Saturday, March 28, 2020

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் சிறந்த உணவுகள்...

உடல் நலம்....

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் சிறந்த உணவுகள்...

பெற்றோர்கள் குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் சத்துள்ள உணவுகளை வழங்குவது அவசியம்.
7 வயதுவரை உண்ணுவது தான் குழந்தையின் ஆயுசுக்கும் நிற்கும் என்பார்கள்.

அதில் சிலவற்றை பார்ப்போம்:

பழங்கள்:
பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது. பருவகாலத்திட்கு ஏற்றார்போல நம்ம ஊரின் முலாம்பழம், தர்பூசணி, சப்போட்டா, திராட்சை, கொய்யா பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவை சிறந்த பழங்கள் எளிமையாக கிடைக்கும்.

தயிர்:
கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இது குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.

முட்டை:
முட்டையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் விட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே முட்டையை காலை வேளையில் கொடுத்தால் குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.

பசலைக்கீரை: 
இது எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின் ஏ, சி நிறைந்துள்ளது.

முட்டைக்கோஸ்:
குறுக்குவெட்டுத் தோற்றத்தை உடைய காய்கறியான முட்டைகோஸ் செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது குழந்தைகளை நோய் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும்.

முழு தானியங்கள்:
முழு தானியங்களால் ஆன உணவுகளில் ஃபோலிக் அமிலம் இரும்புச்சத்து துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. இது குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

பருப்புகள்:
 நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளது. அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அக்ரூட் பருப்பில் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை குழந்தையின் மூளை செயல்பாடுகள் அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வலுவான அசஸ்த்திவாரத்தில் தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment