.முனைவர் நா. மால்முருகன்:
வாழை இலைக் குளியல்
இயற்கை மருத்துவத்தில் இந்த வாழை இலைக் குளியல் நிறைய நோய்களுக்கான தீர்வாக இருக்கிறது.
செய்யும் முறை
உடல் முழுவதும் நீளமான 2 வாழை இலைகளை கீழே நீளவாக்கில் போட்டு அதன்மேலே வாழை இலை குளியல் செய்ய உள்ள நபரை படுக்க வைக்க வேண்டும். பின்னர் அவர் உடல் மேல் மேலும் மூன்று நீளமான வாழை இலைகளை வைத்து உடல் முழுவதும் மூன்று முதல் நான்கு இடங்களில் இறுக்கம் இல்லாமல் கட்டிவிட வேண்டும்.
மூக்கு மற்றும் கண் பகுதியில் சிறிது துவாரம் விட வேண்டும். இதுபோல உள்ள நிலையில் இளம் வெயில் நேரத்தில் 45 நிமிடம் இருக்க வேண்டும்.
அவ்வப்போது வாழை இலை குளியலில் ஈடுபட்டவரிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக அவிழ்த்துவிட வேண்டும்.
தொந்தரவு இல்லை என்றால் இரண்டு மணக நேரம் வரை வைத்திருக்கலாம். சரியாக வைத்து அவிழ்த்து பார்க்கும்போது உடலில் இருக்கும் கெட்ட நீர்களை அதிக அளவில் வெளியேற்றிவிடும்.
இதுபோல தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இந்த வாழை இலை குளியலை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம். மேலும் இந்த வாழை இலை குளியலோடு புற்றுமண் குளியல், மூலிகை தைல குளியல், மூலிகை வெந்நீர் குளியல், மூலிகை பற்று போன்ற பலவகையான சிகிச்சையை சேர்த்தும் செய்யலாம்.
தீரும் நோய்கள்
வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய்களை விரட்டி அடிக்கலாம்.
மேலும், காளஞ்சகபடை, முழங்காலுக்கு கீழே ஏற்படும் கால் நரம்புவலி, உடல் சோர்வு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச மண்டலம் நன்கு செயல்பட்டு மூச்சு நன்கு இழுத்துவிட உதவுவது போன்ற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் வாழை இழை குளியல் அமைகிறது.
உடலுக்கு புத்துணர்ச்சியையும், புதுப்பொலிவையும் தரும். உடலில் உள்ளுறுப்புகளுக்கும், வெளி உறுப்புகளுக்கும் மகத்துவம் தரும் ஒரு இயற்கை மருத்துவம் இது ஆகும்.
வாழை இலை குளியல் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை:-
வாழை இலை குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகள் சாப்பிட்டிருக்கலாம். எளிமையான கதர் துணி அணிந்திருந்தால் நல்லது. நெற்றி பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத் துணியை கட்டியிருக்க வேண்டும்.
தேவையான அளவிற்கு தண்ணீர் குடித்து இருக்க வேண்டும். அவரின் உறவினர்கள் ஒருவர் உடன் இருப்பது நல்லது.
வாழை இலை குளியல் முடிந்து இலைகளை அவிழ்த்த பிறகு அந்த இலைகளை கால்நடைகள் சாப்பிடாத வகையில் ஒதுக்குபுறமாக போட்டுவிட வேண்டும். உடலில் உப்புநீர் மேலே படிந்திருக்கும் சூழல் இருப்பதால் சற்று நேரம் கழித்து ஒரு சிறு குளியலை போட்டுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment