Saturday, April 18, 2020

எந்த நட்சத்திரத்தில் வீடு கட்ட தொடங்கலாம்?

கிரகப்பிரவேசம் செய்வதற்கு நல்ல நாள் பார்ப்பது அவசியம்தான். ஆனால், வீடு கட்ட தொடங்கும்போதும் நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டும் என்கிறார்களே... எந்த நட்சத்திரத்தில் வீடு கட்ட தொடங்கலாம்?

ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம் (நல்லது). 

புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை மத்திமம் (பரவாயில்லை). மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம் (கூடாது). அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது.

ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியவை விசேஷமானவை. உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவை மத்திமம். மற்றவை கூடாத ராசிகள்.

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய ஐந்து மாதங்களில் வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது. ஆனால், இந்த மாதங்களில் வாஸ்து நாள்கள் வரும்போது தொழிற்சாலை கட்ட ஆரம்பிக்கலாம்.

அதேபோல் வீடு கட்டிமுடித்து கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியவை விசேஷமானவை. அஸ்தம், அஸ்வினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். 
மற்ற நட்சத்திரங்களில் கிரகப்பிரவேசம் செய்யக் கூடாது. 

வைகாசி மாதம் மற்றும் ரிஷப ராசிக்குரிய நட்சத்திர நாள்கள் கிரகப்பிரவேசத்துக்கு மிகவும் விசேஷம்.
                                                                                                                                                                                              NANDRI : SAKTHI VIKATAN


FORWARD MESSAGE
என்றும் அன்புடன்,

எம்.சரவணக்குமார்@எஸ்.கே
<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு
மதுரை👈🇮🇳🚀🌍
வாட்ஸ் ஆப் எண்கள்
9842171532
9444771532🌺🌻🌹
முகநூல்: SMS KING SK

No comments:

Post a Comment