Friday, November 2, 2018

நாலாயிரத் தமிழ் மணம்

நாலாயிரத் தமிழ் மணம்

ப்ரபந்தப் பெயர்கள்

ப்ரபந்தங்களின் பெயர்கள் தொடக்கம் காரணமாகச் சிலவும், ஆழ்வார் திருப்பெயர் காரணமாகச் சிலவும், செய்யுள் இலக்கணம் காரணமாகச் சிலவும், செய்யுள் பொருள் காரணமாகச் சிலவும், அந்தாதி தாண்டகம் போன்ற நடை காரணமாகச் சிலவும் அமைந்துள்ளன. ப்ரபந்தங்களின் பெயர்கள் ஒரு காரணத்தால் மட்டும் வருவனவல்ல என்பதையும் குறிக்கொள்ள வேண்டும்.

தொடக்கத்தினால் பெயர் பெற்ற ப்ரபந்தங்கள்:
• திருப்பல்லாண்டு
• அமலனாதிபிரான்
• கண்ணின்நுண் சிறுத்தாம்பு
• நான்முகன் திருவந்தாதி.

ஆழ்வார் திருப்பெயராலமைந்த ப்ரபந்தங்கள்:
• பெரியாழ்வார் திருமொழி
• நாச்சியார் திருமொழி
• பெருமாள் திருமொழி,

செய்யுள் இலக்கணம் காரணமாக பெயர் பெற்ற ப்ரபந்தங்கள்:
• திருச்சந்தவிருத்தம்
• திருவிருத்தம்
• திருவாசிரியம்

பொருள் காரணமாக பெயர் பெற்ற ப்ரபந்தங்கள்:
• திருப்பாவை
• திருமாலை
• திருப்பள்ளியெழுச்சி

அந்தாதி நடையால் பெயர் பெற்றவை:
• முதல் திருவந்தாதி
• இரண்டாம் திருவந்தாதி
• மூன்றாம் திருவந்தாதி
• நான்முகன் திருவந்தாதி
• பெரிய திருவந்தாதி
• ராமானுஜ நூற்றந்தாதி

அந்தாதி நடையில் அமைந்த ஏனைய ப்ரபந்தங்கள்:
• திருவிருத்தம்
• திருவாசிரியம்
• திருவாய்மொழி

மடல்கள்:
• சிறிய திருமடல்
• பெரிய திருமடல்

விஸ்தாரப் ப்ரபந்தங்கள்:
• பெரிய திருமொழி
• திருவாய்மொழி

சித்திர ப்ரபந்தம்:
• திருவெழுகூற்றிருக்கை

தாண்டகங்கள்:
• திருக்குறுந்தாண்டகம்
• திருநெடுந்தாண்டகம்

விருத்தங்கள்:
• திருச்சந்தவிருத்தம்
• திருவிருத்தம்

ஆழ்வார்/ஆசிரியர் பெயர் இறுதியில் வராத ப்ரபந்தங்கள்:
• திருச்சந்தவிருத்தம்
• அமலனாதிபிரான்
• முதல் திருவந்தாதி
• இரண்டாம் திருவந்தாதி
• மூன்றாம் திருவந்தாதி
• நான்முகன் திருவந்தாதி
• திருவாசிரியம்
• பெரிய திருவந்தாதி
• திருவெழுகூற்றிருக்கை
• சிறிய திருமடல்
• பெரிய திருமடல்
• ராமானுஜ நூற்றந்தாதி