ஶ்ரீகாஞ்சி மஹாப் பெரியவா வாக்கு.
ஆதாரம்:
தெய்வத்தின் குரல்.
பாகம்----1,
பக்கம்----256 & 257.
"வருண ஜபம் செய்தார்கள்; மழை பெய்தது" என்று படிக்கிறோம். நம் ஊரிலேயே எப்போதாவது இந்த மாதிரி நேரில் பார்க்கிறோம்.
இன்னோரிடத்தில் வருண ஜபம் பண்ணியும் மழை பெய்யாமல் இருக்கலாம். அதனால், மந்திரத்தையே சக்தி இல்லாதது என்று தள்ளி விடக் கூடாது.
மருந்துகளைச் சாப்பிட்டு உடம்பு சரியானவர்களும் இருக்கிறார்கள்; குணமாகாமல் சாகிறவர்களும் இருக்கிறார்கள். அதனால், மருந்தே தப்பு என்போமோ?
மருந்து பலிக்காவிட்டால் வியாதி முற்றி இருக்கவேண்டும் என்கிறோம்.
அதுபோல் "கர்மா" ரொம்ப பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம்.
இன்னொரு காரணமும் உண்டு."பத்தியம்" தப்பினால் மருந்து பலிக்காது.
அந்தமாதிரி மந்திரசக்தி சித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம்போல் வைத்திருக்கிறது.இந்த நியமங்களில் தப்பு வந்தால், மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது.
வருண ஜபம் பலிக்காத பல இடங்களில் நான் விசாரித்ததில் "அலவண நியமம்" ----அதாவது ஜபம் செய்கிறவர்கள் உப்பே சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிற விதி---சரியாக அனுஷ்டிக்கப்படவில்லை என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.
குறிப்பு :
ஸம்ஸ்க்ருத மொழியில் லவணம் என்றால் உப்பு என்று பொருள்.
அலவணம் என்றால் உப்பு இல்லாமல் என்று பொருள்.
No comments:
Post a Comment