எறும்பு புற்றுமண் ஆற்று மண்ணை விட நைசாக இருப்பது ஏன் ?
எறும்பு தன்னால் முடிந்த அளவு சிறுது மணல்களை தலையில் சுமந்து சென்று வீட்டை கட்டுகிறது நமக்கு சிறு துகள் போன்ற மணல் அதற்கு மிகப்பெரிய பாறை போன்றதாகும்.அதனால் மிகவும் நைசாக உள்ள மணலை சுமந்து புற்றை அமைக்கிறது.
பின் ஏன் புற்று இறுக்கமாக உள்ளது என்று கேள்வி வரலாம் அது வேற ஒன்றும் இல்லை நைசாக உள்ள மணல் ஈசியாக நீரை ஏற்றுக்கொள்ளும் அதனால் தான் நாளடைவில் எறும்பு புற்று இருக்கமாகிறது
மற்ற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் இதன் புற்று சற்று வித்தியாசமாக இருக்கும். இதனால் கூழாங்கற்களை சுமந்து சென்று வீட்டைக் கட்ட முடியாது. மழைக் காலம் சமயங்களில் எறும்பு தனது வீட்டை முன்னரே கட்டி வைத்து கொள்கிறது. அதற்கு தேவையான இரையையும் முன்பே சேர்த்து வைத்து கொள்கிறது. எறும்புகள் 15 அடி உயர புற்றுகளைக் கட்டும் திறன் வாய்ந்தவை.
எறும்புக்கு மிகவும் நுன்னியமாக கண்கள் தெரியும்.இது தனது இடையை விட 20 மடங்கு அதிகமான எடை தூக்கும் திறன் உடையது. எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது பழமொழி. அதாவது ஒருக் கல்லில் தொடர்ந்து எறும்புக் கூட்டங்கள் சென்று கொண்டிருந்தால், அவ்வழியில் கல் தேய்ந்து போய்விடும் என்று கூறுவர் . அப்படியிருக்க மனிதனால் முடியாதது என்று உலகில் எதுவும் இல்லை.
சுறுசுறுப்பாக வாழ்வதற்கு எறும்பை ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம்.மிகச்சிறிய உயிரினமான எறும்பிடம் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றனர்.வருங்காலத்திற்கு தேவையான அனைத்தையும் முன்னரே சேர்த்து வைக்கும் மனப்பக்குவம் மற்ற உயிரினங்களை விட எறும்புக்கு அதிகம்.
☘🌿☘🌿☘🌿☘🌿☘🌿☘🌿
No comments:
Post a Comment