மூன்று தலை முறை -88
7 மணி அளவில் வீட்டுக்குள் வந்த மேகி சமயலறையில் மாமியை காணாததால், சுதாகரிடம் "அம்மா எங்கே" என்று கேட்டாள். "அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை. ஜுரம்.ரூமில் படுத்துக் கொண்டிருக்கிறாள்" என்றான் சுதாகர். அறைக்குள் சென்ற மேகி "என்னாயிற்று"என்று மாமியிடம் ஜாடையில் கேட்க மாமி ஜாடையில் தனக்கு ஜுரம் வந்திருப்பதாக கூறினாள்.மேகி சுதாகரிடம் "டாக்டரிடம் அழைத்து கொண்டு போகலாமா" என்று கேட்டாள். சுதாகர்
"அம்மா டாக்டரிடம் வரமாட்டாள்.நீ ஜுரத்துக்கு ஏதாவது மாத்திரையை பக்கத்து மருந்து கடையிலிருந்து வாங்கி கொடு" என்று கூறினான். மெடிக்கல் ஷாப்புக்கு சென்று ஜுர மாத்திரையுடன் திரும்பிய மேகி அதை மாமிக்கு கொடுப்பதற்கு முன்னால் அரிசி கஞ்சி
யை கொஞ்சம் போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். மேகி கொடுத்த கஞ்சியை சாப்பிட மாமிக்கு பிடிக்கவில்லை.வேறு வழியும் தெரியவில்லை.சுதாகர் வேறு ஆபிஸ் போய்விட்டான்.வேறு வழியில்லாமல் கஞ்சியை ஒரு மடக்கு குடித்தாள் மாமி.மாத்திரை வேண்டாம் என மாமி ஜாடை காட்டினாள்.
ராகினிக்கு உடனே போன் செய்த மேகி மாமிக்கு ஜுரம் வந்திருப்பதை கூறி "மாத்திரை வேண்டாம் என்று சொல்கிறாள்.வேறு என்ன செய்யலாம்.உன் மாமியாரை கேட்டு சொல்" என்று கேட்டாள். ஐந்து நிமிடத்தில் திரும்பி போன் செய்த மேகிக்கு ராகினி "நாட்டு மருந்து கடையில் நிலவேம்பு பொடி கிடைக்கும்.அதை வாங்கி வென்னீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, கொஞ்சம் வெல்லம் சேர்த்து அதை இரண்டு வேளை கொடுக்க ஜுரம் சரியாக போய்விடும்" என்று கூறினாள்.பிறகு மாமியை வீட்டில் உள்ளே வைத்து பூட்டி விட்டு, பக்கத்திலிருந்த நாட்டு மருந்து கடைக்கு சென்ற மேகி "நில வேம்பு" என்று ஆங்கிலத்தில் எழுதி அதை கடைக்காரரிடம் காண்பிக்க கடைக்காரர் நிலவேம்பு பொடியை பேப்பரில் கட்டி கொடுத்தார்.அரிகிலிருந்த துணிக்கடைக்கு சென்று காஷ்மீர் ஷால்(சால்வை) ஒன்றையும் வாங்கினாள். பலசரக்கு கடையில் கால் கிலோ வெல்லத்தை வாங்கிக்கொண்டாள் மேகி.நிலவேம்பு பொடியை தண்ணீரில் போட்டு,சூடு பண்ணி, கொதித்தவுடன் இறக்கி, பில்டர் செய்து,வெல்லம் சேர்த்து,கஷாயத்தை மாமியிடம் மதியம் கொடுத்தாள்.மாமி அதை குடுத்த அரை மணிக்கெல்லாம் வேர்த்ததுக்கொட்ட ஆரம்பித்தது. மாமியின் மேல் சால்வையை போர்த்தி விட்டாள்.
மாலை 6 மணிக்கு இன்னுமொரு வேளை கஷாயத்தை கொடுத்தாள் மேகி.
மாலை சுதாகர் வந்தவுடன் அவனுடன் சேர்ந்து சாதம் வடித்து,மிளகு ரசம் வைத்தாள் மேகி.சுட்ட அப்பளத்தை சுதாகர் தயார் செய்தான். மாமி கொஞ்சம் ரசம் சாதம் கரைத்து கொடுக்க, குடித்தாள். வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் மேகி மாமியின் கால்களை பிடித்து விட்டு சென்றாள். மாமிக்கு மேகியின் மேல் கொஞ்சம் கரிசனம் வந்தது. "யார் பெத்த பொண்ணோ.இப்படி நன்றாக கவனித்துக் கொள்றாளே" என்று மனதிற்குள் நினைக்க மேகி மேல் மாமிக்குகொஞ்சம் நல்ல அவிப்பிராயம் வர ஆரம்பித்தது.கல்லும் கனிய ஆரம்பித்திருக்கிறதா? போகப்போக தெரியும்(இந்த பூவின் வாசம் புரியும்!)
.அன்றிரவே மாமிக்கு ஜுரம் நன்றாக இறங்கிய மாதிரி இருந்தது.
No comments:
Post a Comment