சிவபெருமான்_உறையும்_மூலஸ்தானம்
திருவாரூர் தியாகராஜர் கோயில் மகிமைமிகு_கமலாலயம்_திருக்குளம் 🙏
திருவாரூர் மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ள இந்த தியாகராஜர் கோயில் (சிவபெருமான் கோயில்) தமிழகத்திற்கே தனி மகிமையைத் தருவதாகும். இக்கோயில் மிகப் பிரமாண்டமான, மிகவும் புராதனமான கோயிலாகும். இக்கோயில் "பெரிய கோயில்" எனவும் *மூலஸ்தானம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவத்திற்கு #கோவில் என்றால் #தில்லை(சிதம்பரம்) என்றால்; "சிவபெருமான் உறையும் மூலஸ்தானம்" *திருவாரூர் ஆலயமேயாகும்.
இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேரேயாகும். தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலம் திருவாரூர் தியாகராஜர் கோயிலேயாகும்.
திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். இக்கோவிலில் தான் நீதிகேட்டு வந்த பசுவிற்கு மனுநீதிச் சோழன்( ஶ்ரீராமரின் முன்னோர்) நீதி வழங்கினார். ] மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடப்பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
இக்கோயிலின் புராணப்பெயர்கள்__
க்ஷேத்ரவரபுரம், ஆடகேசுரபுரம், தேவயாகபுரம், முசுகுந்தபுரம், கலிசெல்லா நகரம், அந்தரகேசுபுரம், வன்மீகநாதபுரம், தேவாசிரியபுரம், சமற்காரபுரம், மூலாதாரபுரம், கமலாலயபுரம்
மூலவரான_சிவபெருமானின்_பல்வேறு_பெயர்கள்__
வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப் பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாக சிந்தாமணி என்பனவாகும்.
__இப்பெயர்கள் ஒவ்வொன்றும் சிவபெருமானுக்கு இரசனையோடு, நாயன்மார்கள் சூட்டியவை என்பது நமக்குப் புரிகிகிறது.
*தாயார்:
அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறாள்.
#உற்சவர்__தியாகராஜர்
உற்சவர்_தாயார்__கமலாம்பிகை
தலவிருட்சம்__பாதிரி
#தீர்த்தம்_கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
*சிறப்புத்திருவிழாக்கள்:__
திருவாதிரை, சித்திரை தேர் திருவிழா, மகா சிவராத்திரி
ஆரூர் என்ற இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும். இது 5000 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும். சோழர்கள் அமைத்த ஆலயமிது. இதை வான்மீகிநாதர் ஆலயம் என்றும் கூறுவர். இக்கோயிலின். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
*தலவரலாறு___
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராஜரைத் இருதய கமலத்தில் வைத்துப் பூஜித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தியை இந்திரன், திருமாலிடம் வரமாகப் பெற்று பூஜித்து வந்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரன் இதை வழங்கினார்.
(இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராஜ மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்பட்டன.
தியாகேசரின் முந்நூறுக்கும் மேற்பட்ட லீலைகளை (சிவலீலை) தியாகராஜ_லீலை என்ற நூல் விவரிக்கின்றது. இத்தலத்தில் மாலைவேளை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து சிவபெருமானைப் பூஜிப்பதாக ஐதீகம். ஆதலால் தியாகேசருக்கு திருவந்திக் காப்பழகர் என்றும் பெயருண்டு.
கமலை என்னும் பராசத்தி தவம் செய்த "கமலாலயப் பதி" இதுவாகும்.
எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
தியாகேசரின் திருமேனி பகல் படா (வெயில்படாத) திருமேனி ஆகும். ஆதலால் தியாகராஜர் உத்ஸவங்கள் இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறும்.
தியாகேசர் கிழக்கு நோக்கியும், தேருக்கு வரும் முன் இந்திர மண்டபத்தில் மேற்கு நோக்கியும் நடனமாடி உத்திர பாத தரிசனத்தின் போது தெற்கு நோக்கியும் ஞானமளிக்கும் பெருமானாகக் காட்சியளிப்பார்.
#திருவாரூர்_தல_மகிமை
பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் திருக்கோவில் காமிகாகம முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாகமத்து வழிநின்று நயினார்கள் #வன்மீகர் மற்றும் தியாகேசருக்கு தொண்டு புரிந்து வருகின்றனர்.ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் கோவில் தேர் ஆகும்.
திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்று குறிப்பிடப்படுவது கிடையாது. மேலும் இதற்கு சான்றாக #அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில்
#திருவாரூர்_தில்லைக்கு_முற்பட்டது எனப் குறிப்பிட்டுள்ளார்.
நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம் இதுவாகும்.
எம சண்டிகேஸ்வர் அமைந்த திருத்தலம் .
சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்கு தனி இடம் தந்த திருத்தலம்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம் இதுவாகும்.
நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் இது.
பசுவிற்கு நீதிவழங்க தன் மகனைத் தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். இது.
திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே
அளவுகொண்டதாகும்.
இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர்.
இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சந்நிதிகள் உள்ளன. ஒன்றில் #வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் #தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். தியாகராஜர் யதாஸ்தானத்தில் தத்புருஷ முகமாக வீற்றிருக்கிறார். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக(தானே தோன்றியது) தோன்றியதாக வழங்கப்படுகிறது.
அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள்? என வினவுகிறார்.
உமாதேவியோடும், முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவபெருமானுக்கு #சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராஜர் ஆவார். "ஹம்ச மந்திர தத்துவத்தோடு" இணைந்தவர் இச்சிவபெருமான். அவரோடு இணைந்து காட்சிதரும் உமாதேவிக்கு "கொண்டியம்மை" எனப் பெயர்.
தியாகராஜரின் தேவரும் காணா மேலான வலப்பாதம் (இடப்பாதம் என்றும் மூடப்பட்டிருக்கும்) ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா சமயங்களில் #தியாகேசர் மற்றும் #கொண்டியம்மை தத்தம் வலது மற்றும் இடது பாதத்தை முறையே பக்தர்களுக்கு காட்டி அருளுவர்.
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். திருவாரூர் திருக்கோயில் நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. (திருவாரூர் திருவீதிகள் அடிமுடி தேடிய திருவீதிகள் என்ற பெயரைக் கொண்டவை) இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும்.
இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பையுடைது.
தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் செய்த தலம் இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.
#திருவாரூர்_ஆழித்தேர்
திருவாரூர்த் தேரை அப்பர் சுவாமிகள் தனது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம் இது.
#மகிமை_மிக்க_திருக்குளங்கள்
இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது;
1. #கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; இது #தேவதீர்த்தம் என்று புகழப்படுகிறது.
2. #சங்கு_தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; #அமுததீர்த்தம் என்றும் பெயர்
. 3. #கயா_தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது
. 4. #வாணி_தீர்த்தம் - ( #சரஸ்வதி_தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.
மேற்கண்ட தீர்த்தங்களைத் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.
#தல_மகிமை
தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் இதுவும் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதாரத்" தலமாகும்.
தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி இது.
தியாகேசர் சந்நிதியின் இருபுறமிருக்கும் திருச்சாலகம் மிகச்சிறப்புடையவை. பழங்காலத்தில் தேவசாயரட்சையின் போது இச்சாலகத்தின் ஊடாகப் புல்லாங்குழலும் வீணையும் வாசிக்கப்படும்.
தியாகேசருக்குக்குரிய அங்கப்பொருள்கள்
1. ஆடுதண்டு - மாணிக்கத்தண்டு,
2. கொடி - தியாகக்கொடி
3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம
4. மாலை - செங்கழுநீர்மாலை
5. வாள் - வீரகட்யம் ஞானகட்யம்
6. நடனம் - அஜபா நடனம்
7. யானை - அயிராவணம்
8. மலை - அர்தன சிருங்கம்
9. முரசு - பஞ்சமுக வாத்தியம்
10. நாதஸ்வரம் - பாரி
11. மத்தளம் - சுத்தமத்தளம்
12. குதிரை - வேதம்
13. நாடு - சோழநாடு
14. ஊர் - திருவாரூர்
15. ஆறு - காவிரி
16. பண் - பதினெண்வகைப்பண்
17. தோழர்- நம்பி ஆரூரர் (சுந்தரர்) என்பன இவையாவும் #ஆரூர் என்ற இத்திருவாரூர் பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாகும்.
தியாகேசப் பெருமான் இராஜாதிராஜர் ஆதலால் அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன்
1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள்,
7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் புடை சூழவே பெருமான் வருவார்.
__இதை விளக்கும் பாடல்__
"அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார் உத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே."
4 - 20 - 3(அப்பர் தேவாரம்)
திருவாரூர்_திருக்குளமான __ #கமலாலயம்திருக்குளத்தின்_மகிமை 🙏
. "இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசர் (சிவபெருமான்) சுந்தரரிடம் கூறினார். அவ்வாறே கமலாலயத் திருக்குளத்தில். சுந்தரர் பொன்னை எடுத்த மகிமை உடைய திருக்குளம் *கமலாலயம் திருக்குளமாகும்.
1.. சுந்தரரின் மனைவி பரவை நாச்சியார் வாழ்ந்த இடம் திருவாரூர்.
2.. சிவபெருமானின் மீது பொய் சத்தியம் செய்ததால் சுந்தரர் தன் பார்வையை இழந்தார். பின்னர் சிவபெருமானைப் பாடி காஞ்சிபுரத்தில் இடக்கண் பெற்றார் சுந்தரர். பின்னர் #மீளா_அடிமை என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி தானிழந்த வலக்கண்ணைப் இப்பதியில் பெற்றார்! சிவபெருமானுக்கே தோழராக விளங்கி #தம்பிரான்_தோழன் எனப் பெயர் பெற்ற சுந்தரர்,
3. "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.
4.இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
5.தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம்.
6. இத்திருக்கோயில் வளாக முதற்சுற்றில் மூலாதார கணபதிக்கு எதிரில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
7.அறுபத்து மூன்று நாயன்மார்களில் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோர் முக்தியடைந்தத் தலம் திருவாரூர்.
8.சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார், ஞானசிவாச்சாரியாருக்கு மகளாக அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை.
9.திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.
10. திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.
11.கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்.
மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.
12. சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 இக்கோயிலில் உள்ளன.
13.பரவை நாச்சியாருக்கு முக்தி அளித்த ஆகாச விநாயகர் சிறப்புடையவர்.
14. யஜூர் வேதத்தில் ஸ்ரீ ருத்ரத்தில் தியாகேசர் ரதோப்யோ ரதபதிப்யோ (தேராகவும் தேர்த் தலைவனாகவும் உள்ள சிவபெருமான்) என்ற சப்தத்தால் குறிப்பிடப்படுகிறார் என்பது திருவாரூரின் தொன்மையை உணர்த்தும்.
15. மூலாதார கணபதி, ஒட்டுத் தியாகர், கைலாச தியாகர், வீணையில்லாத சரஸ்வதி, பஞ்ச முக கணபதி, யம சண்டீசர், மேலும் பல அரிய சந்நிதிகளை உடையது.
16. ஆரூரைப் (திருவாரூர்) போற்றும் தமிழ் இலக்கியங்கள்.
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருவாரூர் மும்மணிக்கோவை
4. திருநாட்டுச் சிறப்பு.(பெரிய புராணம்)
5. திருவிசைப்பா திருப்பல்லாண்டு
6. கந்த புராணம்
7. தியாகேசர் தாலாட்டு
8. திருவாரூர் புராணம் .
#திருவாரூரைப்_போற்றும்_சமஸ்கிருத__இலக்கியங்கள்
1.அஜபா ரகஸ்யம்
2. கமலாலய மகாத்மியம்
3.கமலாலய ஸ்துதி
4. தியாகராஜ முசுகுந்த சஹஸ்ர நாமாவளி
5. ஸ்காந்தம் , மேலும் பல.....
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேர் உள்ள திருத்தலம் #ஆரூர்_என்ற_திருவாரூர். இதன்
திருக்குளமான கமலாலயம் அரிய பல மகிமைகளை உடையது.
*மகிமைமிகு_கமலாலயம்_திருகுளம்
*இறைவன்_உறையும்_மூலஸ்தானம்____திருவாரூர் 🙏
#திருவாரூர்தியாகேசரே_போற்றி 🙏
No comments:
Post a Comment