சாம்பார் சாதம் !!
தினமும் குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுக்க விரும்பினால் அவர்களுக்கு சாம்பார் சாதம் செய்து கொடுக்கலாம். இப்போது வித்தியாசமான முறையில் சாம்பார் சாதம் எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை:-
👉 முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு அலசி நான்கு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். அந்த தண்ணீரை வடித்துவிட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நெய், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக விடவும்.
👉 பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூ டானதும் வெங்காயம், தக்காளி, நறுக்கிய காய்கறியை போட்டு அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
👉 அதன் பின்பு காய்கறிகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். காய்கறி வெந்ததும் புளி கரைசல் விட்டு நன்கு கொதித்ததும் நன்கு வெந்த, பருப்பு சாதத்தை கலந்து விடவும்.
👉 பிறகு கடாயை அடுப்பில் வைத்து சூ டானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சாதத்தோடு சேர்த்து கிளறி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
👉 சுவையான சாம்பார் சாதம் தயார்.
No comments:
Post a Comment