🌹🌹🌹 * 108 திவ்யதேசங்கள் - பதிவு 56* 🌹🌹🌹
தன் பக்தனின் ஆயுளை நீட்டிப்பதற்காக பெருமாளே வடக்கு நோக்கித் தலை வைத்து படுத்த அற்புத திவ்யதேசம்.
அப்பேற்பட்ட பரந்தாமனின், வைகுண்டவாசனின் திவ்யதேச தரிசனம் பெறுவோமா!!! வாருங்கள் இறையருளைப் பெறலாம்.
திருப்பரமேச்சுர விண்ணகரம்.
மூலவர்: வைகுந்தநாதன், பரமபதநாதன்
தாயார்: வைகுந்தவல்லி
உற்சவர்: வைகுந்தநாதன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: மேற்கு
விமானம்: முகுந்த விமானம்
தீர்த்தம்: ஐரம்மத தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ பரமபதநாதாய நமஹ.
ஊர்: காஞ்சிபுரம்
🌺🌺 திருப்பரமேச்சுர விண்ணகரம்:-
வைகுந்த வாசனான இறைவன் நாராயணா வைகுண்டத்தில் உள்ளவாறே நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலத்தில் மூன்று நிலைகளையும், மூன்று அடுக்குகளாக அமைந்த இத்திருக்கோவிலில் சேவை சாதிக்கிறார்.
பரமேச்சுர வர்மன் என்ற மன்னனால் அமைகக்கப்பட்ட தலமாதலால், "திருப்பரமேச்சுர விண்ணகரம்" என்பது பெயர்.
மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்த கலைநயம் மிக்க ஆலயம் இதுவாகும்.
🌺🌺 தலவரலாறு :-
ஒருமுறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களும் ஒன்றாக பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு, காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர்.
மூன்று தேவியரையும் அழைத்துச் செல்ல பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர்.
ரிஷிகளின் தவவலிமையால் தேவியர்களை நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர். அவளை கண்ட பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது.
வேடுவ வடிவமெடுத்த மஹாவிஷ்ணு, அக்குழந்தைக்கு "பரமேச்சுர வர்மன்" என பெயரிட்டு வளர்த்தார்.
பிறப்பிலேயே திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக் கொடுத்தார். கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதிகாலமும் நெருங்கிவிட்டது.
அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார். எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு பக்கம் தலையை வைத்து படுத்துக் கொண்டார். பொதுவாக வடக்கே தலையை வைத்து படுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்பர்.
மனிதர்களுக்கே இவ்விதி இருக்கும் போது உலகைக் காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்????
அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும் படி வேண்டினான்.
அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் எமன் விழித்தபோது, தனது பக்தனது ஆயுள் நீட்டினால், தான் எழுந்திருப்பதாகக் கூறினார். பக்தனுக்கு இரங்கும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல் அவனுக்கு தீர்க்காயுள் கொடுத்துச் சென்று விட்டான்.
இதைக் கண்ட பரமேச்சுரன் தந்தையான வேடுவரை யார் எனக் கேட்க, அவர் மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார். மகிழ்ந்த அவன் இவ்விடத்தில் மூன்று கோலங்களையும் ஒவ்வொரு நிலையில் வைத்து மும்மாடக் கோவிலாகக் கட்டினான்.
இப்பரமேச்சுர வர்மன் தான் பல்லவ வம்சத்தின் துவக்கமாக இருந்து ஆட்சி செய்தார் என்று வரலாறு கூறுகின்றனர்.
🌺🌺 மங்களாசாசனம்:-
திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது, "பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே" என அனைத்து பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமையைச் சேர்த்து பாடியுள்ளார்.
பல்லவர்களின் போர்புரியும் திறனை குறிப்பிடும்போது அவர்கள் ஒலிக்கும் பறையானது விண் அதிரும்படி இருக்கும் என குறிப்பிடுகிறார்.
இதனாலேயே இத்தலத்திற்கு "பரமேச்சுர விண்ணகரம்" என பெயர் வந்தது. திவ்யதேசங்களில் மன்னனையும் சேர்த்து இத்தலத்தையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருப்பதால் பல்லவ மன்னனுக்கு விஷ்ணு அருளியதை உறுதிப்படுத்துகிறார்.
🌺🌺 வைகுண்ட காட்சி :-
இத்திருக்கோவில் மூன்று தளங்களைக் கொண்டது. தரை தளத்தில் (அமர்ந்த) வீற்றிருந்த கோலத்திலும், முதல் தளத்தில் சயனக் (கிடந்த) கோலத்திலும், இரண்டாம் தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் காட்சி கொடுக்கிறார்.
தரைத்தலத்தில் உள்ள மூர்த்தியை மட்டும் தினமும் தரிசிக்க முடியும். முதல் தளமானது வைகுண்ட காட்சியாகக் கருதப்படுவதால் மாதந்தோறும் வருகின்ற இரண்டு ஏகாதசி தினங்களில் மட்டும் தரிசிக்க முடியும்.
இரண்டாம் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் சிதைவடைந்ததால், கடந்த 1964 ஆம் ஆண்டிலிருந்து தரிசனம் செய்ய இயலாமல் போனது.
அவற்றை சரி செய்ய வேண்டும் என்பது இவ்வூர் மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பெருமாளின் இந்த திவ்யதேசத்தின் பெருமையைப் படிக்கும் நம் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும்.
🌺🌺 சிறப்புகள்:-
மூன்று தலங்களைக் கொண்டுள்ள திவ்யதேசம்.
கீழ்தளம் - அமர்ந்த கோலம், முதல் தளம் - சயனத் திருக்கோலம், இரண்டாம் தளம் - நின்ற திருக்கோலம்.
படுத்துறங்கும் பெருமாளே வைகுண்ட வாசனாக அருளும் திவ்யதேசம்.
திருமகள் தாயார் வைகுண்ட வல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
திருமங்கையாழ்வார் பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 திருமங்கையாழ்வார் :-
சுவை யூறாலி நாற்றமும்
தோற்றமுமாய் நல்லரன் நான்முகன் நாரண
னுக்கிடந்த தான்கடஞ் சூழ்ந்த
ழகாய கச்சி பல்லவன் வில்லவ னென்று
லகில் பல ராயாப் பல வேந்தர்
வணங்கு கழல் பல்லவன் மல்லையர் கோன்
பணிந்த பரமேச்சுர விண்ணகர மதுவே!!!"
என திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 10 பாசுரம் பாடியருளியுள்ளார்.
🌺🌺 வழித்தடம்:-
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. நடந்து சென்றே இத்திருக்கோவிலை அடையலாம்.
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு வைகுண்டவல்லி தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில் :-
அருள்மிகு விஜயராகவ பெருமாள் திருக்கோவில் - திருப்புட்குழி திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நமா:!!!"
No comments:
Post a Comment