Sunday, May 14, 2023

உப்பு உருண்டை

 உப்பு உருண்டை 

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
புழுங்கல் அரிசி கால் கிலோ
கடலை பருப்பு 1 கப்
தேங்காய் கால் கப்
காய்ந்த மிளகாய்6
தாளிக்க:
கடலை பருப்பு - 5 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

  அரிசியையும், பருப்பையும் தண்ணீரில் ஊற வைக்கவும். பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியுடன் பருப்பையும் கொஞ்சம் உப்பு சேர்த்து கலக்கவும்.

  கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் சேர்த்து வதக்கவும்.

  நன்கு வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கிளறவும். பின் சிறிது நேரம் கழித்து இறக்கி ஆறவிடவும்.

  ஆறிய பிறகு கலவையை உருண்டைகளாக பிடித்து இட்லி குக்கரில் வைத்து வேகவைத்து எடுக்கவும். இப்போது உப்பு உருண்டை தயார்.

No comments:

Post a Comment