Thursday, November 15, 2018

பெரியவாளுக்கு அத்வைதம் - உபநிடதம் -பிரம்ம ஸூத்ரம்

ஸ்ரீமடம் பாலு --பெரியவாளுக்கு அத்வைதம் - உபநிடதம் -பிரம்ம ஸூத்ரம் -பகவத் கீதை -புராணம் மட்டும்தான் தெரியும் என்பதில்லை.பட்டிக்காட்டு செவிவழிக் கதைகளும் தெரியும்.
ஒரு சோலையில் தங்கியிருந்தபோது,ஒரு குயில் அகவிற்று.பெரியவாள் ஒரு சிஷ்யனைக்கூப்பிட்டு,தரிசனத்துக்கு
வந்தவர்களில், ஐந்து வயது குழந்தையைக் காட்டி,"அந்த பறவையின் பெயர் என்ன?"என்று கேட்கச் சொன்னார்கள்.
குழந்தை சர்வ சாதாரணமாக, "அக்காக்குருவி" என்றது.
"அக்காக் குருவின்னு நீங்களெல்லாம் கேள்விப்பட்டிருக்கேளோ?"-பெரியவா தொண்டர்களிடம்.
யாரும் கேள்விப்பட்டதில்லை!பெரியவாள் கூறினார்கள்.
"கிராமங்களில் ஒரு கதை சொல்லுவா,ஒரு மரத்திலே கூடு கட்டிண்டு, ரெண்டு பட்சிஇருந்ததாம்.- ஒன்று பெரிசு (அதனால் அக்கான்னு பேரு)
இன்னொன்று சின்னது (தங்கை). ரெண்டு பட்சியும்ஒரு நாளைக்கு ஆற்றிலே குளிக்கப் போச்சு.ஆற்றிலே, நிறையப் பிரவாகம். அக்கா பட்சி ஸ்நானம் செய்தபோது,வெள்ளம் அடிச்சிண்டு போயிடுத்து. வெள்ளத்தைப்
பார்த்து பயந்துண்டு,தங்கைக் குருவி ஸ்நானம்பண்ணாமலே, பக்கத்தில் இருந்த ஒரு மரத்துக்குவந்துடுத்து.
அக்கா இன்னும் வரல்லையேன்னு, துக்கம் தாங்காமே"அக்கா அக்கா"ன்னு அழைச்சிண்டே இருந்ததாம்.இப்படி
ஒரு கதை கிராமத்திலே, இந்தக் குழந்தைக்கு, இந்தக் குயில், குருவியைக் காட்டிலும் பெரிசாஇருக்கிறதாலே,அக்கா குருவின்னு சொல்றது,
சமர்த்துக் குழந்தை!"பெரியவாளுக்குத் தெரியாத விஷயமே சூரியனுக்குக்கீழே (ஏன் மேலேயும்) இருக்கவே இருக்காதோ?
ஒரு மாந்தோப்பில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள், பெரியவாள்.மாமரத்தில்,குருவி போன்ற சில வகை பட்சிகள் கூடு
கட்டிக்கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன.அதனால், பறவைகள் வெளியே பறந்து செல்வதும், திரும்ப வருவதும்,விசித்திரமான ஒலிகள் எழுப்புவதுமாக, அந்த இடமே,கோலாகலமாக இருந்தது.
அந்த நேரத்தில், ஒரு குரங்கு வேகமாக வந்து,பெரியவாள் அருகிலிருந்த தட்டிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிட்டது. சிஷ்யர்கள்
அதைத் துரத்த முயன்றபோது, 'துரத்தாதே' என்றுபெரியவாள் சொல்லி விட்டார்கள்.
குரங்கு கொஞ்ச நேரம் அவ்விடத்திலேயே சுற்றிஅலைந்து பின்,மாமரத்தை நோக்கித் தாவிற்று.
பெரியவாளுக்குக் கவலை வந்து விட்டது போலும்.மாமரத்தில் குரங்கு ஏறினால், பட்சிகளின் கூடுகளையெல்லாம் பிய்த்துப் போட்டு விடுமே? குஞ்சுப்பறவைகள் வீடு இல்லாமல் கஷ்டப்படுமே?
அப்போது ஏதோ விழாக்காலமாதலால், அங்கேசீனவெடி (பட்டாசு) இருந்தது. பெரியவாள் பட்டாசு வெடிக்கச் சொன்னார்கள். 'டமால்,டுமீல்' என்றசத்தம் கேட்டவுடன், குரங்கு மரத்திலிருந்து குதித்து ஒரே ஒட்டமாக வெகுதூரம் போய்விட்டது.'காக்கை குருவி எங்கள் ஜாதி'சின்னஞ் சிறு குருவிக் குஞ்சுக்குள்ளேயும் விசுவரூபமான பரமாத்மா இருக்கத்தானே செய்கிறான்.(பெரியவா ரூபத்தில்)