Tuesday, March 31, 2020

அவர் ஈஸ்வர அவதாரம்

"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"

( சபரிமலை மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் சொன்ன   
தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் 
ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு)

கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-இன்று வெளிவந்த குமுதம் லைஃப்ஒரு பகுதி.

ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர்.

ஒரு சமயம், மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப்படுவதைக் கண்ணுற்ற பாலு.அதற்காகவே 
சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார்.

எனவே சபரிமலை சென்றுவர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார்.

கேலியான புன்னகையுடன்,

"என்னடா உன் அப்பா,தாத்தா யாராவது சபரிமலைக்குப்
போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ  போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா.

"அவா யாரும் போனதில்லே பெரியவா. பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனைவேண்டிண்டேன்.அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு.

பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம்யோசிப்பது போலிருந்தது - பிறகு சொன்னார்.

"நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம் - நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே.ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக்கட்டிக்கோ. வெறும் கையோட போகாதே. தேங்காயும்,நெய்யும் கொண்டுபோ" என்று அதிசயிக்கத்தக்க
வகையில் ஒரு ஐயப்ப பக்தர் மாலை போட்டுக்கொள்ளும் போதும்,இருமுடி கட்டிக் கொள்ளும்போதும்நடக்கும் சம்பிரதாயங்களை ஸ்ரீமகாபெரியவாளே
அனுக்கிரகித்தார்.

பாலு சபரிமலையை அடைந்து ஐயப்ப தரிசனத்திற்குச்சென்ற போது சன்னதியில் இருந்த மேல் சாந்தி என்னும்அர்ச்சகர் இவரை எந்த ஊர் என்று விசாரித்தார். இவர்தான் காஞ்சி மடத்தில் இருந்து வருவதாகச்சொன்னவுடன், "அங்கே பெரிய திருமேனி எப்படி இருக்கார்?" என்று மகாபெரியவாளைப் பற்றி விசாரித்தார். இவர் பெரியவாளுக்காக வேண்டிக்கொள்ளவே வந்ததாகச்சொன்னார். உடனே மேல் சாந்தி சொன்னார்.

"அந்தப் பெரிய திருமேனியாலேதான் இப்போ வெள்ளமோ,
பூகம்பமோ இல்லாமே நாடே சுபீட்சமா இருக்கு.என்னோட 24 நமஸ்காரங்களைச் சொல்லு. நீ அந்தத்  திருமேனியை விடாதே. அந்த சன்னிதானத்திலேயே இரு.அவர் ஈஸ்வரன்அவதாரம். அவரை விட்டுப் போகாதே. போகமாட்டேன்னு சத்யம் செய்து கொடு. அப்பத்தான் பிரசாதம் கொடுத்துஅனுப்புவேன்."

மகாபெரியவாளின் உடல் உபாதைக்காக மனசு 
விசாரத்தோடு சன்னதிக்கு வந்த ஸ்ரீமடம் பாலு, அந்த ஐயப்பன் சன்னதியில் இருந்தே,"அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே"என்னும் தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் அவருக்கு உணர்ச்சிப் பெருக்கினால் கண்களிலிருந்து நீர் பெருகியது.

மஹா பெரியவா அற்புதங்கள் - 22

மஹா பெரியவா அற்புதங்கள் - 22

பெரியவா அனுக்ரஹம் - ''சார்  போஸ்ட்''.

படுத்துக்கொண்டிருந்த  தாத்தா எழுந்து போய்  கதவைத் திறந்தார். வெயில் தஹித்துக்கொண்டிருக்கிறது.  ஜூன் முடியும் நேரத்திலும்  கோடைவெயில் போல் கொளுத்தியது. டொப் என்று எங்கேயோ ஒரு ட்ரான்ஸ்பார்மர் வெடித்து நெருப்புபொறி புகை. அதைத் தொடர்ந்து  மின்சாரம் செத்து விட்டது. வெயிலில் மின் விசிறியும் இல்லை. என்றும் உதவும் பனை ஓலை விசிறி பக்கத்திலேயே வைத்திருந்தார் தாத்தா. அதால்  காற்று வீசிக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தார்.  பனை ஓலை விசிறி அனலைத்தான் அவர் மேல் வீசியது. அப்போது தான் வாசலில் ''சார்  போஸ்ட்.''

அந்த பேட்டை  போஸ்ட்மேன் ராமானுஜம்  அடுத்த மாதம் ரிடையர்  ஆகவேண்டும்.  மூச்சைப் பிடித்துக்கொண்டு  தபால் பட்டுவாடா பண்ணிக்கொண்டிருந்தார்.  எந்த கெட்ட பெயர், கம்ப்ளைன்ட் இல்லாமல்  வேலை  ஒய்வு பெற முயற்சிப்பவர்.  வெயில் அவரைப் பிழிந்தது அவரது காகி சட்டையின்  வியர்வையில்  தெரிந்தது. வழுக்கை மண்டை வியர்வையில் பளபளத்தது.

'வாங்கோ ராமானுஜம்.  வேலை முடிஞ்சுடுத்தா?''
.  
''இல்லே மாமா. இன்னும் 17 இடம் போகவேண்டும். எப்படியும்  4.30ஆகிவிடும்.  அப்பறம் ஆபீஸ்  போய்  கணக்கு ஒபாடைத்துவிட்டு  வீடு போக  6 மணி  ஆயிடுறது. பல்லைக் கடிச்சிண்டு  இன்னும் ஒரு திருப்பாவை காலம்.  (முப்பது நாள் என்கிறார்) ஒட்டிட்டா, அப்புறம் இந்த  வெயிலில் சுத்தல் கிடையாது.  ஆனால்  வரும்படிக்கு எதாவது  வழி பண்ணிக்கணும். பெருமாள் என்ன நினைச்சுண்டிருக்காரோ. எப்படி படி அளப்பாரோ தெரியல. பெரியவா  அனுக்ரஹம் இருந்தா கடைசிகாலமாவது  கொஞ்சம் சுகமா  தள்ளணும் என்று  அபிலாஷை''
.
''ஒரு அரைமணி உக்காந்துட்டு போங்கோ.  மோர்  தரேன். இருங்கோ உச்சி படைபடைக்கிற வெயிலில் வந்திருக்கிறேள்''

ஒரு லோட்டா நீர் மோர் சில்லுன்னு குடித்த ராமானுஜம் ''வயத்துக்கு குளிர்ச்சியா இருந்துது மாமா. மனசுக்கு  குளிர்ச்சியா  பெரியவா பத்தி ஒரு விஷயம் சொல்லுங்கோ கேட்டுட்டு தெம்பா  வேலையை முடிக்கிறேன்.''

''சொல்றேனே.  அதைவிட  வேறென்ன  பாக்கியம் எனக்கு.''

பெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது! கண் பார்வை மங்கல். உச்சி வெயிலில் தண்ணி லாரி கூட  மேலே ஏற  வரும்போது தான் சற்று நிழல் மாதிரி  புகைமண்டலமா தெரியும்.  அவருக்கு  ஒரு ஏக்கம். ரொம்ப நாளா ஒரு ஆசையும் கூட.  காஞ்சிபுரம்  வந்தபோது ஒரு தடவை பெரியவா தரிசனத்துக்கு மணிக்கணக்கா காத்திருந்து பெரியவா கண்லேயும்  பட்டுட்டார்.  அருகே சென்று  நின்று  அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம்.   அவரது  கண்பார்வை குறை,  பக்கத்துல இருக்கிறவா சொல்றது அவருக்கு கேக்கலை என்று எல்லாம்  பெரியவா நொடியிலே தெரிஞ்சுண்டுட்டா. ''

'என்ன?'' என்று  ஜாடையா கேட்டா பெரியவா. 

"பெரியவா...எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை,பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத் தேத்திக்கணும்னு ஒரு ஆசை....ஆனா,என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்? பெரியவாதான் எனக்கு கதி"

அப்போது பெரியவாளை சுற்றி சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களை  பார்த்துவிட்டு 

"இவரோ ராமாயண, மஹாபாரதம்,புராணம் எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்....கண் பார்வை செரியில்லே! என்ன பண்ணலாம்?" 

சர்வஞத்வம் என்பதே,  தனக்கு எல்லாம் தெரிந்தும், அதை லக்ஷியம் செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்வம் குடுப்பதுதான். இல்லையா?

பண்டிதர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாளே சொன்னார்......

"நைமிசாரண்யம்ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு தெரியுமோ?"....

"தெரியும்"

"அங்க என்ன விசேஷம்?"

"அங்கதான் ரிஷிகள்ளாம் புராணங்கள் கேட்டா......"

"புராணங்களை எழுதினது யாரு?"

"வ்யாஸர்...."

"வ்யாஸாச்சார்யாள் புராணங்கள் எழுதின எடம்ன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. "வ்யாஸகத்தி" ன்னு பேரு தெரியுமோ?''."
பண்டிதர்களுக்கோ ஆச்சர்யம்! அவர்களுக்கு இது புது விஷயம் கூட.  . நைமிசாரண்யம் போய்விட்டு வந்தவர்களுக்கு கூட இந்த இடம் பற்றி தெரியலை. ஆனால் பெரியவாளுக்கு நுண்ணிய விஷயங்கள் கூட  திருஷ்டாந்தம். .
அவர் அருகில்  இருந்த ஒருவரை அழைத்து  அந்த  கண் தெரியாத, காதுகேளாத பக்தரிடம் உரக்க சொல்ல சொன்னார். 

அவரும் உரக்க அன்பரின் செவிட்டு காதில் "பெரியவா  உங்களை குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி,கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும்'' அப்படின்னு உங்களுக்கு சொல்றார்.

அவரும் புரிந்துகொண்டு தலையாட்டினார். நைமிசாரண்யம் சென்றார்  கொஞ்சம் கொஞ்சமாக  காது கேட்க ஆரம்பித்தது. கண்ணும் கண்ணாடி போட்டுக்கொண்டு புஸ்தகம்  படிக்கும் அளவுக்கு  அபிவிருத்தி  ஆனது என்று பின்னாலே எப்பவோ பெரியவா கிட்டே வந்து சொன்னாராம்.

ராமனுஜம் ''சார், பெரியவா, பெரியவா தான்'' கலியுகத்தில் கண் கண்ட தெய்வமா இருந்தவா'' 

இதைக் கேளுங்கோ ராமானுஜம்.

''வடக்கே ராஜஸ்தான்லே எங்கேயோ  வேலையா இருந்த ஒருத்தருக்கு காதில்  எப்பவும்  ஏதோ  யாரோ  பேசறா மாதிரி  சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால், அதுவும் அந்த குரல்  ஆஞ்சநேயர் பேசறா மாதிரி தோணினதாலே நிறைய பேர்  அவரிடம் வந்து  குறி கேட்டனர்.  அவரும்  தனக்கு தோணினதை, அதாவது ஆஞ்சநேயர் என்ன சொல்கிறார்  என்பதை சொல்லி விஷயம்  எங்கும் பரவ ஆரம்பித்தது.  அவருக்கு  நேரம் இல்லாமல் போய் விட்டது. 

உத்தியோகத்துக்கே சரிவர போகமுடியாமல் போய்விட்டது. ஆபிசில் அவருக்கு பிரச்சினை இதால்.  இத்தனைக்கும் அவர்  இலவசமாக  தான் குறி சொல்லி வந்தார்.  கஷ்டத்தை யாரிடம் சொல்வது? மனதில் கவலை  அதிகரிக்க, யாரோ சொல்லி  அவர்  காஞ்சிபுரத்தில்பெரியவா கிட்டே இது பத்தி சொல்லிவிட்டு அவரை நமஸ்காரம் பண்ணலாம்  என்று  வந்தார்..

அவர் வந்தபோது  நிறைய பேர் பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள்.  ஓரத்தில்  வெகுநேரம்  நின்றுகொண்டிருந்தவரை பெரியவா  அருகில் வா என்று கையால்  ஜாடை காட்டினார். 

''எதுக்கு  ரொம்பா நாழியா  நின்னுண்டே இருக்கே?'' 

 “வடக்கே ராஜஸ்தான்லே  வேலையா இருக்கேன்.  அங்கே இருக்க பிடிக்கவில்லை. பெரியவா அனுக்ரஹத்தாலே,மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கணும்.”

“எங்கிட்ட  ஏன் இதை  சொல்றே ? உனக்குத்தான் ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமா இருக்கே … ஹனுமான் கிட்டேயே நீ பிராத்தனை பண்ணிக்கோயேன்.”

அந்த பக்தர் ஆடிப்போய் விட்டார். ''அபசாரம் பெரியவா. ஆஞ்சநேயர் பேசுகிறார் என்பது நானாகச் சொன்னதுதான். என்னமோ எனக்கு அப்படி தோணித்து. ஒரு வேளை எதாவது துர்தேவதையோ கூட  இருக்குமோ என்று கவலையா இருக்கு. ஒண்ணுமே தெரியவில்லை. என்னைத் தூங்கவிடமாட்டேன் என்கிறது..  அது சொல்கிற பதில் சிலபேர்களுக்குப் பலித்துவிடுவதால் எல்லோரும் நம்புகிறார்கள். எனக்குத்தான் உள்ளூர அது ஆஞ்சநேயரா இல்லையா என்று  தெரிஞ்சுக்கணும்னு  தோணித்து.

பெரியவா கிட்ட இதை சொல்லிட்டு என் கஷ்டத்தைப் போக்கணும்னு  வேண்டிக்கதான்  காத்திண்டிருகேன்.''
“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. 

கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “பத்து நாள்கள் கழித்து மகிழ்ச்சியோடு வந்து பெரியவாளை  தரிசனம் செய்தார் அன்பர்.

“என்ன….ஆஞ்சநேய ஸ்வாமி,  இன்னமும்  காதுக்குள்ளே தான்  இருக்காரா  இல்லை  ராமசேவைக்குப் போயிட்டாரா? ” என்று கேட்டார் பெரியவா தனக்கே உரிய  ஒரு க்ரிஷ்ணத்தனமான புன்னகையோடு.   

அன்பரும்  ''பெரியவா சொன்னபடி  ராம சேவைக்கு  
தான்  போயிருக்கணும்.'' என்றார் சிரித்துக்கொண்டே.''

பிரமாதம்  மாமா.  இதுக்கு தான்  உங்க கிட்டே  வரது.  

நானும்  என்  பெருமாள் எனக்கிட்ட  சேவைக்கு போறேன். போஸ்ட்மேன்  ராமானுஜம்  சைக்கிளில்  தாவி ஏறினார்  புதுத் தெம்போடு... 

ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!

அன்பு நண்பர்களே,

அனைவரும் நம்முடைய தெய்வீகம் பேஜை லைக் செய்து உங்களுடைய  நண்பர்களுக்கும் ஷேர் செய்து
ஸ்ரீ மஹா பெரியவாளின் அருளை 
பெற வேண்டுகிறோம்..

நீங்கள் செய்யும் லைக் மற்றும் ஷேர் எங்களை மென்மேலும் புதிய பகுதிகளை / கட்டுரைகள் போட ஊக்குவிக்க உதவும்..

மாலை வணக்கம் நண்பர்களே !!

என்றும் அன்புடன் !!
தெய்வீகம் ஸ்ரீனிவாசன் !!
தெய்வீகம் ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!

மஹா பெரியவா அற்புதங்கள் - 23

மஹா பெரியவா அற்புதங்கள் - 23

 சொத்து விஷயம் !!
                                                  
''ஸார்,   கையில்  என்ன  ஏதோ  சீரியசாக  படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?''  என்று  தெருகோடி  குப்பு ராவ்  கேட்டபோது  தாத்தா  வாசலில் திண்ணையில்  உட்கார்ந்து  ஒரு  பழைய  டயரியை  புரட்டிக்கொண்டிருந்தார்.  

''அடடா  குப்பு  ராவா, வாருங்கள், வாருங்கள்  சௌக்கியமா.  ரொம்ப நாளாச்சே  பார்த்து. ''

'மண்ணச்ச நல்லூரிலே  ஒரு  பிதுரார்ஜித  வீட்டுலே  கொஞ்சம்  ரிப்பேர் பண்ணிட்டு  ஒரு மாசம்  இருந்தேன்.  ரெண்டு நாளாச்சு வந்து. சரி  உங்களைப்  பார்த்து  பேசி, இல்லை  இல்லை,  நீங்க  பேசறதைக்  கேட்போமே  என்று  வந்தேன். ''

நீங்க  ஏதோ முக்யமா  படிச்சிண்டிருக்கிரீர்கள் போல  இருக்கு..  இரு  இழுத்தார்  குப்பு  ராவ்.

''அதெல்லாம்  ஒண்ணுமில்லே.  எனக்கு  இந்த  மஹா  பெரியவா  பைத்தியம்  உண்டு.  ஏதாவது  அவரைப்பத்தி  படிச்சதே எழுதி வைச்சிண்டு  அடிக்கடி  பாத்துண்டே  இருப்பேன்.  அதுலே  ஒன்னு  இது.  ''  

''ஓஹோ  சௌகரியமாகவே  போச்சு.  எனக்கும்  அவரைப்பத்தின  விஷயம்  கேக்கப் பிடிக்குமே.  எங்கே  சொல்லுங்கோ ''

தொண்டையைக்  கனைத்துக்கொண்டு  தாத்தா  சொன்ன  விவரங்கள்  எப்பவோ  அம்ருத வர்ஷினியில்  சில  வருஷங்களுக்கு  முன்பு  யாரோ  ஒரு மகானுபாவன்  
ஸ்ரீ  S.   ராமநாதன்  என்பவர்  அளித்த  தகவல்  அது...  அங்கும்  இங்கும்  கொஞ்சம்  செப்பனிட்டு  சுருக்கி   அளிக்கிறேன்.;;

மகா  பெரியவாளை   தரிசனம் செய்ய  சேலத்தில்  வசித்த  ஒரு வக்கீல் வக்கீல் ராமசாமி ஐயரும்,அவரது மனைவியும்  வந்தார்கள். 

பெரியவா அருகில்  நின்று  தரிசனம் பண்ணப்  போனபோது  பெரியவா  அக்ஷதை கொடுத்தார் .  மேல் துண்டை  சர்வ ஜாக்ரதையாக  விரித்து குனிந்து  அக்ஷதை  பெற  முயன்றபோது   இவருக்கு மட்டும்  ஏனோ  அக்ஷதை  மேல் துண்டில்  விழவில்லை.  கீழே  மணலில் விழுந்தது.  அதை  ஜாக்ரதையாக மணலிலிருந்து பிரித்து  சேகரித்து, கண்களில் ஒற்றிக் கொண்டு தங்களது மேல்வேஷ்டி மற்றும் புடவைத் தலைப்பில் சர்வ ஜாக்கிரதையாக முடிந்து வைத்துக் கொண்டனர் வக்கீல்  தம்பதிகள்.  

 எல்லோருக்கும் அவரவர் மேல்வஸ்திரத்திலோ,புடவைத் தலைப்பிலோ விழுமாறு அட்சதையைப் போட்ட மகா பெரியவா, தனக்கு மட்டும் மேல்வஸ்திரத்தில் போடாமல் ஏன் தரையில் போட்டார் என்று மருகிப் போனார் ராமசாமி ஐயர். எவ்வளவு முயன்றும்,யோசித்தும் இதற்கான விடை அவருக்குக் கிடைக்கவில்லை.

சேலம் திரும்புவதற்கு ராமசாமி ஐயருக்கு மகா பெரியவா உத்தரவு கொடுத்த பிறகு,வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து மனைவியுடன் வண்டியில் புறப்பட்டார்.சுகமான காற்று உடலை வருடிக் கொண்டிருந்தாலும், ராமசாமி ஐயரின் மனம், மணலில் போட்ட அட்சதையிலேயே இருந்தது. ஆனால், சேலத்துக்கு வந்ததும் இந்த  சம்பவம்  அவரது நினைவில் இருந்து விடுபட்டது. காரணம் - வழக்கமான அவரது வக்கீல் பணிகள். இயல்பு வேலைகளில் பிஸியானார் ராமசாமி ஐயர். 

வெங்கடாத்திரி அகரத்தில் இருந்து சேலத்துக்கு வந்த இரண்டாம் நாள் மதியம்... அன்று ஏதோ முக்கிய பணிக்காக வீட்டில் இருந்த ராமசாமி ஐயருக்கு, கனமான பதிவுத் தபால் ஒன்று வந்தது. அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார். அதில், அவரது மாமனாரின் பெயரும் விலாசமும் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒரு இன்லேண்ட் கடிதம் எழுதி, சம்பிரதாயத்துக்கு விசாரிப்பவர், பதிவுத் தபாலில் என்ன அனுப்பி இருப்பார் என்கிற ஆவலுடன், மனைவியையும் உடன் வைத்துக் கொண்டு பிரித்தார். உள்ளே - ரெஜிஸ்திரார் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம் ஒன்று இருந்தது. 

ஒரு கணம் குழம்பியவர்,பத்திரத்தில் உள்ள வாசகங்களை முழுக்கப் படித்து விட்டுப் பிரமித்துப் போனார். பத்திரத்துடன் இருந்த ஒரு கடிதத்தில், ராமசாமியின் மாமனார் தன் கைப்பட எழுதி இருந்தார்: 

‘வக்கீல் தொழிலில் சிறந்து விளங்கினாலும், சொந்தமாக நில புலன் எதுவும் இல்லாமல் இருந்து வரும் உங்களுக்கு - உங்கள் பெயரிலேயே ஏதாவது நிலம் எழுதி வைக்கலாம் என்று திடீரெனத் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், இத்துடன் இணைத்திருக்கும் பத்திரம். தங்கள் பெயருக்குப் பதிவு செய்து, சில ஏக்கர் நன்செய் நிலங்களை எழுதி வைத்திருக்கிறேன். இறைவனின் அருளுடனும், தாங்கள் வணங்கும் மகா பெரியவா ஆசியுடனும் இதை நல்லபடியாக வைத்துக் கொண்டு சுபிட்சமாக வாழுங்கள்.’ 

ராமசாமி ஐயருக்கும் அவரது மனைவிக்கும் ஏக சந்தோஷம்.   இருக்காதா பின்னே!

எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி ஒரு சொத்து - அதுவும் நல்ல நன்செய் நிலம் - தானாகக் கைக்கு வந்து சேர்ந்தால், மனம் மகிழ்ச்சியில் துள்ளாதா? பரவசப்பட்டுப் போனார்கள் இருவரும். மாமனாரிடம் இருந்து தானமாக வந்த நில புலன்களில் ஏற்கெனவே பயிர்கள் நன்றாக விளைந்து கொண்டிருந்தன. மகசூலும் நன்றாக இருந்தது. அதனால், இதைப் பராமரிப்பதில் பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை ராமசாமி ஐயருக்கு. 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் போய் நல்ல முறையில் பார்த்து வந்து கொண்டிருந்தார்.  

நில புலன்கள் சேர்ந்தால் ஒருவர்  பெரிய   நிலச் சுவான்தார்தானே! இப்படி ஒரு நிலச் சுவான்தார் ஆன பிறகு, ‘இந்த நல்ல செய்தியை மகா பெரியவாளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.’ என்று எண்ணினார் ராமசாமி ஐயர்.

ஒரு நாள் காஞ்சிக்குப் போய் அவரைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார்.அந்த நாளும் கூடிய விரைவிலேயே வாய்த்தது. தனது நிலத்தில் இருந்து முதன் முதலாக அறுவடை ஆன நெல்லில் இருந்து,  அரிசி அரைத்துக் கொண்டு,அந்த அரிசி மூட்டைகளுடன் காஞ்சிபுரம் மடத்துக்கு வந்தார் ராமசாமி ஐயர்.

அந்த மூட்டைகளுள் ஒன்றில் இருந்து சில அரிசி மணிகளை எடுத்து, தன் மேல்துண்டில் முடிந்து வைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் மகா பெரியவா முன்னால் போய் நின்றார். உடன், அவரது மனைவியும் இருந்தார்.

 “வாப்பா ராமசாமி... சேலத்துலேர்ந்து வர்றியா? இல்லே உன் வயல்லேர்ந்து நேரா இங்கே வர்றியா?” -

மகா பெரியவா கேட்டதும், ராமசாமி ஐயர் வாயடைத்துப் போனார். ஏதும் பேசவில்லை. மகா பெரியவாளே தொடர்ந்தார்:

“இப்பல்லாம் உன் நிலத்துல விளைஞ்ச அரிசியைத்தான் சமைச்சு சாப்பிடுறாயோ? ” மகா பெரியவா திருவாய் மலர்ந்தருளிய மறுகணம் விதிர்விதிர்த்துப் போனார் ராமசாமி ஐயர். 

சட்டென்று நிதானத்துக்கு வந்து,“ஆமா பெரியவா.வெங்கடாத்திரி அகரத்துக்கு வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு ஊருக்குப் போன உடனே,என் மாமனார்கிட்டேர்ந்து பத்திரம் வந்தது. நிலமே இல்லாமல் இருந்த எனக்கு, அவராவே சில ஏக்கர்களை எழுதி சாசனம் பண்ணி, தபால்ல அனுச்சிருந்தார். அதான் பெரியவாளைப் பாத்துச் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.முதல் விளைச்சல்ல வந்த சில அரிசி மூட்டைகளையும் மடத்துக்குக் காணிக்கையா கொண்டு வந்திருக்கேன்.” 

“எல்லாம் சரிதான். அன்னிக்கு உன் மேல்வஸ்திரத்துல போட வேண்டிய அட்சதையை நிலத்துல போட்டபோது குனிஞ்சு எடுக்கறப்ப, அவ்வளவு வருத்தப்பட்டியே ராமசாமி... இன்னிக்கு அதே மாதிரிதானே, இந்த அரிசியைக் கொண்டு வர்றதுக்கும் குனிஞ்சு நிமிர்ந்திருக்கே! 

உன் சொந்த நிலத்துல குனிஞ்சு, கதிர் அறுத்த நெல்லை அரிசி ஆக்கி, உன் மேல்வஸ்திரத்துல முடிஞ்சு வெச்சுண்டு இப்ப என்னைப் பாக்க வந்திருக்கே?! இல்லியா?” என்று சொல்லி விட்டு,  பெரியவா சிரித்தபோது, ராமசாமியின் கண்களில் இருந்து பொலபொலவென்று நீர் சுரந்தது. 

மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை உணர்ந்து மெய் சிலிர்த்தார். பெரியவாளின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு அவரது மனைவிக்குப் பேச்சே எழவில்லை. மேல்வஸ்திரத்தை எடுத்துப் பிரித்து, அதில் முடிந்து வைத்திருந்த அரிசியைக் கையில் திரட்டி, மகா பெரியவாளின் முன்னால் இருந்த ஒரு பித்தளைத் தட்டில் சமர்ப்பித்தார் ராமசாமி. பிறகு, அவரது திருப்பாதங்களுக்குப் பெரிய நமஸ்காரம் செய்தார். 

“ஆமா பெரியவா... அன்னிக்கு நீங்க பண்ண அனுக்ரஹத்தாலதான் எனக்கு இன்னிக்கு இப்படி ஒரு சொத்து கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே நிலம் உனக்குக் கிடைக்கப் போறதுங்கறதை சொல்லாம சொன்னேள்! அட்சதையை நிலத்துல போட்டேள். இந்த மூளைக்கு அப்ப இது எட்டலை. உங்களோட கருணைக்கும், தீட்சண்யத்துக்கும் அளவேது பெரியவா” என்று சொல்லி, முகத்தை மூடிக் கொண்டு தேம்பலானார். 

இதை அடுத்து, அந்தப் பரப்பிரம்மம், தியானத்தில் மூழ்கியது.‘சொந்தமாக நில புலன் உனக்குக் கிடைக்கும்’ என்பதை தீர்க்க தரிசனமாக ராமசாமி ஐயருக்கு உணர்த்த விரும்பிய மகா பெரியவா, வஸ்திரத்தில் போட வேண்டிய அட்சதையைத் தரையில் போட்டதன் தாத்பர்யம் அவரைத் தவிர வேறு யாரால்தான் புரிந்து கொள்ள முடியும்?

ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!

அன்பு நண்பர்களே,

அனைவரும் நம்முடைய தெய்வீகம் பேஜை லைக் செய்து உங்களுடைய  நண்பர்களுக்கும் ஷேர் செய்து
ஸ்ரீ மஹா பெரியவாளின் அருளை 
பெற வேண்டுகிறோம்..

நீங்கள் செய்யும் லைக் மற்றும் ஷேர் எங்களை மென்மேலும் புதிய பகுதிகளை / கட்டுரைகள் போட ஊக்குவிக்க உதவும்..

மாலை வணக்கம் நண்பர்களே !!

என்றும் அன்புடன் !!
தெய்வீகம் ஸ்ரீனிவாசன் !!
தெய்வீகம் ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!

யானை கவுணி

70 & 80களில் வடசென்னையில் ( யானை கவுணி ) பிறந்து வசித்த ஒரு சாமான்ய பிராமணனின் பதிவு.

ஒரு காலத்தில் , யானை கவுணியில் தான் , அநேக பிராமணர்கள் வசித்தனர். இவர்கள் பெரும்பாலும் , ஆற்காடு , ஆரணி , வந்தவாசி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் . கொச்சையான கிராமிய தமிழுக்கு சொந்தக்காரர்கள் . கரிய நிறங்கொண்டவரகளாக ( பிராமணரா என்று யூகிக்கும் வகையில்) இருப்பினும், தீர்க்கமான கருட மூக்கு கொண்டவர்கள்.

அப்போதெல்லாம் அனுமாருக்கு சாத்தப்படும் வெங்காய நிறத்தில் ஶ்ரீசுர்ணம் தான் இட்டுக் கொள்வார்கள் .

ஒரு பக்கம் கோமுட்டிகளும் , இன்னொரு பக்கம் செட்டியார்களும் , மறுபக்கம் முதலியார்களும் வாழ்ந்த இடம். கணிசமாக மார்வாரிகளும் இருந்தனர்.

உலகப்புகழ் பெற்ற wall tax roadல் திருப்பதி குடை அழகு. 

நாயுடு சமூகத்தினரின் , ஆத்மார்த்த பெருமாள் பஜனை, நம்முடலில் புது ரத்தம் பாய்ச்சும்.

தமிழ் மொழியில் “ ல ,ள , ன , ண ,ழ வித்தியாசத்தைக் காதுக் கொடுத்துக் கேட்கலாம் .

பைராகி மடம் கோயில் mini திருப்பதி . வைகுண்ட ஏகாதசி யன்று , மார்வாடி உபயத்தில் , நாட்டுச் சர்க்கரை . அது தேவாமிருதம். 

விடிய விடிய பரம்பத விளையாட்டுக்கள் தான்.

பிரம்மோற்சவம் நடக்கும் தருவாயில் , band வாத்தியத்தோடு, clarinet & saxophone வாசிப்பு நாடி நரம்புகளை என்னமோ செய்யும். 

மூங்கிபாய் school தான் , மேல்தட்டு பெண்கள் படிக்கும் பள்ளி.  Hindu theological ஆண்களுக்கான பள்ளி. GMTTV முதலியார்கள் பரவலாக படித்தார்கள். ரிக்ஷாவில் செல்பவர்கள் மார்வாரிகள் மற்றும் மேல் தட்டு மக்கள்.  MINT STREETல் உள்ள  டாக்டர். P T. ராமலிங்கம் ஒரு INJECTION போட்டா கொரானாவே காலியாகும் அவ்வளவு ராசியான DR. சென்னை தமிழ் அழகு. " நீ வா சார்" என்று ரிக்க்ஷா வாலா பேசுவது, ஜெல்லாஸ்பத்திரி என்று GHஐ சொல்வது, பால் மாறாம, ஜல்ப்பு ( ஜலதோஷம்), பழுப்பு ( pipe), இட்னு, கவுச்சி, குந்திக்குனு,நாஸ்தா, நோவு இப்படி தமிழ் அழகு. 

பிராமணர்கள் திராபை, ஜபர்தஸ்து என்கிற வார்த்தைகளை பிரோயிகித்தனர். ஆண்டாள் பாசுரம் அநேகருக்கு அத்துப்படி.  அருணாசலேஸ்வரர் கோயில் தான் எங்களுக்கு திருவண்ணாமலை. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மகாசிவராத்திரி எல்லாம் யாருக்கும் தெரியாது. செவ்வாய் வெள்ளி மட்டும் காளிகாம்பாள் கோயிலில் கூட்டம். 

இப்போதெல்லாம் திருவேற்காடு எங்களுக்கு தூரதேசம், " திருவேற்காடா போயாந்தே" எம்மாந் தொலவுன்னு வெகுளியாக சென்னை தமிழில் கேட்பது கொள்ளை அழகு. டவ்டனை, டfton என்பதும், புரசைவாக்கத்தை, பொரஷவாக்கம் என்பதும், விருகம்பாக்கத்தை  விரியம்பாக்கம் என்பதும், fanஐத் துடை என்பதற்கு fanஐத் தொடி என்பதும், குன்சா என்று சொல்வதும் பேஜார், பேமானி, கசுமாலம் என்கிற வார்த்தைகள் எங்கே? 

சென்ட்ரல் ரெயில் நிலையம், எங்களுக்கே சொந்தமானது போல் ஒரு அந்நியோநியம். அரிசி போடுவதற்கு, நெல்லூரிலிருந்து, நடிகர் ரங்காராவ் போல கம்பீரமாய் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு 6 அடி மனிதர் வீட்டிற்கே வருவார். 

பக்கத்தாத்து வக்கீல் பாட்டி தான், நம் பிள்ளைகளுக்கு பெயரே சூட்டுவார். மைதிலி, இப்பத்தான்டி, நான் ஸ்ரீவில்லிபுத்தூர் போய் ஆண்டாளை சேவிச்சிட்டு வரேன். உன் பொண்ணுக்கு ஆண்டாள்ன்னு பேர் வைடி என்று சொல்ல, மகிழ்ச்சியோடு ஆண்டாள் என்று பெயர் சூட்டப்பட்டது என் தங்கைக்கு. பிராமணர்களில் அநேகம் பேர் அப்போது சீனிவாசன், பாலாஜி, வெங்கடேசன், பெண்களாக இருந்தால் நப்பின்னை, கோதை, லட்சுமி என்று பேர் வைத்தார்கள். Non brahmins எத்திராஜ், ராஜேந்திரன், கபாலி, சிங்காரம், பழனி, சபாபதி, மலைச்சாமி, பெண்களாக இருந்தால், கயல்விழி, மோகன சுந்தரி, சுகந்தி, சாந்தி, விஜயலட்சுமி, உமா. 

அப்போதெல்லாம், உடுப்பி hotels தான், ஆனால் சுவை அதன் நறுமணம் நாலு தெருக்களுக்கு வீசும். அசைவம் என்றால், மதுரை முனியாண்டி விலாஸ் தான். எங்கு பார்த்தாலும் transport godown தான். கொத்தவால் சாவடி தான் அன்றைய கோயம்பேடு. நெய் வாங்கனும்னா கிரி TRADERS என்கிற பெருமாள் செட்டி &   CO. தாமரை இலையில் கட்டிக் கொடுப்பார். ராயபுரம் கல்மண்டபம் அருகே அரிசி பருப்பு கிடைக்கும். அப்பவே ஹோட்டல்க்கா, வீட்டுக்கான்னு கேட்டார்கள். அவ்வளவு நேர்மை? 

வருஷத்திற்கு ஒரு தபா, எல்லோருக்கும் typhoid வரும். விநாயக சதுர்த்தி, திருப்பதி குடை மற்றும் ஆடி மாதம் light music ரொம்ப பிரபலம். MSV, MAESTERO, SHANKAR GANESH ஆரம்ப கால TR பாடல்கள் தான் அப்போ ஹைலைட். சின்னகடம்மன் கோயிலில், LR. ESWARI செல்லத்தா, செல்ல மாரியத்தான்னு ஆடி மாதம், LIGHT மியூசிக்ல பாடும் போது ஒட்டுமொத்த மக்களையும் சாமியாட வைத்தது கின்னஸ் சாதனை தான். 

திருவிளையாடல் ஒலிச்சித்திரம் எத்தனை முறை மகிழ்வித்தது. புரட்சி செய்த வெளி மொழிப் படங்கள் சங்கராபரணம் 500 daysக்கு மேல் சத்யம் தியேட்டரில் ஓடியது, இந்த படம் வந்த போது, ரிக்க்ஷா வாலா கூட சங்கரா என்று ரம்மியமாக பாடினார் . SPB மிகப்பெரும் INSPIRATION ஆனார். ENTER THE DRAGON ஆனந்த் தியேட்டரில் 365 நாட்கள், மரோசரித்ரா SAPPHIRE  தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், JACKIE SHEROFF நடித்த HERO HINDI படம் பத்மம் தியேட்டரில் 500 நாட்களுக்கு மேல், 36  CHAMBER OF SHAOLIN SAPPHIRE தியேட்டர்ல 365  நாட்கள், இறுதியில் QUATMAT SE QUATMAT TAK EMERALD தியேட்டரில் 700 நாட்கள். MINERVA தியேட்டரும், ஓட்டேரி பாலாஜி தியேட்டரும்,  அற்புதமான ஹாலிவுட் படங்களை கீழ் தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்தது. English படங்களைப் பற்றிய அதீத அறிவு, கீழ்த்தட்டு மக்களுக்கு உண்டு. ஒருமுறை, eye of the needle படம் பார்க்கும் போது, பக்கத்தில் உட்கார்ந்து பார்த்த, ஒரு ரிக்க்ஷா காரர், என்னைப் பார்த்து, இதில் வரும் ஹீரோ பேர் தெரியுமான்னார், தெரியலன்னேன், அவர் Donald Sutherlandன்னார். அடுத்த இந்த ஹீரோவை பார்த்தா, யார் மாதிரி இருக்கு சொல்லுன்னார், மறுபடியும் தெரியலன்னேன், அந்த நபர், என்னைப் பார்த்து, உனக்கொன்னியும் தெர்லன்னு சொல்லி, நம்ம கமல் மாதிரி இருக்கான் பாருன்னு சொன்னார், அதே மாதிரி கண், நடிப்பு பாருன்னார். அந்த ரிக்க்ஷாகாரரை பார்த்து வியந்தேன் ஏனெனில் அந்த நடிகர் அப்படியே இருந்தார். ஒரே நேரத்தில், தீபாவளி ரிலீஸ், கிருஷ்ணா தியேட்டர்ல, கமலின் தூங்காதே தம்பி தூங்காதே, பாண்டியன் தியேட்டர்ல ரஜினியின் தங்க மகன். எப்புடி? கமல் ஸ்ரீதேவி தான் FAMOUS. 

திமுக கோட்டை வடசென்னை என்பதால்,   NVN SOMU, Dr. KALANIDHI, எல்லாம் தொகுதி பக்கம் வராமல் ஒவ்வொரு முறையும் ஜெயித்தனர். ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு ITEM பிரத்யேகம். ஆதியப்ப நாயக்கன் தெருவில், மளிகை சாமான்கள், நாராயண முதலி தெருவில், PLASTIC, செம்பு தாஸ் தெருவில் இரும்பு சாமான்கள், கோவிந்தப்ப நாயக்கன் தெருவில், எலக்ட்ரிக் ITEMS, BUNDER STREET  ல் STATIONERY ITEM இப்படி ஒரே இடத்தில், எல்லா பொருட்களும் சகாய விலையில். 

பக்த பிரகலாதன் படம் பார்க்க TVயில் தான் , ஒரு வீட்டில் நாலனா அதாவது 25 காசு கேட்கப்பட்டது. ஆனா என் HOUSE OWNER வீட்டில், தெருவே TV பார்த்து, மணிக்கணக்காக சிவாஜியின் நடிப்பை ஆராய்ச்சி செய்யும். அப்போது என்ன ஒரு குதூகலம் என்றால், இந்த படத்துல சண்டை இருக்கா, ஹை, ஜாலி என்று சொல்வது. ரேடியோ மாதிரி ஒரு சொர்க்கம் உண்டா, விவதபாரதியில், பாடல்கள் ஒலிக்கும் போது, நாளை இந்த வேளை என்று பாடும் போது ஆண்கள் கூட வாணிஸ்ரீ ஆகி அதே அபிநயம் செய்தனர். 70 களில், மிகப்பெரும் TRANSITION நடந்தது, ஒரு பக்கம், MSV, TMS இன்னொரு பக்கம், டப்பாங்குத்து MUSIC DIRECTOR என்று பேசப்பட்ட இளையராஜா வாழையில் ஊசி போல் நம் மனதில் கால் மேல் கால் போட்டுக் கொண்டார். சங்கர் கணேஷின், நான் கட்டில் மீது கண்டேன், TRன் வாசமில்லா மலரிது, சந்திரபோஸின் மாம்பூவே சிறு மைனாவே, MAESTEROவின் இளைய நிலாவும் ஆக்கிரமித்தன. 

அகஸ்தியா தியேட்டர் SCREEN, PILOT THEATER SCREEN & DEVI THEATER SCREEN WORLD Famous. மூர் மார்க்கெட் எங்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம். வண்டலூர் ZOO யானை கவணில தான் இருந்ததுன்னா, யாராவது நம்புவாங்களா? காலையில் சிங்கம் உறுமுவது எங்கள் வீட்டு மாடியில் கேட்கும். பேசின் பிரிட்ஜ் அனல் மின்நிலையத்திலிருந்து வரும் கரும்புகையை தினமும் சுவாசித்து வந்தோம். அப்போதே எங்களுக்கு, சாலையில், இயேசுவின் ரத்தம் ஜெயம் என்று சொல்லி, புத்தகங்களையும், படங்களையும் விநியோகித்தனர். அதை வாங்கிக் கொண்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல விழித்தோம்.

கொண்டித்தோப்பில் தான், பாம்பு பஞ்சாங்கம் அச்சிடப்படுகிறது. சீனப் பல் மருத்துவர்கள் கணிசமாக ஈவினிங் பஜார் பகுதியில் இருந்தனர். அவர்கள் எங்கே என்று தெரியவில்லை. அடிப்பட்டால், புத்தூர் கட்டுத்தான். மூலகொத்தளம் BUS STANDல் வலிக்க வலிக்க ஆந்திரா BUSல் ஏற்றி, புத்தூருக்குச் சென்று வெற்றிகரமாக கட்டுப் போட்டு, ஒரு சில வாரங்களில் சரியாகிவிடுவோம்.  

கல்யாணம் என்றால், நாரயணமுதலி தெரு கோமிட்டி மண்டபங்கள் தான் சகாய வாடகையில், கொஞ்சம் வசதியிருந்தால், கோவிந்தப்ப நாயக்கன் தெரு பெரிய மண்டபம். ஒரு முறை நடிகை பத்மப்ரியாவை ( மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்) பார்த்தேன், தூரத்து சொந்தம். குலதெய்வம் கோயிலுக்கு போறாங்களோ இல்லையோ, திருப்பதி பெருமாள் தான் ஒட்டு மொத்த வடசென்னை வாசிகளுக்கு FAVORITE. வருடத்திற்கு என்ன, மாதாமாதம் VISIT அடித்தவர்கள். SUMMERல திருப்பதியோ அல்லது திருத்தணி மொட்டை தலையரை சர்வசாதாரணமாக பார்க்கலாம். மெல்ல மெல்ல பிராமணர்கள், நங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர் என்று வெகுஜனங்களோடு இடம் பெயர்ந்தனர். ஆகையால், இப்போது யானை கவுணி MINI RAJASTHAN ஆகிவிட்டது.

Monday, March 30, 2020

நடாதூர் அம்மாள்

 பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நடாதூர் அம்மாள் என்னும் மகான், கும்பகோணத்தில் சில காலம் தங்கியிருந்தார். 

அப்போது குடந்தையைச் சேர்ந்த கந்தளன் என்ற வேதியருக்குப் பிசாசு பிடித்து விட்டதாக சொல்லி அவரது உறவினர்கள் நடாதூர் அம்மாளிடம் அழைத்து வந்தார்கள்.

கந்தளனின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த நடாதூர் அம்மாள், அவரது உறவினர்களிடம்,

 “இவரைப் பிடித்த பிசாசு எது தெரியுமா? அவர் மனத்தில் தோன்றிய பேராசை என்னும் தீய குணமே! 

அந்தப் பேராசை அளவுக்கு மீறிச் சென்ற நிலை யில், தன்னிலை மறந்து பித்துப் பிடித்தவர் போல் இவர் செயல்படுகிறார்!” என்று கூறினார்.

“இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?” என்று உறவினர்கள் கேட்க, 

“திருமால் கையில் சுதர்சனச் சக்கரமாக அமர்ந்திருக்கும் சக்கரத்தாழ்வார் தான் காலச் சுழற்சிக்கு அதிபதி.

 அந்தச் சக்கரத்தாழ்வாரின் அருள் இருந்தால், முற்காலத்தில் இவர் எப்படி நல்ல மனநிலையில் இருந்தாரோ, அதே நிலையை அடையலாம்!” என்று சொன்ன நடாதூர் அம்மாள்,

 குடந்தை சக்ரபாணிப் பெருமாள் கோயிலுக்குக் கந்தளனை அழைத்துச் சென்றார். 

சக்ரபாணிப் பெருமாளைக் குறித்து முப்பத்தி இரண்டு வரிகள் கொண்ட‘ஹேதிபுங்கவ ஸ்தவம்’ என்ற துதியை இயற்றினார். 

அந்தத் துதியின் ஒவ்வொரு வரியும் ‘ஜய’ என்ற சொல்லுடன் தொடங்கும் விதமாக அமைத்தார்.

1.ஜய! ஹேதீச! லக்ஷ்மீச பாஹ்வலங்கார பூத! - திருமாலின் கரத்துக்கு ஆபரணமாய்த் திகழும் ஆயுதங்களின் தலைவனே!

2.ஜய! பஞ்சாயுதீமுக்ய! நிர்தக்த காசீபுர! - திருமாலின் ஐந்து ஆயுதங்களுள் முதன்மையானவனே! காசீ நகரத்தை எரித்தவனே!

3.ஜய! விஷ்ணுஹ்ருத்தத்த்வ ஸஞ்ஜாத சக்ரஸ்வரூப! - திருமாலின் இதயத்திலிருந்து கனிந்து வந்தவனே!

4.ஜய! விஷ்ணுமூர்த்திஷு ஸர்வாஸு விக்க்யாதசிஹ்ந! - திருமாலின் திருமேனிக்கு அடையாளமாகத் திகழ்பவனே!

5.ஜய! விஷ்ணுதாஸ்ய தாந க்ஷம ஸ்ரீஷடாக்ஷர! - உனது ஆறெழுத்து மந்திரத்தால் அடியவர்களை விஷ்ணுவின் தாஸர்களாக ஆக்குபவனே!

6.ஜய! ஸம்ஸ்பர்ச நிர்தக்த ஸர்வாகவாராம் நிதே! - உனது ஸ்பரிசம் ஏற்பட்ட மாத்திரத்தில் அனைத்துப் பாபங்களையும் போக்குபவனே!

7.ஜய! கர்ப்பஸம்ஸ்பர்சஜாத காஷ்டாகுமார! - கர்ப்பத்திலிருந்து கரிக்கட்டையாகத் தோன்றிய பரீக்ஷித்தைக் காத்தளித்தவனே!

8.ஜய! விப்ரசித்த்யாஸுரீ கல்பநா கல்பஸூர்ய! - ப்ரஹ்லாதனை அச்சுறுத்திய விப்ரசித்தியின் ஜாலத்தைத் தவிடுபொடி ஆக்கியவனே!

9.ஜய! தாபேந யஸ்த்வாம் வஹந் கர்மயோக்ய:! - உன்னைத் தோளில் தரிப்பவர்களுக்கு வைதிகக் கர்மங்கள் செய்யும் அதிகாரத்தைத் தருபவனே!

10.ஜய! ஹரிஸ்த்வாம் ததத் ஸவ்யபாணௌ யுத்தயோக்ய: -உன்னை இடக்கையில் ஏந்துகையில் திருமால் போருக்குத் தயாராகிறார்!

11.ஜய! தேவாச்ச மஸ்தேஷு த்வாம் ததுர்தேவ பூதா:! - தேவர்கள் எந்தச் செயலைத் தொடங்கும் முன்பும் உன்னை வணங்குவர்!

12.ஜய! பாஸா விருந்தன் பாஸாம் பதிம் ராத்ரிமாதா:! - உன் ஒளியால் சூரியனை மறைத்து, இருட்டை உண்டாக்கியவனே!

13.ஜய! ஸர்வைநஸாம் தாரணம் யத்விசிஹ்நம் தவ! - உனது சின்னம் தோளில் இருந்தால் அனைத்துப் பாபங்களும் தொலையும்!

14.ஜய! க்ருஷ்ணார்ஜுநாபீஷ்ட விப்ரக்ரியா தேஜஸா! - அந்தணனின் மகன்களை மீட்கச் சென்ற கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் வழியில் ஒளி தந்தவனே!

15.ஜய! யஸ்ய மூர்த்திர்பவத் சிஹ்நிதா தஸ்ய முக்தி:! - உனது சின்னத்தைத் தோளில் பொறித்துக் கொண்டவர்கள், மோட்சம் அடைவதற்குத் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.

16.ஜய! யே அநங்கிதாஸ்தே பத்யமாநா பாசஹஸ்தை:! - உனது சின்னம் இல்லாதவர்கள் யமனின் பாசக் கயிற்றால் பீடிக்கப் படுகிறார்கள்.

17.ஜய! ஸம்ஸ்கார முக்க்யார்ய பாச்சாத்ய துக்தாபிஷேக! - சங்கசக்ர லாஞ்சனம் நிறைவடைந்த பின் பால் திருமஞ்சனம் கண்டருள்பவனே!

18.ஜய! சங்காஸி கௌமோதகீ சார்ங்க ஸுப்ராத்ருபாவ! - பெருமாளின் மற்ற ஆயுதங்களுடன் சகோதர உறவோடு பழகுபவனே!

19.ஜய! மாலேஸ்ஸுமாலேச்ச நக்ரஸ்ய க்ருத்தாஸ்ய கண்ட! - ராவணனின் பாட்டன்களாகிய மாலி, சுமாலி, கஜேந்திரனைப் பீடித்த முதலை உள்ளிட்டோரின் கழுத்தைக் கொய்தவனே!

20.ஜய! ரக்ஷோஸுராணாம் தநூபாத்த ரக்தார்த்ர மால! - அசுர-ராட்சசர்களின் ரத்தக்கறை படிந்த மாலையை அணிந்தவனே!

21.ஜய! வித்ராவிதோ த்வேஷக்ருத் பௌண்ட்ரகஸ்தேஜஸா தே!- கண்ணனை வெறுத்த பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தவனே!

22.ஜய! வித்வேஷிணீ தாஹமாஸாதிதா கோட்டவீ ஸா! - பாணாஸுர யுத்தத்தின் போது இடையூறு செய்த பாணாஸுரனின் தாயான கோட்டவியை அழித்தவனே!

23.ஜய! ஹரிஸ்த்வம்பரீஷம் ஹி ரக்ஷந் பவந்தம் வ்யதாத்! - திருமால் அம்பரீஷனை ரக்ஷிப்பதற்கு உதவி செய்தவனே!

24.ஜய! தூர்வாஸஸம் த்வம் பராஜிக்யிஷே தஸ்ய ஹேதோ! - திருமால் துர்வாஸரை வெற்றிகொள்ள காரணமாய் இருந்தவனே!

25.ஜய! வேதாச்ச தைவம் பரம் மந்வதே த்வாம் வஹந்தம்! - உன்னை ஏந்தியவனே பரம்பொருள் என்று வேதங்கள் சொல்கின்றன.

26.ஜய! ஹேதீஷு ஸத்ஸ்வேவ ஹந்தா ரிபூணாம் த்வமேவ! - திருமால் எந்த ஆயுதத்தை எடுத்தாலும் அது நீயாகவே ஆகிறாய்.

27.ஜய! தேவஹேதிசிஹ்நேஷு ஸர்வேஷு முக்யோ பவாந்! - ஆயுதச்சின்னங்கள் அனை
[06:41, 30/03/2020] +91 94425 03108: த்தினுள்ளும் முதன்மையானது உன்னுடைய சக்கரச் சின்னமே!

28.ஜய! விஷ்ணு பக்தேஷு தாஸ்யப்ரதாநம் த்வயைவாங்கநம்! - உனது சின்னத்தை ஏற்பதால், விஷ்ணுபக்தன் தொண்டு செய்வதற்கான தகுதியைப் பெறுகிறான்!

29.ஜய! லீலாவிஹாரே சோத்ஸவே சரஸ்யக்ரணீஸ்த்வம்! - திருமாலின் உற்சவங்களிலெல்லாம் முன்னே செல்பவன் நீயன்றோ?

30.ஜய! தைவாஸுரே ஸங்கரே ரக்தபுக் நிர்பயஸ்த்வம்! - தேவாசுர யுத்தத்தில் பயமின்றிப் போரிட்டுத் தீய சக்திகளின் ரத்தத்தைப் பருகுபவனே!

31.ஜய! தர்சயாத்மபாஸா விரோதீந்யகாநி த்வம் நுத - உன்னை வணங்குபவர்களின் விரோதிகளான பாபங்கள் அனைத்தையும் போக்குபவனே!

32.ஜய! தேஹி விஷ்ணுலோகம் ஏவம் விதே பக்திஹீநே!

பக்தியில்லாத அடியேனுக்கும் விஷ்ணு லோகத்தை அருள்வாயாக! உனக்கு ஜெயம் உண்டாகட்டும்!

ஸுதர்சனஸ்தோத்ரம் இதம் வரதார்யேண நிர்மிதம்

படந் ஸித்யதி வை ஸத்யோ ந பயம் தஸ்ய ஹி க்வசித் ”

இந்தத் துதியைப் படிப்பவர்களுக்கு ஸ்ரீசக்ர பாணிப் பெருமாள் அருளால், அனைத்து வெற்றிகளும் உண்டாகும். அவர்களின் அனைத்து பயங்களும் விலகும்.

வரலாற்றில், சக்கரத்தாழ்வாரைக் குறித்து எழுந்த முதல் ஸ்தோத்திரம் இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. 

சக்கரத்தாழ்வார் தனிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் குடந்தையில் இத்துதி தோன்றியது. 

32 முறை ‘ஜய’ என்ற சொல் இடம்பெற்றுள்ள இந்தத் துதியைச் சொல்லும் அன்பர்களுக்கு வாழ்வில் அனைத்து ஜயங்களும் உண்டாகும்.

இத்துதியை நடாதூர் அம்மாள் நிறைவு செய்த போது, சக்கரத்தாழ்வார் எதிர்த்திசையில் சுற்றினார். 

அவரது சுழற்சிக்கேற்றபடி காலம் இயங்குவதால், அவர் நேர்த்திசையில் சுற்றினால் காலம் முன்நோக்கியும், எதிர்த்திசையில் சுற்றினால் காலம் பின்நோக்கியும் செல்லும். 

இப்போது அவர் எதிர்த்திசையில் சுற்றியதால், கடந்த காலத்தில் இருந்த நல்ல மனநிலையை அடைந்தார் கந்தளன். 

அவரைப் பிடித்த பேராசை என்னும் பிசாசு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது.

இவ்வாறு காலத்தை நிர்வகிக்கும் காலச் சக்கரமாகிய சுதர்சனச் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பதால், திருமால் ‘அஹஸ்ஸம்வர்த்தக:’ என்றழைக்கப்படுகிறார். 

‘அஹ:’ என்பதற்கு நாள் என்று பொருள். 

‘ஸம்வர்த்தக:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள். 

நாட்களைச் சுழற்றுவதால், அதாவது காலச் சுழற்சியை உண்டாக்குவதால், திருமாலுக்கு ‘அஹஸ்ஸம்வர்த்தக:’ என்று திருநாமம். 

வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் அமைய விரும்புவோர் “அஹஸ்ஸம்வர்த்தகாய நமஹ” என்ற இத்திருநாமத்தைத் தினமும் சொல்லலாம்.


ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்

ஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்!
 🙏🏼✡🙏🏼✡🙏🏼✡🙏🏼✡🙏🏼✡🙏🏼✡🙏🏼✡🙏🏼✡🙏🏼
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ரீராம நவமி ஏப்ரல்  2 ம் தேதி   தேதி   அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், இந்த நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்றவை அரங்கேறும்.

தெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதிவரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார். சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு.

கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ இராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். பங்குனி மாதம், வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். சில வருடங்களில் இந்த நன்னாள் சித்திரை மாதத்தில் அமைவதும் உண்டு. ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.

ராம நாமமானது அஷ்டாட்சரமான 'ஓம் நமோ நாராயணாய' என்பதில் உள்ள 'ரா' என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான 'நமச்சிவாய' என்ற எழுத்தில் 'ம' என்ற எழுத்தையும் சேர்த்து 'ராம' என்றானது. நவமி திதியில் உதித்த சக்ரவர்த்தி திருமகனின் ஜாதகத்தில் நவகோள்களின் நிலையை இந்த ஸ்ரீராம நவமி திருநாளில் பார்ப்போம் வாருங்கள்.

ஸ்ரீ ராமபிரான் புணர்பூச நட்சத்திரத்தில் கடக ராசி மற்றும் லக்னத்தில் ஜெட ஜென்ம ராசியில் பிறந்தவர். லக்னத்தில் குரு உச்சம் பெற்று ஸ்ரீ ராமர் தெய்வீகத்தன்மையோடும் சாஸ்திரம் பிறழாமலும் வாழ காரணமாகி நின்றார். இரண்டுக்குடைய சூரியன் மேஷத்தில் உச்சம் அடைந்து சூரிய குல திலகமாக விளங்கினார். மூன்றுக்குடைய புதன் சூரியனுடன் சேர்க்கைப் பெற்று புத ஆதித்ய யோகம் பெற்றிருந்ததால் கல்வி, கேள்வி, ஆய கலைகள் அனைத்தும் அவரிடம் தஞ்சம் அடைந்து பணிந்து நின்றன என்றால் மிகையில்லை. ஆனாலும் ஒரு துளிகூட கர்வம் இல்லாமல் மனிதனாக பிறந்த தெய்வமாக விளங்கினார்.

நான்கிற்கும் பதினொன்றுக்கும் உடைய சுக்கிரன் உச்சம். ஐந்துக்கும் பத்துக்கும் உடைய செவ்வாய் உச்சம். ஆறுக்கும் ஒன்பதுக்கும் உடைய குரு உச்சம். ஏழுக்கும் எட்டுக்குமுடைய சனி உச்சம். ஆக ஐந்து கிரகங்கள் உச்சமடைந்துள்ளன. ஸ்ரீராமர் ஜாதகத்தில் மாத்ரு ஸ்தானாதிபதி சுக்கிரன் பித்ரு ஸ்தானத்தில் உச்சம். பித்ரு ஸ்தானாதிபதி குரு மாத்ரு காரகன் சந்திரனின் வீட்டில் உச்சம். மேலும் பித்ரு காரகன் உச்சம், மாத்ரு காரகன் ஆட்சி எனும் அமைப்பைபெற்று 

"தாயிற் சிறந்த கோயிலுமில்லை;

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"

என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். 

ஏகபத்தினி விரதன்
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பொதுவாக  குடும்ப ஸ்தானாதிபதியோ, களத்திர ஸ்தானாதிபதியோ அல்லது களத்திர காரகனோ உச்சமடைந்தால் அவர்களுக்கு பலதார அமைப்பு ஏற்படும். அவதார புருஷனான ஸ்ரீ ராம பிரான் ஜாதகத்தில் களத்திர காரகனும் உச்சம் களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் என்றாலும் லக்னத்திலும் ராசியிலும் உச்சம் பெற்ற குரு நின்று 9-ம் பார்வையாக களத்திர காரகனை பார்ப்பதாலும் ஆன்மீக கிரகம் சூரியன் ஸம சப்தமமாக களத்திரஸ்தானாதிபதியை பார்பதாலும் ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிவர் ராமர்.  
     
பஞ்ச மகா புருஷ யோகம்
✡✡✡✡✡✡✡✡✡
யோகங்களிலேயே சிறப்பான யோகங்கள் பஞ்சமகா புருஷ யோகங்களாகும். நவக்கிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் சர்ப்ப கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து, மற்ற கிரகங்களான செவ்வாய், குரு, சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்களால் உண்டாகக்கூடிய யோகங்களே பஞ்சமகா புருஷ யோகங்களாகும். இவைகள் ருச்சுக யோகம்,  பத்திர யோகம், ஹம்சா யோகம், மாளவியா யோகம், சச யோகம் என்று குறிப்பிடப்படுகின்றன. பஞ்சமகா புருஷ யோகங்களில் நான்கு யோகங்கள் ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் அமைந்துள்ளன. லக்ன கேந்திரத்திலும், சந்திர கேந்திரத்திலும் குரு உச்சமாகி ஹம்ஸ யோகமும், சனி உச்சமாகி சச யோகமும், செவ்வாய் உச்சமாகி ருச்ச யோகமும், சுக்கிரன் உச்சமாகி மாளவியா யோகமும அமைந்திருக்கிறது.  



மேலும் ராகுவும் கேதுவும் குரு புதன் வீடுகளில் நின்று ராஜயோக அமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் பெற்ற ஸ்ரீராமரையும் அவர் ஜாதகத்தையும் இந்த ராமநவமி நாளில் பூஜிப்பது நமக்கு எல்லாவித அருளையும் பொருளையும் வாரிவழங்கும்.

விசிறித்தானம்!
✡✡✡✡✡
ஸ்ரீராமநவமியன்று விசிறிகளை பிறருக்கு தானமாக வழங்குகின்றனர். ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்றபோதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார்.

அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும், பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம்.

ஸ்ரீ ராமநவமி தினத்தில் விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு மஹாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர் மற்றும் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்துப்போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.