Monday, November 12, 2018

குருமுனி ஆணை

முன்னொரு காலத்தில் குருகுலவாசம் முடிவுற்று, மாணவர்கள், வீடு திரும்ப, யத்தனித்தனர்  குரு முனி, சீடர்களை பார்த்து, "ரொம்ப சந்தோஷம்  உங்களுக்கு குருகுல வாசம் முடிவுற்றது கற்ற கல்வியை துஷ்ப்ரயோகம் செய்யாமல், நல்வழியில் பயன்படுத்துங்கள் என்று கூறி, அனைவருக்கும் அன்பளிப்பு கொடுத்தார்  எல்லோரும் குருமுனி தனக்கு பிடித்த சீடனுக்கு என்ன கொடுத்தார்? என ஆவலோடு பார்த்தனர் அவன் கையில் ஒரு கண்ணாடி கல் போன்ற ஒன்றை கொடுத்துள்ளதை அறிந்து, தங்களுக்கெல்லாம் பொன், பொருள், பட்டாடை போன்றவற்றை கொடுத்துள்ளார், என அகமகிழ்ந்தனர்  குருமுனி தலைமை சீடனை பார்த்து "உனக்கும் அவர்களை போன்று பொன் பொருள் கொடுக்கவில்லை என வருத்தப்படுகிறாயா? என்றார்   ஸ்வாமி எனக்கு விலை மதிப்பில்லா" ராம் நாமத்தை" உபதேசம் செய்துளர்கள் என நன்றி பாராட்டினான் உனக்கு கொடுத்த கல் -லின் மதிப்பு / விலை தெரிந்து கொள்  ஆனால்  யாருக்கும் விற்றுவிடாதே என்றார்  சீடனும் சரியென்று குருமுனி-யை நமஸ்கரித்து விடை பெற்றான் 
(தொடரும் )
விடை பெற்று கொண்ட தலைமை சீடன், கையில் உள்ள குருமுனி கொடுத்த பொருளின் உண்மை விலை /மதிப்பு எவ்வளவு என அறியவேண்டும் என பணித்ததில், அதனை செயல்பப்படுத்த ஆர்வம் கொண்டான் அவன் மனோரதம் எங்கெங்கோ சென்றது ராம நாமத்தை விட இது எந்த விதத்தில் உயர்ந்தது? இருந்தாலும் குருமுனி ஆணையிட்டதால், செயல்படுத்திவிட ஆரம்பித்தான் முதலில் ஒரு குடியானவனிடம் கல்லை காண்பித்து, அதன் விலை எவ்வளவு இருக்கும் என வினவினான் அவன், அய்யா, தாங்கள் மெத்த படித்தவர் போல் தோன்றுகின்றதே.  என்னை போய் கேட்கிறீர்களே? இருந்தாலும், சொல்லறேன் ஏன் குழந்தைகளுக்கு விளையாட கொடுக்கிறேன் ஒரு நூறு ரூபாய் உங்களுக்கு கொடுக்கிறேன் கொடுக்கிறீர்களா?  என்றான்  அய்யா கொடுப்பதற்கில்லை  என தொடர்ந்து செல்லலானான்  அடுத்ததாக ஒரு செல்வந்தனை கண்டான் அதே கேள்வியை கேட்டான் அதற்கு அவன் ஒரு ஆயிரம் ருபாய் கொடுப்பதாய் கூறி தனக்கு கொடுக்க கூறினான் வழக்கம்போல் குடியானவனுக்கு கூறிய பதிலை கூறி  அவனிடமிருந்து, விடை பெற்றான் பின்னர் ஒரு சிறிய நகை வியாபாரியிடம் அதே கேள்வியை கேட்டான் தலைமை சீடன் அவர் சிறிது உயர் ரக கல் என உத்தேசித்து, ஒரு லட்சம் கொடுப்பதாயும்,  அளிக்க சம்மதமா? என்றான்.   அய்யா இது விற்க மாட்டேன் என கூறி நடையை கட்டினான். பிற்பாடு, பெரிய நகை ஒன்றை கண்டு இங்கேயும் விசாரித்துவிடலாம் என்ற நோக்கோடு, அவரிடம் குருமுனி கொடுத்த கல்லினை காண்பித்தான் உடனே அவர் சட்டென எழுந்து நின்று, அய்யா இந்த பொருள் தங்களுக்கு எப்படி கிடைத்தது  இது ராஜமுத்திரை அல்லவா சற்று அமருங்கள் இதோ வந்துவிடுகிறேன் என சீடனை அமர செய்த்து,I ராஜாங்கத்திற்கு, தகவல் அனுப்பினான் 

sri ramanujah knowhow sagar