மிளகு ரசம்
தேவையான பொருட்கள்
புளி : நெல்லி அளவு
பூண்டு : 6 - 8 பல்
மிளகு : 1 - 2 மேஜைக்கரண்டி
தக்காளி : 1
பெருங்காய தூள் : ½ மேஜைக்கரண்டி
மல்லி தூள் : ½ மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் : ½ மேஜைக்கரண்டி
சீரகம் : ½ மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
கொத்தமல்லி தழை : சிறிதளவு
உப்பு : தேவையான அளவு
நெய் : ½ மேஜைக்கரண்டி
தாளிக்க
கடுகு : ½ மேஜைக்கரண்டி
கருவேப்பிலை : சிறிதளவு
எண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
சிவப்பு மிளகாய் : 1
செய்முறை
சீரகம், மிளகு னை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
பூண்டினை இடித்து வைத்து கொள்ளவும் , புளியை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்
புளி தண்ணீருடன் தக்காளி சேர்த்து பிசைந்து தனியே வைக்கவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் தாளித்து பின் பூண்டு சேர்த்து வதக்கவும்
பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , மல்லிதூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
பின் அரைத்து வைத்த சீரகம் மிளகு தூள் சேர்க்கவும்
பின் ½ நிமிடம் கழித்து புளி ( புளி + தக்காளி ) தண்ணீர், உப்பு சேர்க்கவும்
ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை , பெருங்காய தூள் , நெய் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும் .
No comments:
Post a Comment