#உத்தமர்_கோவில் (ஶ்ரீபுருஷோத்தமன் கோயில்) __திருச்சி 🙏
திருச்சியின் புறநகர்ப்பகுதியில் உள்ள உத்தமர்கோவில் கிராமத்தில், #உத்தமர்_கோவில் (திருக்குறம்பூர் அல்லது பிச்சாண்டவர் கோவில் என்றும் கூறுவர்). மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகியோர் ஒரே வளாகத்தில் கோயில் கொண்டுள்ளனர்.
இக் கோயில் பொதுவாக "உத்தமர் கோவில்" என்றும் #ஶ்ரீபுருஷோத்தமன்_ கோயில் என்றும் அழைக்கப்படுகிறது;
#பிஷாடனர்_கோவில் என்றும் கூறுவர்.
சிவபெருமான், பிஷாடனரின் வடிவில் இருப்பதால், விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் ஞானமடைந்ததாகக் கூறுகின்றனர்.
புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், #உத்தமர்_கோயில் என இக்கோயில் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக அங்கே குறிப்புகள் காணப்படுகினாறன. இவர்களுள் சோழ மன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர். முப்பெரும் தேவியர் உடனுறை மும்மூர்த்திகளும் அருளும் ஒரே திருத்தலம். இது. சப்தகுரு பகவான்கள் அருளும் ஒரே, குரு பரிகாரத் தலமும் இதுவே. இக்கோயிலில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்துள்ளார்.
திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர். மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியருடன் அருகருகே தனித்தனி சந்நிதிகளில் அமைந்து அருளும் ஸ்தலம் இந்தியாவில் இது ஒன்றே.
மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 வைணவத் திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த பெருமை உடையது இக்கோயில். சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய பிஷாடனர் திருகோலம் தோன்றிய தலம் இது.
#சப்தகுருக்கள் என்று அழைக்கப்படுகிற
1. பிரம்மகுரு
2. விஷ்ணுகுரு
3. சிவகுரு
4. சக்திகுரு
5. சுப்ரமயணிகுரு
6.தேவகுரு பிரஹஸ்பதி
7.அசுரகுரு சுக்ராச்சார்யார்__
ஆகிய ஏழு குரு பகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம் இதுவே.
தென்முகமாகக் குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சந்நிதியில் #பிரம்மா அருளும் தலம் இது. பிரம்மாவின் இடப்புறம் தனிசந்நிதியில் #ஞானசரஸ்வதி குடிக்கொண்டு இருக்கிறார். பிரம்மா, சரஸ்வதியோடு கோயில் கொண்டிருக்கும் அபூர்வமான தலமிது.
#தல_வரலாறு 🙏
ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அந்த உருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டதால், மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் ஐதீகம்.
இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன.
இக்கோயிலில், சிவபெருமான், #பிஷாடனாராக வந்ததற்கு ஒரு கதையுண்டு. பிரம்மாவிற்கும் ஆரம்பத்தில் சிவபெருமானைப் போல ஐந்து தலைகள் இருந்ததாம். இதனால் பிரம்மா கர்வம் கொள்ள, சிவபெருமான் பிரம்மாவுடைய ஒரு தலையைக் கிள்ளி விடவே, சிவபெருமானைப் பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்ததாம்.
சிவபெருமானின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாம். எனவே தன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில், பிச்சையிடுமாறு, மகாலட்சுமியிடம் பிஷாடனராக வந்தார்! சிவபெருமான். மகாலட்சுமியும் கபாலத்தில் பிச்சையிட, சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாம். எனவே உத்தமர் கோயிலைப் #பிஷாடனர்_கோயில் எனவும் கூறுவர்.
அப்பர், சுந்தரர் , திருஞான சம்பந்தர்ஆகியோர் இக்கோயிலில் பாடியுள்ளனர்.
தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகள் இக்கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்பவர்களின் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும்! என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை. அவ்வாறு தொடர்ந்து செல்ல இயலாதவர்கள், கோயிலில் பணம் செலுத்தினால் அவர்களே நமது நட்சத்திரத்திற்கு அர்ச்சனையைச் செய்து பிரசாதத்தை வீட்டிற்கே அனுப்பியும் வைக்கின்றனர்.
நம்பியவர்களைக் கைவிடாத #ஶ்ரீபுருஷோத்தமர் கோயில் கொண்ட தலம் என்பதால் #உத்தமர்_கோயில் என இக்கோயில் அழைக்கப்படுகிறது.
மும்மூர்த்திகளும், தத்தம் மனைவியரோடு கோயில் கொண்ட அபூர்வமான தலம் இந்த #உத்தமர்_கோயில். 🙏
#ஓம்நமோநாராயணா. 12.6.22.
No comments:
Post a Comment