Sunday, November 4, 2018

ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் கோவில்,திருக்குற்றாலம்.

ஸ்ரீ செண்பகாதேவி அம்மன் கோவில்,திருக்குற்றாலம்.
குற்றாலம்.

தேனருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி என அருவிகள் சூழ்ந்த இடம் குற்றாலம்.

மலையின் உச்சியில் மூன்று சிகரங்கள் இருப்பதால் திரிகூடமலை
என பெயர் பெற்றது.

இந்த மலை குற்றால மலை என்றும் அழைக்கப்படுகிறது.

வறட்சி காலத்திலும் இயற்கை மாறுபடாமல் இருப்பதால் குற்றால மலை சிகரத்திற்கு பஞ்சந்தாங்கி எனும் பெயரும் உண்டு.

அரிய வகை மூலிகை நிறைந்த இப்பொதிகை மலைச்சாரல் அகத்தியபெருமானுக்கு பிடித்த இடங்களில் ஒன்று.

தென்மேற்கு பருவக்காற்றால் பெய்யும் மழையால்  உற்பத்தியாகி வரும் ஆறு சிற்றாறு என்றழைக்கப்படும் சித்ராநதி தாமிரபரணியின் கிளை நதியாக இருக்கிறது.

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது.

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது.

செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது

இக்கோவில் செண்பகாதேவி அருவி அருகில் அமைந்துள்ளது.

இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் இருப்பதாலேயே இங்குள்ள அருவிக்கு செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது.

அகத்திய மாமுனிவர் ஸ்ரீ செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஒன்பதின் கீழ் சித்தர், பதினென்கீழ் சித்தர் என இருவகையாக சித்தர்களை பிரித்து கூறினாலும் அனைத்து சித்தர்களுக்கும் தலைமையானவராய் திகழ்பவர் அகத்தியரே ஆவார்.

இந்த தேவியானவள் ஸ்ரீ துர்க்கை அம்மனின் பிறப்பாக பராசக்தி வடிவில் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர்.

இங்குள்ள அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும்.

இந்த வனத்தில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மஞ்சள் மழை பெய்திருக்கிறது.

ஆனால் இப்பொழுது பருவநிலை மாற்றம் காரணமாக சந்தனமழையை ஓரிரு துளிகள் மட்டுமே பெய்வதாக கூருகின்றனர்.

 செண்பகதேவி அம்மன் கோயிலில் விழாக்களும், வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

செண்பகாதேவி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் திருவிழா
வெகு சிறப்பாக பூஜை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று வருகின்றனர்.

பொதிகை மலையிலிருந்து 30 கி.மீ.,தூரத்தில் 7 ஆயிரத்து 500 அடி உயரத்தில் திரிகூட மலையில் செண்பகாதேவி அருவிக்கு மேலே உள்ளது. இப்பகுதியில் தட்சிணாமூர்த்தி குகை, ஜோதீஸ்வரர் குகை, கரடி குகை, பரதேசி குகை, அகத்தியர் கோவில், அகத்தியர் பாதம், அகத்தியரின் முதல் சீடரான புலத்தியரின் சமாதி போன்றவை உள்ளன. அகத்தியர் வழிபட்ட பாலவிநாயகர் சிலை மூன்றரை அடி உயரத்தில் இருப்பது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இம்மலை பகுதியில் பால விநாயகர் சிலை பளிச்சிட்டு வருவதை பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். விநாயகர் இடது காலை நீட்டியும், வலது காலை மடக்கி வைத்தும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சிலை இருக்கும் மலை சிவலிங்கம் போல் தோற்றம் அளிக்கிறது.
இங்குள்ள பாறைகளில் விநாயகரை சித்தர்கள் வழிபடுவது போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அகத்தியர் பயன்படுத்திய பண்டைய தமிழ் எழுத்துக்களின் கல்வெட்டுகள் இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் சேர, பாண்டிய மன்னர்கள் கட்டிய மிகவும் தொன்மையான கட்டடம் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகிறது.
பக்தர்கள் எளிதில் செல்ல முடியாத அளவிற்கு இப்பகுதி முழுவதும் வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. வனத்துறையினர் மனம் வைத்தால் பக்தர்கள் அகத்தியர் வழிபட்ட பால விநாயகரை தரிசனம் செய்யலாம்.

கும்பகோணத்தில் இருந்து 379km

கும்பகோணத்தில் இருந்து மதுரை ராஜபாளையம் தென்காசி
வழியாக குற்றாலம் சென்றடையலாம்