😎இமயத்தின் மடியில் ...பகுதி 18
இனி அவளின் பார்வையில்.....பத்து நாளா கஷ்டப்பட்டு ஊரெல்லாம் சுத்தி காத்தாலேந்து சாப்டாம பெருமாள் சேவிக்க க்யூவில நின்னு இப்பத்தான் பெருமாள் உள்ள கூப்டச்சே இவர் எங்க போய் தொலைஞ்சாரோ? எங்கேயோ நதிய பாத்துண்டு ப்ரமை பிடிச்சாப்ல நின்னிண்டுருந்தாரே? பெருமாளே என் அவர கண்ணுல காட்டு.ஆ அதோ க்யூவ பாத்து ஏதோ டான்ஸ் ஆடிண்டு நிக்கறார்.பாலாஜீஈஈஈ என்று என் பையன் பெயர் சொல்லி கூப்பிடுகிறேன்.தோ துணிய எடுத்துண்டு ஓடி வரார்.தடுத்த வாட்ச் மேன் கடங்காரனிடம் மேரா பதி என கம்பீரமாக சொல்லி உள்ளே இழுத்துக்கொள்கிறேன.க்யூ நகரும்போது தன்னை ஏன் கூப்பிட வில்லை என கத்துகிறார்.பொண்டாட்டி க்யூவ்ல வராளான்னு பாக்காம யார பராக்கு பாத்துண்டிருந்தீங்க ? என சொல்லி அவர் வாயை மூடினேன்.
இடிச்சுத்தள்ளிண்டு ஜனங்கள் தானாவே பெருமாள் முன்னணி நிறுத்தறது.பண்டா நைவேத்ய வெள்ளை உருண்டை சக்கரை மிட்டாய் பாக்கெட்டை திறந்து காட்டி தட்டில் கொட்டி அதையே ப்ரசாதமாக தருகிறார்.அது தரையில கொட்டி கால்ல உறுத்தறது மனச உறுத்தி மனசுக்கு கஷடமா இருக்கு.பெருமாள் என்ன பாக்க இவ்ளோ கஷ்டப்பட்டு வந்தியான்னு கேக்கறாப்ல இருக்கு.🙏🏾🙏🏾வாழ்க்கையில எந்த கஷ்டமும் தராத உனக்காக நான் ஒன்ன சேவிக்க இஷ்டப்பட்டு ஏத்துக்கிட்ட கஷ்டம்னு சொல்றேன்.😌அதுக்கு மேல பேச விடாம கூட்டம் நெட்டித்தள்றது.வெளிப்ராகாரத்தில இவர் படிச்சதை சொல்றார்.....🙏🏾நாராயணனை தரிசித்துவிட்ட திருப்தியில் அவருடனேயே கருவறைக்குள் இருக்கும் குபேரனை நாம் கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அவரை நாம் கவனித்தால், அவர் நம்மை கவனிப்பார்! ஆமாம், ஒரு ரூபாய் நாணயங்கள் அல்லது வெள்ளி நாணயங்கள் சிலவற்றை ஒரு பட்டுத் துணியில் வைத்து அதை அர்ச்சகரான ராவல்ஜியிடம் கொடுத்தால், அவர் அதை குபேரன் காலடியில் வைத்து பிரார்த்தித்து பிறகு நம்மிடம் அளிப்பார். அந்தக் காசுகளை நம் வீட்டுப் பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்;
நம் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு விநியோகித்து நம் வாழ்வில் மட்டுமின்றி, அவர்களும் குபேர சம்பத்து அடைய பத்ரி நாராயணனிடமும், குபேரனிடமும் வேண்டிக்கொள்ளலாம். இதற்காகக் காசுகளையும், பட்டுத் துணிகளையும் விற்கும் கடைகளும் கோயில் முன்னால் உள்ளன. பத்ரிநாராயணரை தரிசித்த அடையாளமாக சில நினைவுப் பொருட்களையும் இக்கடைகளிலிருந்து வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். தொட்ட விரல் உடனே மரத்துப்போகும்
படியான குளிர்ச்சி மிகுந்த நீர் பிரவாகமாகப் புரண்டோடும் அலக்நந்தா நதிக் கரையில் சேஷ நேத்ரம் என்று ஒரு பகுதி உள்ளது.
இங்கே ஒரு சிறு பாறை அனைவராலும் வணங்கப்படுகிறது. இதன் மேல்புறத்தில் ஆதிசேஷ நாகத்தின் கண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன; பக்கவாட்டில் பகவானின் சரண பாதுகை செதுக்கப்பட்டுள்ளது. பகவான் நாராயணனின் அம்சங்கள் இப்படி பல பகுதிகளில் வியாபித்திருப்பது, மனதை வேறெங்கும் அலைபாய விடாமல் அந்த திவ்ய அம்சங்களிலேயே லயித்திருக்கச் செய்யும் இறை உத்தியாகவே தோன்றுகிறது! பத்ரிநாத்திலிருந்து சற்றுத் தொலைவில் வசோதரா என்ற ஒரு பகுதி உள்ளது.
இங்கு கண்களையும், மனதையும் குளிர்விக்கும் நீர்வீழ்ச்சி ஒன்று பனிப்புனலாக வீழ்கிறது. விழும் வேகத்தில் சுற்றிலும் தன் பனித்திவிலைகளை அது தூவுகிறது. பன்னீர்த் தெளிப்பாக இப்படி சிதறும் திவிலைகள் தம் மீது படுமாறு பக்தர்கள் அங்கே ஆவலு டன் நின்றிருக்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வருவது அவ்வளவு எளிதான செயலல்ல என்றாலும், அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்தாமல், நாராயணனின் நேரடி ஆசீர்வாதமாக அந்தத் திவிலைப் பொழிவுக்கு உடல் மடித்துத் தலை வணங்குகிறார்கள் பக்தர்கள்.
இதையும் கடந்து சென்றால் லக்ஷ்மி வனம் என்ற அழகிய நந்தவனத்தைக் கண்குளிரக் காணலாம். பத்ரிநாத் கோயிலிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது மானா என்ற ஒரு கிராமம். இங்கே ஒரு குகை, புராதனப் பெருமையைப் பறைசாற்றியபடி அமைந்திருக்கிறது. நீடுபுகழ் தொன்மை வாய்ந்த பாரம்பரியம் மிக்கது. ஆமாம், இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவிய விதை மனதில் ஊன்றியது! இதற்கு அருகில் மற்றொரு குகை உள்ளது. வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச்சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார்! அங்கே மகாபாரத தியான ஸ்லோகத்தை எழுதி வைத்திருக்கிறார்கள்:
‘‘நாராயணம் நமஸ்க்ருத்ய
நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ
ஜெயம் உதீரயேத்’’
மகா காவியம் தோன்றிய இதே இடத்தில்தான் கலைகளின் தெய்வம் சரஸ்வதியும் நதியாக உற்பத்தியாகிறாள். ஆனால், நம் கண்களுக்கு அந்த நதி புலப்படுவதில்லை. இங்கே அந்தவாகினியாகி, அதாவது, மறைந்துபோய், பிறகு அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் சேர்கிறாள். இங்கே தோன்றும் நதி உடனே மறைவானேன்? உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகமெடுத்திருக்கிறாள். அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம், விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை. ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்துபோகச் செய்துவிட்டார் - இப்படி ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.
மறைவது என்பதை முனிவரின் விருப்பப்படி ஓசையின்றி செல்வது என்றும் கொள்ளலாம். ஏனென்றால் சற்று அருகிலேயே இந்த சரஸ்வதி நதி, அலக்நந்தா நதியுடன் கலக்கிறது. இதற்கு ஆதாரமாக அந்த சங்கமத் தலத்தில் சரஸ்வதிக்கென ஒரு கோயில் இருக்கிறது. பக்கத்திலேயே ஒரு பாலம். இதற்கு பீம் பாலம் என்று பெயர். ஆமாம், பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன் கட்டிய பாலம்தான். இந்த பாலம் வழியாகத்தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள் என்கிறது இப்பகுதி புராணம்.
இங்குள்ள பாறைகளில் பீமனின் கை, கால் தடங்கள் பதிந்திருப்பதை இன்றும் காண முடிகிறது. மானா கிராமம்தான் இந்தியாவின் வடக்கு எல்லை. அதற்குப் பிறகு திபெத் நாட்டின் எல்லை ஆரம்பித்துவிடுகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், வியாசர் குகை வாசலில் ஒரு விளம்பரப் பலகை இருக்கிறது. இதில் வடமொழிகளுடன் தமிழிலும் ஒரு அறிவிப்பு உள்ளது என்ன வென்று? ‘இதுதான் இந்தியாவின் கடைசி டீக்கடை!’
-😂😂கதைய சொல்லி முடிக்கிறார்.....
[நான் குபேரனையும் பாக்கல ( இத முன்னாடில்ல சொல்லிருக்கணும்) இருக்கற அறிபறில மனாவையோ,வ்யாச குகையையோ கார் வைச்சுண்டு போய் காட்டவா போறார்? இருந்தாலும் எத்தனையோபேருக்கு கெடைக்காத பத்ரி நாராயணன் சேவை கெடைச்சதே எனக்குப் போதும்.வெளில வரோம்.நாலாவது படில வச்ச இடது பக்க செருப்பு இருக்கு.எட்டாவது படியில் யாரோ கடை போட்டிருக்க அங்கயும் இங்கயும் அலஞ்சு அங்கருந்த செருப்பல்லாம் எங்கேயோ கொட்டி வச்சது தெரிஞ்சு ஜோடிய மீட்டுண்டு வந்தோம்.யாரையோ விட்டு போட்டோ எடுத்துண்டோம்.இப்போ நன்னா பசி வந்துடுத்து.மணி 1.30. ஜீயர் மடத்துக்கு நடைய கட்டினோம்.இவர் வெளியில நின்னிண்டு என்ன கேக்க சொன்னார்.
நான் கேட்டு உள்ள வரச்சொன்னேன்.பரங்கிக்காய வெட்டி தான் போட்ட கொழம்பு.உருள தக்காளி போட்டு கூட்டு.சாத்தமுது( ரசம்). மோர்.பசிக்கும் செத்துப்போன நாக்குக்கும் அமிர்தம்.வெந்நீர் வேறு.இவர டொனேஷன் எழுதச்சொன்னேன்.மானேஜர் இல்ல லேட்டாயிடுத்து .கீழே ரிஷிக்கேஷ்ல மொத்தமா எழுதிடலாம்னு ( ஆமா சொத்தையே எழுதிடுவார்)வெளில வந்தார். வெளியே ராமானுஜரின் ப்ரமாண்ட சிலையில் அருள் பாலிக்கிறார்.வழக்கப்படி ஜீப்பில் ஏறி உட்காருகிறோம் .ஜோஷிமட் போய் லக்கேஜ் எடுத்துண்டு இன்னி ராத்திரிக்குள்ள கீழ முடிஞ்ச வரைக்கும் எறங்கி வேற ஊரில் ரூம் போடணும்.அப்பதான் நாளக்கி செவ்வாய் பகல்பூரா ட்ராவல் பண்ணி ராத்திரி டில்லில ரூம் போட்டுட்டு புதன் மத்யான அந்தமான் எக்ஸ்ப்ரஸை புடிக்கமுடியும்னு சொல்லிண்டு வரார்.பெருமாள் என்ன நெனக்கறார்னு இவருக்கு என்ன தெரியும்.? தோ ஜோஷிமட்டுக்கு வெளியே ட்ராபிக் ஜாமாம்.எங்கயோ பாதை சரிஞ்சுடுத்தோ என்னவோ? பகவானே எங்கள பத்ரமா கொண்டு சேருப்பா பத்ரி நாராயணா!😩😩இறுதிப்பகுதி விரைவில்...e book ஆக தொகுத்தளிக்க உள்ளேன் .வேண்டுவோர் 9789804417 என்ற😄😄 எண்ணுக்கு தொடர்பு கொள்க...