புலிகாட் ஏரி பற்றியத் தகவல்கள் கூறமுடியுமா?
பழவேற்காடு ஏரி என்று தமிழில் அழைக்கப்படும் புலிகாட் ஏரி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். சென்னைக்கு வடக்கே கடலோரத்தில் கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஊராகும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் நிலையான இந்த பகுதி தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் எல்லையில் அமைந்திருக்கிறது.
வரலாறு
பழவேற்காடு ஏரியின் குறிப்புகள் கி.பி .முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட " எரித்தேரியன் கடல் பயண குறிப்புகள் " என்கிற நூலில் காணக் கிடைக்கிறது. இது இந்தியாவின் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்களில் ஒன்று என்று இந்நூல் வரிசைப் படுத்துகிறது. இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த கிரேக்க அறிஞர் டாலமி தொகுத்த துறைமுகங்களின் பட்டியலிலும் பழவேற்காடு இருக்கிறது. தூர கிழக்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் ,பொருட்களை மேற்கில் ஏற்றுமதி செய்வதற்கும் இத்துறைமுகம் பயன்படுத்தப் பட்டதாக குறிப்பிடுகிறார் டாலமி.மசாலா பொருட்கள் ,சந்தனம், கற்பூரம், பட்டு ஆகியவை இங்கு வாணிகம் செய்யப்பட்டன.
ஸ்ரீஹரிகோட்டா
இந்தியாவின் கவுரவமான ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் இங்குதான் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிகோட்டா தீவு பிரிக்கிறது. இந்த தீவில் தான் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது.
ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்துள்ளது. தொன்மையான கோட்டை கொத்தளங்கள் கோவில்கள் பல அமைந்துள்ளன. ஆரணி ஆறு, கலங்கி ஆறு மற்றும் சுவர்ணமுகிஆகிய ஆறுகள் இந்த ஏரியை உருவாக்குகின்றன. அதுமட்டுமின்றி சில ஓடைகளும் துணைபுரிகின்றன.
ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் இந்த ஏரியில் கலக்கிறது.
.வங்காள விரிகுடா கடலுக்கும், ஆற்று நீருக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.
பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
இங்கு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. மீன் வளம் அதிகம் என்பதால் வெளிநாட்டு பறவைகள் குறிப்பாக பிளமிங்கோ என்ற செங்கால் நாரைப் பறவைகள் அதிகமாக காணப்படுகின்றன. எப்போதும் அமைதி சூழ்ந்த இந்த பகுதியை பறவைகள் தேர்ந்தெடுத்து இருப்பதில் ஆச்சரியமில்லை. பறவைகளை படமெடுக்க விரும்புபவர்களும் யாருடைய தொந்தரவும் இன்றி பறவைகளை படம் எடுக்கலாம்.
நன்றி 🙏 இணையம்
பகிர்வு
No comments:
Post a Comment