசம்

 *சாப்பிடவே புடிக்கலனு  எனக்கு தனியா ரசம் வச்சேன். இப்ப வழக்கத்தைவிட நாலு வாய் கூடுதலா சாப்டாச்சு. ரசத்தோட மகிமை 😋😋*

*ரசம் தயாரிக்கும் முறை*

 50 துவரம் பருப்பில் அரிசி தண்ணீர் மட்டும் ஊற்றி அதில் கொஞ்சம் சீரகம் பெருங்காயத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் 

1.  நெல்லிக்காய் அளவு புளி பழுத்த தக்காளி இரண்டு தேவையான அளவு உப்பு இரண்டு டம்ளர் தண்ணீரில் எடுத்துக் கொள்ளவும் 

2. இரண்டு பச்சை மிளகாய் 
4 வர மிளகாய் 
2டேபிள் ஸ்பூன் மிளகு
 2 1/2டேபிள் ஸ்பூன் சீரகம் 
6 பல்லு பூண்டு 
 கருவேப்பிலை கொஞ்சம்

 அனைத்தையும் சேர்த்து திருப்பிரு  என்று பொடியாக்கி கொள்ள வேண்டும் 

3.  புளி தண்ணீரில் அனைத்தையும் போட்டு கலக்கிக் கொள்ள வேண்டும் 

4. கடாயில் ஒன்றை டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயத்தூள் கருவேப்பிலை தாளித்து அதில் இந்த புளிக்கரைசலோடு ரசத்தை ஊற்ற வேண்டும் 

 ஒரு கொதி வந்தவுடன் இறக்க வேண்டும் 

 பருப்புத் தண்ணீர் ஊற்ற வேண்டும் 

 அரை நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம் 

மல்லித்தழை தூவி பரிமாற வேண்டும் 

 அதிகம் கொதிக்க கூடாது 👍

 ரசம் தயார்🦋💕💕💕

அரைச்சு விட்ட ரசம்.

 *அரைச்சு விடற சாம்பார் மாதிரி அரைச்சு விட்ட ரசம்.*

கல்யாணத்துலேயும் சரி இந்த ரசம் மட்டும் மிஸ் பண்ணவேமாட்டேன்.

ரசம் மேல அப்டி ஒரு க்ரேஸ். .

செட்டிநாடு ரசம், 
பருப்பு ரசம், 
தக்காளிரசம், 
மிளகுரசம், 
சீரக ரசம், 

எலுமிச்சை ரசம், னு விதம் விதமா அத்தனையையும் செஞ்சு அதுவும் லாக்டவுன்ல இருந்து இப்ப வரை  ரசத்துலதான் பாதி நாள் ஓடுது.

ஒரு நா குருமா ghee rice, fried rice னு பண்ணிட்டா அடுத்த நாளே ரசத்த தான் தேடுது. நாக்கு. 

ஒரு சில ரசத்துக்கு தனியாவே வேணாம் ஒரு சில ரசத்துக்கு பருப்பே வேணாம். 

ஆக மொத்தத்துல ஈசியா கிடைக்கற  தனியா, சீரகம், மிளகு, பருப்பு, புளி, எலுமிச்சை இதை வைச்சு அந்த ingredients க்குள்ளயே shuffle பண்ணி டக்குனு செய்ற ரசம் எப்பவுமே எனக்கு  கை கொடுக்கறதோட நாக்கு, தொண்டைக்கும்  அதிக ருசி.

ரசப்பொடி இருக்கு. சில ரசத்துல புளி கரைச்சு தக்காளி சேத்து பொடியை தூவி நுரைக்க இறக்கினாவே வேலை சிம்பிளா முடிஞ்சது. 

ரசப்பொடி ஆனா வீட்டு தயாரிப்பா இருந்தா இன்னமும் கூடுதல் சுவை

இந்த ரசத்துக்கு எப்பவுமே சைடு டிஷ் காய்கறில்லாம் வேணும்ன்றதே இல்லை. சோம்பேறி யா இருந்தாலும் சரி நாக்குக்கு உணக்கையா வேணும்னாலும் சரி ரசம் is the best choice 

இந்த ரசத்தோட காய்கறிதான் வேணும்ங்கறதேல்ல. வெறும் அப்பளமோ, இல்லே கடலை பருப்பு, பாசிபருப்பு, or கொத்துமல்லி துவையலே கூட நல்ல காம்பினேஷன். அதுவும் பண்ணமுடியலேன்னா ஒரு சிப்ஸ் பாக்கெட் or mixture பாக்கெட் கூட போறும்  அள்ளும். அப்டியே.

கம கமா ரசம்

 *எல்லாரும் பிரியாணி கூட பக்குவமா வந்துரும்னு நினைப்பாங்க* 

*ஆனா ரசம் வைக்கிறது கஷ்டமா இருக்கே புளி கூடுதல் ஆயிடுது டேஸ்ட் கம்மியா இருக்குனு நினைப்போம்*

அப்படி ஏதாவதுன்னா இந்த மாரி செஞ்சு பாருங்கள் 

ஒரு கடாயில் 1 டீஸ்பூன் சீரகம் 
1 டீஸ்பூன் மிளகு , 
தோல் நீக்கிய பூண்டு 5 பல்லு , 
1/2 டீஸ்பூன் முழுமல்லி

 இதை எண்ணெய் ஊற்றாமல் வறுத்து ரோஸ்ட் பண்ணி மிக்ஸி ஜாரில் மாற்றி கொள்ளவும் 

அதனுடன் பாதி தக்காளி , 6 இதழ் கொத்தமல்லித்தழை சேர்த்து கொரகொர என்று அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்

பாதி லெமன் சைஸ் புளி ஊற வைத்து அதன் தண்ணீர்ல உப்பு சேர்த்து பாதி தக்காளி பிசைந்து விட்டு கொத்துமல்லி பிச்சுப்போட்டு புளிக்கரைசல் தாயார் சேத்து வைத்துக்கொள்ளுங்கள் 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை , பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து வைத்த மசாலா சேர்த்து கூடவே மஞ்சள்தூள் வதக்கிக் கொள்ளவும் 

கடைசியில் புளிக்கரைசல் ஊற்றி நுரைவந்த பிறகு இறக்கிவிடுங்கள் 

கமகம என்று ரசம் தயார்

வாழைக்காய் மசாலா

 வாழைக்காய் மசாலா செய்வது எப்படி ...

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2 பெரியது
வெங்காயம் - 4 (அ) 5
பூண்டு - 10 பல்லு
இஞ்சி பூண்டு அரைத்த விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் -½ டீஸ்பூன்
சீரகப்பொடி -½டீஸ்பூன்
கடுகுப்பொடி - 1/2 டீஸ்பூன்
வெந்தயப்பொடி 3½ டீஸ்பூன்
தக்காளி ½கிலோ.
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

1. வெங்காயத்தைத் தோலுரித்து நீளவாக்கில் ஓரங்குலத் துண்டுகளாக்கவும், பூண்டை உரித்து வைக்கவும்.

2. வாழைக்காயை தோல் சீவி, 1/2 அங்குல கனத்தில் வில்லைகளாக நறுக்கி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித் தெடுக்கவும்.

3. চত வெந்தயம், சீரகம், தனித்தனியாக எண்ணெய்விடாமல், சூடான வாணலியில் சிவக்க வறுத்து பொடி செய்யவும்.

4. தக்காளியை கொதிநீரில் சில நிமிடங்கள் போட்டு எடுத்து தோலுரித்து அரைத்து வடிகட்டவும்.

5. நெய் அல்லது எண்ணெயை வாணலியில் சூடாக்கி, பூண்டு மற்றும், அரிந்த வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

6. இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும்

7. சில நிமிடங்கள் வதக்கியபிறகு தக்காளிச்சாறை சேர்த்து கொதிக்கவிடவும்.

8. உப்பு மிளகாய்த்தூள், சீரகப்பொடி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

9. சில நிமிடங்கள் கொதித்ததும் பொரித்த வாழைக்காய் துண்டுகளைச் சேர்க்கவும்.

10. குழம்பு சிறிது கெட்டியானதும் இறக்குவதற்கு முன்பு, கடுகுப் பொடி,, வெந்தயப் பொடி, கரம்மசாலாப் பொடி சேர்க்கவும்.

11. பொடியாக அரிந்த கொத்தமல்லிக் கீரை சேர்த்து, சூடாக சப்பாத்தியுடன் பரிமாறலாம். விருப்பமானவர்கள் சிறிது க்ரீம் (பாலேடு) சேர்க்கலாம்....

Saturday, December 21, 2024

கோவில் காஞ்சிபுரம் இட்லி

 கோவில்  சுவையில் காஞ்சிபுரம் இட்லி ?

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரசாதமான காஞ்சிபுரம் இட்லி.

இந்த கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கு தோசை வடை மற்றும் காஞ்சிபுரம் இட்லியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கிட்டதட்ட பல ஆண்டுகளாக இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து வேக வைக்கிறார்கள். மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழை இலையும் பயன் படுத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்.

📝தேவையான பொருட்கள்

✍️பச்சரிசி – 1 கப்
✍️உளுந்து – 3/4கப்
✍️வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
✍️சீரகம் - 1/4டீஸ்பூன்
✍️மிளகு - 1 /4டீஸ்பூன்
✍️சுக்கு பொடி – 1 /4டீஸ்பூன்
✍️முந்திரி – 10
✍️பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
✍️கறிவேப்பிலை – தேவையான அளவு
✍️கடுகு- 1 டீஸ்பூன்


📝செய்முறை விளக்கம் : 

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதை மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொற கொறப்பாக அரைக்கவும். நார்மல் இட்லிக்கு அரைப்பது போல் நைஸாக அரைக்கக் கூடாது. காஞ்சிபுரம் இட்லிக்கு மாவை எப்போதுமே கொற கொறப்பாகத் தான் அரைக்க வேண்டும். பின்பு மாவை சில மணி நேரம் வைத்து புளிக்க விடவும்.

முதலில் ஒரு கடாயில் நெய் அல்லது கடலை யெண்ணைய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, முந்திரி சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதிலல், சுக்கு பொடி, சீரகம், மிளகு, பெருங் காயத்தூள், கறி வேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

இப்போது தாளித்த பொருட்களை அரைத்து புளிக்க வைத்துள்ள மாவில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்கு கலந்து கொள்ளவும். இதை வழக்கம் போல் இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கலாம்.

✍️ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி போலவே சாப்பிட, மந்தாரை இலையை வட்டமாக வெட்டி அதை ஓரு பவுலில் வைத்து மாவை ஊற்றி 10 இருந்து 16 நிமிடம் வேகவைக்கவும் 🫰🏻

Wednesday, December 18, 2024

திருப்பதி புளியோதரை

 திருப்பதி புளியோதரை

திருப்பதி என்றாலே லட்டுக்கு தான் நினைவுக்கு வரும் . ஆனால் லட்டுக்கு மட்டுமில்லை.. துட்டுக்கும் பஞ்சமில்லை    

இன்னொரு விஷயமும் இருக்கு இங்கே 👇🏻

தேவஸ்தான புளியோதரையும் ஸ்பெஷல் தான் ! வாங்க ட்ரை பண்ணலாம்!

திருப்பதி என்று நினைக்கும் பொழுது நம் மனதில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி தேவஸ்தான லட்டு அவ்வளவு சுவையாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது. 

ஆனால் திருப்பதியில் லட்டுக்கு இணையாக தேவஸ்தான புளியோதரையும் ஸ்பெஷல் தான். 

இந்த புளியோ தரையை நாம் வாழ்நாளில் ஒரு முறையாவது சுவைக்க வேண்டும். திருப்பதி தேவஸ்தான புளியோதரை ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்

வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
காய்ந்த வத்தல் – 4
கருவேப்பிலை – கைப்பிடி அளவு
முந்திரி பருப்பு – 10
புளி – பெரிய எலுமிச்சை பழ அளவு
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி – அரை தேக்கரண்டி
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். அதில் வெந்தயம், மிளகு, சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

வறுத்த இந்த பொருட்களை சிறிது நேரம் கழித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடியாக மாற்றிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் அதிகமாக நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிப்பிற்காக கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளை சேர்த்துக் கொள்ளவும், 

அதன் பின் கருவேப்பிலை மற்றும் காய்ந்த வத்தல்களை சேர்த்துக் கொள்ளவும். 

தேவையான அளவு முந்திரிகளை சேர்த்து இதனுடன் வதக்க வேண்டும். 

அதன் பின் நாம் ஊற வைத்திருக் கும் புளியை நன்கு கரைத்து தண்ணீர் மற்றும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக நாம் அரைத்து வைத்திருக்கும் வெந்தய பொடியை இதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். 

இப்பொழுது இதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். 

இந்த கலவையை ஒரு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் ஒரு சிறிதளவு வெல்லத்துண்டு சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும். 

கடாயின் ஓரங்களில் எண்ணை பிரிந்து வரும் பொழுது நமக்கு புளியோ தரை தொக்கு தயாராக மாறி இருக்கும்.

இந்த புளியோதரை தொக்கை சாதத்தில் சேர்த்து கிளறி அப்படியே சாப்பிட்டு விடாமல் ஒரு பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடும் பொழுது சுவை மிக அருமையாக திருப்பதி ஸ்பெஷல் சுவையில் நாவில் இருக்கும் - 👍👏🏻

வத்தல் குழம்பு பொடி

 வத்தல் குழம்பு பொடி.....  

தேவையான பொருட்கள்

ஸ்டாக் பொடி:

2 மேஜை கரண்டி நல்லெண்ணை
2 மேஜை கரண்டி கடலை பருப்பு
2 மேஜை கரண்டி தோலுரித்த முழு உளுந்து
½ மேஜை கரண்டி மிளகு
½ மேஜை கரண்டி வெந்தயம்
2 மேஜை கரண்டி சீரகம்
6 மேஜை கரண்டி தனியா
20கார சிகப்பு மிளகாய்
2 மேஜை கரண்டி அரிசி
½ தேக்கரண்டி பெருங்காயம்
2 கப் கறிவேப்பிலை
தேவையானஉப்பு

மசாலா பொடி

செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

ப்ரபோர்ஷன் (Proportion) கவனத்தில் வைத்துகொண்டு அதிகமாகவோ அல்லது குறைவான அளவு பொடி செய்க

குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லேட்டில் நல்லெண்ணை சேர்க்க; சூடானதும் கடலை பருப்பு சேர்த்து கிளற, 2--3 நிமிடங்கள்;; நிறம் மாறும் சிறிது போன சிவப்பாகும். உளுந்து சேர்த்து கிளற, 2--3 நிமிடங்கள்; மிளகு, வெந்தயம், சீரகம், தனியா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளற. தனியா நிறம் மாறி நல்ல வாசனை வரும். மிளகாய், அரிசி, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துகிளற. அரிசி குழம்பை கெட்டியாக்கும். மிளகாய் காந்த கூடாது.

வீடு முழுதும் வாசனை தூக்கும். அடுப்பை அணைக்க. நன்றாக ஆறினதும் பிளென்டரில் முதலில் மிளகாயை பொடிசெய்க, பின் மீதி வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடிசெய்க. எல்லவற்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள், உப்பு சேர்க்க. காற்று புகாத (air tight container) ஜாரில் வாரகணக்கில் சேமித்து வைக்கலாம்.

ஸ்டாக் பொடியில் இருந்து 2 மேஜை கரண்டி எடுத்து 8 கப் குழம்பில் சேருங்கள். குழம்பு கம கம என்று வாசனை தூக்கும் நான் மணதக்காளி வத்தல் குழம்பு செய்தேன்

#சமையல் Cousine traditionnelle indienne TN

Tuesday, December 17, 2024

கொத்தவரங்காய் கார குழம்பு

 கொத்தவரங்காய் கார குழம்பு....

தேவையான பொருட்கள்

 40நிமிடங்கள்

 5 நபர்கள்

1/4கி கொத்தவரைங்காய்
2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1பெரிய வெங்காயம்
1எலுமிச்சை அளவு புளி
1பெரிய தக்காளி
1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
2ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
1/2கப் துருவிய தேங்காய்
10சாம்பார் வெங்காயம்
1ஸ்பூன் சீரகம்
தேவையானஅளவு உப்பு
1ஸ்பூன் கடுகு
1கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

முதலில் கொத்தவரங்காயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கொத்தவரங்காயும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.. வதக்கி செய்வதால் குழம்பு மணமாக இருக்கும்..

நன்றாக வதங்கியதும் அதனுடன் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து புளியும் மிளகாய் தூளும் பச்சை வாசனை போகும் அளவு நன்றாக கொதிக்க விடவும்.. அதே சமயம் காயும் நன்றாக வெந்துவிடும்.. காய் வெந்த பிறகு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.. முதலிலேயே உப்பு சேர்த்தால் காய்கறி வேக நேரம் ஆகும்..

 மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், சாம்பார் வெங்காயம் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்..

குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் போது அரைத்த தேங்காயை அதில் ஊற்றி நன்றாக கெட்டியாக வரும் அளவு கொதிக்க விடவும்.. கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்..

கடாய் வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்..

இப்போது சூடான சுவையான அருமையான கொத்தவரங்காய் காரக்குழம்பு தயார்..

காரக் குழம்பு

 காரக் குழம்பு செய்வது எப்படி....

தேவையான பொருட்கள்

கத்தரி - 6 எண்ணிக்கை
சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) - 6
தக்காளி - 1 [நறுக்கவும்]
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 3 பல் [மசித்தது]
புளி சாறு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இளநீர்
கடுகு விதை - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சனா பருப்பு - 1 டீஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
அசாஃபோடிடா[ஹிங், பெருங்காயம்]-1 டீஸ்பூன்
எள் எண்ணெய் - 3 டீஸ்பூன்

தேவைக்கேற்ப தண்ணீர்

வறுக்கவும் மற்றும் அரைக்கவும் தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
சனா பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
 அரிசி - 1 டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
தேங்காய் - 2 டீஸ்பூன்

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அனைத்து பொருட்களையும் சேர்த்து, வெளிர் பழுப்பு வரை வதக்கி, அரை கிளாஸ் தண்ணீரில் நன்றாக விழுதாக அரைக்கவும்.

வெந்தய விதை - 1 டீஸ்பூன் [உலர்ந்த வறுத்து பொடியாக அரைக்கவும்]

தயாரிப்பு

வெந்தயத்தை வறுத்து (பொரிப்பதற்கு எண்ணெய் சேர்க்க வேண்டாம்) பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.

பின்வருவனவற்றை நன்றாக பேஸ்ட் செய்ய வறுக்கவும் மற்றும் அரைக்கவும்: 3 வெங்காயம் + 2 சிவப்பு மிளகாய் + 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதை + தேங்காய் துண்டு + 1 டீஸ்பூன் வங்கம் கிராம் + 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு + 5 மிளகு சோளம் + 1 டீஸ்பூன் சீரகம்

கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வெங்காயம் சேர்த்து பொன்னிறம் / வெளிப்படையானதாக மாறும் வரை வதக்கவும்.

வெந்தயப் பொடியைத் தூவி, மஞ்சள் தூள் மற்றும் சாதத்தை சேர்க்கவும்.

நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது வறுத்த பிரிஜாலைப் போடவும் (பக்கத்தில் துண்டுகளாக வெட்டவும் அல்லது அளவு மிகவும் சிறியதாக இருந்தால் அதை முழுவதுமாக வைக்கவும். அதிகப்படியான ஜிங்கிலி எண்ணெயை வைக்கவும்)

அரைத்த கலவையை ஊற்றவும், பின்னர் புளி தண்ணீரை சேர்க்கவும் (அதிக கெட்டியான அல்லது மிகவும் நீர்த்த)

அரைத்த விழுது, உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும்.

முடிந்ததும் காரகுழம்பு மீது 5 டீஸ்பூன் இஞ்சி எண்ணெயை ஊற்றவும்

புழுங்கல் அரிசியுடன் பரிமாறவும்.

30 வகை ரசம்

 30 வகை ரசம்-- #அம்மா_சமையல்

30 நாள் 30 வகை சமையல்..

*'சௌத் இண்டியன் சூப்பர் சூப்!’- 

இது, நம்ம ஊர் ரசத்துக்கு வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர்.*

அத்தகைய ரசத்தை, இங்கே 30 விதமாக சமைத்து திக்குமுக்காட வைக்கிறார் சமையல் கலை நிபுணர் 

மலாதி அசோக் குமார் .

--------------------------------------------------

*கொட்டு ரசம்*

 *தேவையானவை:*

 புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 ரசப்பொடி செய்ய - தேவையானவை:*

 தனியா - 300 கிராம், மிளகு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், சீரகம் - 25 கிராம், மஞ்சள்துண்டு - சிறியது, காய்ந்த மிளகாய் - 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்).

 *செய்முறை:*

புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி... கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். ---------------------------------------

*முருங்கைப் பிஞ்சு ரசம்*

 *தேவையானவை:*

 முருங்கைப் பிஞ்சு (நறுக்கியது) - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், தக்காளி - 2, மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 துவரம்பருப்பு, தக்காளி, முருங்கைப் பிஞ்சு ஆகியவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

 -----------------------------------------------------

 *வெங்காய ரசம்*

 *தேவையானவை:*

 தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - 2, நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை தூவவும் . ------------------------------------------------------------------------

*கொத்தமல்லி ரசம்*

 *தேவையானவை:*

 தக்காளி - 3, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 தக்காளி, கொத்தமல்லியுடன் தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பெருங்காயம் தேவை இல்லை. -------------------------------------------------------------------------------

 *கறிவேப்பிலை ரசம்*

 *தேவையானவை:*

 கறிவேப்பிலை - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, கடுகு, உப்பு - தேவையான அளவு.

*செய்முறை:*

 கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். ----------------------------------------------------------------

 *பொரித்த ரசம் - 1*

 *தேவையானவை:*

 வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

 *அரைக்க:*

 துவரம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - ஒரு டீஸ்பூன் (சிறிது நெய்யில் வறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்).

 *செய்முறை:*

 பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். (அல்லது பருப்பு, தக்காளி துண்டுகளை ஒன்றாக வேக வைத்து மசிக்கவும்). இதில் தேவையான அளவு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும். ---------------------------------------------------------------------------

 *பொரித்த ரசம் - 2*

 *தேவையானவை:*

 வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் - 2 கப், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - ஒரு கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து.... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும். ---------------------------------------------------------------

*திப்பிலி ரசம்*

 *தேவையானவை:*

 கண்ட திப்பிலி - 10 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

*செய்முறை:*

 வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு திப்பிலியை வறுக்கவும். கீழே இறக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும் காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை இதில் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கரைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும் . -------------------------------------------------------------------------

 *ஒப்பட்டு ரசம்*

 *தேவையானவை:*

 வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

*செய்முறை:*

வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாக அரைத்து, வாணலியிலில் சேர்த்து கிளறிக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பருப்புக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். -------------------------------------------------------------

 *ஆப்பிள் ரசம்*

 *தேவையானவை:*

 பொடியாக நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) - அரை கப், தக்காளி துண்டுகள் - கால் கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

 *செய்முறை:*

 வறுத்து அரைக்கக் கொடுத்துள் ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்). பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது, மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெ யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும். ------------------------------------------------------------------------------

*துவரம்பருப்பு ரசம்*

 *தேவையானவை:*

 வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - மிளகு - மிளகாய் அரைத்த பொடி - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். ----------------------------------------------------------------------

 *கிள்ளு மிளகாய் ரசம்*

 *தேவையானவை:*

 காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

 *செய்முறை:*

 புளித் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவிட்டு... உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாயை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும். -------------------------------------

மைசூர் ரசம்*

 *தேவையானவை:*

 வேக வைத்த துவரம்பருப்பு - அரை கப், தக்காளி - 6, வெல்லம் - சிறிய துண்டு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

*செய்முறை:*

 நெய்யில் கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும் (சீரகத்தை வறுக்க வேண்டாம்). மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்து வைத்திருப்பவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தக்காளி சாறு, வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் இவற்றுடன் அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். ------------------------------------------------------------------------ *

மிளகு ரசம்*

 *தேவையானவை:*

 புளித் தண்ணீர் - 2 கப், மிளகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

*செய்முறை:*

 மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் புளித் தண்ணீரை விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து புளிவாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். -------------------------------------------------------------------------------

*மாங்காய் ரசம்*

 *தேவையானவை:*

 மாங்காய் துருவல் - அரை கப், துவரம்பருப்பு, மிளகு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி சாறு - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும். ------------------------------------------------------------------------

 *அரைத்து விட்ட வேப்பம்பூ ரசம்*

 *தேவையானவை:*

 காய்ந்த வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

 *செய்முறை:*

 வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கும்போது, தக்காளியையும் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். நெய் அல்லது எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். -------------------------------------------------------------------

*திடீர் ரசம்*

தேவையானவை:*

 புளி - எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 6 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:*

புளி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிவற்றை லேசாக எண்ணெயில் வறுத்து, மிக்ஸியில் பவுடராக செய்து கொள்ளவும். இதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற் றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் இந்தப் பொடியை போட்டு, தேவையான தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சட்டென்று செய்யக் கூடியது இந்த ரசம். ---------------------------------------------------------------------------- *டொமேட்டோ ப்யூரி ரசம்*

 *தேவையானவை:*

 டொமேட்டோ ப்யூரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ரசப்பொடி - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 டொமேட்டோ ப்யூரியில் தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு ரசப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். --------------------------------------------------------------------------

 *தனியா ரசம்*

 *தேவையானவை:*

 தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், தக்காளி - கால் கிலோ, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 *செய்முறை:*

 தனியா, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வறுத்து அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும். --------------------------------------------------------------------

 *பார்லி ரசம்*

 *தேவையானவை:*

 பார்லி - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - அரை கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:*

 மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பார்லியில் 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் இந்த தண்ணீருடன் தக்காளி சாறு, மிளகு - சீரகப் பொடி, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். --------------------------------------------------------------------------------

மோர் ரசம்*

தேவையானவை:*

 மோர் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

 *செய்முறை:*

 துவரம்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து, சீரகத்தை சேர்த்து அரைக்கவும். மோரில் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்) கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். --------------------------------------------------------------------------------

புளி இல்லாத ரசம்*

 *தேவையானவை:*

 தக்காளி சாறு - 2 கப், வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - அரை கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (நீள வாக்கில் கீறியது) - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :*

 உளுத்தம்பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். தக்காளி சாறு, பருப்புத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்த பொடியையும் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கீழே இறக்கி, எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். -------------------------------------

புதினா ரசம்*

தேவையானவை:*

 புதினா இலைகள் - ஒரு கப், மிள காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாறு (அ) புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:*

 புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும் இந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு அல்லது புளி தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். ------------------------------------------------------------------------

இஞ்சி ரசம்*

 *தேவையானவை:*

 இஞ்சித் துருவல் - கால் கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:*

 இஞ்சித் துருவலுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, தக்காளி சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். -----------------------------------------------------------------------------

இளநீர் ரசம்*

தேவையானவை:*

இளநீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இளநீர் வழுக்கை - கால் கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:*

துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். --------------------------------------------------------------------------

ஸ்பெஷல் எலுமிச்சை ரசம்*

தேவையானவை:*

தக்காளி - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கடுகு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:*

தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும் இதனுடன் தேவையான தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். -------------------------------------------------------------------------

அரைத்துவிட்ட பூண்டு ரசம்*

தேவையானவை:*

துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு பல் - 10, புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை:*

துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். --------------------------------------------------------------------------------

ஓமவள்ளி ரசம்*

தேவையானவை:*

ஓமவள்ளி இலை - 5, சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:*

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். -------------------------------------------------------------------------------

ஸ்பெஷல் பூண்டு ரசம்*

 தேவையானவை:*

 புளித் தண்ணீர் - 2 கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 *செய்முறை:*

சிறிதளவு எண்ணெயில் துவரம்பருப்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வதக்கி கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் தக்காளி துண்டுகளை வேகவிடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். ------------------------------------------------------------------------------

*உருண்டை ரசம்*

தேவையானவை:*

 துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:*

 உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

 துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்து ஆவியில் வேக விடவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். வறுத்து அரைத்த விழுதை இதில் சேர்த்து, உப்பு போடவும். ஆவியில் வேக வைத்து எடுத்த பருப்பு கலவையிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ரசத்தில் போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

#சமையல் Cousine traditionnelle indienne TN

குழம்புப் பொடி

குழம்புப் பொடி

மயிலாடுதுறை சிதம்பரம், கடலூர் பக்கங்களில் பொதுவாக இந்தப் பொடியை குழம்பில் உபயோகப்படுத்துவார்கள். சாம்பார், புளிக்குழம்பு என்று எல்லாவற்றுக்கும் இந்தப் பொடி தான். ஊருக்கு ஊர் பொருள்களின் விகிதங்கள் மாறுபட்டிருக்கும்.

தேவையான பொருட்கள் 

தனியா- ஒன்றரை கிலோ
வற்றல் மிளகாய்- அரை கிலோ துவரம்பருப்பு- கால் கிலோ 
கடலைப் பருப்பு- 100 கிராம் 
மிளகு-50 கிராம் 
சீரகம்- 50 கிராம் 
வெந்தயம்- 1 மேசைக்கரண்டி 
அரிசி- 1 மேசைக்கரண்டி 
சோம்பு- 1 மேசைக்கரண்டி

செய்முறை 

அனைத்துப்பொருள்களையும் தனித்தனியே பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து பொடிக்கவும் 

-------------------------------------------------------------------------

ரசம் பொடி

தேவையான பொருட்கள் 

தனியா - 1 கப் 
துவரம் பருப்பு - ½ கப்
காய்ந்த மிளகாய் - 10 
மிளகு - 15 
சீரகம் - 1/4 கப் 
கருவேப்பில்லை - 10 இலை 
பெருங்காயம் தூள் - 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி 
வெந்தயம் - ½ தே.கரண்டி 

செய்முறை 

முதலில் தனியாவை கடாயில் போட்டு வறுக்கவும். பிறகு துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம் போட்டு தனி தனியாக வறுத்து எடுக்கவும். கருவேப்பில்லையை கழுவி பேப்பர் டவலில் காயவைத்து சுடாக உள்ள வறுத்து வைத்துள்ள பொருட்கள் மீது போடவும். இப்பொழுது மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சீரகம், வெருங்காயம் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது ரசப்பொடி ரெடி. ரசம் வைக்கும் பொழுது இந்த பொடியினை கடைசியில் தூவி தட்டு போட்டு முடி அடுப்பினை நிறுத்தி விடவும். மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும். -------------------------------------------------------------------

ரசப் பொடி

தேவையான பொருட்கள் காய்ந்தமிளகாய் -- 5 கிராம் கொத்தமல்லி -- 10 கிராம் மிளகு -- 8 கிராம் சீரகம் -- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு -- 5 கிராம் கறிவேப்பிலை -- 2 இனுக்கு எண்ணைய் -- தேவையான அளவு பெருங்காயம் -- சிறிதளவு செய்முறை எண்ணையை சூடாக்கி பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். கடலை பருப்பையும் சேர்த்து கிளறவும். பருப்பு சிவப்பு நிறமானதும் மிளகு, சீரகம் சேர்க்கவும். மிளகு பொரியும் போது மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும். கொத்தமல்லி லேசாக சிவக்கும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பின் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும். ரசப்பொடி ரெடி. ------------------------------------------------------------------------

கறிப் பொடி

தேவையான பொருட்கள் தனியா - 1 கப் உளுந்து - 2 கப் கடலை பருப்பு - 2 கப் மிளகாய் வற்றல் - 5 பெருங்காயம் - சிறிது செய்முறை வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும். அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம். வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம். இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம். இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது. குறிப்பு: எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும் 

------------------------------------------------------

திடீர் சம்பார் பொடி

தேவையான பொருட்கள்   

1) காய்ந்த மிளகாய் - 25 
2) தனியா - 1 கப் 
3) வெந்தயம் - ஒரு மேசைகரண்டி
 4) பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு
 செய்முறை 

ஒரு வெறும் வாணாலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், பெருங்காயம் வறுக்கவும். சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அறைக்கவும். இதை போட்டு சாம்பார் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். 

---------------------------------------------------------


கல்யாண வீட்டு ரசப்பொடி

கல்யாண வீட்டு ரசப்பொடி செய்வது எப்படி ....

தேவையான பொருள்கள் -

மிளகாய் வத்தல் - 10
மிளகு - 5 மேஜைக்கரண்டி 
சீரகம் - 5 மேஜைக்கரண்டி 
கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி 
கடலைப்பருப்பு - 5 மேஜைக்கரண்டி 
காயத்தூள் - 1 தேக்கரண்டி 

செய்முறை -

காயத்தூள் தவிர மற்ற  எல்லா பொருள்களையும்  வெயிலில் 2 மணி நேரம் காய வைத்து சிறிது நேரம் ஆற விடவும். 

ஆறிய பிறகு அரைக்க கொடுத்த பொருள்களோடு காயத்தூளையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்து ஒரு பேப்பரில் பரப்பி விடவும். 

நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில்  எடுத்து வைக்கவும். இந்த அளவு 10 தடவை ரசம் வைக்க வரும்...

#