🥗தகவல்📩 களஞ்சியம் 👩🍳
இன்றைய 28-03-2020 சமையல் குறிப்பு!
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
ரசிக்க ருசிக்க! சுவையான தேங்காய், சுரைக்காய் மற்றும் கேரட் தோசை எப்படி செய்வது?
சுவையான சுரைக்காய், கேரட் மற்றும் தேங்காய் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இட்லி அரிசி - 1/2 கிலோ
உளுந்து - 200 கிராம்
சுரைக்காய் - 1/2 கிலோ
காய்ந்த மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
துருவிய தேங்காய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
பொடியாக துருவிய கேரட் துருவல் - 1/2 கப்
செய்முறை:
முதலில் இட்லி அரிசி, உளுந்தை தனி தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு சுரைக்காயைத் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
பிறகு அரிசியுடன் காய்ந்த மிளகாய், உளுந்து சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
பிறகு தோசை மாவுடன் துருவிய சுரைக்காய், உப்பு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை , கேரட் சேர்த்து கலக்கவும்.
பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை வார்த்து திருப்பிப் போட்டு எடுக்கவும்.
பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான சுரைக்காய் தேங்காய் தோசை ரெடி.
பகிர்வு
┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈
No comments:
Post a Comment