Wednesday, May 17, 2023

ஊறுகாய் பாதுகாக்க

 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ஊறுகாய் பாதுகாக்க

மாலினி மாமியின் டிப்ஸ்

எந்த மாதிரியான ஜாடியில் சேமித்து வைக்கலாம்?

எப்போதும் ஊறுகாயை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைப்பது நல்லது. ஒருவேளை உங்களிடம் கண்ணாடி பாட்டில்கள் இல்லாவிட்டால், அப்போது மண் ஜாடிகளில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக ஊறுகாய் கெட்டு போகாமல் அப்படியே இருக்கும். அதேபோல, அகன்ற மூடி போட்டு மூடும் பாட்டிலில் சேமித்து வைப்பது நல்லது.

*பாட்டிலை முதலில் சுத்தப்படுத்தவும்*

நீங்கள் எடுத்திருக்கும் பாட்டில் எப்படி இருந்தாலும், அது சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும். அதன் பிறகு, தண்ணீரை சுடவைத்து ஊற்றவும். 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரை ஊற்றிவிட்டு, மரப்பலகையில் தலைகீழாக கவிழ்த்து வைத்து தண்ணீரை வடிய விடவும்.

*ஊறுகாய் பாட்டிலை எங்கே, எப்படி வைப்பது?*

பாட்டிலை சுத்தம் செய்த உடனே துணியை போட்டு துடைக்க வேண்டுமென அவசியம் கிடையாது. பிறகு ஊறுகாயை பாட்டிலுக்கு மாற்றி இருள் சூழ்ந்த, குளிர்ந்த இடத்தில் வைக்கவும். ஊறுகாய் பாட்டிலை அடிக்கடி வெயிலில் வைக்கவும். அப்போது தான் கெட்டு போகாது. காற்று புகாத அளவுக்கு கண்ணாடி பாட்டில் மூடிகளை இறுக்கமாக திருகி வைத்துக்கொள்ளவும்.

*ஊறுகாய் ஸ்பூன் சுத்தமாக இருக்க வேண்டும்*

ஊறுகாயை கண்ணாடி பாட்டிலுக்குள் அள்ளி போடும் ஸ்பூன் சுத்தமாக இருக்க வேண்டும். அந்த கண்ணாடி பாட்டிலில் துருப்பிடிக்காத ஸ்டீல் ஸ்பூனை கொண்டே ஊறுகாயை வைக்கவும். எப்போதும் ஊறுகாய் பாட்டிலுக்குள் ஸ்பூனை போட்டு வைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஊறுகாய்க்கு எந்த எண்ணெய் ஏற்றது?

வெவ்வேறு விதமான எண்ணெய்யை பயன்படுத்தும்போது தான் உங்களின் ஊறுகாய் கெட்டு போகிறது. ஊறுகாய் போடுவதற்கு, கடுகு எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அதேபோல, எடுத்துக்கொள்ளும் எண்ணெய் அளவிலும் கவனம் வேண்டும். ஒருவேளை கடுகு எண்ணெய்யின் வாசனை உங்களுக்கு பிடிக்காவிட்டால், கடாயில் லேசாக சூடுபடுத்தி கொள்ளலாம். பிறகு அதனை ஆறவைத்து அப்புறம் பயன்படுத்தலாம்.

*தரமான மசாலாக்களை கொண்டு ஊறுகாய் தயாரிக்கவும்*

ஊறுகாயை சேமித்து வைக்க வேண்டுமெனில், அதன் தயாரிப்பிலும் அதிக கவனம் நமக்கு இருக்க வேண்டும். எல்லா மசாலாக்களையும் அரைத்து சேர்ப்பது நல்லது. கடையில் விற்கும் மசாலாக்களில் வாசனை குறைவாகவே இருக்கும். மேலும், அது சீக்கிரம் கெட்டு போய்விடும். அதனால், மசாலாக்களை வீட்டிலேயே தயாரிப்பது நல்லது.

உங்கள் வீட்டிலும் ஊறுகாய் சீக்கிரமே கெட்டு போய்விடுகிறதா? எனில், இந்த டிப்ஸை முயன்று பாருங்களேன். மாங்காய் ஊறுகாயை கெட்டு போகாமல் நீண்ட நாட்களுக்கு உங்களால் வைத்திருக்க முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

No comments:

Post a Comment