செய்முறை பெயர் :-
ரவா தோசை
மூலப்பொருள் :-
1. ரவைமுக்கால் கப்
2. அரிசி மாவு - ஒன்றரை கப்
3. மைதா மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
4. முந்திரி - 5
5. இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
6. பச்சை மிளகாய் - 4
7. கறிவேப்பிலை - 1 கொத்து
8. மிளகு - 2 டீஸ்பூன்
9. சீரகம் - 1 டீஸ்பூன்
10. உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
விளக்கம் :-
1. எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்க்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
2. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், மாவை நன்கு கலக்கி ஊற்ற வேண்டும்.
3. பிறகு தீயைக் குறைத்து, சுற்றிலும் எண்ணெய் விட வேண்டும். நன்றாக வெந்ததும் மடித்து எடுக்க வேண்டும்.
4. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : காரச் சட்னி, தேங்காய் சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.
No comments:
Post a Comment