Friday, April 17, 2020

மரத்தினாலான மனை

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
மஹா பெரியவா பாத கமலங்களுக்கு நமஸ்காரம்

மஹா பெரியவா விரும்பி எடுத்து கொண்ட
போட்டா இது.ஸ்ரீ மகா ஸ்வாமிகள் அமர்ந்திருக்கும் இந்த படத்தில் இடது பக்கம் ஒரு மனை சார்த்தி வைத்திருக்கும்.
மரத்திடமும் அன்பு மறத்து போகாத அவரது  குணத்திற்கு இது சான்று.

கதை இதுதான்:-
சங்கரபீட சக்ரவர்தியாயின்றி,அநாமதேய ஆண்டி போல் அவர் ஒரு நாள் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அடியார் ஒருவர் பெரியவாளை நமஸ்கரித்து, பெரியவா  அமர்வதற்கென்றே ஒரு மரத்தினாலான மனையை செய்து வந்து, அதை பெரியவாளுக்கு சமர்ப்பணம் செய்தார்.
பெரியவா மிகவும் சந்தோஷத்துடன் நீ ப்ரியமா மனையை தூக்கிக்கொண்டு வந்து கொடுத்திருக்கே.பதிலுக்கு ஒனக்கு தரதுக்கு ஒரு ப்ராஸதம் கூட என் கிட்ட இல்லையே? என்றார்

அதுக்கு வந்தவர், எனக்கு ஒண்ணும் வேண்டாம் உங்க அனுக்ரஹம் கிடைத்ததே,நான் கொடுத்த மனையை நீங்க சந்தோஷத்தோடு வாங்கிக் கொண்டேளே அதுவே எனக்கு போதும் என்றார்.

அப்போது அங்கே காமிராவும் கையுமா இன்னோரு அடியார் வந்து அவரை நமஸ்கரித்தார். வந்தவருக்கு ஆசி வழங்கி விட்டு பெரியவா மனை கொடுத்தவரிடம் "ஒனக்கு நான் பதில்
பண்ணறதுக்கு வழி கெடச்சுடுத்து" என்றார்

உடனே காமிராவுடன் வந்தவரிடம்"இந்த மனையும் போட்டாவிலே நன்னா தெரியராப்போல படம் பிடித்து,அதை ஒரு காப்பி எடுத்துண்டு வா.அதை நான் மனை எனக்கு கொடுத்தவருக்கு கொடுக்கணும்" என்றார் .அவரும் பெரியவாளை மனையோடு சேர்த்து ஒரு போட்டோ எடுத்து, பிறகு ஒரு போட்டா காப்பியையும் பெரியவாளிடம்
சமர்ப்பித்தார்.

மனையோடு தன் போட்டாவையும் பார்த்து சிறு குழந்தை போல் மகிழ்ந்து மனை கொடுத்தவரிடம்,"நீ குடுத்த மனையே போட்டா
ரூபத்திலே ஒனக்கு நான் பண்ற பதில் "என்று சிரித்த வண்ணம் கூறிஅருளினார்.

போட்டா எடுக்க கூடாது என்று பெரியவா சொன்ன சந்தர்ப்பங்கள் அநேகம். ஆனால் இன்று அந்த காமிரா அடியார் அதிருஷ்டம் செய்திருந்தார் . நிழற்படம் எடுத்தரிடம் "அவா அட்ரஸ் கேட்டுண்டு அவருக்கு ஒரு காப்பி அனுப்பிடு"என்றார்.

பெரியவா தமக்கு ஸமர்ப்பிக்கபட்ட பிரதியை  பார்த்து "என்னோட தண்டம், கமண்டலம் ருத்திராட்சம் எல்லாம் அநேக போட்டால விழுந்திருக்கு,ஆனா ஜபத்துக்கு முக்கிய அங்கமான ஆஸனமாயிருக்கிற மனைக்கு மேலேயே நான் ஒக்காந்துடறதால அது ஸரியாகத் தெரியதில்லை.இந்த படம் அந்த குறையை போக்கிடுத்து" என்றார் சிரித்துக்கொண்டே.

மஹா புருஷனுக்கு ஒரு சிறிய மனை தந்தவரிடம்
நன்றி.
அந்த மனை செய்த பாக்கியம் தான் என்னே?
ஆம், மரமும் அவருக்கு வெறும் ஜடமல்ல.
அதுவும் ஒரு சைதன்ய ஜீவனே.
மஹா பெரியவா மகிமை தான் என்னே? 
ஓம் ஶ்ரீஶ்ரீ மகா பெரியவா போற்றி போற்றி.


No comments:

Post a Comment