Saturday, April 18, 2020

பருத்திச்சேரி கோதண்டராமர்!

தெரியாத கோவிலும்/செய்தியும்😳🙄🤔👌👏👍🙌🙏

பருத்திச்சேரி

கோலாகல வாழ்வருளும் கோதண்டராமர்!

பருத்திச்சேரி கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்திலும் திருச்சேறை திவ்யதேசத்தி லிருந்து 3கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் ஒரு கிராமம்.

இங்கே முடிகொண்டான் என்ற பெயரில் காவிரியின் துணை ஆறு ஒன்று ஓடுகிறது.

இக்கிராமத்தில் கோதண்ட ராமர் (படம்.இதோ👆👆👇👇) கோவில் மிகப்பிரசித்தமானதாகும்.

இது சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த திருத்தலம் ஆகும்.

பருத்திச்சேரி ஸ்ரீகோதண்டராமர் ஒரு வரப்பிரசாதி.

இக்கோவில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகப் பிரபலாமாக இருந்தது.

அங்கிருந்த மக்களில் பெரும்பாலனோர் வாழ்வாதாரத்திற்காக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர்.

தற்போது அப்பகுதியிலிருந்து புலம் பெயர்ந்த வர்களும், பக்த கோடிகளும், உள்ளூர் மக்களும் கோவிலை மீண்டும் மேம்படுத்த முழுமுயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீராமநவமி தினத்தன்று அங்கு சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடத்தப்பட்டு அன்னதானமும் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீராமநவமி கொண்டாட்டங்களின் போது அப்பகுதி மக்களின் நலனுக்காகவும், பக்தர்களின் திருப்திக்காகவும்., வெளியூர்களிலிருந்து பருத்திச்சேரிக்கு ஸ்ரீராமநவமி அன்று வருவோர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காக, திருச்சேறையில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த திருக்கோயிலின் உற்சவ மூர்த்திகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனுமதி பெற்று, காவல்துறை பாதுகாப்புடன் திருச்சேறை திருத்தலத்திருந்து கொண்டு வரப்பட்டு விமரிசையாக ஹோமம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.

ஸ்ரீகோதண்டராமரின் இடது காலில் ஒரு ரக்ஷை அதாவது தண்டை உள்ளது. இது மிகவும் அரிய அமைப்பாகும்.

காரணம், முன்பொருமுறை ஸ்ரீராமர் சீதாப் பிராட்டி மற்றும் இளைய பெருமாள் லட்சுமணருடன் தண்டகாரண்ய வனத்திற்கு வந்தார்.

அந்த வனத்தில் தவம் செய்து வந்த முனிசிரேஷ்டர் கள் பெருமாளின் நலம் கருதி அவரை பிரார்த்தித்து அவரது இடது காலில் ஒரு ரக்ஷையை கட்டினார்கள்.

ஸ்ரீராமர் சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றாலும் பக்தர்களின் அன்பான வேண்டுகோ ளுக்கு இணங்க இந்த தண்டையை ஏற்றார் என்பது ஐதீகம்.

மேலும் உற்சவ முர்த்தி ஸ்ரீராமரின் திருமார்பில் மகாலட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டு ள்ளது.

சீதாப்பிராட்டியின் விக்ரகத்தில் திருமாங்கல்யம் கூடுதல் அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஆஞ்சநேயரின் வாலில் மணி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

திருச்சேறை சாரநாதப் பெருமாள் பருத்திச் சேரியிலிருந்துதான் சாரநாயகி தாயாரை மணமுடித்தார் என்பதும் ஐதீகம்.

இதனால் பருத்திச்சேரியின் மாப்பிள்ளையாக சாரநாத பெருமாள் ஆகிறார்

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு வரை சாரநாதப் பெருமாள் பிராட்டியுடன் தைப்பூச திருநாள் அன்று மாலை பல்லக்கில் பருத்திச்சேரிக்கு வருகை தருவார்.

அவரை ஸ்ரீகோதண்டராமர் முடிகொண்டான் ஆற்றின் கரையில் எழுந்தருளி உரிய மரியாதையுடன் எதிர்கொண்டு அழைத்துச் செல்வார்.

அன்று இரவு பருத்திச்சேரியிலேயே தங்கி மறுநாள் காலை திருமஞ்சன வைபவங்களை முடித்துக் கொண்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெருமாள் பிராட்டியுடன் திருச்சேறைக்கு திரும்புவார்.

திருமஞ்சன வைபவத்தில் சாரநாதப் பெருமாளுக்கு வெந்நீரால்தான்(சுடுநீர்) திருமஞ்சனம் நடக்கும்.

பருத்திச்சேரியின் மாப்பிள்ளை என்பதால் மரியாதை நிமித்தம் அவ்வாறு செய்யப்படுகிறது.

பெருமாளின் குதிரை வாகனம் திருச்சேறை யிலிருந்து முன்னதாகவே பருத்திச்சேரிக்கு வந்து விடும்.
நட்புடன்
ச.கணேசன். மதுரை🙏🙏

No comments:

Post a Comment