[07:11, 11/4/2018] +91 99428 31001: ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான். குருவே! நல்லதைப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன? குரு அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். கேள்விக்கு குருவாலேயே பதில் அளிக்க முடியவில்லை என்று நினைத்துக்கொண்டான்
-
சீடன். -பகல் உணவுவேளை வந்தது. அப்போது தனக்கு அளிக்கப் பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்துவிட்டான் சீடன். ஒரு கிண்ணத்தில் பசுமாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது. சீடன் விழித்தான். குரு, புன் முறுவலுடன் சொன்னார்: பால், சாணம் இரண்டுமே பசுமாட்டிடம் இருந்துதான் கிடைக்கிறது. பாலை ஏற்றுக்கொள்ளும்போது சாணத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாதா? என்றார்-சிஷ்யன் மைளனமானான்-
-
குரு கூறினார்.இந்த உலகத்தில் நல்லது,கெட்டது இரண்டும் உள்ளது. ஒருவருக்கு நல்லதாக இருப்பது இன்னொருவருக்கு கெட்டதாக இருக்கும்.உதாரணமாக உன் தட்டில் உள்ள சாணம் உனக்கு உணவல்ல.ஆனால் அது சில உயிர்களுக்கு உணவாகிறது.-எது மனிதர்களுக்கு நல்லதோ அது பிற உயிர்களுக்கு கெட்டதாக இருக்கலாம்.எது மனிதர்களுக்கு கெட்டதோ அது பிற உயிர்களுக்கு நல்லதாக இருக்கலாம்.
-
இயற்கையில் எல்லாம் உள்ளது.நமக்கு எது நல்லதோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.கடவுளின் செயல்களை முழுமையாக யாராலும் அறியமுடியாது என்று கூறினார்-
-
🌸இந்துமதம் வாட்ஸ் அப் குழு 9789374109