கத்தரி வாழைப்பு தொக்கு !!
தொக்கு என்றாலே சாப்பிட ருசியாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். இதை குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். இப்போது கத்தரிக்காயையும், வாழைப்பு வையும் பயன்படுத்தி சுவையான கத்தரி வாழைப்பு தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
கத்தரிக்காய் - 5
நறுக்கிய வாழைப்பூ - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1கப்
தக்காளி - 4
பட்டை - சிறு துண்டு
கடுகு - கால் டீஸ்பூ ன்
இஞ்சி, பூ ண்டு விழுது - 1 ஸ்பூ ன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூ ன்
மஞ்சள் தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
👉 கத்தரி வாழைப்பு தொக்கு செய்வதற்கு முதலில் கத்தரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூ டானதும், அதில் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயைப் போட்டு வதக்கி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
👉 பின்பு அதே வாணலியில் நறுக்கிய வாழைப்பு வைப் போட்டு, அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும். பின்பு தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
👉 அடுத்து மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சு டானதும், அதில் கடுகு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பு ண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
👉 வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்து வைத்துள்ள தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் வேகவைத்துள்ள வாழைப்பு வையும், வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயையும் போட்டுக் கிளறி, அதன்மேல் கொத்தமல்லித்தழைகளை தூவி இறக்கினால் டேஸ்ட்டான கத்தரி வாழைப்பு தொக்கு தயார்.
🧚♂பாஸ்கர் ராஜ்..லூ🧚♂
No comments:
Post a Comment