Saturday, November 3, 2018

இமயத்தின் மடியில் இல்லாளுடன் ....பகுதி 15

venkatesan v: 😎இமயத்தின் மடியில் இல்லாளுடன் ....பகுதி 15
க்யூ முடி காண சென்ற மனைவி க்யூ லேசாக நகர நகர ஒரு மணி நேரத்திற்குப்பின் க்யூவுடன் வருவது தெரிந்தது.நான் என் இடத்தை ரிசர்வ் செய்ய அவளருகில் சென்றேன் .அவள் மேரா பதி என்பதற்கு பதில் ஹமாரா பதி ( நம்ம வீட்டுக்கார்ர்)என தவறாக அறிமுகப்படுத்த சிலர் கோபமாக சிலர் கிண்டலாக பார்க்க நான் அவளிடம் துணிப் பொறுப்பை அளித்து க்யூவில் நின்றேன் .திடீரென வானம் இருண்டு மழை வேறு.ரெயின் கோட்டும் இல்லை.உலர்ந்த துணிகள் ஈரமாகின.இதற்குள் க்யூ மூடிய ஷெட்டை நெருங்க மழையிலிருந்து தப்பினோம்: பொழுதை நல் வழியில் கழிக்க அவளுக்கு கோயில் பற்றி கூற ஆரம்பித்தேன்....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
400 அடி உயர ‘வஸுதரா’ என்கிற அருவியிலிருந்து இறங்கி வரும் அலக்நந்தா நதி  பத்ரிநாதர் ஆலயத்தின் அருகே ஓடிக்கொண்டிருக்கிறது. கங்கை மேலிருந்து ஆக்ரோஷமாகப் பூமிக்கு இறங்கியபோது, பூமி அதைத் தாங்கும் பொருட்டு அலக்நந்தாவுடன்,தௌலி, மந்தாகினி, பிண்டார் முதலிய 12 கிளை நதிகளாக உருவெடுக்கிறது. 
பத்ரிநாத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் திபேத்திய எல்லையில் உள்ள‘மனா’ என்கிற இந்தியாவின் கடைசிக் கிராமத்தில் ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சரஸ்வதி நதியின் தோற்றுவாய்உள்ளது. சம்ஸ்க்ருதத்தில் ‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். ஆகவே இந்தத் தலம் இலந்தை வனமாகவும் திகழ்கிறது.
இந்த இலந்தை வனத்தில் மஹாவிஷ்ணு தவக்கோலத்தில் இருக்கும்போது, அவரை சூரியனின் வெப்பத்திலிருந்து காப்பதற்காக அவர் அருகே மஹாலக்ஷ்மி தானே பத்ரியாக நின்றிருப்பதால்,  நந்தப் பிரயாகையிலிருந்து ஸாதோபந்த் வரை உள்ள இந்த க்ஷேத்திரத்திற்கு பத்ரி விஷால் என்று பெயர்.  பத்ரியைத் தரிசிக்காமல் முக்தி அடைய முடியாது என்பது நம்பிக்கை. ரிக் வேதத்தின் சில வாசகங்கள் இங்கு எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. 
பத்ரிநாதர் ‘பத்ரீசர்’ என்றும் குறிப்பிடப்படுகிறார். இவர் வைணவர்களுக்கு வைகுண்டநாதராகவும், சிவனடியார்களுக்கு பஞ்சமுகி சிவனாகவும், அம்மன் உபாசகர்களுக்கு காளியாகவும் காட்சி தருகிறார் என்பது நம்பிக்கை. எனவே, இது சைவ வைணவத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் பௌத்தர்களுக்கு சாக்கிய முனியாகவும், ஜைனர்களுக்கு தீர்த்தங்கரராகவும் காட்சி தருகிறார் என்றும் நம்பப்படுகிறது. அதாவது தரிசிக்க வரும் பக்தர் எந்த உருவில் பத்ரிநாதரைத் தரிசிக்க விரும்புகிறார்களோ அந்த உருவில் காட்சிதந்து அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கை. எனக்கு மனோரஞ்சிதம் என்னும் மலரின் நினைவு வந்தது

மலர்களிலே மனோரஞ்சிதம் என்னும் ஒரு மலருண்டு

அந்த மலரை நாம் எந்த மணத்தை நினைத்து முகர்கிறோமோ

அந்த மணம் அந்த மலரிலே வரும் என்று கூறுவர்

அது போல பத்ரீநாதனும் ஒரு மனோரஞ்சிதந்தானோ என்று தோன்றியது

நம் மனதிலே தெய்வத்தை எப்படி வணங்குகிறோமோ அப்படி

அவன் தோன்றுவான் என்று சொல்வார்கள் .பத்ரிநாதரை சாளக்ராம வடிவில் கண்ட ஆதி சங்கரர்

கோயிலை நிறுவி அங்கே சாளக் க்ராமத்துக்கு நித்திய ஆராதனை செய்ய தமிழகத்திலும் மற்றும் பல இடங்களிலும் இருக்கும் சைவ வைஷ்ணவ மடங்களில் யாரேனும் ஒருவர் வந்து பொறுப்பேற்கும் படி அழைத்தார்

ஆனால் யாருமே அந்த மலையில் அந்தக் குளிரில் சென்று ஆராதனை செய்ய மறுக்கவே, கேரள நம்பூதிரி ஒருவர் ஒப்புக் கொண்டாராம், ஆராதனை செய்ய....

அதனால் இன்றும் கேரள நம்பூதிரிதான் அங்கு நித்ய ஆராதனைகள் செய்கின்றார், அந்த உரிமை அந்தக் கேரள நம்பூதிரிகளின் வம்சத்துக்கு

ஆதி சங்கரரால் பட்டயம் எழுதித்தரப்பட்டது என்று சொல்லுகிறார் .ஸ்ரீபத்ரிநாராயண மூலவர் சாளக்கிராமத்தால் ஆன மூர்த்தி. பிரம்மாவும் மற்றும் பல ரிஷிகளும் பெரும் பிரார்த்தனை செய்ததன் பேரில், நாரதகுண்டிலிருந்து திவ்ய மங்கள மூர்த்தியாய் வெளிப்பட்டார் பத்ரிநாராயணன். 

அந்த விக்ரகத்தைக் கொண்டுவந்து பத்ரிகாசிரமத்தில் அவர்கள் பிரதிஷ்டை செய்து உளமாற வழிபட்டு வந்தனர். பின்னாட்களில் வந்த பௌத்தர்கள் பொதுவாக பகவானுக்கு உருவமே கிடையாது என்று கூறி பத்ரி நாராயணன் விக்ரகத்தை நாரத குண்ட் எனப்படும் அலக்நந்தா நதியில் போட்டுவிட்டனராம். இதற்குப் பல்லாண்டுகளுக்குப் பிறகு, கேரளம் காலடியில் அவதரித்த  ஸ்ரீஆதிசங்கராச்சார்யார் பாதயாத்திரை மேற்கொண்டபோது இந்தப் பகுதிக்கும் வந்திருக்கிறார். பின்னாளில் இவரும் ஜகத்குருவாகக் கொண்டாடப்படுபவர்தானே, அதனால்தானோ என்னவோ, ஆதிகுருவாக விளங்கிய பகவான் பத்ரிநாராயணன் நதிக்குள் வீசப்பட்டிருப்பதைத் தன் ஞானதிருஷ்டியால் கண்டார். 
உடனே அந்த சாளக்கிராம விக்ரகத்தை எடுத்து இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். அதுமட்டுமல்ல, இந்தக் கோயிலில் வழிபாட்டு முறைகளையும் ஆதிசங்கரரே உருவாக்கிக் கொடுத்தார். கேரள நம்பூதிரிகள் பரம்பரை பரம்பரையாக இந்த ஆராதனைகளை இந்தக் கோயிலில் மேற்கொள்கிறார்கள். அவர்களை ராவல்ஜி என்று அழைக்கிறார்கள். கோயில் திறந்திருக்கும் 6 மாதங்களில் ராவல்ஜி பூஜை முதலான சம்பிரதாயங்களை நிறைவேற்றுகிறார். ஆனால், ஆறு மாத உறைபனி காலத்தில் ராவல்ஜி கீழிறங்கி வந்துவிட, அவருக்கு ‘பதிலாக’ நாரதரும் மற்ற தேவர்களும் எம்பெருமானுக்கு பூஜை செய்கிறார்கள் என்கிறார்கள். 

அதாவது, ஆறுமாத காலத்திற்குப் பிறகு பொதுமக்கள் தரிசனத்துக்காக கோயில் திறக்கப்படும்போது, பெருமாளுக்கு சூட்டிய மலர் மாலைகள், அவை முந்தின நாள் தேவர்கள் செய்த வழிபாட்டின் அடையாளங்கள் என்பதை உணர்த்தும்! ஆமாம், அந்த அளவுக்கு அந்த மலர் மாலைகள் ஓரளவு லேசாக வாடிய நிலையில் காணப்படும்! இந்தப் பேரதிசயத்தைப் பார்ப்பதற்காகவே உறைபனி காலத்துக்குப் பிறகு கோயில் திறக்கும் முதல்நாள் பல பக்தர்கள் காத்திருப்பார்கள்!   ஆதி சங்கரர் ஆறு மாதம் விளக்கு அணையாமலிருக்க மலர்கள் வாடாமலிருக்க  சில சிறப்பு மூலிகை ரகசியத்தையும் சொல்லித்தந்தாராம்.இதற்குள் வெயில் தலைகாட்டலாயிற்று.      உள்ளே பூஜை நேரம் போலும். க்யூ நகராமல் ஒரே இடத்தில் நிற்க நான் அவளிடம் பத்ரிநாதனை தரிசித்து ட்ரெய்னை பிடித்தாலே பெரிய விஷயம் .எனவே பஞ்ச பத்ரி போக இயலாது.அது பற்றி என் உபதேசத்தை காதால் கேட்டாலே போன புண்ணியம் கிடைக்கும் என உபதேசிக்கத்தொடங்கினேன்.  
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺
😄😄விருத்த [ப்ருத] பத்ரி
ஜோஷிமட்டிலிருந்து ஏழு கி மீ தொலைவில் விருத்த பத்ரி இருக்கிறது. ஆதிசங்கரர் முதலில் தரிசித்தது இவரைத்தான். நாரதருக்கு நாராயணன் இங்கு வயோதிகராகக் காட்சி அளித்தாராம். விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கல். கோயில் வருடம் முழுவதும் திறந்திருக்கும்.


ஆதி பத்ரி

அலக்நந்தாவும் பிண்டார் நதியும் சங்கமிக்கும் இடத்தில் கர்ண பிரயாகையிலிருந்து 17 கி மீ தொலைவில் உள்ளது. ஹெலிசேரா என்ற இடத்தில் 16 சிறு கோயில்கள் கொண்ட ஒரு அமைப்பு ஆதிசங்கரர் ஸ்தாபித்தார் என்றும் பிறகு குப்தர்கள் செப்பனிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. கோயில் கருவறையில் நாலு கரங்களுடன் சங்கு சக்கர தாமரை சுதையுடன் விஷ்ணு காட்சியளிக்கிறார்.


பாவிஷ்ய பத்ரி

ஜோஷிமட்டிலிருந்து 17 கி மீ தொலைவில் கபைன் கிராமத்தில் உள்ளது. 11 கிலோமீட்டரில் சால்தார் என்ற இடம் வரை காரில் செல்லலாம். பிறகு 5 கிமீ மலையேற்றம். இங்குதான் எதிர்கால பத்ரி என்று சொல்கின்றனர். இங்கு தரிசனம் தருபவர் நரசிம்மமூர்த்தி.


யோக பத்ரி

ஹனுமான் சட்டியிலிருந்து 9 கி மீ தொலைவில் உள்ள பாண்டுகேஸ்வரர் கிராமத்தில் உள்ளது யோகபத்ரி. பாண்டவர்கள் பிறந்த இடம். பாண்டு இறந்த இடம். கர்ணன் பிறந்ததும்  குந்தி பாண்டு திருமணம் நடந்ததும் இங்குதானாம். யோக நிலையில் ஆளுயர சாளக்ராம மூர்த்தி. வெண்கலச் சிலையும் உள்ளது. இவற்றை பாண்டு மன்னர் ஸ்தாபித்தாராம். இங்குதான் பத்ரியின் உற்சவ மூர்த்தி குளிர்காலத்தில் வைக்கப்படுகிறார். இதனை தரிசித்தால்தான் பத்ரி யாத்திரை முழுமை அடையும்.

என்கிறார்கள்

தியான பத்ரி

அலக்நந்தா கரையில் உர்கம் பள்ளத்தாக்கு அருகில் ஹேலாஸ் சட்டியிலிருந்து ஜோஷிமட் நோக்கி 12 கி மீ மலையேறினால் இத்தலத்தை அடையலாம். நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த தியான நிலையில் பெருமாள். தியான பத்ரியின் உருவத்தில் ஒரு கை தேய்ந்து வருகிறதாம். இது உதிர்ந்து விட்டால் கலியுகம் முடிந்து விடும் என்கிறார்கள்
🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌺🌺
எதுவும் சாப்பிடாததால் பசியும் என் உபதேசமும் அவளை ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்ல அவளை நிற்கச் சொல்லி நான் வெயிலில் துணி உலர்த்துவதாக சொல்லி ( தப்பித்து) வெளியே வந்தேன்.நகராத க்யூவில் எவ்வளவு நேரம் நிற்பது.? க்யூ வை தடுக்கும் கம்பியின் மறுபுறம் ஒரு பெஞ்ச்.அதன் அருகில் அலகந்ந்தா ஓடும் அழகைக்காண துணிகளுடன் லேசான வெயிலில் அமர்ந்தேன்.நதியின் கரையில் 
பண்டாக்களிடம் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் காட்சி.எனக்கும் தர்ப்பணம் தரும் ஆவல்தான்.ஆனால் தரிசனம் முடிந்து திரும்பவே நேரம் குறைவு.நான் மானசீகமாக முன்னோர்களை நினைத்து நதியின் நீரை அர்க்யம் விடுவதாய் கற்பனையில்....,திடீரென ஜெய் போலோ பத்ரி நாத் என்ற கூக்குரல்.க்யூ நகர்வது உணர்ந்து துணிகளை  சுருட்டி க்யூ அருகில் ..மனைவி எங்கே.? மனைவி பெயர் சொல்லி முன்னும் ,பின்னும் ஒடினேன்.பின் க்யூவில் புக முயன்று அங்குள்ள வர்களிடம் 'மேரா பத்னி 'என புலம்ப கௌன்  துமாரா பத்னி? என அனைவரும் சேர்ந்து பிடித்து வெளியே தள்ளினார்கள்.நானோ இந்தியை முழுதும் கற்க விடாத திராவிட கட்சிகளை சபித்துக்கொண்டே மூன்றாம் பிறை கமலாய் மாறி ஏதேதோ ஜாடை காட்ட க்யூ ஸ்ரீதேவியாய் சலனமின்றி நகர்ந்து கொண்டிருந்தது....ஆயிரக்கணக்கான. மக்கள் கூட்டத்தில் அவளையும் காணாது மீண்டும் க்யூ ஆரம்பம் சென்று கோயில் உள்ளே நுழைய இன்னும் நான்கு மணி நேரம் ஆகுமே ?அவள் என்ன ஆவாள் ? க்யூவை கவனிக்காது பராக்கு பார்த்ததற்கு இது தண்டனையா பத்ரி நாதா? 😩😩😩photos frozen water falls


No comments:

Post a Comment