அந்த சிலவு,எந்தக் கணக்கிலே வருது"
(காஃபி என்ற வார்த்தையைக் கூட பெரியவா சொல்லவில்லை)
(தப்பு செய்தவர்கள் மேல் காட்டிய காருண்யம்)
சொன்னவர்-எஸ்.வெங்கட்டராமன்
தொகுத்தவர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
முகாம் தங்கியிருந்த இடத்திலிருந்த ஸ்டோர் ரூம்,
ஒரு நாள் காலை,ஸ்ரீ சுவாமிகள் அந்த அறையில் நுழைந்து,வேறு வழியாக சென்று விட்டார்கள்.
அந்த அறையில்,நாலைந்து சிப்பந்திகள் இருந்தார்கள். காப்பி தயாரித்து (பெரியவாளுக்குத் தெரியாமல்) சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள
அப்போது,'பெரியவா பார்த்திருப்பாளோ?" என்ற கவலை, எல்லோருக்கும்.ஆனால் பெரியவாள் யாரையும் எதுவும் கேட்கவில்லை. 'பார்த்திருக்க மாட்டா' என்று ஒரு சமாதானம்.!
அன்றிரவு என்னைக் கூப்பிட்டு, மேனேஜரிடம் சொல்லி, இரவு உணவுக்குப் பின், சிப்பந்திகள் கூட்டம் நடக்கும் என்று சொல்லச் சொன்னார்.
கூட்டத்துக்கு வரும்போது,கணக்கு நோட்டு கொண்டு வரச் சொன்னார்கள
"எந்தக் கணக்கு?" என்று கேட்டார் மானேஜர் என்னிடம்
பெரியவாளிடம் சென்று கூறினேன்.
"ஏதாவது...ரெண்டு கணக்கு நோட்டு..."
சிப்பந்திகள் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும்,
"இந்த நோட்டில் இருப்பதெல்லாம்,சரி"
என்று நமஸ்காரம் பண்ணுங்கோ..'என்றார்.
சில சிப்பந்திகள் தயங்கினார்கள்,நெஞ்சு தவித்தது
"என்ன தயக்கம்?..எல்லாம் சரீன்னா,
நமஸ்காரம் பண்ணலாமே?.."
"......வந்து.."
"......அந்த சிலவு,எந்தக் கணக்கில் வருது?
"...மா....மாட்டுக்குப் பருத்திக்கொட்டை வாங்கியதாக.."
ஸ்ரீசுவாமிகளுக்கு,சிப்பந்திகளின் சங்கடம் புரிந்தது.
தான் பிக்ஷை செய்த பின்னர் தான்,மற்றவர்களுக்குச் சாப்பாடு என்ற வழக்கம் இருந்தது.மணி இரண்டுக்கு மேல் ஆகிவிடுவதால்,பசி தாங்க முடியவில்லை
அதனால் தான்,இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் பானம் தேவைப்படுகிறது. ஸ்வாமிகள் சொன்னார்கள்;
அன்று முதல்,சிப்பந்திகளுக்குச் சாதகமான அந்த நடைமுறை அமுலுக்கு வந்தது
Jaya Jaya Shankara hare hare shankara
No comments:
Post a Comment