Friday, November 30, 2018

பெரியவா

பெரியவா    கும்பகோணம்  ஸ்ரீ காஞ்சி மடத்தில்     முகாமிட்டிருந்தார்...   அங்கு    வெகு விமரிசையாக     வியாச பூஜை   நடந்து கொண்டிருந்தது..

ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர்   பூஜை  முடிந்து,   எல்லா   பக்தர் களும்   பெரியவா    தரிசிக்க  முட்டி மோதிக் கொண்டிருந்தனர்..   அவரின்   திருக் கரங்களால்    அபிஷேகத் தீர்த்தம்   வழங்கிக்   கொண்டிருந்தார்...

வரிசையில்    பக்தர்கள்  வர,   அதில்   ஒரு   பக்தரின்   முறை  வந்தது..   பிரசாதம்   தரும் போது   மகான்  அவரை   நிமிர்ந்து   பார்த்தார்...

பிறகு   அவரிடம்,  "நாளை   நீ  வேத பாராயணத்துக்குச்    சீக்கிரம்   வந்துடு.." என்று   சொன்னார்... மகானின்   உத்தரவுக்கு    மறுப்பேது?

அவரும்   மறுநாள்  காலையில்   மகான்  இட்ட   கட்டளைப்படியே   வேத விற்பன்னர்களின்   அந்தப்  பாராயண  நிகழ்ச்சியில்   கலந்து  கொண்டார்..

 பாராயணம்   நடந்து  கொண்டிருக்கும்   வேளை,  அந்த  நேரத்தில்   பெரியவா   திடீர்  விஜயம்   செய்தார்..   வழக்கமாக  இப்படி   அவர்   வருவதில்லை..

முதல்  நாள்   தன்னிடம்   அநுக்கிரஹம்   பெற்ற   குறிப்பிட்ட  அந்த   பக்தர், மனமுருகிப்   பாராயணம்   செய்வதைக்   கவனித்தார்..

வேத  மந்திரங்களைச்   சொல்லும் போது,   அந்த  பக்தருக்கு   மட்டும்  அவ்வப்போது   மூச்சடைத்தது..   சற்றுத்   தடுமாறியவாறே  கஷ்டத்துடன்   ஸ்லோகங்களைச்   சொல்லி  வந்தார்  அவர்..

அவருக்கு   தொண்டையிலோ  அல்லது   சுவாசப்  பையிலோ   ஏதோ   கோளாறு   இருக்கிறது     என்பதை  மகான்   உணர்ந்தார்..

வேத  பாராயணம்  முடிந்து  எல்லோருக்கும்   பிரசாதம்   வழங்கும்   நேரத்தில்  அந்த  பக்தரை மட்டும்  தனிப்பட்ட   முறையில்  கூப்பிட்டு  கொஞ்சம்  காத்திருக்கச்  சொன்னார்..

பக்தருக்கு   மனதில்   கவலை..   'தனது   பாராயணத்தில்   பெரியவா  ஏதோ   குறை  கண்டு பிடித்திருக்கிறார்..   அதைச்  சுட்டிக்காட்டிக்     கண்டிக்கத் தான்  இருக்கச்  சொல்லியிருக்கிறார்' என்று    சஞ்சலத்துடனே   காணப்பட்டார்..

சிறிது  நேரத்தில்   அங்கே  ஒரு  வைத்தியர்   வந்தார்..   மகானின்   உத்தரவுப்படி ,  அந்த  பக்தரை  வைத்தியர்   நன்றாகப்   பரிசோதித்தார்..

பிறகு   அவரைத்   தனது   மருத்துவமனைக்கு   அழைத்துச்  சென்று   பல  சோதனைகளை   நடத்திய  பின்,  அந்த  பக்தருக்கு   இதய நோய்   இருப்பது   தெரிய வந்தது..   அதனால்   தான்   பாராயணத்தின்   போது  மூச்சுத் திணறல்!

பெரியவா   கட்டளைப்படி,   பக்தருக்கு    நல்ல  வைத்தியம்  செய்யப்பட்டு    அறுவை சிகிச்சையில்லாமல்   குணப்படுத்தினார்   வைத்தியர்..

சில   நாட்களுக்குப்  பிறகு,    அந்த   பக்தர்   பெரியவா  தரிசிக்க  வந்தார்..  "  இப்போது   நீ  கொஞ்ச  நேரம்   வேத பாராயணம்   செய்"  என்று   அவருக்கு   கட்டளையிட்டார்   மகான்..

எந்த விதமான   தடங்கலும்   இல்லாமல்     வேத பாராயணம்  செய்தார்   அவர்.. 

வரவிருந்த   பெரும்  தீங்கிலிருந்து   காப்பாற்றி   அருளிய    மகானை  சாஷ்டாங்கமாக    விழுந்து  நமஸ்கரித்தார்   பக்தர்...

தாயினும்   சாலப்   பரிந்த   தயாளன்! 
பெரியவா  சரணம் சரணம்!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏

ஸாப்டியா?....

ஸாப்டியா?....

84-வது வயஸிலும் பாதயாத்ரையாக கூண்டு வண்டியைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த நம்முடைய பெரியவா, தன்னைக் காணாதவர்களை, தானே தேடிக் கொண்டு போய், ஆட்கொள்ள வேண்டிய அவதாரம் இல்லையா?

1978-ல் புறப்பட்டு, 1984-ல் காஞ்சிபுரம் திரும்பினார்.

குட்டிக்குட்டியான க்ராமங்கள், காடுகள், வானம் பார்க்க கிடக்கும் பாழடைந்த மண்டபங்கள்..... பகவானே! இதெல்லாம்தான் பெரியவாளின் மனமிசைந்த வாஸ-ஸ்தலங்கள்.

ஒருமுறை பெல்காமிலிருந்து வனஶங்கரி போகும் ரோடில், பெரியவாளுடைய கூண்டு வண்டி போய்க் கொண்டிருந்தது!
ஸரியான மொட்டை வெய்யில்!
தூரத்தில், வேகுவேகென்று ஒருவர் ஓடி வருகிறார்...!

எப்படியாவது பெரியவாளை நட்டநடுவழியிலாவது தர்ஶனம் செய்துவிட வேண்டும் என்ற தேடிக் கொண்டு வந்த பக்தர், பெரியவா எங்கிருக்கிறார் என்று விஜாரித்து விஜாரித்து கடைஸியில், நடுரோடில் பிடித்து விட்டார்!

அவர் மெட்ராஸை சேர்ந்தவர்! பாவம்! என்னவோ கஷ்டம்! என்னவோ அவஸரம்!
அவரைக் கண்டதும் பெரியவா அங்கேயே நின்றார்....

ஓடிவந்து நமஸ்காரம் பண்ணினார் பக்தர்....

"என்னப்பா?....."
பரிவொழுக பெரியவா கேட்டதுதான் தாமஸம்!

பெரியவாளிடம் மனஸில் இருக்கும் எல்லாவற்றையும் கொட்டிவிட்டால், விடிவுதானே!

அவர் சொன்னதை பொறுமையோடு கேட்டுக் கொண்டேயிருந்தாலும், கரங்களை உயர்த்தி, ஆஶிர்வதித்தாலும், லோகஜனனி இல்லையா....?

தன் குழந்தையின் முக்யமான ஒரு விஷயந்தான் எப்போதுமே அவளுடைய கருத்தில் இருக்கும்.....

தனக்கே உரிய ஸைகை பாஷையில், அம்மா கேட்டாள்....

"ஸாப்டியா?..."

"இல்ல... பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டுத்தான்-னு கெளம்பினேன்....."

அந்த ஆளே இல்லாத நட்டநடுரோடில், இவருக்கு என்ன கிடைக்கும்?

தன்னுடைய பாரிஷதரை அழைத்தார்.....
"ராமக்ருஷ்ணா..! இவர.. அழைச்சிண்டு போயி, நாம தங்கியிருந்த ஜாகைக்கு போ! எதாவுது ஸமையல் பண்ணி, இவருக்கு போட்டு, அனுப்ச்சுட்டு.... நாங்க... இப்டியே... இந்த வழியாத்தான் போய்ண்டிருப்போம்..! அடுத்த ஊர்ல வந்து சேந்துக்கோ!.."

பாரிஷதருடன் அந்த பக்தரை அனுப்பிவைத்தார்.

'என்னவோ நடுவுல வந்தார்! எப்டியோ போய்க்குவார்! ஸாப்பாடெல்லாம் நாம இழுத்துவிட்டுக்க முடியுமா? என்ன?" ....
நாமெல்லாம் இப்படித்தான் நினைப்போம்.

'அடப்பாவமே! இந்த கொழந்தைக்கு நடுவுல எதுவுமே கெடைக்காதே!.. நாந்தான் எதாவுது பண்ணணும்'

பகவான் இப்படித்தான் நினைப்பான்.

மீள்பதிவு











நாம் பேசும் வார்த்தைகள்

ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.

இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தான்.

 அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார்.

 உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டான்.

 அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம்விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார்.

 இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைத்தான் சொன்னார்கள்.

 ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.!!!!!!!!

*நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர எந்த வித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள
 வேண்டும்.

நல்லதுநடக்கும் நல்லதே நடக்கும்

சுமைதாங்கி மரம்

பிரச்சினைகளை அஞ்சி ஓடவைப்பது எப்படி?

சுமைதாங்கி மரம்

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர
வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார்.

போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை
தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு
மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி
கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர்
வேலைகளை ஆரம்பித்தார்.

சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை
தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி
இல்லையே"  என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்படத்
தயாரானார்.

வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி
எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.
போகும்  வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிக்கொண்டு  போனார் முதலாளி.

தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்துக்
கொண்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க
முதலாளி" என்று  அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும்
அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின்
மீது சிறிது நேரம் கை  வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை.

தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார்.
தன் மனைவியை  பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில்
நடந்த எந்த பிரச்சனையையும்  நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த
வித கவலையும் இல்லாமல்  குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.

வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி
உன்னால் இருக்க முடிந்தது" என்றார்.

"அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு
நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும்
இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போகக்கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான்
அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில்
நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை
எடுத்துக் கொண்டு போவேன் .ஆனால் என்ன ஆச்சரியம் என்றால்
நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள்
அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.

நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள்.
பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்..

படித்ததில் பிடித்தது.

முன் ஜென்ம வாசனை!

முன் ஜென்ம வாசனை!
இது கதை அல்ல..
ஆதி சங்கர பகவத் பாதாளின் அதி அற்புதமான அறிவுரைகள்...
==================
ஒரு காவல்காரன், வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''மகா ஜனங்களே ஜாக்கிரதை'' என்று
கத்திக்கொண்டே போவான்....ராஜா கால வழக்கம்.

ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் மகனிடம் செய்ய சொல்லி சென்று
விட்டான்....அவன் மகனோ முன் ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த_பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது...

இரவில் அவன் தப்பட்டை அடித்துக்கொண்டு "ஜாக்கிரதை" சொல்லிக்கொண்டு தகப்பன் வேலையை செய்தான்....
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் நின்றார்....

அந்த பையனைப் பார்க்கத்தான் வந்தார்.

''ஐயோ ராஜாவே வந்திருக்கிறார், பையன் பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ..... அவனுக்கு கொடும் தண்டனையை
கொடுத்து விடுவாரோ?''என்று காவல் காரன் நடுங்கினான்.....

ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தார்? எதற்காக?

முதல் நாள் இரவு பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகவில்லை....

அவன் ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னதுதான் மாறு வேடத்தில் இரவு வலம் வந்த‌ ராஜாவை மயக்கியது.
அந்த நீதி வாக்யங்கள் இவைதான்.......

#ஸ்ரீஆதிசங்கரர் அருளிய இந்த வைராக்ய ஸ்லோகங்களில் சில........

(1) “மாதா நாஸ்தி பிதா நாஸ்தி 
நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

அடே தூங்குமூஞ்சி விழித்துக் கொள்ளடா. அப்பனும் நிரந்தரமில்லை, பெற்ற தாயும் நிரந்தரமில்லை, அண்ணன், தம்பியும் நிரந்தரமில்லை, காசும் பொய் வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை,
இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை,.

(2) “ஜன்மதுக்கம் ஜராதுக்கம் 
ஜாயாதுக்கம் புந;புந: 
சம்ஸார ஸாகரதுக்கம் 
தஸ்மாத் ஜாக்ரதா: ஜாக்ரதா”

பிறப்பே துன்பம், வயோதிகம் பரம துக்கம், இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும்
துன்பங்கள் மனத்தை மயக்கி இந்த சம்சாரக் கடலில் தள்ளி விடும், வாழ்வே சோகம், மாயம்,ஆகையால் விழித்துக்கொள் ஜாக்ரதை....

(3) “காம; குரோதஸ்ச லோபஸ்ச 
தேஹே திஷ்டந்தி தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய 
தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரதா!”

ஆசையும் பாசமும், கோபமும், பேராசையும் உன் உடம்பினுள்ளேயே குடியிருக்கும் கொள்ளைக்காரர்களப்பா1....உனதுள்ளே
இருக்கும் ஞானமெனும் விலை மதிப்பில்லா மாணிக்கத்தை திருடுபவர்கள். விளக்கு எடுத்துக்கொண்டு வெளியே திருடர்களை
தேடாதே, உள்ளே, உனக்கு உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களைத் தேடி துரத்து. விழித்துக் கொள், ஜாக்ரதை ஜாக்ரதை...

(4) “ஆசாயா பத்யதே லோகே : 
கர்மணா பஹு சிந்தயா: 
ஆயுக்ஷீணம் ந ஜாநாதி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

ஆசையெல்லாம் தோசை தான் மனிதா, எதிர்பார்த்து ஏமாறுவதே வழக்கமாக கொண்டு அழிவதை சாஸ்வதம் என்று மனப்பால்
குடிக்காதே, இதனால் உனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை நீ அறிய மாட்டாய். விழித்துக் கொள்ளவேண்டாமா?

(5) ஸம்பத: ஸ்வப்ன சங்காஷ: 
யவ்வனம் குசுமோபம்!
வித்ய்த்சாஞ்சலம் ஆயுஷ்யம், 
தஸ்மாத் ஜாக்ரதா! ஜாக்ரதா!

“நம்முடைய சொத்து எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் போலத்தானடா! , இளமை வயதோ நேற்று மொட்டு, காலை மலர்,
மாலையில் வாடிபோய் எறியும் பூவைப் போல உதிர்ந்து விடும். மின்னல் போல தோன்றீ மறையும் இந்த வாழ்க்கை, ஆகையால்
விழித்துக்கொள்....
 நன்றி ஆண்மீகம் இந்துசமயம்.

விஸ்வநாதன் பவுன்சாமி

"கண்டகி"

வேசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. 

அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். 

இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. 

ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். 
வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். 

உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.

அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள். 

உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. வாலிபன் உயிரோடு இல்லை.

இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.

திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்அற்புதம் நிகழ்கிறது. 

இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு , சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார். 
கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய் சொல்கிறார். 

கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் ஒரு தாயாகவும் பெருமாள் மகனாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அது. 

அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார் ......  ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். 

சாபம் பெற்ற நாராயணன் மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் வயிற்றில்தான்  சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.

மூலம் நட்சத்திரம் வரமா… சாபமா..

மூலம் நட்சத்திரம் வரமா… சாபமா..

ஆண் மூலம் அரசாளும்,
பெண் மூலம் நிர்மூலம்

பலர் நினைப்பது என்னவென்றால்

மூலம் நட்சத்திரத்தில் ஆண்கள் பிறந்தால் நல்லது….
பெண்கள் பிறந்தால் சிறப்பானது இல்லை….

இது சரியான பழமொழி அல்ல..

ஆண் மூலம் அல்ல,
ஆனி மூலம்….

இது என்ன புதுக்கதை…

ஆனி மாதம் மற்றும் புரட்டாசி மாதம்
இந்த இரண்டு மாதங்கள் புதன் பகவானுக்கு உரிய மாதங்கள்…

ஆனி மாதத்தை மிதுன மாதம் என்றும்,
புரட்டாசி மாதத்தை கன்யா மாதம் என்றும் குறிப்பிடுவர்.

சரி,
விஷயத்திற்கு வருவோம்..

ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
ஆண்கள் ஆனாலும் சரி
பெண்கள் ஆனாலும் சரி
ஒரு முதலாளியாக இருப்பர்
அல்லது ஏதாவது ஒரு நிறுவனத்தில் பெரிய பதவிகளில் இருப்பார்கள்.,

இவர்களது பேச்சை கேட்டு
அதற்கு கீழ்ப்படிந்து
பலர் வேலை செய்து வருவார்கள்.

இதையே,
ஆனி மூலம் அரசாளும்…
என்பர்

பெண் மூலம் அல்ல…
பின் மூலம்…
அதாவது,
முற்கூறிய படி…
புதன் பகவானின் அடுத்த மாதம் புரட்டாசி மாதம்…

இந்த புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
(நவராத்திரியில் தான் இந்த மூலம் நட்சத்திரம் வரும். இந்த தினத்தில் தான் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் அதாவது எழுந்தருள செய்வார்கள்.)
ஆண்கள் ஆனாலும் சரி
பெண்கள் ஆனாலும் சரி
(துர்கா, லஷ்மி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அருள் பெற்றவர்கள்)
தமக்கு ஏற்படும் பிரச்சனைகளை முற்றிலுமாக அழித்துவிடுவார்கள்.
அதாவது,
பிரச்சனைகளை
நிர்மூலம் (ஒன்றும் இல்லாமல்) செய்து விடுவார்கள்.

இதையே,
பின் மூலம் நிர்மூலம்…. என்கிறோம்.

ஆனி மூலம் அரசாளும்., பின் மூலம் நிர்மூலம்….
🙏🙏🙏🙏🙏🙏🙏

"பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்"

"பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்"

(தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறதுவிளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்)

கட்டுரையாளர்-திரு கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
இது-2012 பதிவு.

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், "தமிழ் என்றால் என்ன?" என்று கேட்டார்.

மேலும் "சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!" என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,"பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!" என்றார்

"எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து 'ழ' என்பது இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு, குழந்தை ,கழல் ,நிழல்,பழம்,யாழ் இப்படி 'ழ' வருகிற எல்லாமே நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான 'ழ'வைத் தம்மிடத்தில் உடையது 'தமிழ்' (தமி+ழ்) என்று சொல்லலாமா" என்கிறார்

.உடனே கி.வா.ஜ., "இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!" என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்,

"யாமா மாநீ யாமா மா" என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும் கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும் கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள் பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று, முக்கால்,அரை,கால், அரைக்கால், இருமா,மாகாணி,ஒருமா,கீழரை என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து எழுதுகிறார், தெரியுமா?" என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன் அக்கா வரைக்கால் கண்டு
அஞ்சா முன் விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது....

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன் பொருளையும் தனக்கே உரிய முறையில்,

"முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது காலாகப் பயன்படுத்துகிறோமே அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்...நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்....
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்.....ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப் போகும் முன் ...காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!"

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் "என்ன அழகு பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக் கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும் கோத்துத்துதித்திருக்கிறாரே!" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்

ஸ்ரீவித்யா மகான்ஸ்ரீபாஸ்கரராயர்

🙏 ஸ்ரீ பாஸ்கராயர் 🙏
ஸ்ரீவித்யா மகான்ஸ்ரீபாஸ்கரராயர்
அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ....

.ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !...
ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் ......

..கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க ....
அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் ...கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !

அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து  
" உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..கூச்சல் போடாதீர்கள் !..அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் ...''

மிிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் , சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் , ஒரு சிறு பை சகிதம் .;
.. .பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே,

'' இதோ பாருங்கள் ..இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன !..

.பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் ! ''....

புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..
..செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் ..

சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,
'' அடடே ...உங்களை கவனிக்க வில்லை ....மன்னியுங்கள் ! ''
பிரசாத தட்டை நீட்டியவாறு மெல்லிய குரலில் பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர் ..

'' முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் ! ''...
அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம் !.புருவம் முடிச்சிட , 
.'' நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..''
'பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ;

'' உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு , பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !''
ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் , பின் மனைவியை அழைத்து , 
'' நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே ...உண்மையா ?.....''
என்று வினவ ....

அந்த அம்மையாரோ திகைப்புடன் ,
'' அய்யோ ...நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்...?..இது எப்படி சாத்தியம் ? ''
என்று அரற்றிய அக்கணம் ...

பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !
'' நான் தான் பணம் கொடுத்தேன் !''..
குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,
அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!

இப்போது சகலமும் புரிந்து போயிற்று அந்த தேவி உபாசகருக்கு ;
கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி !

'' உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் ...மன்னியுங்கள் !'' 
கண்கள் பனிக்க , செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார் !

அந்த தேவி உபாசகர் வேறு யாருமில்லை ..
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர்  தான் ! 
அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது ! 

தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் ! 
திருவிடைமருதூர் மகாதானத்தெருவில் வசித்தவர்

தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் , பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.!குருப்யோ  நம:

மஹா கால பைரவப் பெருமான்

மஹாகால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்!

உலகம்,உயிர்கள்,ப்ரஞ்சம் = இம்மூன்றையும் அந்த ஈசனின் ஆணைப்படி,நவக்கிரகங்கள் மூலமாக நிர்வகித்து வருபவர் மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;

ஈசன் ஒரு போதும் அவதாரம் எடுப்பதில்லை;தேவைப்படும் போது தனது சக்தியின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி ஒரு முறை வெளிப்படுத்திய சிறுபகுதி சக்திதான் கால தேவன் என்ற மஹா கால பைரவப் பெருமான் ஆவார்;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி திதி அன்று மஹா கால பைரவப் பெருமான் ஈசனிடம் இருந்து உதயமானார்;இந்த விளம்பி ஆண்டு,கார்த்திகை மாதத்தில் 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று (30.11.2018) மஹாதேவ அஷ்டமியாக வர இருக்கின்றது;

ஒரு நாள் முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபித்தால் நமது இப்பிறவியில் செய்த அனைத்து பாவங்களும் நம்மைவிட்டு ஓடிவிடும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் தெரிவித்திருக்கின்றார்;

அது எந்த நாள் தெரியுமா?

மஹா கால பைரவப் பெருமான் பிறந்த தினமான 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று தான்!

ஐந்து விதங்களில் மஹா கால பைரவப் பெருமானின் பிறந்த நாளைக் கொண்டாடலாம்;

1.ப்ரபஞ்சத்தின் மைய பாகமான அண்ணாமலையில் 29.11.2018 வியாழக்கிழமை இரவு 9.51 முதல் 30.11.2018 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 3.09 வரை கிரிவலம் வந்தவாறு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;அல்லது இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டு,மீதி நேரத்தை அண்ணாமலையார் கோவிலுக்குள்ளும்,தங்கும் இடத்திலும் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;இதனால்,ஒரே சமயத்தில் கால பைரவப் பெருமானின் அருளையும்,அருணாச்சலேஸ்வரரின் ஆசிகளையும் பெற முடியும்;

2.முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,மஹா கால பைரவப் பெருமானுக்கு எட்டு படை வீடுகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;இந்த எட்டு படைவீடுகளிலும் வெவ்வேறு கால கட்டங்களில் தமது வீரதீர பராக்கிரமங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்;

இதில் ஏதாவது ஒரு படைவீட்டில் குறைந்தது ஒரு முகூர்த்த நேரம் வரை ஜபிக்கலாம்;அல்லது முழு நாளும் (கோவில் திறந்திருக்கும் நேரம் வரை=காலை 6 முதல் 12 வரை,மாலை 4 முதல் இரவு 8 அல்லது 9 வரை) ஜபிக்கலாம்;

அட்டவீரட்டானங்கள்:1.திருக்கண்டியூர் பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 8 வது கி மீ தொலைவில்)

2.திருக்கோவிலூர் வீரட்டானம்

3.திருவதிகை வீரட்டானம் (பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில்)

4.திருவிற்குடி வீரட்டேஸ்வரர்  (திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில் 3 கி மீ பயணித்து அதன் பிறகு இருக்கும் உள்ளடங்கிய கிராமத்துச் சாலையில்)

5.திருக்கடையூர்  கால சம்ஹார மூர்த்தி & திருக்கடையூர் மயானம் 

6.வழுவூர் வீரட்டானம் அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர்  (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு 1 கி மீ தூரத்தில் உள்ளடங்கிய கிராமத்திற்குள் இருக்கும் வீரட்டானம்)

7.செம்பொனார் கோவில்(மயிலாடுதுறையின் ஒரு பகுதியில்)

8.கொறுக்கை என்ற குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணிக்க வேண்டும்;அதன் பிறகு விசாரித்து செல்லவும்)

ஒன்பதாவதாக சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயம்

இந்த எட்டு வீரட்டானங்களிலும் மூலவர் சிவலிங்கமாக இருக்கின்றது;சிவலிங்க வடிவில் மஹா கால பைரவப் பெருமான் அருள் பாலித்து வருகின்றார்;ஈசனும்,பைரவரும் ஒருவரே என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றார்;

3.பூமியில் இருக்கும் அனைத்து கால பைரவ சன்னதிகளுக்கும் அருளாற்றலை வழங்கும் ஓர் ஆலயம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவில்,சோழாபுரம்,கும்பகோணம் அருகில்;

இங்கே 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று ஈசனுக்கும் அம்பாளுக்கும் திருமணம் நடைபெறும்.திருமணத்தின் முடிவாக கல்யாண விருந்து நடைபெறும்;விருந்தின் முடிவில் நாம் ஒவ்வொருவரும் திருமண அன்பளிப்பு தரலாம்;மிகவும் புண்ணியம் தரும் செயலாகும்;நமது நியாயமான  நீண்டகால ஏக்கங்களைத் தீர்க்கும் திருக்கல்யாண வைபவம் இது!!!

4.செல்வ வளம் வேண்டுவோர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை இந்த நாளில் அவர் சன்னதிக்குச் சென்று மூலமந்திரத்தை ஜபித்து அருளைப் பெறலாம்;

5.வெகுதூர மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வசிப்பவர்கள் 30.11.2018 வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லது இராகு காலம் காலை 10.30 முதல் 12 மணிக்குள் இறுதி 30 நிமிடங்களில் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;

சனியின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் ரிஷபம்,மிதுனம்,கன்னி,விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியினர் இன்று முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம் 

அல்லது தினசரிப் பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னைதியில் ஜபிக்கலாம்;

பைரவ ஜபம் கை மேல் பலன் என்பது பழமொழி!

திருவண்ணாமலை

#திருவண்ணாமலையில் #சித்தர்கள்அதிகம்ஏன்?

திருவண்ணாமலை மலை இருக்கிறதே. அதுவே பிரஹ்மாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மலையே சிவம்.அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டிருக்கிறோம். 

ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகின்றன. இதனால் 
மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் , சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!

மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவம் இருந்து அருளுகிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூக்ஷம ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!

ஏன் சித்தர்கள் பூமியாக திருவண்ணாமலை இருக்கிறது?

நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது. இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது. 

நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. 

நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி 
வருகின்றனர்.

திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டுள்ளது. இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும் மர்மம் இதுதான்..

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் ஆதி சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?.அதனால் தான் திருவண்ணாமலையில் சிவ பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் இன்றும் அரூபமாக நடமாடி கொண்டு இருக்கிறார்கள். கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.

அத்திரி மகரிஷி, மச்ச முனிவர், கோரக்கர், கிராம தேவர், துர்வாசர், சட்டை முனிவர், அகத்தியர், போகர், புசுண்டர், உரோமா மச்சித்தர், யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா, பிரம்ம முனி, காலங்கி நாதர், நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி, கொங்கனர், உதயகிரிச் சித்தர், 

பிகுஞ்சக ரிஷி, மேக சஞசார ரிஷி, தத்துவ ஞான சித்தர், காளமீகா ரிஷி, விடன முனிவர், யாகோபு முனிவர், அமுத மகாரிஷி, சூதமா முனிவர், சிவத்தியான முனிவர், பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி, ஜெயமுனி, சிறு வீரமா முனி, வேதமுனி, சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி, பராச முனி, வல்ல சித்தர், அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர், புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர், மவுனச்சித்தர், தேகசித்திக் சித்தர், வரரிஷி, கவு பாலச்சித்தர், மதிராஜ ரிஷி, கவுதமர், தேரையர், விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர் கண்ணானந்த சித்தானந்தர், சச்சிதானந்தர், கணநாதர், சிவானந்தர், சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர், திரி காலாக்கயான முனி, அருட் சித்தர், கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி, கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர், வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச் சித்தர், சத்தரிஷி, தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர், நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி, அநுமாதிச்சித்தர், ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர், வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர், தொழுகன்னிச்சித்தர்....

என இருநூற்றுக்கும் அதிகமான சித்தர்கள் திருவண்ணாமலையில்  அண்ணாமலையாரை தரிசித்ததாகவும் ,  அவற்றில் சுமார் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு ஜீவசமாதி ஆனதாகவும் அகத்தியர் தான் இயற்றிய அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்துள்ளார்  அவற்றுள் தகவல்கள் சேகரித்து கிடைக்க பெற்ற 20 சித்தர்கள் பற்றி ஒவ்வொரு பதிவாக காணலாம்.

திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரி நாதர். சிற்றின்ப மோகத்தால் சீரழிந்து வாழ்க்கையில் சலிப்படைந்து, பிறவியை வெறுத்து அண்ணாமலையார் ஆலய வல்லாள மகாராஜன் கோபுரத்தின் மீதிருந்து குதித்து உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றபோது, முருகப் பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்டார். “முத்தைத்தரு’ என அருணகிரிக்கு முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ தோன்றியது. 15-ம் நூற்றாண்டிலே திருவண்ணாமலையிலே வாழ்ந்தவர்.

“திருவண்ணாலைக்கு வந்து ஞானகுருவாக இரு’ என்று அண்ணாமலையாரின் நேர்முக அழைப்பினால் ஞானியானவர், சீடரையே குருவாக்கிய செந்தமிழ் யோகி குகை நமச்சிவாயர்.

திருவண்ணாமலை தீர்த்தக் குளத்து நீரையே திரட்டிக் குடமாக்கி (கி.பி.1290) அதிலேயே தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டவர் சித்த மகா சிவயோகி பாணி பத்திரசாமி.

உண்ணாமுலை அம்மனிடமே உணவைக் கேட்டுப் பாடி தேவியின் திருக்கரங்களால் பொங்கலைப் பெற்றவர். தில்லைக் கோயிலின் திரைச் சீலையிலே தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்த தீயைத் தேய்த்து அணைத்த ஞானச் செல்வர் குரு நமசிவாயர்.

திருவண்ணாமலை ஆதினத்தின் முதல் குருவாகி குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தவர் ஸ்ரீலஸ்ரீ தெய்வ சிகாமணி தேசிகர்.

திருவண்ணாமலைப் பகுதியிலே ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்க, ஏரியை அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழையைப் பொழிய வைத்து ஊரையே செழிக்க வைத்தவர் மங்கையர்கரசியார்.

தொண்ணூறு வயது வரை நாள்தோறும், திருவண்ணாமலையைத் தவறாமல் வலம் வந்து, அந்தப் புண்ணியதால் அண்ணா மலையானை நேரில் கண்டு பேறு பெற்றவர் சோணாசலத் தேவர்.

யாழ்பாணத்திலே பிறந்து தில்லையாடியின் பேரருளால் திபரு அருணையிலே பெரும் புதையல் பெற்று, திருக்குளமும், திருமடமும் அமைத்து நல்லறங்களை நாளெல்லாம் கூறி மக்களைக் காத்த ஞானப்பிரகாசர். 

பாதகர்களைத் திருத்துவதற்காக, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் செருப்பை அணிந்து நடந்தவர் வீரவைராக்கிய மூர்த்தி சுவாமிகள்.

ஐந்நூறு சீடர்களைப் பாடுபட்டு உருவாக்கி, அண்ணா மலையானின் புகழைப் பரப்பியவர். நூல்கள் பலவற்றை எழுதி, சைவ சமயப் பெருமைகளை உலகறியச் செய்த வேதாகம, சமய சாத்திர வித்தகரான அப்பைய தீட்சிதர். 

காணாமற் போன பூஜைப் பேழையை, அண்ணா மலையானின் திருக் கரங்களால் பெறும் பேறு பெற்றவர்; 16-ம் நூற்றாண்டில் குருதேவர் 

மடத்தில் தீக்ஷை பெற்று சிவப்பிரகாசர் எனும் ஞானியைக் கண்ட ஞானமணி குமாரசாமி பண்டாரம்.

வாய் பேச இயலாத ஊமையாய்ப் பிறந்து, திருவண்ணாமலையானின் பேரருளால் பாடும் திறனைப் பெற்றவர். தில்லையிலே திளைத்து, திருவாரூரிலே தியாகேசர் சன்னதி முன்னால் முக்தி பெற்றவர் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்.

காவிரியாற்றின் நீரையே எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து தீ ஜுவாலையை வரவழைத்து தனது திருமேனியையே அக்னிதேவனுக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள்.

கரிகாற்சோழன் காலத்திய பாதாளலிங்க மூர்த்தியை 16-ம் நூற்றாண்டு இறுதியில் பூஜித்தவர். அதே இடத்தில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியபோது, பாதாளலிங்கத்தை மாற்றிவிடாமல் பாதுகாத்த ஞானயோகி தம்பிரான் சுவாமிகள்.

தனது மரணத்தைத் தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் கடும்நோயைத் தீர்த்து வைத்தவர். 

இருபுறமும் வரிப்புலிகள் காவலிருக்க ஞானத்தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுரு (1750-1829) ஸ்ரீலஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.

கேரள மாநிலத்தில் பிறந்து, பாரத நாடெங்குமுள்ள புண்ணிய ஷேத்திரங்கள் சென்று வழிபட்டு இறுதியாக தியானத்திற்குகந்த தெய்வத் திருமலை திருவண்ணா மலைதான் எனத் தீர்வு கண்டு மேட மலையில் முருகப் பெருமானுக்கு கோயில் அமைத்த வழிபட்டவர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.

திருவண்ணாமலை வீதியிலே புரண்ட போது கிடந்து அருவுருவான அண்ணாமலையே உமா மகேஸ்வரன் எனக் கண்டுணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் பேரருள் புரிந்து பார் புகழ் பெற்றவர் பத்ராசல சுவாமிகள்.

பழனியிலிருந்த திருவண்ணாமலை வந்து ஆலயத்தில் உழவாரப் பணி புரிந்தவர். தினமும் அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசிப்பிணி தீர்த்தவர். ஏழை, எளிய மக்கள் மேல் இரக்கம் கொண்ட சேவை புரிந்தவர் (1922), பாதாள லிங்கக் குகையிலே பால ரமணரைப் பல காலம் பாதுகாத்த சிவ முனிவர் பழனி சுவாமிகள்.

பூமிக்குள் புதைந்து கிடக்கும் புதையலை ஊடுருவி காணும் ஞான விழி பெற்ற புண்ணியத்தால், முடிக்கப்படாது பாதிக்கோபுரமாய் நின்ற திருவண்ணாமலையில் உள்ள வடக்கு கோபுரத்தைப் பூர்த்தி செய்தவர். மக்களின் தீராத நோய்களையெல்லாம் பஞ்சாக்ஷர மந்திரம் சொல்லித் திருநீறு தந்ததன் மூலம் தீர்த்து வைத்த புனிதவதி அம்மணியம்மாள்.

திருநெல்வேலியிலே அவதரித்துத் திருவருணையிலே முருக தரிசனம் கண்டவர். எல்லையில்லாத் தமிழ் வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்து வாழ்த்திய இசைஞானி வண்ணச் சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் (1839-1898) 

திருவண்ணாலை தீபத்திரு மலைப் பாதையிலே, அங்கம் புரள உருண்டு தவழ்ந்து அன்றாடம் வலம் வருவதையே லட்சியமாய்க் கொண்டவர். திருவண்ணாமலையிலுள்ள அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞான குரு அங்கப் பிரதக்ஷண அண்ணாமலை சுவாமிகள்.

கருவிலேயே திருவுடையவராய் காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலைத் தலத்தில் வாழ்ந்த மகான் ஞானச் சித்தர் சேஷாத்திரி சுவாமிகள் (1870-1929)

“அண்ணாமலையார்க்கே என்னை ஆளாக்குவேன்’ என்று கன்னிப் பருவம் வரை காத்திருந்தவர். கண்ணுதற் கடவுள் கனவிலே வந்து அருள் புரிந்தார். கண் விழித்ததும் தலைமுடி சடையாகி விட்டிருந்தது. 

திருவண்ணாமலை சென்று இறுதிவரை ஆலயத்தில் பணியாற்றிய சடைச்சியம்மாள் என்ற ஐடினி சண்முக யோகினி அம்மையார்.

“துறவு கொள்வதே பொது சேவைக்கு உகந்ததென்று’ 36 வயது முதல் 103 வயது வரை (1882-1985) திருவண்ணாமலை மற்றும் தருமபுரி பாதையிலே திருப்பணி பலபுரிந்து, பொது மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளையும், அவசரத் தேவைகளையும் மேற் கொண்டு, பரிபூரண பக்தியால் அண்ணாமலையானின் பேரருள் பெற்ற “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.

உண்ணாமல் உறங்காமல் அண்ணாமலையானின் நினைவிலே பன்னிரண்டு ஆண்டுகள் தனிமையில் கடும் தவம் செய்து தொடர்ந்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.

திருவண்ணாமலை மண்ணிலே ஓரடிக்கு 108 லிங்கங்கள் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்தியவர். பஞ்சாட்சர நமசிவாயம் 1008 மந்திர ஜபத்துடன் தெய்வீகத் திருமலையை ஒவ்வொரு அடியாக நடந்து கொண்டு வலம் வந்து பேரின்ப ஞானநிலை கண்டு பிறவிப் பிணி தீரப் பெற்றவர் இறை சுவாமிகள். 

1917-ல் பிறந்து ஆயிரத்தெட்டு முறை அண்ணாமலை அங்கப் பிரதட்சண வலம் கண்டவர். தேவர்களும் சித்தர்களும் கிரிவலம் புரிவதை ஞானக்கண்ணால் அறிந்து கூறிய மாதவச் செல்வர் இசக்கி சுவாமிகள்.

திருச்சுழி கிராமத்திலே பிறந்து, மதுரையிலே கல்வி பயின்று, திருவண்ணாமலையானின் நினைவால் திருவருணை வந்து, உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் மேற்கொண்டு மா தவஞானியாய், மகரிஷியாக உலகப்புகழ் பெற்றவர் ரமண மகரிஷி (1879-1950) 

விரட்டுவதற்காக வீசிய கல் பறவையின் உயிரையே வாங்கி விட்டதால் 1918-ல் கங்கைக் கரையிலே பிறந்த அவர் அமைதியைத் தேடி காவிரிக்கரை வரை அலைந்தார். பல ஊர்களும் அலைந்து திரிந்து முடிவிலே ரமண மகரிஷியிடம் சரண் அடைந்தார். குருவருளால் அர்த்தநாரீஸ்வரரின் திருவருள் பெற்றார். அவர்தான் 1959 முதல் குடுகுடுப்பாண்டி போன்ற திருக்கோலமுடன் திருவண்ணாமலையிலே உலா வந்த சிவயோகி, ராம் சுரத்குமார்..  என்றும் அன்புடன ஆச்சார்யா பாபாஜி ,

.. ஓம் நமசிவாய சிவசிவ அன்பே சிவம்..
நன்றி

மதிப்பு மிக்க ‘ராம’ நாமம்

மதிப்பு மிக்க ‘ராம’ நாமம் - ஆன்மிக கதை 

மதிப்பு மிக்க ராம நாமத்தை சொல்லியதால் ஒரு வயதானவருக்கு கிடைத்த மறுவாழ்க்கையை பற்றிய கதையை கீழே பார்க்கலாம். 

காசியிலே இருந்த செல்வந்தர் ஒருவர் மிகச் சிறந்த கொடை வள்ளலாக இருந்தார். முந்தைய வினைப் பயன் காரணமாக, அவரைத் தொழுநோய் முழுமையாகப் பற்றிக் கொண்டது. அவரிடம் உதவி பெற்ற பலரும் அவரைப் பராமரிக்க முன் வந்தனர். ஆனால் அவரோ தன்னுடைய கடைசிக் காலத்தில் எவருக்கும் துன்பம் தரக் கூடாது என்று நினைத்தார். எனவே, தன்னைப் பராமரிக்க முன் வந்தவர்களிடம், ‘என்னை கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று மட்டும் வேண்டுகோள் வைத்தார். வாழ்நாள் முழுவதும் அவரை பராமரிக்க முன்வந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் அல்லவே.. அவர்களும் அவரை கங்கைக் கரைக்குத் தூக்கிச் சென்றனர்.

அங்கு சென்றதும் அந்த செல்வந்தர் கூறிய வார்த்தை, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

‘எனது உடலில் பெரிய கல்லைக் கட்டி, கங்கையாற்றில் தூக்கிப் போட்டு விடுங்கள். நான் கங்கையில் மூழ்கி இறந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று கூறினார்.

ஆனால் அவரது நண்பர்களும், அவரால் உதவி பெற்று அதன் காரணமாக அவரைப் பராமரிக்க வந்தவர்களும், அவர் சொன்ன காரியத்தைச் செய்ய மறுத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில், வேறு வழியின்றி செல்வந்தரின் இடுப்பில் கயிற்றைக் கட்டி, அதோடு ஒரு பெரிய கல்லையும் இணைத்துக் கட்டினர்.

அதனைக் கண்டு அவருக்கு நெருக்கமான நண்பர்கள் பலரும் அழத் தொடங்கினர். அப்போது அந்த வழியாக வந்த கபீர்தாசரின் சீடர் பத்மநாபர் வந்தார். அவர் செல்வந்தரின் உடலில் கல் கட்டப்பட்டிருப்பதையும், அவரைச் சுற்றி நிற்பவர்கள் துக்கத்தில் இருப்பதைக் கண்டு, ‘என்ன விஷயம்?’ என்று விசாரித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அவரிடம் நடந்த விஷயங்களை விளக்கமாக கூறினார்கள்.

உடனே பத்மநாபர் அங்கிருந்தவர்களிடம், ‘நான் சொல்லும்படி நீங்கள் செய்தால், அவரைக் காப்பாற்றி விடலாம்’ என்று சொன்னார். அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

பிறகு பத்மநாபர், ‘அனைவரும் ராம நாமத்தை மூன்று முறை சத்தமாக சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அங்கிருந்தவர்களில் சிலர், ‘நாங்கள் ஏற்கனவே இவரை ராமர் கோவிலுக்கு அழைத்துச் சென்று, வழிபாடுகளெல்லாம் செய்து பார்த்து விட்டோம். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை’ என்றனர்.

பத்மநாபரோ, ‘ராமனை வணங்கி நடக்காதது, ராமனின் பெயரைச் சொன்னால் நடக்கும். முயற்சித்துப் பாருங்கள்’ என்று நம்பிக்கையோடு கூறினார். அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ராம நாமத்தை மூன்று முறை சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம்! செல்வந்தரின் நோய் முழுமையாக நீங்கி, அவர் உற்சாகமாக எழுந்து நின்று கொண்டிருந்தார்.

பத்மநாபர் அவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டுபோய், தனது குருவான கபீர்தாசரிடம் சென்று நடந்ததைக் கூறினார்.

ஆனால் கபீர்தாசரோ, மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகக் கோபம் கொண்டார்.

அவர் பத்மநாபரைப் பார்த்து, ‘ராம நாமத்தின் பெருமையை அறியாதவராக இருந்திருக்கிறாயே... ராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே, அவர் குணமடைந்திருப்பாரே, மூன்று முறை சொல்ல வைத்து, ராம நாமத்தின் மதிப்பைக் குறைத்து விட்டாயே’ என்று சத்தம் போட்டார்.

ராம நாமத்தின் பெருமை அவ்வளவு சிறப்புடையது.

Friday, November 23, 2018

உன் ஆசாரத்தை விடாமல் இரு

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்”- (இன்றைய அஹோபில மட ஜீயர் ஸ்வாமிகள் பூர்வாஸ்ரமத்தில் ரங்கராஜ ஐயங்காராக இருந்தபோது-பெரியவா. சொன்னது.

சாய் டி.வி.யில் 19-11-2018 -அற்புதமாக சொன்னார் திரு கணேச சர்மா.

.Extract from Sri R.Venkatasamy's book on MahaPeriyavaa

Jan 1, 2014

Thanks to--Kanchi Periva Forum

கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.

அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?

“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.

ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.

மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:

“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”

அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:

“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.

“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”

“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.

இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.

“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.

தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.

“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”

“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.

அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.

மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு, “நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.

அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.

அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.

தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.

“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் “தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.

மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,

“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:

“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்



ஒரு ரூபாய்க்குத்தானே நெய் வாங்கி வரச்சொன்னேன்

ஒரு ரூபாய்க்குத்தானே நெய் வாங்கி வரச்சொன்னேன்...ஏன் ஒரு டின் நெய் வாங்கி வந்தார்
மகா பெரியவர் 1981-ஆம் வருடம் பண்டரிபுரத்தில்
முகாமிட்டிருந்தார். வரிசையாக பக்தர்கள் மகானை தரிசித்துக்கொண்டு வரும்போது, கூட்டத்தின் நடுவே வடநாட்டைச் சேர்ந்த சேட் ஒருவர்,பெரியவாளின் முன் ஒரு டின் நிறைய நெய் கொண்டுவந்து வைத்தார்.

அதைப் பார்த்த மகான்,"ஒரு ரூபாய்...ஒரு ரூபாய்..."
என்று கூறினார். அங்கு கூடியிருந்த மக்களுக்கு
மகான் எதற்காக அப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை. அவர் நிஜமாகவே ஒரு ரூபாய் கேட்பதாக நினைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் பணத்தை எடுத்தனர்.

மகான், தன் அருகில் இருந்த மடத்துச் சிப்பந்தியிடம் சொன்னார்; "அந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்குத்தானே  நெய் வாங்கி வரச்சொன்னேன்...ஏன் ஒரு டின் நெய்வாங்கி வந்தார் என்று கேள்!"

எல்லோரும் இதைக்கேட்டு வியந்து போனார்கள்.

பெரியவர் எப்போது இந்த சேட்டிடம் ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிவரச் சொல்லி இருக்கக் கூடும்?"
 என்று விளங்காமல் விழித்தனர்.

இதைப் புரிந்துகொண்ட சேட், நிதானமாக பதில்
சொன்னார்.

"என் மகளை யாரோ கடத்திக்கொண்டு போய்விட்டார்கள்.

நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது,'ஸ்வாமிஜி' என் கனவில் தோன்றி, 'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு பண்டரிபுரத்துக்கு வா,உன் மகள் சேதமின்றி வீடு திரும்புவாள்' என்று கூறினார்.

சொன்னபடியே, மறுநாள் என் பெண் பத்திரமாக வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.அதான் பெரியவா சொன்ன ஒரு ரூபாய் நெய்க்கு பதிலாக ஒரு டின் நெய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்" என்று அவர் சொன்னதைக்
கேட்ட பக்தர்கள் அனைவரும் வியப்பு அடைந்தனர்.

சேட்டுக்கு கனவில் தோன்றி, தான் சொன்னது வாஸ்தவம்தான் என்கிற உண்மையை அந்த மகான் எல்லோருக்கும் புரிய வைத்துவிட்டார் அல்லவா?

சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்.


நீதான் கன்யாதானம் பண்ணணும்.

பல வர்ஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். ஒருநாள் மடத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண "கியூ"வில் நின்றிருந்தனர் ஒரு வயஸான தம்பதி. அவர்கள் முறை வந்ததும், பெரியவாளை நமஸ்கரித்தனர்.

 "பெரியவா...........நான் ஸர்வீஸ்லேர்ந்து ரிடையர் ஆய்ட்டேன்.........கொழந்தைகள்...ன்னு யாரும் கெடையாது. அதுனால, மடத்ல வந்து கைங்கர்யம் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருக்கு. 

அனுக்ரகம் பண்ணணும்." பேச்சில் உருக்கம், பணிவு. பக்கத்தில் வயஸான மனைவி. "வாழ்றதுக்கு ஒனக்கு பிடிப்பு எதுவும் இல்லேன்னுதானே கவலைப்படறே?" "ஆமா........." "எதாவுது கார்யம் குடுத்தா பண்ணுவியா?" "உத்தரவிடுங்கோ பெரியவா! காத்துண்டிருக்கேன்.

"
அவரை அப்படியே விட்டுவிட்டு அடுத்து வந்த மற்றொரு தம்பதியிடம் குசலப்ரஸ்னம் பண்ண ஆரம்பித்தாரஅவர்களும் வயசானவர்கள்தான். கூட அவர்களுடைய பெண்ணும் வந்திருந்தாள். "இவ எங்களோட ஒரே பொண்ணு. 

இவளுக்கு கல்யாணம் பண்ணணும். பெரியவாதான் ஆசீர்வாதம் பண்ணணும்..........." கையை உயர்த்தி ஆசி கூறினார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த "பிடிப்பு" மாமா இதை பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது பெரியவா "பிடிப்பு" பக்கம் திரும்பி, "பிடிப்பு வேணும்...னியே! இதோ........இந்த பொண்ணுக்கு நீயே ஜாம்ஜாம்னு ஒன் சொந்த செலவுல கல்யாணம் பண்ணி வை! நீதான் கன்யாதானம் பண்ணணும்."

"செஞ்சுடறேன் செஞ்சுடறேன்." பிடிப்பு கீழே விழுந்து வணங்கினார். பெரியவா அவரைப் பார்த்து ரெண்டு விரலைக் காட்டி, அவர் மனைவியை பார்த்தார். அவருக்கு புரிந்தது........."ஆமா, இவ என் ரெண்டாவது சம்ஸாரம். 

மூத்தவ காலகதி அடைஞ்சதும் இவளை கல்யாணம் பண்ணிண்டேன்". பெரியவா முகத்தில் இப்போது ஒரு தீவ்ரமான மாறுதல்! "சரி..........ஒனக்கு மூத்த தாரத்தோட பொண் கொழந்தை இருந்துதே! அது என்னாச்சு?............."

"இடி" தாக்கியது போல் அதிர்ந்தார் "பிடிப்பு". பெரியவாளுக்கு எப்டி தெரியும்? ரொம்ப கூனிக்குறுகி, "இவ சித்தியா வந்ததும், அந்தக் கொழந்தையை படாதபாடு படுத்தினதால, அந்தக் குழந்தை சின்ன வயஸ்லேயே ஆத்தை விட்டு போய்ட்டா......நானும் தேடாத எடமில்லே! போனவ போனவதான்.............." துக்கத்தால் குரல் அடைத்தது. "ம்ம்ம்ம் பிடிப்பு வேணும்னு சொன்னியோல்லியோ?இதோ.......ஒன்னோட காணாமப் போன பொண்ணு! இவதான்! போ! அழைச்சுண்டு போய் நல்லபடியா கல்யாணம் பண்ணிவை........."
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

 ஆனால், இன்பமான அதிர்ச்சி! என்னது? இது சத்யம் சத்யம்! பெண்ணின் கூட வந்த தம்பதிகளும் வாயை பிளந்தார்கள்!

 உண்மைதான்! பல வர்ஷங்களுக்கு முன் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டே ஷனில் இந்தக் குழந்தை அழுது கொண்டு நின்றதாகவும், விவரம் எதுவும் சொல்லத் தெரியாததால் அவளை தாங்களே வளர்த்து வருவதாக கூறினார்கள்.

 பெற்றோர், வளர்த்தோர் ரெண்டு பேரும் சந்தோஷமாக அந்தப் பெண்ணின் கல்யாண ஏற்பாட்டை பண்ணினார்கள்.

இப்போது அதிகமாக எல்லார் வாயிலும் அனுபவம் இல்லாமலே வரும் வாக்யம் "எல்லாமே pre planned " என்பது. மஹான்களின் சந்நிதியில் அது சஹஜமாக, அனுபவத்திலும் வரும். 

நம் வீடுகளில் கண்ணாடியை எங்கேயோ வைத்துவிட்டு, வீடு முழுக்க தேடியதும்,வீட்டார் யாராவது "இதோ இருக்கு" என்று எங்கிருந்தோ கண்ணாடியை எடுத்துக் குடுப்பது போல், 
சர்வ சாதாரணமாக 
"cosmic level " ல் விளையாடக்கூடியவா பெரியவா மாதிரி அவதார புருஷர்கள்....

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..
🙏🙏🙏🙏🙏🙏🙏

கல் இல்லே… சிவலிங்கம்!

கல் இல்லே… சிவலிங்கம்!

சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வரும்போதெல்லாம், பழவந்தாங் கலில்தான் முகாமிடுவார் காஞ்சி மகாபெரியவா.

 அப்படித் தங்குகிறபோது, அந்த ஊரின் மையத்தில் உள்ள குளத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள்… அதிகாலைப் பொழுதில், குளத்தில் ஸ்நானம் செய்வதற்கு மகாபெரியவா வந்தபோது, அங்கே சிலர் துணி துவைத்துக் கொண் டிருந்தனர்.

 அவர்களில் ஒருவர், அங்கேயிருந்த கல்லில் துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட காஞ்சி மகான் நெக்குருகியவராய், ‘இது துவைக்கற கல் இல்லே; லிங்கம்… சிவ லிங்கம். இதுல துவைக்காதீங்கோ’என்று சொன்னார்.

அவ்வளவுதான்… குளத்தைச் சுற்றியிருந்தவர்கள் தபதபவெனக் கூடினர்; சிவலிங்கத் திருமேனியைச் சுற்றி நின்றனர். இதையறிந்த ஊர் மக்கள் பலரும் விழுந்தடித்துக்கொண்டு, குளக்கரைக்கு வந்தனர். 

அடுத்து காஞ்சி மகான் என்ன சொல்லப்போகிறார் என்று அவரையே மிகுந்த பவ்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மெள்ளக் கண்மூடியபடி இருந்த மகாபெரியவா, விறுவிறுவெனக் குளத்தில் இறங்கிக் குளித்தார். அங்கேயே ஜபத்தில் ஈடுபட்டார். 

பிறகு கரைக்கு வந்தவர், சிவலிங்கத்துக்கு அருகில் வந்தார். ”இது அர்த்த நாரீஸ்வர சொரூபம். சின்னதா கோயில் கட்டி, அபிஷேகம் பண்ணி, புஷ்பத்தால அர்ச்சனை பண்ணுங்கோ! இந்த ஊர் இன்னும் செழிக்கப் போறது” என்று கைதூக்கி ஆசீர்வதித்துச் சென்றார்

பெரியவாளின் திருவுளப்படி, குளத்துக்கு அருகில் சின்னதாகக் குடிசை அமைத்து, சிவலிங்க பூஜை செய்யப்பட்டது

. பிறகு கோயில் வளர வளர… ஊரும் வளர்ந்தது. பழவந்தாங்கலின் ஒரு பகுதி, இன்னொரு ஊராயிற்று. அந்த ஊர் நங்கைநல்லூர் எனப்பட்டு, தற்போது நங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது.

சென்னை, பழவந்தாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். காஞ்சி மகாபெரியவாள் சுட்டிக்காட்டிய இடத்தில் அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம்

. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு, பெரியவா அருளியதால் உருவான இந்தக் கோயில், இன்றைக்கு ஸ்ரீநடராஜர் சந்நிதி, பட்டீஸ்வரத்தைப் போலவே அமைந்துள்ள ஸ்ரீதுர்கை, அர்த்த நாரீஸ்வர மூர்த்தத்துக்கு இணையாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரி திருவிக்கிரகம் எனச் சிறப்புற அமைந்துள்ளது.

பிரதோஷம், சிவராத்திரியில் நவக்கிரக ஹோமம், புஷ்ப ஊஞ்சல், சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு, வசந்த நவராத்திரி விழா, சிறப்பு ஹோமங்கள், விஜயதசமியில் சண்டி ஹோமம் என ஆலயத்தில் கொண்டாட்டங்களுக்கும் வைபவங்களுக்கும் குறைவில்லை!

 இன்னொரு சிறப்பு… மகாபெரியவாளின் திருநட்சத்திரமான அனுஷ நட்சத்திர நாளில் (மாதந்தோறும்) சிறப்பு பஜனைகள், ஜயந்தியின் போது பிரமாண்ட பூஜை மற்றும் பஜனைகள் ஆகியன விமரிசையாக நடைபெறுகின்றன.

 நங்கநல்லூருக்குவந்து ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வணங்குங்கள்; குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
.............

பத்மாவதி பரிணயம்

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள்,இரண்டு ஆண் குழந்தைகள்.
இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு வாடகை பிரச்னை இல்லை.
கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு, முப்பது தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்' தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..
மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார். ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்தவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரேமுகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..."தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார்.
"அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம்.பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."
பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து அனுப்பி  விட்டார்கள்.
ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே'என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே.பெரியவாள்.
வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி.. 
"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போபார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன், உதவி செய்யப்படாதா?"
பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"
"சொன்னேனே! பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதிபிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"
பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"
ராமஸ்வாமிஏழையேதவிர,ரொம்பவும்நல்லவர்;பக்திமான்; அனுஷ்டாதா...பெரியவாளுக்குத் தெரியுமே"
"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"
அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்தங்கப்பூண்கட்டிய ருத்ராட்சமாலை,
நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்ஒரு டாலர்;
பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப் பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம் மார்க்கபந்து சாஸ்திரிகள்.
பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகுநேரம்பேசிக்கொண்டிருப்பார்கள்.
சாயங்காலத்தில்ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு என்ன,இப்படி?அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக் காக்க வைக்கலாமா?
ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்துசாஸ்திரிகள் வந்திருக்கார்"என்று இரைந்து சொன்னார்.
பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது. பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.
"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா,ஏழெட்டு நாள்ரெஸ்ட்.புரோகிராம்இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு
திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினிஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவாஅனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..."
பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.அரை மணி ஆயிற்று.
"சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு.
"ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.
"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...."உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருக்கும்ஆச்சர்யமாக இருந்தது.
ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும்தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா?
"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க, கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.
"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார்.கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன்பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."
"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார்."சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு
தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்.""அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவுகூட கண்டதில்லே...."
பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்துபிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!
"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா?புத்திரிக்குக்கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?"
பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.
"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும்என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமானசௌ.பத்மாவதியை.."
விதேயன்;
மார்க்கபந்து சாஸ்திரி...
பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.
"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,
அண்ணா சந்தோஷப்படுவார்..."தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு.
இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள்காதருகில் மீண்டும் ஒலித்தன.
'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."
"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா?மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி'என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.
🙏🙏🙏🙏🙏🙏
🤚🌺மகா பெரியவாள்🌺🤚 !!