பூண்டு ஊறுகாய்
தேவையான பொருள்கள் பூண்டு - 150 கிராம், பச்சை மிளகாய் - 6, சின்ன வெங்காயம் - 10, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி, வரமிளகாய் - 3, கடுகு - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - ஒரு கொத்து, புளிக்கரைசல் - கால் கப், வினிகர் - கால் கப், வறுத்துப் பொடிக்க:, கடுகு - ஒரு தேக்கரண்டி, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி, பெருங்காயம் - சிறு துண்டு, சீரகம் - அரை தேக்கரண்டி, எண்ணெய் - 4 மேசைக்கரண்டி, உப்பு - தேவையான அளவு
செய்முறை வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றைத் தோலுரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.அத்துடன் வறுத்து பொடித்த தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்க்கவும்.அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு சுருள வதக்கவும்.பிறகு பூண்டு விழுதைச் சேர்க்கவும்.அத்துடன் புளிக்கரைசல் மற்றும் வினிகரை ஊற்றி பூண்டு வேகும் வரை சுருள வேகவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும். காரசாரமான பூண்டு ஊறுகாய் தயார்.
No comments:
Post a Comment