Sunday, November 4, 2018

குழுக்களின் கதை

எனது வாட்சப் குழுக்களின் கதை.....😃😃ஆசிரிய நண்பர்களைக்கொண்டு குழுவை உருவாக்க தெரிந்த பின் மற்ற நண்பர்களைக்கொண்டு நட்பூக்களின் நந்தவனம் என்றஇலக்கிய(?)ஆன்மீக அவியல்  குழுவைத்😁தொடங்கினேன்..தெரிந்த குழுக்களில் செய்தி சொல்லியும் 25 பேரை சேர்க்க முடியவில்லை.உறவினர்கள் கூட சேராமல் நழுவ 🤑தற்செயலாக க்ரூப் லிங்க் ஒன்லி என்ற பல குழுக்களின் லிங்கைப்போடும் குழு விளம்பரம் பார்த்து அக்குழுவில் இணைந்து என் குழு லிங்க் விளம்பரம் போட்டதில் ஏராளமான முகமறியா நண்பர்கள் சேர☺ ஏராளமான மெஸேஜ். சாட்டிங் ,லொள்ளுக்கள் என திணறியதால்😆 லொள்ளுக்களின் நந்தவனம் என 😃புது குழு தொடங்கி விளம்பரம் தந்து குழுவை ரொப்பினேன்..😩இருந்தும் நட்பூ குழுவை சமாளிக்க முடியாததால் தெரிந்த நண்பர்கள் விலகத் தொடங்கினர்😲புதிய வரவுகளில் "நாம் தமிழர்"" தோழருக்கும் BJP தோழருக்கும் மாலை ஆரம்பித்த விவாதம் இரவில் தமிழின் தேர்ந்தெடுத்த சொற்களின்🤑🤑 ஆடியோக்களால் குழு நிறைந்து இருவருக்கும் கல்தா கொடுத்ததுடன் தெரிந்த நண்பர்களையும் பெண்களையும் குழுவைவிட்டு வெளியேற்றி "நந்தவனத்தென்றல்" என்ற புதிய குழுவில் பத்திரப்படுத்தினேன்🙄்...இதற்குள் லொள்ளுக்குழுவின் பெயரை சிரிப்பூக்களின் நந்தவனம் என மாற்றினேன்.😂நட்பூக்குழுவிலிருந்து வெளியேற்றிய நண்பர் சிரிப்பூக்குழுவில்  புகுந்து மோடி புகழ் பாடி 😁மற்றவரை சாட நண்பர்கள் தெறித்து ஓட 🤔 அவருக்காக அரசியலும் நாட்டு நடப்பும்" என்ற குழு தொடங்கி விளம்பரம் தந்து அவரை அங்கு குடி வைத்தேன்.😆.க்ரூப் லிங்க் பார்த்துகல்வி சமையல்,இசை ,சினிமா,தமிழ்,ஆன்மீகம் .அரசியல்அறிவியல்,மருத்துவம்  வேறு க்ரூப்ல்ஙஸ்,மற்றும் சினிமா முதல் நயன்தாரா,Sunny Leone fan club😎 வரை அனைத்திலும் புகுந்து சிலவற்றிலிருந்து துரத்தப்பட்டேன😜்குழப்பத்தில்நயன்தாரா க்ளப்புக்கு நாராயண மந்திரத்தையும், ஆன்மீகக்குழுவிற்கு அரசியல் ஜோக்ஸும் அனுப்பினால்?).இடையில் பக்தி க்ரூப்பில் புகுந்த வில்லங்க நபர்கள்அதை ஆபாசமலராக பெயரையும் படத்தையும் மாற்ற. நானே தெறித்து ஓடி வந்தேன்.அறிவியலை விட்டு வைப்பானேன்🤡 'என்று ஏன் எதற்கு எப்படி" என்று முன்ஜாக்ரதையாக தெரிந்த நண்பர்களையும் "அறிவியல் அறிவோம்" என்ற தெரியாத நண்பர் குழுவையும் ஒரே நேரம் தொடங்கி🙃 அறிவியல் குறித்த கேள்வி கேட்கச்சொல்ல கதிரா மங்கலம் இயற்கையை அழித்தல் அணு உலை அரசியல் என்ற விவாத மேடையாகி 😇குழு ஆரம்பித்த என்னை 🤑🤑ஒரு வழியாக்க விவாதத்திற்காக 'மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று தனிக்குழு ஆரம்பித்தேன்..அதில் சேரலாதன் என்ற பையன் புரட்சி கருத்துக்களாய் பரப்ப குழுவை கலைக்க ,தமிழ்மீது கொண்ட காதலால் தமிழே அமுதே எனவும் பின்னர் திடீர் ஆன்மீகநாட்டம் கொண்டு சைவமும் தமிழும் ,தமிழும் வைணவமும் என ஆரம்பிக்க எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லாத  ஜோதிடத்தை இறையியலும் ஜோதிடமும் என ஆரம்பித்து கூகுளில் காபி பேஸ்ட் செய்து ஜோதிட பாடம் ஆரம்பித்தேன் அதுவும் ரொம்பி என்னை ஜோதிடனாந் நினைத்து ராத்திரி பகலாய் போன் கால்கள்
ஒரு நாள் ஒரு பெண் நண்பி என் ராசியை பார்த்து தானாகவே என்னை சேர்த்து ஐயர் திருமணக்குழு ஆரம்பிக்க விதி சிரித்தது. அது ஐயங்கார் தெலுங்கு ஐயர் என வளர்ந்து அனைத்திலும் பையன்கள் மயமாக பெண்களுக்கு என்று ஸ்பெஷலாய் ஆரம்பித்தால் அதில் அத்தனை பையன் வீட்டாரும் இடம் பிடிக்க ஒரு பெண் விவரம் கூட இல்லாமல் முகநூலில் மற்ற குழுக்களில் திருடி ஒப்பேத்த ஆளுக்காள் வகை வகையாய் பெண் விவரம் தரச்சொல்லி கடுப்பேத்த 257 பேர் நிறைந்தால் புது குழு ஆரம்பித்தால் அதிலும் பழைய ஆட்களே புகுந்து பின் சில திருமண குழுக்களை வாரணமாயிரம், கூடாரை வெல்லும்சீர், மல்லார்ந்த திண்தோள் என வைணவக்குழுக்களாகவும் சித்தமெல்லாம் எனக்கு, தென்னாடுடைய என சைவக்குழுக்களாகவும் முத்துக்களோ கண்கள் என இலக்கிய குழுக்களாகவும் மாற்ற  சிலர் அனைத்திலும் ஒரே செய்தி மழையாகப்பொழிய  இப்படியாக சுமார் 50 குழுக்களாய் வளர்ந்து சமாளிக்க முடியாது நான் பெற்ற 😩என் குழு குழந்தைகளை அனாதையாக்கி சில குழுவிலிருந்து வெளியேறி ஒரு போன் போதாமல் இரண்டு போனில் 😥மாறி மாறி 3000 messageகளால் விழி பிதுங்கி🤑🙄 உருப்படியாய் ஒரு கல்யாணமும் நடத்தாமல் இதென்ன வெட்டி வேலை என வீட்டில் திட்டு வாங்கி😭 ....நண்பர் முரளீதரன் சார் துணைக்கு வர திருமண குழுக்களை கூகுள் டாக்,எக்செல் ஷீட் என high tech ஆக மாறிஇப்போ Blog பைத்தியம் பிடித்து அனைவருக்கும் copy paste செய்வது பற்றியும் blog ல் நுழைவது பற்றியும் பாடம் 😝எடுத்துக்கொண்டு எந்த நேரமும் கைபேசியை பிடித்து 😞மெசேஜ் அனுப்பி போன் கால் அட்டென்ட் பண்ணி முழங்கையில் டென்னிஸ் எல்போ வந்து கைதூக்க முடியாமல் சில உண்மைகளை தெரிந்து கொண்டேன். பெரும்பாலோர் எந்த செய்தியும் பாராமல் டெலீட் செய்கிறார்கள். சிலர் தனது செய்தி அல்லது பையன் திருமண விவரம் போட மட்டும் குழுவில் இணைகிறார்கள். சிலர் சிம்மையே மறந்து வேறு சிம் மாறி வாட்சப்பை மறந்து விட்டார்கள். எனது பத்து  மாத பந்தத்தில் ஒரே ஒரு திருமணத்திற்குக்கூட அழைக்கப்படவில்லை. ஒரு சிலர் திருமணம் முடிந்தபின் (முன்னாடியே சொன்னா கமிஷன் கேட்டு தகராறு பண்ணுவேன் என பயமா?😂😂😂)😳நானும் ஜோதிட மாயையிலிருந்து வெளிவராதோருக்கு நம்மால் எதையும் செய்ய இயலாது என ஞானோதயம் பெற்று பல வெட்டிக்குழுக்களிலிருந்து வெளியேறி கை பேசியை சுழற்றி எறிய நாள் பார்க்கிறேன்😆😁😂😂☺😂😂😂