Thursday, November 15, 2018

பூணூல் பற்றி தெரியாத( சிலருக்கு)உண்மைகள்

பூணூல் பற்றி தெரியாத( சிலருக்கு)உண்மைகள்
பூணுல் என்பது மூன்று நூலால் (முப்புரி) அமைந்து ஒரு முடிப்பில் முடிந்தாக அமைப்பில் காணப்படும் இந்தமுடிப்பு பிரம்ம முடி என்று அழைக்கப்படும். பிரிக்கவே முடியாத முடிப்பு எனச் சொல்லப்படும் என தெரிவித்தேன்.

முடிக்கப்பட்ட இந்த மூன்று நூல்கயிறுகள் உபநயனத்தின் போது மந்திர பூர்வமாக தகப்பனார் குருவாகஇருந்து வாத்யார்மூலம் ஒரு நல்ல நாளில் சுப முகூர்த்தத்தில் ப்ராமண புருஷகுழந்தைகளுக்கு ஒற்றைபடை வயதில் அதாவது 7 வயதுக்குள்அணிவிக்கப் படும் ஒரு வைபோகம்.

எதற்கென்றால் அவர்களால் தப்பிக்க முடியாத, மூன்று பிரிக்கமுடியாத சமூகபந்தங்களையும், அவர்கள்அதற்குச்செய்நன்றி காட்டவேண்டிய கடமையையும் அந்த ப்ராமண குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கே.

"சௌத ஸ்மார்த்த விகித நித்யகர்மஅனுஷ்டான யோக்யதா சித்யர்தம்

பிரும்மதேஜ அஅபிவிருத்தியர்தம்"

என்ற சங்கல்பத்தின் படி அதாவது அவர்கள் அவர்களுக்கான நித்ய கர்மாவை செய்யும் யோக்கியதையை பெற வேண்டி

நித்ய கர்மா என்றால் என்ன?

அதாவது பூணூலின் முதல் நூல்(புரி)

வேதம், உபநிடம், வாழ்வியல் நெறி, தருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷி, முனிவர்கள், ஆசிரியர்களுக்குச்செலுத்தப்பட வேண்டிய நன்றியை மறக்காமல் நினைவு படுத்துவது. குருபரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டியநன்றியைக் குறிப்பது.

குருவுக்கு மற்றும் பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்தல்

பூணூலின் இரண்டாம் நூல்(புரி)

தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களை, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டியநன்றிக்கடனையும் நினைவு படுத்துவது. குலப்பரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

அவர்களின் நித்ய திருவாராதனத்தில் உதவுவது மற்றும் அவ்ர்கள் மறைவுக்கு பின் ச்ரார்த்த காரியங்கள் செய்வது

பூணூலின் மூன்றாம் நூல்(புரி)

தான் வாழ உதவும் தேவதைகளான (இயற்கை) நீர், நிலம், காற்று,சூரியன், ஆகாயம், எனும் பஞ்சபூதமாகியதேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியை நினைவு படுத்துவது.

இயற்கையை காப்பாற்றுதல் மற்றும்பிறருக்காக அக்னிமூலம் பிரார்த்தனைகள் ஹோமங்கள் செய்விப்பது

இதுவே முப்புரியின் தத்துவம்

பூணுலை மந்திர பூர்வமாக தருத்தபின் எப்பொமுது மாற்றவேண்டும்?

இந்தமந்திராயுதம் நூல் பிரிந்தாலோ அல்லது மிகவும் அழுக்காகி தன் நிறத்தை இழந்தாலோ அல்லது தவறுதலாகஅறுந்து விட்டாலோ யாரேனும் அறுத்து விட்டாலோ

மாதா பிதா கர்மா திவச நாட்களிலோபங்காளி மற்றும் சீதக தீட்டு கழிந்த பின்போ

யாரையேனும் இறுதியாத்திரை நேரத்தில் தோள் தூக்கி ஏழப் பண்ணியிருந்தாலோ ஒரு வாத்யார் மூலம் மறுபடியும்மந்திரம் சொல்லி அணிந்துகொள்ளலாம்.

அவசியம் வருடம் ஒருமுறை வரும் ரிக்உபாகர்மா காலத்தில் கண்டிப்பாக அணைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும்

அதாவது சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் என்று இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு வேதத்திற்குமர ஒவ்வொரு நட்சத்திரம் மாறி மாறி வந்தாலும் ருக் வேதம்தான் முதன்மையாகஇருப்பதினால் அந்த நட்சத்திர நாளையே ஆவணி அவிட்டநாளாக அதாவது அந்நாளையே எல்லோரும் உபாகர்மா என்றுபெயர் வைத்து விட்டார்கள்.

ஏன் அன்று மட்டும் எல்லோரும் மாற்ற வேண்டும்?

அதாவது இந்த உபாகர்மா அன்று தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து

உத்தராயண ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில் தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்டஉபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்குகாயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என்றுசொல்லப்பட்டுஇருக்கிறது.

அப்படியானால் காமோகார்ஷீத் ஜெபம் என்பது எதற்க்கு?

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்காததற் கான பரிகாரமாக “காமோகார்ஷீத்” ஜபம்சொல்லப்பட்டு இருக்கிறது.

இன்றய காலத்தில் பலரும் தமது வீட்டிற்க்கேவாத்தியாரை வரவழைத்துபூணூலைமட்டும் புதிதாக மாற்றிக்கொள்கிறார்கள். மற்ற எந்த ஒருவித வேத கர்மாவுக்கும் அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது.

ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வதுஎதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே முக்கியம்.

பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை.

பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.

ஆகவே ஆவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு“காமோர்கார்ஷீத்” ஜபம் செய்வது போன்றவைகள்.

அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் வரும்.

ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும்.

அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து இருக்கிறார்கள்.

பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான் காயத்ரீஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள்என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தைபாராயணம் செய்யச் சொல்லி இருக்கிறது.

ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று மட்டுமாவது ஆயிரம் காயத்ரீ மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும்செய்ய வேண்டும்.

மேலும் இதன் புனிதம் கருதி பெரியோர்கள் அல்பசாந்தி ( உடல் கழிவு வெளியேறும் சமயம்) நேரங்களில் பூணுலைமாலையாக போட்டுக்கொண்டு பின் அதனை வலது காதில் சுற்றிக்கொண்ட பின் செல்லவேண்டும் எக்காரணம்கொண்டும் யக்ஞோபவீதம் நாபிக்கு கீழ் வரக்கூடாது. அல்பசாந்தி முடித்து கை கால்களை மீண்டும் அலம்பி வாயைகுறைந்தது ஒரு மூன்று முறையாவது நன்கு கொப்பளித்த பின்பு பழையபடி அணிய வேண்டும்.

பின் ஏன் பெரியதாக செய்ய வேண்டும் சிறியதாக செய்யலாமே என்றால் கூடாது அதற்க்கும் ஒர் அளவுகோல்உள்ளதுஅதன் நீளம் அதிகமென்றால்அதை நாபியளவுக்கு சுருக்கிபொள்ள வேண்டும்.

நியாயமாக யக்ஞோபவீதம் சாதாரணவேளைகளில் பகலில் கழுத்தை சுற்றிதான் இருக்கவேண்டும் என்பர்.கோவில்கல்யாணம் போன்ற

நல்ல மற்றும் அபர காலங்களில் மட்டும் அதனை தோள்களில் மாற்றிக்கொள்வர். இதை இன்று யாரும் செய்வதில்லை.பல பெரியவர்கள் கூட.

இன்றும் சில பெரியவர்கள் இரவில்கழுத்தை சுற்றி இரண்டாக போட்டுக் கொண்டே தூங்குவர். அதிலும் புதிதாகமணமான பையனுக்கு இந்த அறிவுரையை கண்டிப்பாக கூறுவர்

இந்த காலத்தில் இதனை பெரும் பாலானோர் கடைபிடிப்பதில்லை

அக்காலத்தில் அனைவரும் பூணல் பூண்டுள்ளனர்.. அவரவர்களின் தன்மைக்கு ஏற்ப மந்திர பூர்வமாகவோ அல்லதுசத்தியத்தையும் தர்மத்தையும்நிலைநாட்ட சபதமும் அல்லது சத்தியபிரமாணம் எடுத்து அணிவர்.

நாம் தவறான வழியில் போகும் எண்ணத்தை கட்டுபடத்த சாட்சியாக உடலில் இருந்து பூணுல் நம்மை தடுக்கிறது..

சிலர் செய்வது போல் முதுகை சொறிந்து கொள்வதற்கோ அல்லது தேவையானஊக்கு சாவி மாட்டவோ அல்ல பூணல்..

யஞ்யோபவீதம் பரமம் பவித்ரம்..இதன் அர்தம் இப்போது தெரியும் தானே!!