86. செவிலி (சிறுகதை சீசன் 4) #ganeshamarkalam (நவராத்திரி கதைகள் 4/9 குஷ்மந்தா)
செப்டெம்பர் 12. அம்மாக்கு பொறந்த நாள். “சின்னப் பையனா இருக்கச்சே உன் பெர்த்டே எப்போ?” “ஞாபகமில்லைடா சுதாகர்.” “அதெப்படி? அப்பா இருக்கச்சே கொண்டாடினதே இல்லையா?”
ஹாஸ்டலில் தங்கி படிக்க ஏற்பாடு செஞ்சுட்டர் அப்பா. அப்போதான் இண்டிபெண்டென்டா வருவேன்னு. அம்மாக்கும் அப்பாவுக்கும் ஏங்கிப் போனது எனக்குத்தான் தெரியும். இருந்தாலும் பல்லைக் கடிச்சிண்டு இருந்துட்டேன்.
ஸ்கூல் ஃபைனல் படிக்கரச்சே “உங்கப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அழைச்சிண்டு போக ஒரு மாமா வந்திருக்கர்.” தகவல் வந்தது. கணேசன் மாமாதான். ஹாஸ்டல் போய் என் திங்க்ஸை பேக் செஞ்சுண்டு ரெடீயா. ஊட்டீலேந்து சென்னை. அப்பா போனப்புரம் காரியங்கள் செய்ய கூட்டிண்டு வந்திருக்கர். ஒருவாரம் படுக்கையில் கிடந்தராம். திரும்ப போர்டிங்க் ஸ்கூல் போய் பரீக்ஷை எழுதிட்டு சென்னைக்கே காலி செஞ்சுண்டு அம்மாகூட இருக்கணும்னு வந்தாச்சு. பச்சையப்பாவில் சேர்த்துட்டேன். அப்போ பிறந்தநா எப்போன்னு கேட்டதுக்கு அப்படி ஒரு பதில். அப்புரம் சொல்ரா.
படிச்சுட்டு இப்போ அப்பாவோட பிஸினெஸ் பாத்துக்கரேன் போட் கிளப்பில் பங்களோ. துணைக்கு நானும் கூட வந்து இருந்துடட்டுமான்னு கணேசன் மாமா கேட்டாராம். அவருக்கு ஒரு பொண். அம்மா ஒத்துக்கலை. நானும் என் பிள்ளையும் கொஞ்சநா சேர்ந்து இருக்கணும்னு சால்ஜாப்பு சொன்னதும் புரிஞ்சிண்டர். வருத்தம்தான்.
வசதியில்லாத குடும்பம். அவர் பொண்னை எனக்கு தர முயற்சி செஞ்சராம். ஒரு காலைப் பொழுதில் அம்மா சொன்னா. “தங்க வச்சா அது நடந்துடும்னு விடலை சுதாகர். கல்பனா உனக்கு தோதுப்பட்டு வரமாட்டா. நான் பாக்கரேன் உனக்கு பொருத்தமா அழகான கிளி ஒண்ணை”. “மூக்கு கூரா சிவப்பா இல்லாம பாத்துக்கோ”. கிண்டலடிச்சுட்டு போயிட்டேன்.
முடிந்த வரை அம்மா பிறந்த நாளை கொண்டாடி விடுவதுன்னு. பிரிஞ்சு 15 வருஷம் இருந்தாச்சு. இப்பா அப்பாவையும் பிரிஞ்சாச்சு. என்ன வாழ்க்கை? பிடிவாதக் காரர். ஆமாம்னு தலையாட்டிட்டா நல்லது, அவர் விருப்பபடி சாதிச்சுண்டுவர். அம்மாவுக்கு என்னால் முடிஞ்ச சந்தோஷங்களை கொடுக்கணும். இந்த 12 செப்டெம்பருக்கு வெளீலே அழைச்சிண்டு போலாம்னு. காரில்.
கோவிலுக்குத்தான் போகப் பிடிக்கும். காஞ்சீவரம் போலாம். “சிதம்பரம் போலாமா?”. “அதுக்கென்னமா, போலாம்”. புதுச்சேரி மணக்குள விநாயகரை பாத்துட்டு ப்ரேக்ஃபாஸ்ட் முடிஞ்சம். ட்ரேஃபிக் அதிகமா இருக்கும், கடலூர் போய் சிதம்பரம் சாலையில் போணம்னு கிளம்பரச்சே “டேய் சுதாகர், உடம்பு ஒரு மாதிரி இருக்குடா”. “
என்னம்மா பண்ரது? பயப்படாம சொல்லு. அதான் நான் இருக்கேனே!” “நெஞ்சைக் கரிச்சிண்டு, ஒரு பக்கமா வலி பரவறது”. “பின் சீட்டில் சாஞ்சு உக்காந்துண்டு மொள்ள மூச்சை இழுத்து விட்டிண்டே வா, டாக்டர்கிட்டே போலாம்.” வண்டியை நேரே ராஜீவ் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருந்துவ மனைக்கு விட்டேன். “இந்திராகாந்தி சிலை இருக்கும், அங்கே வலதுபக்கம் திரும்பினா மிஸ் ஆகாது.” போலீஸ்காரன் வழி சொன்னான். போரத்துக்குள் அம்மாவுக்கு நினைவு போச்சு.
“டயத்துக்கு அழைச்சிண்டு வந்துட்டிங்க, ஸீரியஸ் அட்டேக். நாங்க கவனிச்சுக்கரோம், அட்மிட் பண்ணிடுங்க.” டாக்டர் வந்து பாத்துட்டு இஞ்செக்ஷன் போட்டு மருந்தெல்லாம் எழுதித் தந்து “சித்தே இம்ப்ரூவ்மென்ட் தெரியட்டும். அப்புரம் என்ன பிர்ச்சனைன்னு கண்டுபிடிச்சு ஏங்ஜியோ இல்லை பைபாஸான்னு பாக்கலாம்”. அம்மா சித்தே குணமானதும் சென்னைக்கே போயிடலாம்னு. அங்கே நண்பர்கள், வேணும்னா உறவுகளும். அப்போதான் ஹாஸினியைப் பாத்தேன்.
ஹாஸினி யாரு? எங்கம்மாவுக்கு அஸைன் பண்ணின நர்ஸ். ஃபுல் டைம். கூட இருந்து குணமாகிரவரைக்கும் பாத்துக்க. ஷிஃப்டில் வருவள். தேவைப்பட்டா ரெண்டு ஷிஃப்ட் ஒட்டுக்க பாத்துட்டு போவள். பாலக்காடாம். ஹாஸ்டலில் தங்கிண்டு நர்ஸா வேலை பாத்துண்டு. முறையா பயிற்சியோட 6 வருஷம் தஜுர்பா. சிரிச்ச மூஞ்சி. அம்மாவை பாத்ததும் சிரிப்பு இன்னும் அதிகமாச்சு.
எங்கம்மா சித்தே ஓல்டா தெரிவா. வரிவரியா முகத்தில் சுருக்கம். “உங்க பாட்டியா?” “இல்லை அம்மாதான். நான் மூணாவது குழந்தை. முத ரெண்டும் பொறந்ததும் தவறிப்போச்சு. நானாவது பிழைக்க எத்தனை கோவில் ஏறி இறங்கினாள்னு அவளே நினைவு வந்ததும் சொல்லுவா”.
ஹாஸினி வந்த வேளை அம்மாவுக்கு நினைவு வந்து சாதாரண வார்டுக்கு வந்தாச்சு. 3நா ICU வில் பாத்துட்டு இப்போ வார்டுலேயும் ஹாஸினிதான். நானும் கூடவே இருப்பதை பாத்துட்டு “நீங்க வேலைக்கு ரிஜாயின் செய்யறதுன்னா போலாம், உங்கம்மாவை என் அம்மாவைப் போல் பாத்துப்பேன்.” பிரியமா சொன்னது காதுக்கு ஹிதமா. அம்மாவும் “ஹாஸினி இருக்காடா, நீ சென்னைக்கு போயிட்டு நிலவரம் பாத்துண்டு திரும்பி வா, ரெண்டு நா எடுத்துக்கோ.”.
இவளும் “பெரீய கார்டியாலாஜிஸ்ட் வர 2நா ஆகும். அடுத்தது என்னன்னு அவர் சொல்லணும். அதுவரைக்கும் உங்க ப்ரெசென்ஸ் தேவைப் படாது. பட்டால் சட்டுன்னு காரில் 3 மணிநேரத்தில் வந்துடலாமே!”. கிளம்பி வந்தேன்
விட்டை ஒழுங்கு படுத்தி காவல் இருந்தவனுக்கு வேணும்கிரதை சொல்லித் தந்துட்டு ஆபீஸிலும் ஆக வேண்டியதை செஞ்சுட்டு, ‘வர ஒரு வாரம் ஆகும் தொந்திரவு செய்யப் பிடாது’ன்னு சொல்லிட்டு கிளம்பி புதுச்சேரி வந்தாச்சு.
அதுக்குள்ளே இவா ரெண்டு பேருக்கும் இடையே அப்படி ஒரு அன்னியோன்யம் உருவாகிக் கிடந்ததை புரிஞ்சுக்க முடிந்தது. என்னைப் பத்தியும், குடும்பத்தை பத்தியும் எல்லாத்தையும் ஒண்ணையும் மறைக்காம உளறிக் கொட்டியிருக்கா. கம்ப்ளீட் ரெஸ்டில் இருக்கணும்னு டாக்டர் சொன்னது வாய்க்கு இல்லைன்னு. ஹாஸினியே “இத்தனை பேசின பேஷண்டை பாத்ததில்லை.” கிண்டல் அடிக்க வந்து சேர்ந்த்தேன்.
அம்மா தூங்கரச்சே பக்கத்தில் உக்காந்துண்டு இவள் புஸ்த்தகம் படிக்க. ஹோட்டல்லேந்து நான் வந்ததும் சார்ஜ் தந்துட்டு வீட்டுக்கு போவள். மத்தியானம் ஸ்பெஷலிஸ்ட் வந்து அடுத்ததா என்ன செய்யணும்னு சொல்லுவாராம். “சென்னைக்கு அழைச்சிண்டு போரேன். ட்ரேவல் பண்லாமான்னு கேட்டுட்டு டிஸ்சார்ஜ் வாங்கிண்டு கிளம்பணும். வா கேன்டினில் என்கூட காபி சாப்டூட்டு நீ போலாம்.” அழைச்சிண்டு போயாச்சு.
“நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கலை?” “அப்படி ஒண்ணும் இல்லை. அம்மா தேடிக்கிட்டுத்தான் இருக்கா. மாமா பெண் ஒருத்தி, அம்மாக்கு பிடிக்கலை. முதல்லே அம்மா பூரண குணமாட்டம். அப்புரம்தான் இந்த பேச்செல்லாம்”. “உங்கம்மாவுக்கு உங்களுக்கு பண்ணி வச்சுப் பாக்கணும்னு மனசில் ஒரு அழுத்தம் இருக்கு. புலம்பராங்க.. போர்டிங்க் ஸ்கூல்லேயே இருந்துட்டு இப்போதான் ஒண்ணா வாழரீங்களாம்”.
“இன்னும் என்னெல்லாம் சொன்னா?” “அதெல்லாம் இப்போ எதுக்கு? கைகெட்டும் தூரத்தில் பேச்சுத் துணைக்கு நானிருக்க மனசில் இருப்பதை இறக்கி வைப்பது பேஷன்ட்ஸ் வழக்கம். கேட்டுப்பம், ஆறுதல் சொல்லுவம். சிரிப்பம். சிரிச்சா அவுங்க முகமும் பிரகாசம் ஆகிடும்”.
“உண்மைதான்! உங்க சிரிப்பு அப்படி இருக்கு. இன்னும் எத்தனை நர்ஸஸ் இருக்காங்க பாக்கரேனே! நீங்க தனி”.
“டாக்டருக்கு படிக்கணும்னு. வசதியில்லை. நர்ஸ்தான்னு முடிவு செஞ்சாச்சு. ஒரு பேஷன்டுக்கு நல்ல நர்ஸ் அமைஞ்சிட்டா பாதி குணமானாப்போல். என் பேஷன்ட் யாரையும் நான் கை விட்டதில்லை”. “நீங்க என்ன நினைக்கரேள்? அம்மாவுக்கு ஆபரேஷம் வேணுமா?”
“நான் என்ன சொல்ல? மனுஷங்களுக்கு வர 92% உபாதைகள் வராம தடுக்கப்படக் கூடியவை. சொச்சத்தில் பாதி தானாவே குணமாகும் டைப். ரெம்ப மெடிசின் எடுத்துக்காம, சில விஷயங்களில் கவனமா இருந்தாப் போதும். அதுக்குண்டான ஆட்டத்தை போட்டுட்டு குணமாகிடும். கடைசீ 4%தான் ஆபத்து. படுத்தி எடுக்கும். அதுக்கு குணமே இல்லை. ஆனா இதெல்லாத்துக்கும் மருத்துவம் புகுந்து புறப்பட்டு வணிகத்தை பாத்துக்கராங்க. வந்து 8நா ஆகிறது, அதுக்குள்ளே 2 அ 3 லக்ஷம் வாங்கியிருப்பாங்களே? இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆனா இன்னும் 1 கட்டணும். ஸ்பெஷலிஸ்ட் வந்து பாத்தா நிச்சயம் இன்னும் 20 நாள் தங்கரா மாதிரியும் ஆபரேஷம் பண்ணாம விடமாட்டான். இந்த வயசில் உங்கம்மா ஹார்ட்டில் ட்யூப் விட்டு குடையணுமா? பூஞ்சை உடம்பு. அப்படி செஞ்சாலும் இன்னொரு அட்டேக் வராதுன்னு உத்தரவாதம் இல்லை”.
ஆச்சர்யம். தேர்ந்த நர்ஸ் அப்பட்டமா சொல்ராளே. நல்லவேளை யாரும் கிட்டக்கே இருந்து காதில் வாங்கிக்கலை.
“அப்போ மருத்துவமே பொய்யா?” கிட்டத்தட்ட அப்படித்தான். காயமே பொய். அதுக்கு மருத்துவம் எப்படி மெய்யாகும்?” உடம்பு சரியில்லைன்னா தேவை கவனிப்பு. கேர். உடம்பு தானா குணமாகும் சக்தி பெற்றது, அப்படித்தான் கடவுளின் சிருஷ்டி. மத்த ஜீவராசிகள் எதானும் ஆஸ்பத்ரீன்னு போகுமா? நாமதான் கால்நடை, நாய்க்குட்டி பூனைன்னு படிச்சுட்டு அதுக்கும் மருத்துவம் செய்யன்னு கிளம்பரம். நேத்துகூட ஒரு பெரீய இன்டெர்நேஷனல் பார்மா கம்பேனி முதலாளி லாபம் சம்பாதிப்பதைத்தான் குறிக்கோளா வச்சிருக்கோம், மனிதர்களை குணப்படுத்தும் தொழிலில் இல்லைன்னு அப்பட்டமா சொல்ரார். அவர் கம்பேனி ஷேர் கொஞ்சமா விழுந்துட்டு சர சரன்னு ஏறிவிட்டது”.
“கவனிப்பு, கேர்னா என்ன? நர்ஸ் போட்டுப் பாத்துப்பதா?” “அதைப் பண்ணலாம். ஆனா காசுக்கு பாத்துக்கரவா யாரும் அந்த கேரைத் தந்துட முடியுமான்னு தெரியலை. சிலர் செய்யலாம். செவிலி உத்யோகம் ஒரு தவம். பேஷன்ட் நினைவில்லாம துணியை அசிங்கப்படுத்திட்டு முனகரச்சே உதட்டில் சிரிப்பு தவழுவதை நிறுத்தாமல் சேவை செய்யணும். தன் வலிக்கு கிட்டக்கே வரும் இவளோ காரணம்னு எங்களை திட்டரச்சே, இல்லை மருந்து சாப்பிடரச்சே பிடிவாதம் காட்டரச்சே புன்முருவல் கலையாம அவர்களை வசப்படுத்தி சாப்பிட வைக்கணும். வாயில் போடும் மாத்தரையை விட எங்கள் முகத்தில் தெரியும் சிரிப்பும், உங்களை எனக்கு ரெம்பவும் பிடிக்கும்னு தெரியப்படுத்தும் முகபாவமும்தான் வியாதியை குணப்படுத்தும்னு நான் நம்பரேன்”.
ஹாஸினி வீட்டுக்கு போனா. சீனியர் டாக்டர் வந்து “ஏஞ்சியோ பண்ணிப் பாக்கலாம்!” விளையாட்டுப் போல் சொல்ல, “ரெகமெண்ட் செய்யுங்க நான் சென்னை வாசி, இங்கே தோதுப்படலை”. டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னேன். ஹாஸினி வந்ததும் மூட்டையைக் கட்டிண்டு கிளம்பினோம்.
சென்னையில் அம்மா ஆஸ்பத்ரீக்கு வரமாட்டேன்னுட்டா. ஆனா ஒருமாசம் கழிச்சு ஒருநா “வாடா! ஹாஸினி வீட்டுக்கு போய் அவளை உனக்கு பெண் கேக்கலாம்னு இருக்கேன்”. “என்னம்மா இப்படி திடீர்னு?” “வயசுப் பொருத்தம் நன்னா இருக்குடா. பாலக்காடு வேர, சுத்த பத்தமான குடும்பம். நல்ல குணம். தன்மையா பேசரா. உனக்கு பாந்தமா இருப்பள்”. ஹாஸினியை பாத்துப் பழகிட்டேனோன்னோ! மனசு சஞ்சலம் பட்டது உண்மை.
“நாம பாலக்காடு போரத்துக்குள் அவளண்டை ஒரு வார்த்தை பேசிட்டு அவள் என்ன சொல்ரான்னு கேட்டுண்டு போலாமே”. “அதுவும் சரிதான். போன் போடு!”
டயல் செஞ்சேன். “அம்மா உன்னோட பெசணுமாம்”. போனைத் கொடுத்தேன். அம்மா அவளை விசாரிச்சுட்டு விவரம் சொல்லி “உன் தோப்பனாரை நேரில் பெசலாம்னு இருக்கோம். நீ உன் விருப்பத்தை சொல்லு”. அதுக்கு அவள் ஒண்ணே ஒண்ணுதான் கேட்டாள்.
“நீங்க உங்கள் பிள்ளைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு பெசப் போரீங்களா இல்லை உங்களுக்கு லைஃப் லாங்க் ஒரு நர்ஸ் வேணும்னு விருப்பப்பட்டு இந்த சம்பந்தமான்னு மட்டும் தீர்மானம் செஞ்சுக்கோங்கோ. எனக்கு சுதாகர் பிடிக்கும்தான்”.
அம்மா போனை வச்சுட்டா. தான் எத்தனை பெரீய தப்பு செய்ய இருந்தம்னு அந்தப் பெச்சை அப்புரம் எடுக்கவே இல்லை.
குறிப்பு: குஷ்மந்தான்னா பிரபஞ்சத்தின் கரு, அல்லது காஸ்மிக் முட்டைன்னு. உடனே இது என்ன புது விளக்கமான்னு நினைக்கப் பிடாது. இந்த அம்பாள் சூரியனுக்குள்ளேயே வாசம் செஞ்சுண்டு அதன் அதீத சக்தியை நமக்காக வெளிப்படுத்த உதவும் சக்தி ரூபம்னு வச்சுக்கணும். குஷ்மந்தா இல்லைன்னா சூரியனின் சக்தி இல்லாமப் போயிடும், அதுலேந்து கிடைக்கும் ஒளியும் சூடும் நமக்கு பிராப்தமில்லை. இந்த அம்பாளின் உடல்லேந்து வருவதே சூரிய சக்தி. இந்தப் பிரபஞ்சத்தையே தன் ஒத்தை சிரிப்பால் உண்டாகியவள். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே எல்லா ஜீவன்களையும் சந்தோஷமா வச்சுக்கராளாம். அனுக்ரஹத்தை அள்ளித் தரும் கருணை கொண்டவள்.
No comments:
Post a Comment