Wednesday, June 22, 2022

மதுராந்தகம்:

 மதுராந்தகம்:

எல்லா உத்சவங்களையும் எல்லா ஸ்தலங்களிலும் சேவித்து விடலாம். ஆனால் பகவத் ராமானுஜரின் பஞ்ச சம்ஸ்கார உத்சவத்தை மதுராந்தகத்தில் மட்டுமே சேவிக்க இயலும். அதற்கு காரணங்கள் பல. 

1) இந்த சந்நிதியில் தான் ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ பெரிய நம்பிகளால் பஞ்ச சம்ஸ்காரம் மந்த்ரோபதேசம் செய்யப் பட்டது. 

2) இங்கேயே ஸ்ரீ ராமானுஜரின் திரு தோள்களிலே சாற்றிய புனிதமான சங்கு மற்றும் சக்கரங்கள் வைத்து ஆராதனம் செய்யப்பட்டு வருகின்றது. 

3) இங்கே ராமானுஜர் உலகத்தில் எங்கும் இல்லாமல் வெள்ளை வேஷ்டியில் க்ருஹஸ்தராக சேவை சாதிக்கிறார். 

4) இந்த சந்நிதியிலே மட்டும் தான் ஸ்ரீமத் ராமானுஜர் தன் குருவுடன் சேவை சாதிக்கிறார். 

5) இந்த சந்நிதியில் தான் பஞ்ச சம்ஸ்காரத்தின் போது ஸ்ரீமத் பெரிய நம்பிகள் ஆராதனம் செய்த சின்ன கிருஷ்ணன் விக்ரஹம் எழுந்தருளி உள்ளார். 

6) இந்த சரித்திரம் நடந்தது இந்த க்ஷேத்திரத்தில் தான். 

7) இங்கேயே ராமன் சந்நிதியில் நடக்கட்டும் என்று ஸ்ரீ ராமானுஜரே கேட்டுக்கொண்டார். 

8) அந்த பாவனமான பஞ்ச சம்ஸ்காரம் நடந்த இடத்தில் அன்று இருந்தது போன்ற மகிழ (வகுள) மரமும் ஒரு கல் மண்டபமும் உள்ளது. 

9) ஸ்ரீமத் ராமானுஜரும் ஸ்ரீ பெரிய நம்பிகளும் சந்தித்துக்கொண்ட, தன் நித்ய கர்மாக்களை செய்த இடம் இன்றும் "ராமானுஜர் படித்துறை" என்கிற பெயரிலே பிரசித்தமாக உள்ளது. 

10) அந்த இடத்திற்கு இன்று இருவரும் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருளி தீர்த்தவாரி காணுவார்கள்.

 11) இன்றைய தினத்தில் தான் பெரிய நம்பிகள் இங்கே தரிசனம் கொடுக்கும் ராமனுக்கு "தடாக பாலன்" என்கிற பெயரை கொடுத்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடந்து இனி ஸ்ரீவைஷ்ணவம் நன்கு வளரப்போகின்றது என்கிற யாமுனாச்சரியாரின் அனுக்ரஹத்தை நிறைவேற்றியதால்

இந்த ராமனுக்கு "வைஷ்ணவம் என்கிற ஏரியை காத்த ராமன்" என்று பெயர் சூட்டினார் பெரிய நம்பிகள். ஆக மூச்சு விடாமல் மதுராந்தகத்தின் பெருமையை பேசலாம். வாருங்களேன்  மதுராந்தகத்திற்கு.

No comments:

Post a Comment