கிரிஸ்பி தோசை
தேவையான பொருள்கள் பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுந்து - கால் கப், கடலைப்பருப்பு - சிறிதளவு, வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு
செய்முறை பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக ஒரு பாத்திரத்திலிட்டு குறைந்தது 5 லிருந்து 6 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.பின்னர் கிரைண்டரில் போட்டு தோசைமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். கடைசியில் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிட்டு மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.இந்த மாவை உடனடியாக தோசை வார்க்கலாம்.. மிகவும் சுவையான தோசை கிடைக்கும். இந்த தோசை மாவை மசால் தோசைக்கு உபயோகித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.ஒரு கரண்டி மாவை எடுத்து மிக மெல்லிய தோசையாக வார்த்து, சூடான சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.ராதா அவர்களின் தோழி ஏதோ ஒரு ஹோட்டலில் சென்று எப்படி மசால் தோசை க்ரிஸ்ப்பாக உள்ளது. நாங்கள் செய்தால் மசால் வைத்ததும் மெதுவாகி விடுகிறது என்று கேட்டதிற்கு, அந்த ஹோட்டலில் உள்ள சமையல்காரர் சொன்ன முறை. நிஜமாகவே ஹோட்டல் தோசை டேஸ்ட் கிடைக்கும்.
No comments:
Post a Comment