Sunday, July 16, 2023

மூன்று தலை முறை 96 - 97

 மூன்று தலைமுறை-96

By N Krishnamurthy 

காலையில் எழுந்ததும் பல் துலக்கி முடித்ததும்,சூடான காபியை கொண்டு வந்து கொடுத்தாள் சித்தி. டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து காபி சாப்பிட ஆரம்பித்த விசு. எதிர்புறம் சித்தப்பா சதாசிவம் தி ஹிண்டு ந்யூஸ் பேப்பரில் மூழ்கியிருப்பதை பார்த்தான்.

(அந்தக் காலங்களில் பிராமணக் குடும்பங்களில் ஹிண்டு நியூஸ்  படிப்பது ஒரு தினசரி சம்பிரதாயமாகவே இருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் அரை மணியிலிருந்து ஒரு மணி வரை ஹிண்டு நியூஸ் பேப்பர் படிப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் எந்ததெந்த பக்கங்களை  கிரமப்படி படிக்க வேண்டும் என்ற வரைமுறையே வைத்திருந்தார்கள். வயதானவர்கள் நடுப்பக்கத்திலுள்ள Letters to the editor யையும்,பின்னர் Editorial யையும் படித்தபின்னரே மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிப்பார்கள். அந்த  அளவுக்கு தி ஹிண்டூ நியூஸ் பேப்பர் தரமாகவும், நியாயமாகவும்,நடுநிலையாகவும்  இருந்தது.இப்பொழுது ஹிந்து நியூஸ் பேப்பர் தரம் தாழ்ந்து கேவலமாக இருப்பதால் நிறைய பேர்கள் ஹிந்து நியூஸ் பேப்பர் படிப்பதை விட்டுவிட்டார்கள்.என் அவிப்பிராயத்தின் படி உண்மையான தேசப்பற்றுள்ளவன் இப்போதுள்ள ஹிண்டு ந்யூஸ் பேபரை பார்க்கக்கூட விரும்ப மாட்டான் என்றே சொல்வேன்)

பின்பு அவர் பேப்பரிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு  விசுவை பார்த்து "குட்மார்னிங் மாப்ளை. இன்னிக்கு என்ன ப்ரோக்ராம்" என்று கேட்டார்.விசு அவரிடம் "எங்க புரபசர் ஏதோ ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறார். அவரை பதினோரு மணிக்கு சென்று பார்க்கவேண்டும். ராகினியையும் வரச் சொல்லி இருக்கிறார்.அவர் ஏதோ  முக்கியமா என்னிடம் பேச வேண்டுமாம். அதற்குப்பின்  அவருடனே  நாங்கள்  லன்ச்சும் எடுத்துக்கொள்கிறோம்" என்று கூறினான்.

"எந்த ஓட்டல்"என்று கேட்டார் சித்தப்பா. அவன் கூறிய ஓட்டல் பெயரை கேட்டவுடன் அவர் "ஹோட்டல் அஷோகாவா. பரவாயில்லை அதிக தூரமில்லை. நீங்கள் பத்து மணிக்கு ஒரு ஆட்டோ  பிடித்தால் பத்தரை மணிக்கு  போயிடலாம்" என்றார் சதாசிவம். "புரபசரை பார்த்து பேசி,லன்ச்  முடிச்சதக்கப்புறம் என்ன பண்ண போறேங்க" என்று கேட்டார். ராகினி விசுவை பார்த்து "அப்படியே கொஞ்சம் எங்காவது அவுட்டிங் போயிட்டு வந்து விடலாமா" என்று கேட்டாள். அதற்கு விசு "எனக்கு அதிகம் பெங்களூரை பற்றி தெரியாது.எந்த இடத்துக்கு நான் உன்னை  அழைத்துக் கொண்டு போவது" என்று கூறினான். இதை கேட்டுக்கொண்டே வந்த சித்தி சச்சு "இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை மாப்ளை.நீங்கள் அஷோகா ஹோட்டலிலிருந்து ஆட்டோ பிடித்து கப்பன் பார்க் போய்விடுங்கள்.

கொஞ்ச நேரம் கப்பன் பார்க்கில் இருந்து விட்டு,விதான் சவுதாவை பாருங்கள். விதான் சவுதா பார்த்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து  லால்பாக்  போங்கோ. அங்கு கொஞ்ச நேரம் பொழுதை கழித்து, திரும்பி வந்துவிடுங்கள். இரவு சாப்பாட்டிற்கு சரியாக இருக்கும்" என்று கூறினாள். "சொல்ல மறந்துட்டேனே. நீங்கள் லால்பாக் போனா அவசியம் M.T.R க்கு போய் மசால் தோசை சாப்டூட்டு  வாங்கோ. ரொம்ப அருமையாக இருக்கும்" என்றாள் சித்தி.பின்பு சித்தி அவனிடம் "காலையில் பூரி, மசால் பண்ணீட்றேன்.என்ன சொல்றேங்க" என்று கேட்டாள். அதற்கு விசு "பூரி மசாலா கொஞ்சம் ஹெவியா இருக்கும்ன்னு பாக்கிறேன்.ஏதாவது லைட்டா இருந்தா பரவாயில்லை"என்று சொன்னான். அப்போ "தோசை குத்தி கொடுக்கட்டுமா" என்று கேட்டாள் சித்தி (சிலர் தோசை குத்துவது என்றால் சிரிப்பார்கள்.நிறைய வீடுகளில் தோசை 'வார்ப்பார்கள்'. தோசை 'குத்தினாலும்' 'வார்த்தாலும்' சாப்பிட்ட பின் வயிற்றுக்குள்ளே தான் போய்விடுகிறது) 

"அப்டியே பண்ணீடுங்கோ" என்றான்   விசு.குளித்துவிட்டு ஒன்பது மணிக்கு தோசை,தொட்டுக்க வேர்கடலை சட்னி சாப்பிட்டார்கள்.

( வேர்கடலை சட்னி மகாத்மியத்தைப்பற்றி தனியாகவே எழுதலாம்.வேறு ஒரு நாள் பார்ப்போம்)

கிட்டத்தட்ட பத்தே கால் மணிக்கு ஆட்டோ கிடைக்க, ஹோட்டல் அஷோகாவை பத்தே முக்காலுக்கு அடைந்தார்கள்.  ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் புரபசரின் ரூம் நம்பரை குறிப்பிட்டு,அவரிடம்  தான் கார்த்திகேயன் வந்திருப்பதாக கூறவேண்டும் என்று கூறினான்.அடுத்து இரண்டுநிமிடத்தில்  ரிசப்ஷன்  பெண்மணி

"சார்.புரபசர் உங்களை அவர் ரூமூக்கு வரச்சொல்கிறார்" என்றாள் . ராகினியும் அழைத்துக்கொண்டு விசு ப்ரபசர் ரூமுக்கு சென்று கதவை தட்டினான்.

"மே.ஐ கம் இன்" என்று கேட்டான். கதவைத்திறந்த ப்ரொபசர் "கார்த்திகேயன் கம் இன் ப்ளீஸ்"என்றார் . ராகினியை காட்டி  விசு" ஷீ  இஸ் மை பெட்டர் ஹாப்" என்று அறிமுகம் செய்தான்."யூ லுக் ப்யூடிஃபுல்" என்றார் அவர் ராகினியைப்பார்த்து.

ராகினி "நமஸ்தே" என்று கைககூப்ப அவரும் திரும்பி  "நமஸ்தே" என்று கை கூப்பினார்.

" ப்ளீஸ் டேக் யுவர் சீட்ஸ்" என்று எதிர்பக்கம் இருந்த சோபாவை காட்டினார்

டெர்மன். இருவரும் அமர்ந்தார்கள்." வாட் வுட் யூ லைக் டு ஹேவ்" என்றார் ப்ரபசர். " எனி ஃப்ரூட் ஜூஸ்" என்றாள்  ராகினி.விசு

"சேம் பார் மீ" என்றான்.பின்பு டெர்மன்  ரூம் சர்வீஸை கூப்பிட்டு 3 ஆப்பிள் ஜூஸ் கொண்டு வரச்சொன்னார். ஜூஸ் வந்தது.எல்லோரும் சாப்பிட்டார்கள். பின்பு டெர்மன் ராகினியிடம் "சோ. லேடி.ஹவ் இஸ் யுவர் மேரீட் லைப்"என்று கேட்டார்.ராகினி வெட்கப்பட்டுக்கொண்டே" பைன்" என்று கூறினாள்.அவர் ராகினியிடம் "கார்த்திகேயனை கணவனாக அடைந்த நீ அதிர்ஷ்டசாலி" என்றார். பின்னர் விசுவை பார்த்து "கார்த்திகேயன் நான் இப்போது உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச போகிறேன். இதை நன்றாக கேட்டுக் கொள்.நான் கூறி முடித்தவுடன் உனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை பற்றி என்னிடம் நீ கேட்கலாம்.பின்பு இதைப் பற்றி நாம் விவாதிக்கலாம்" என்று கூறினார். அவர் என்ன கூறப்போகிறார் என்பதை கேட்க விசுவை விட ராகினிக்கே ஆர்வம் அதிகமானது.

மூன்று தலை முறை-97

பொரபசர் தொடர்ந்தார்.

"வெகு சமீபத்தில் நம்முடைய யுனிவர்சிடியில் ஒரு பெரிய R&D பிளாக் கட்டி இருக்கிறோம். R&D யை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.அதற்கும் என்னையே தலைமை தாங்கச் சொன்னார்கள். என்னால் அதையும் கவனித்துக் கொள்வது இயலாத காரியம்.அப்படி செய்தால் எனது முழு பங்களிப்பையும் புது பதவிக்கு நான் தர முடியாத நிலை ஏற்படும்.எனவே அதற்கு தலைமை தாங்க  நான் உன் பெயரை முன் மொழிந்தேன் .அதை யுனிவர்சிடியும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னுடைய முக்கிய நோக்கம் மாணவர்களை ஆராய்ச்சியில்  ஈடுபடுத்துவது  மட்டுமல்லாமல் நமக்கு அருகில் இருக்கக்கூடிய  தொழிற்சாலைகளுக்கு நம்முடைய R&D  மூலம் புதிய டெக்னாலஜிகளை கொடுத்து    உதவப்போகிறோம்.

In short  இது ஒரு  அகடமிக் அண்ட் இன்டஸ்ட்ரீஸ்  co-operation Venture என  வைத்துக்கொள்ளலாம்"என்று கூறினார்.

"உன்னுடைய சம்பளத்தை பற்றி நீ எதுவும் கவலைப்பட வேண்டாம். நீ எதிர்பார்ப்பதை விட அதிகமாக கிடைக்கும். உங்களுக்கு தங்க வேண்டிய இடத்தையும் யுனிவர்சிடியே  ஏற்பாடு செய்து விடும். என்ன சொல்கிறாய் நீ "என்று கேட்டார்.

பின்னர் டெர்மன் விசுவைப்பார்த்து புன்முறுவலுடன்"உன் சம்பளத்தை நீ தெரிந்து கொள்ள வேண்டாமா" எனக்கேட்டார்.அவர் அவன் பதிலுக்கு காத்திராமல்" உன்னுடைய அகாமடேஷன், ட்ரான்ஸ்போர்ட் முதலியன போக மாதம் 5000 யூ.எஸ். டாலர் சம்பளம் வழங்கப்படும். உன்னுடைய பெர்பார்மென்ஸை பொறுத்து வருடாந்திர இன்கிரிமெண்ட் கிடைக்கும்" என்றார்.

இதைக்கேட்ட ராகினிக்கு மயக்கம் வருவது போல இருந்தது.விசுவின் இப்போதய மாத சம்பளம் ஆயிரம் ரூபாயைக்கூட எட்டவில்லை.பலமடங்கு அதிக சம்பளம் கிடைக்கப்போகிறது.

அதுவும் வீட்டு வாடகை மற்றும் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் போக.ஜாக்பாட் அடித்த மாதிரி இருந்தது.அதிர்ஷ்டம் இப்படியா கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று நினைத்தாள் ராகினி. இவ்வளவு சம்பளம்,வசதிகளை தர வேண்டுமென்றால் அதற்கு தன் கணவன் எந்த அளவுக்கு சிறந்தவனாக,தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைத்த ராகினிக்கு  விசுவின் மேல் கூடுதல் மரியாதை ஏற்பட்டதில் வியப்பில்லை. ஆனால் விசுவின் மனது இதையெல்லாம் ரசிக்கும் நிலைமையில் இல்லை.பெங்களூர் வராமலேயே இருந்திருக்கலாமோ என நினைத்தான் விசு.

No comments:

Post a Comment