Thursday, April 2, 2020

ஆலத்தியூர் ஶ்ரீஆஞ்சநேயர்

ஓம். இன்று செவ்வாய்க்கிழமை (31-Mar). பங்குனி 18. சப்தமி. ஆலத்தியூர் (மலப்புரம் மாவட்டம், கேரளா), அருள்மிகு ஶ்ரீஆஞ்சநேயரின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன். காலை வணக்கம். வாழ்க வளமுடன்.

 தல புராணம் :
கேரள மாநிலம் ஆலத்தியூரில் அமைந்துள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். 

சீதையை தேடிப்போகும் தனது உத்தம பக்தனான ஹனுமனுக்கு சீதையின் அடையாளங்களை சொல்லிக்கொடுத்து, அதைக் கேட்கும் தோற்றத்தில் மூலஸ்தானத்தில் ஹனுமன் வீற்றிருக்கிறார். 

ராமபிரான் சொல்லும் ரகசியத்தை தலை சாய்த்து கேட்கும் ஹனுமனுக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்களது சக்தியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

சீதையை கண்டுபிடித்துவர ராமர், அனுமனிடம் சீதையைப்பற்றி கடந்த கால ரகசியம் சொல்லும் போது, அதைக்கேட்காமல் இருப்பதற்காக தம்பி லக்ஷ்மணன் சிறிது தூரம் தள்ளி நிற்பான்.

 கிஷ்கிந்தா காண்டத்தின் இறுதிப் பகுதியாகிய இந்தப் பிரதிஷ்டையின் சந்தர்ப்பத்தால் தான் ஹனுமனுக்கு அதிக சக்தி கிடைத்திருக்கிறது.

 தலச்சிறப்பு :
★ சீதையைத் தேடி புறப்பட்ட ஹனுமன் சாப்பிடுவதற்காக ராமர், அவல் கொடுத்து அனுப்பினார். இதன் நினைவாகத்தான் இன்றும் இத்தலத்தில் ஹனுமனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

★ சீதையைத்தேடி கடல் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவு படுத்தும் வகையில், கல்லில் கட்டிய திடல் ஒன்று இங்குள்ளது.

★ கோயிலின் மூலஸ்தானத்தில் ஹனுமனுடன், ராமபிரான் சீதையில்லாமல் தனி தோற்றத்தில் வித்தியாசமாக வீற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment