Saturday, May 20, 2023

மூன்று தலை முறை - 43

 மூன்று தலை முறை - 43

By N Krishnamurthy 

இரண்டு நாளில் விசுவுக்கு கல்லூரி திறந்தது.முதல் நாள் ராமுடன் விசுவும் சேர்ந்து M.I.T க்கு சென்றான்.

M.I.T ஐ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

Massachusetts அமெரிக்காவிலுள்ள ஏழு சிறிய மாகாணங்களில் ஒன்று. இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ளது.பாஸ்டன்,கேம்பிரிட்ஜ்,சேலம்,ஒர்செஸ்ட்,பிளைமவுத் போன்ற நகரங்களை உள்ளடக்கியது. பாஸ்டன் இதன் தலை நகராகும்.கேம்பிரிட்ஜ் நகரத்தில் M.I.T அமைந்துள்ளது.1865 ல்  M.I.T தொடங்கப்பட்டது.1871 ல் முதல் பெண் ஸ்டூடண்ட் சேர்க்கப்பட்டாள். கல்வி மட்டுமல்லாமல், புதிய மற்றும் நவீன கண்டுபிடிப்புகளும் மேற்கொள்ளும் விதமாக இது வடிவமைக்கப்பட்டது.

தற்சமயம் 30 டிபார்ட்மெண்டுகளுடன் கிட்டத்தட்ட 1100 Faculty ஐ கொண்டதாக உள்ளது.168 ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்துள்ளது.

M.I.T. யில்,2019-20 ல் சுமார் 11,500 மாணவர்கள் படித்தார்கள்.129 வெளி நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் படிக்கிறார்கள். உலகத்திலுள்ள தலை சிறந்த பத்து தொழில்நுட்ப கலாசாலைகளில் இது இடம் பெறுகிறது. மீண்டும் கதைக்கு திரும்பலாமா?

விசுவை ப்ரொபசர் டெர்மன் அறையின் வாசலில் விட்டு விட்ட ராம்

"விசு.நான் கிளாசுக்கு போகிறேன்.பெஸ்ட் அப் லக்"என கூறிவிட்டு கிளம்பினான். ப்ரொபசர் அறைக்கதவை விசு தட்டினான்.

"கம் இன்" என்ற சன்னமான குரல் கேட்டது.

உள்ளே சென்றான் விசு.ப்ரொபசர் டெர்மனுக்கு 55 லிருந்து 60 வயது இருக்கலாம்.தீட்சண்யமான கண்கள். அறிவை பறை சாற்றும் விதமாக அமைந்த பெரிய நெற்றி.

"குட் மார்னிங் சார்" என்றான் விசு. "மார்னிங் யங்மேன். வாட் கேன் ஐ டூ பார் யூ" என்றார் டெர்மன். விசு"நான் இந்தியாவிலிருந்து, கார்த்திகேயன் பஞ்சாபகேசன்"  என்றவுடன் டெர்மன்,"So.You have come.How was your long journey from India. India is a beautiful country.I don't know when i will be fortunate to visit India" என்றார்.

விசு அவரிடம் அட்மிஷன் லெடரை கொடுக்க அவர் விசுவுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ப்ரொபசர் ஸ்மித்தை டெலிபோனில் தொடர்பு கொண்டு, விசுவைப்பற்றி கூறி அவனை ஸ்மித்திடம் அனுப்பி வைத்தார். முதல் நாள் வெறும் அறிமுகமாகவே போயிற்று.மறு நாளிலிருந்து வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. விசு ராமுடன் இணைந்தே சென்று வந்தான்.விசுவுக்கு அமெரிக்க வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாக ஆரம்பித்தது. நிறைய கலாசார வித்யாசத்தை உணர்ந்தான்.நிறைய ஹிப்பிகளை கல்லூரி வளாகத்தில் பார்க்க நேர்ந்தது. அவர்களது நீண்ட தலை முடியும், வித்யாசமான உடைகளும், குளிக்காத தோற்றமும், முடிந்தால் தினம் இரண்டு முறை குளிக்கும் விசுவுக்கு ஒரு கல்சரல் ஷாக்கை கொடுத்தது. இதில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் பரவலாக இருந்தனர்.ஹிப்பிகள் "நாங்கள் சண்டையை வெறுக்கிறோம்.அன்பை நேசிக்கிறோம்" என்றாலும் கூட நிறைய வன்முறையில் ஈடுபட்டார்கள். பலரும் போதைபொருள்களை

(Drugs)பயன் படுத்துபவர்களாக இருந்தார்கள். மத்தியதர வர்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களை மிகச்சுலபமாக அவர்களால் ஈர்த்து ஹிப்பிகளாக்க முடிந்தது.

இதில் வேடிக்கையான விஷயம், இந்தியாவிலிருந்து சென்ற யோகாவில்  அவர்கள் ஈடுபாடு காட்டினார்கள். சுருங்கச் சொன்னால் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ள மனப்பக்குவம் இல்லாததால் பயந்து வரைமுறை அற்ற வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்த கூட்டம்தான் ஹிப்பிகள்.

விசுவுக்குகிளாசில் பாடமெடுக்கும் ப்ரொபசர்களின் ஆங்கில Accent  முதலில் புரிவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதத்தில்  அதை ஓரளவுக்கு நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்தான்.வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அருகிலுள்ள ரெஸ்டரண்டுக்கு சென்று தட்டு கழுவுதல்,ஆர்டல் எடுத்தல் போன்ற சில சிறு சிறு வேலைகளை செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்.அவன்  சேர்ந்து ஒன்றரை மாதம் முடிந்த சமயத்தில்  டெர்மன் அவனை கூப்பிட்டு அனுப்பினார்.

No comments:

Post a Comment