சொல்லுங்க உடம்புக்கு என்ன பண்ணுது...?
கிரகணம் பிடிச்சிருக்கிற டைம்ல சாப்டக்கூடாதுன்னு பொண்டாட்டி தடுத்தும் வீம்புக்கு கொஞ்சம் பொங்கல சாப்ட்டு தொலைச்சிட்டேன் டாக்டர்...
ம்... அப்புறம்...!?
அப்புறம் சாப்ட்டுட்டு ரிலாக்ஸா ஒக்காந்திருக்கும் போதே திடீர்னு படபடன்னு வந்திடுச்சி டாக்டர்...
அப்புறம் கை காலெல்லாம் லைட்டா ஆட்டம் கொடுத்திருக்குமே...?
ஆமா டாக்டர்...!
அப்புறம்... லேசா தல சுத்திருக்குமே..?
இல்ல கொஞ்சம் வேகமாக சுத்துற மாதிரி ஃபீலிங் இருந்துச்சி டாக்டர்...
ஓ... அப்புறம் உக்காந்திருக்கிற சோபால கொஞ்சம் ரிலாக்ஸா சரிஞ்சி ஒக்காந்தா நல்லாருக்கும்னு தோனிருக்குமே...?
அய்யோ... ஆமா டாக்டர்...!
அப்புறம்... அதே சோபால சாய்ஞ்சாப்பல படுத்து தூங்கனும்னு தோனிருக்குமே...?
ஆமா டாக்டர்... ஆமா டாக்டர்.... அப்படியே நேர்ல பாத்தமாதிரியே சொல்றீங்களே...!
அப்புறம்... சோபால சரிஞ்சி படுத்தப் பிறகு நெஞ்சில யாரோ ஏறி மிதிச்சா மாதிரி இருந்திருக்கும்... பயந்து போய் என்ன பாக்க வந்துட்டீங்க ரைட்டா...?
டாக்டர்ர்ர்.... நீங்க ஜீனியஸ் டாக்டர்... எப்படி டாக்டர் அப்படியே சொல்றீங்க...?
இந்த சிம்டெம்ஸ்லாம் எனக்கும் முன்னாலே வந்திருக்கு!
ஐய்யோ டாக்டர் நீங்களும் கிரகணம் பிடிச்சிருந்த டைம்ல சாப்புட்டுட்டீங்களா...?
அதெல்லாம் இல்ல... உங்க வீட்டு 'பொங்கல' முன்ன ஒரு தடவ நானும் சாப்ட்டிருக்கேன்...!!!
No comments:
Post a Comment